சிறுபான்மை இனங்களைப் பிளந்து நடைபெறும் அரசியல் :
71 நபர்கள்-கையெழுத்தும்,அறைகூவலும்!
இந்த உரையாடலது உள்ளடக்கஞ்சார்ந்து கருத்துக் கூறுவதென்பதைவிட,இந்த வகை உரையாடலுக்குள்ளும்,71 நபர்களது கோரிக்கை-அறிக்கையென்பதற்குள்ளும் இருக்கும் அரசியலைச் சமாந்தரமாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.
இலங்கையில் இனங்களுக்கிடையிலான அனைத்து முரண்பாடுகளும் ஏதோ இனக் குரோதத்தால்-ஐய்யப்பாடுகளால் எழுந்தாக இருக்கமுடியுமா?
இந்தக்கீரன்,அல்லது ரங்கன் தேவராஜன் போன்றவர்களது கருத்தானது இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கானவொரு அரசியல் தீர்வுக்கான பாதையுள்,ஒரு நீண்டகால அரசியல் தீர்வுசார்ந்த ஆரம்பப் புள்ளிகளையே குழப்பிச் சிறுபான்மை இனங்கள்மீது ஒவ்வொரு புறமாக அவநம்பிக்கையையும்,அவதூறையும் விதைத்துத் தொடர்ந்து வரலாற்றுப்பழியூடாக ஒரு இனத்தை இலங்கையில் எந்தவுரிமையுமற்ற நிலைக்குட்படுத்துவதற்கேற்ப சிங்கள ஆளும் வர்க்கத்துக்கிசைவான தெரிவுகளில்(மக்களுக்குள் நிலவும் பல்வேறு "வேறுபாடுகளை" மேல் நிலைக்குக்கொணர்ந்து அவையூடாகப் பிராதான கோரிக்கையை நீர்த்துப்போக வைத்தல்-திசை திருப்பிய அதிர்வுகளின்வழி, மீளப் பிரித்தாளும் வியூகத்தைத் திட்டமிட்டுச் சிங்கள அரசுக்கேற்ப இயக்குவது) அரசியலாகச் செய்கின்றனர்.
இதற்கு முன்மாதிரியாக நிர்மலா போன்றவர்கள் தமது சகோதரியின் படுகொலையை எப்படிப் பிரபலமாக்கி ஒரு அரசியலை இலங்கையரசுக்கேற்பச் செய்தார்களோ,அதையே, மீளவுஞ்செய்வதில் தொடர்ந்து கருத்தியற் போராட்டத்தை இத்தகைய வடிவங்களில் செய்கின்றனர்.
ராஜனி திரணகம போன்ற எத்தனை ஆயிரம் மக்கள் இலங்கையின் இனவொடுக்குமுறை அரசின் சூழ்ச்சியால்-ஒடுக்குமுறையால் கொல்லப்பட்டனர்.இந்த இனவொடுக்குமுறை அரசியற்றொடர்ச்சியால் பலபத்து இயக்கங்களைத் தோற்றுவித்த இந்திய நலனானது, இலங்கையின் மக்களுக்குள் நிகழ்த்திய அரசியலானது மக்களுக்கு விரோதமாக இயக்கங்களை வைத்தே காரியம் செய்துகொண்டது.
அதன் தொடர்ச்சியானது மீளவும், தமிழ்பேசும் மக்களை மொட்டையடிப்பதில் அதே தமிழர்களை வைத்தே நாடகமிடுகிறது. இதுள்,நிர்மலாவென்ன-கீரனென்ன?
அனைத்து நபர்களதும் பின்னே உருவாகி விருட்சமாகி இருக்கும் பிராந்திய நலன்சார் அரசியலது வேட்டைதாம் முக்கியமானது அதைப் பரவலாகவும் பேசியாக வேண்டும்.
நாவலன் வரும் 7ஆம் தேதி பெப்ரவரி,கேள்வி நேரத்தில் பங்குபெற முடியுமெனக் கருதுகிறேன்.
இந்த 71 பேர்களில் எவரும் வந்து விவாதிக்கக்கூடியவொரு களத்தை திறப்போம்.
