Saturday, January 05, 2013

இராணுவம் சார்ந்ததாக முத்திரை குத்துகின்றனர்

இனவாதிகள், மண்ணில் இருந்து வரும் சுயாதீனமான குரல்களை இராணுவம் சார்ந்ததாக முத்திரை குத்துகின்றனர்

ஜெயன் தேவா : //Ndp Front

 ரசு என்ன செய்ய விரும்புகின்றதோ அதையே புலம்பெயர் இனவாதம் செய்கின்றது. முன்பு புலிகள் தாம் அல்லாத அனைத்தையும் அரசு சார்பானதாகக் காட்டியது போல், இன்று இடதுசாரிய வேஷம் போட்ட இனவாதிகள், மண்ணில் இருந்து வரும் சுயாதீனமான குரல்களை இராணுவம் சார்ந்ததாக முத்திரை குத்துகின்றனர். அந்தப் பெண்களை போதாதற்கு தாங்களும் ஊடகம் மூலம் “வன்புணர்ந்ததை” மூடிமறைக்க தத்துவவாதங்கள், தர்க்கங்கள்.

    எந்த உண்மையையும், எந்தச் சரியான கருத்தையும், இனவாதத்துக்குள் தேடமுடியாது. மறுதளத்தில் எந்த உண்மையும் மண்ணில் இருந்து சுதந்திரமாக வரமுடியாது என்பதன் மூலம், புலம்பெயர் இனவாதத்தை மண்ணில் திணிக்க முனைகின்றனர்.//
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8817%3A2013-01-03-205450&catid=368%3A2013

Sri Rangan Vijayaratnam ஜெயன் தேவா ,நீங்களே அடிக் கோடிட்டுக் காட்டிப் பிரசுரிக்கிற அளவுக்கு இரயாவின் நிலை வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி. நீங்களும்,தேவநந்தாவை அரசியற்றலைவாக ஏற