இன்றைய சூழலில் இத்தகைய 71 பேர்களது முகத்தோடு வரும் கோரிக்கை-அறைகூவல்கள் யாவும் பின்னே அதிகார வர்க்கத்தின் அரசியல் நலத்தைப்க்கொண்டியங்குகின்றது.இது,இலங்கை அரசினது இனவொடுக்குமுறை நிகழ்வால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கோ அல்லது வேறெந்த மக்களுக்கோ எந்த விடிவையும் தரப்போவதில்லை!முஸ்லீம் மக்களது பெயரால் மேலெழும் இந்த அரசியலானது சமீபத்தில் தலித்துவ மக்கள் பேராலும் எழுந்து, இலங்கைச் சிறுபான்மை இனமக்களுக்குள் இனவொடுக்குமுறையென்ற ஒன்றே இல்லாததுபோலக் கட்டமைத்து.அதன் உச்சமாக இதுவும் மேலெழுந்து மேலுமொரு சிக்கலான முரண்வெளியை நமக்குள் தோற்றுவிப்பதில் இலங்கை-இந்திய அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் வெற்றி கொள்கின்றனர். இவர்களது லொபி அரசியற் செயற்பாட்டையும்,மீளவும் இந்திய அரசும்,இலங்கையும் இணைந்துத் தம் வலுக்கரத்தை இனங்களுக்கிடையில் மெல்ல திணித்துத் தமிழ்பேசும் மக்களது அரசிற் தீர்வுகள்-கோரிக்கைகளை நீர்த்துப்போக வைப்பதும்,வரும் வசந்தகாலத்தில் ஜெனிவாவில் நிகழும் மனிதவுரிமைசார் நிகழ்வூக்க இருக்கையில் இலங்கையின் பாசிச அரசினது இனவழிப்புக் குறித்தும் விவாதங்கள் எழ இருக்கிறது. இவற்றையெல்லாம் திசை திருப்பவும்,தமிழ்பேசும் மக்களும் தமக்குள் இனவாதத்தைக்கொண்டிருந்தனர், தமக்குள்வாழ்ந்த சிறுபான்மை இனத்தை ஒட்டமொட்டையடித்து வெருட்டியடித்தனர், என்பதெல்லாம் ஒரு அரசியலாக மேலெழுகிறது!
நிர்மலா தலைமையில் அணிவகுக்கும் 71 ஆட்டுக்குட்டிகளும்,சிங்கள மேலாதிக்க வாதத்தைக் காப்பதற்கெடுக்கும் முன்நிபந்தனையாகிறது.தமிழ்பேசும் மக்களுக்குள் ஒரு வலுவான அமுக்கக் குழுவாக இது இயங்க வைக்கப்படுவதற்கானவொரு முன்னோட்டமே இந்தக் கோரிக்கை-கையெழுத்து நடவடிக்கை.
இது,திட்டமிடப்பட்ட சதி.
இதற்கேற்பக் கீரன் தொடர்ந்து பேசும் விவேகமற்ற விதாண்டாவாதமானது அரசு என்றால் என்ன அதன் தாத்பாரியம் எப்படி ஆதிக்கமாக மக்களுக்குள் இயங்குகிறதென்பதை வேடிக்கையாகப் புரிந்துகொண்ட சந்தர்ப்பத்தை இவ் வுரையாடல் மூலஞ்செய்கிறார்.
இதுவொரு,தேவையோடுதாம் இத்தகைய முரட்டு மோடர்களை வைத்து இலங்கையின் அரச ஆதிக்கமும்,இந்திய அரசும் தமது நிகழ்ச்சி நிரலைக்குறித்து முன்னோட்டமாகச் சில கருத்துக்களத்தைத் தகவமைக்கிறது.இதனூடாக விரியும் அடுத்த நகர்வானது இலங்கையின்இனப்பிரச்சனையுள் எந்தவித அரசியற் தீர்வையும் தட்டிக்கழிப்பதற்கும்,அதன் வாயிலாக மக்களைத்தொடர்ந்து ஏமாற்றித் தமது அரச அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்குமான வியூகமே இப்போதைய தெரிவில் முதலிடம் வகிக்கிறது.
யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகளாக இருப்பவர்களே,முஸ்லீம் மக்களது வருகையை எதிர்ப்பதென்பதைத் தமிழர்களாக மொழிபெயர்ப்பதிலுள்ள சிக்கலைக் குறித்து எவரும் கவலைப்பட்டாதாகத் தெரியவில்லை.இதுவொரு தீங்கான திரிபு அரசியல்.
இனவழிப்பைச் செய்த அரசு,புலிகளை அழிக்கும்போது"புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறு"என்றார்கள்.அப்போ,தமிழ் பேசும் மக்களிலிருந்து வேறானவொரு இயக்கவாத அரசியலும் அதுசார்ந்த அரசியல் நகர்வுஞ் செய்த இஸ்லாமிய மக்களுக்கெதிரான அரசியலை ஏன் இப்போது தமிழ்பேசும் மக்களினத்தின் பெயரால் நீட்டி முடக்குகிறார்கள்?
இந்த"தமிழீழப் போராட்டம்"என்பதன் ஆரம்பமே சிங்கவாத அரசின் இனவொடுக்குமுறையின் விளைவுதானே?
இனவொடுக்குமுறையைக்கட்டவிழ்த்துவிட்டு, மக்களை ஒடுக்கிவரும் அரசானது,அத்தகைய ஒடுக்குமுறையத் தவிர்த்து இனங்களுக்கிடையில் சமாதான சக வாழ்வைச் செய்திருந்தால்,அரசியல்ரீதியாக நியாயமானவொரு தீர்வைச் சிறுபான்மை இனங்களுக்குள் ஏற்படுத்தியிருந்தால், புலிகள்போன்ற அந்நிய அடியாட்படை அமைப்புகள் தோன்றியிருக்க முடியாது.
அவ்வண்ணம், இந்திய சூழ்ச்சிக்குப் பலியாகி,இந்தியாவின் ஆலோசனைக்கிணங்க அநுராதபுரச் சிங்கள மக்கள் கொலைகள்-இஸ்லாமியர்களைத் துரத்தியடித்தலென்ற மக்கள்விரோதச் செயல்களை நமக்குள் செய்யும் இந்நிலை தோன்றியிருக்க முடியாது.
இது திட்டமிட்ட மேற்குலக மற்றும் இந்திய-இலங்கைச்சதி அரசியல்.
இன்றும், அதே பழையபாணிப் பிரித்தாளும் தந்திரத்துடன்,தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பைத் திட்டமிட்டு மறைக்கவும்,அதன்மீதான கவனத்தைத் திசைதிருப்பித் தம்மை நியாயப்படுத்த முனையும்,இலங்கை-இந்திய ஆளும்வர்க்கத்து அரசியலை முன்னெடுக்கும் இந்த 71 நபர்கள் அடங்கிய கூட்டம் மிகவும் மோசமானவொரு லொபிக்குழுவாக நமது மக்களதும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களதும் உரிமைகளை நசுக்குவதற்கேற்ப இந்த முரட்டுத்தனமான-முட்டாள்தனமான கோரிக்கையூடாக அந்நியத் தேசங்களுக்கு கருத்தியற் காவிகளாகவும்,எமக்குள் ஒரு அமுக்கக் குழுவாகவும் இறக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மிக விரிவாக வரும் 7 ஆம் தேதி கேள்வி நேரத்துள் உரையாடலாம்.
தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.01.2012
"இன்று உக்கிரம் கண்டுள்ள பிரச்சனைகளுக்குப் புற முதுகு காட்டிவிட்டு,நாளைய பொழுதின் உக்கிரமடையாத பிரச்சனை பற்றிக் கனவு காணாதே!"
Wednesday, January 18, 2012
Sunday, January 08, 2012
கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம்
இப்பொழுது ,புலம் பெயர் தமிழர்கள் அதிகமாகப் புத்தகங்கள் போடுகிறார்கள்.
புலிகள் இருந்தபோது, ஒரு நூல் வெளிவருவதோ பெரிய முயற்சியாக இருந்திருக்க வேண்டும்.அல்லது ,உயிருக்குப் பயந்து எழுதமால் இருந்திருப்பினம்.
என்ன கொடுமையடா!,
நாம புலி-அரச பயங்கரவாதங்களைக் குறித்து எவ்வளவு பெறுமதியாக ,மக்களுக்காக உண்மைகளை பேச முற்பட்டிருப்பினும்"துரோகி-எட்டப்பன்"என்ற பட்டங்களைத்தாம் இந்தத் தமிழ்ச் சமூகம் தந்தது-என்ன கொடுமை!
அப்போது,மௌனித்தவர்களது நூல்கள் இப்போது எது குறித்துப் பேசும்?
கடந்த இருபது ஆண்டாக மாடாய் அடித்து, ஓய்ந்துபோன நான் இதிலிருக்கும் இலண்டன் போகக் கஷ்டப்படும்போது,நேற்று ஐரோப்பாவுக்குள் வந்தவன் இன்று இந்தியா-இலங்கையென ஊர் சுத்த முடிகிறது-எங்கிருந்து பணம் புரள்கிறது?
எல்லாம் பெரிய குழப்பமாக இருக்கிறது.
கல்வி பயின்று,பட்டம்பெற்றுப் பேப்பரோடு வேலை செய்யும் எனக்கு 2200 யுரோ தான் அடிப்படைச் சம்பளம்.கழிவுபோகக் கையில் கிடைப்பது 1650 யுரோ!; இதற்குள் வாடகை வீட்டுக்கு வாடகை கட்டி,கரன்டு பில் கட்டி,தொலைபேசி பில்-கடன் பாக்கி,கட்டியும்,தவணைக்கடன் மாதாந்தஞ் செலுத்தியும் ,கையில் கிடைப்பது வெறும் 400 யுரோ.
இதற்குள், வேலைக்குப் போகக் காருக்கு பெற்றோல்,சாப்பாடு,பிள்ளைகளது படிப்புச் செலவு எனப் பிய்த்துவிடும்போது,மாத மத்தியில் சேடம் இழுக்கிறது.
வாற மாதச் சம்பளத்தை எடுத்து ,இந்த மாதம் வாழும் புலம் பெயர் வாழ்வில் சிலருக்கு எப்படி மேற்சொன்னபடி செலவுகள் செய்ய முடிகிறது?
விசயம் தெரிந்தால் சொல்லுங்கப்பா.
நானும்,இப்படி நாயாய்-ஓடாய்த் தேயத் தேவையில்லை.
50 வயதுக்குப் பிறகு உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது.எங்கேயாவது காசி,இராமேஸ்வரத்தை நோக்கி நடவென்று மனம் அலைக்கழிக்கிறது...
08.01.2012
புலிகள் இருந்தபோது, ஒரு நூல் வெளிவருவதோ பெரிய முயற்சியாக இருந்திருக்க வேண்டும்.அல்லது ,உயிருக்குப் பயந்து எழுதமால் இருந்திருப்பினம்.
புலியிருக்கும்போது மக்கள் சாவதைத் தேசிய விடுதலையெனக் கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம் இப்போது,கதை-கவிதைத் தொகுப்பென வெளியிடுகினம்.அதையும் , காலச்சுவடு முதல் கிழக்கு-மேற்குப் பதிப்பகங்களென வெளியிட ,தேசியப் பேச்சாளர் சேரன் பெறுகிறார்.
என்ன கொடுமையடா!,
நாம புலி-அரச பயங்கரவாதங்களைக் குறித்து எவ்வளவு பெறுமதியாக ,மக்களுக்காக உண்மைகளை பேச முற்பட்டிருப்பினும்"துரோகி-எட்டப்பன்"என்ற பட்டங்களைத்தாம் இந்தத் தமிழ்ச் சமூகம் தந்தது-என்ன கொடுமை!
அப்போது,மௌனித்தவர்களது நூல்கள் இப்போது எது குறித்துப் பேசும்?
புலியில்லை-சாவில்லை,பிறகென்ன எல்லாம் ஆறாத வடுக்களாகப் புண்பட்டிருக்கிறதென பாம்புப் புற்றுக்குளிருந்து தலைகாட்டும் இந்தக் காளான்கள் ,மக்கள் குறித்தும்,அவர்கள் வலி குறித்தும் வகுப்பெடுப்பதையும் நாம் இனிக் கேட்டாக வேண்டும்.
கடந்த இருபது ஆண்டாக மாடாய் அடித்து, ஓய்ந்துபோன நான் இதிலிருக்கும் இலண்டன் போகக் கஷ்டப்படும்போது,நேற்று ஐரோப்பாவுக்குள் வந்தவன் இன்று இந்தியா-இலங்கையென ஊர் சுத்த முடிகிறது-எங்கிருந்து பணம் புரள்கிறது?
எல்லாம் பெரிய குழப்பமாக இருக்கிறது.
கல்வி பயின்று,பட்டம்பெற்றுப் பேப்பரோடு வேலை செய்யும் எனக்கு 2200 யுரோ தான் அடிப்படைச் சம்பளம்.கழிவுபோகக் கையில் கிடைப்பது 1650 யுரோ!; இதற்குள் வாடகை வீட்டுக்கு வாடகை கட்டி,கரன்டு பில் கட்டி,தொலைபேசி பில்-கடன் பாக்கி,கட்டியும்,தவணைக்கடன் மாதாந்தஞ் செலுத்தியும் ,கையில் கிடைப்பது வெறும் 400 யுரோ.
இதற்குள், வேலைக்குப் போகக் காருக்கு பெற்றோல்,சாப்பாடு,பிள்ளைகளது படிப்புச் செலவு எனப் பிய்த்துவிடும்போது,மாத மத்தியில் சேடம் இழுக்கிறது.
வாற மாதச் சம்பளத்தை எடுத்து ,இந்த மாதம் வாழும் புலம் பெயர் வாழ்வில் சிலருக்கு எப்படி மேற்சொன்னபடி செலவுகள் செய்ய முடிகிறது?
விசயம் தெரிந்தால் சொல்லுங்கப்பா.
நானும்,இப்படி நாயாய்-ஓடாய்த் தேயத் தேவையில்லை.
50 வயதுக்குப் பிறகு உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது.எங்கேயாவது காசி,இராமேஸ்வரத்தை நோக்கி நடவென்று மனம் அலைக்கழிக்கிறது...
// இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது,அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ,போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே.//-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்
08.01.2012
Subscribe to:
Posts (Atom)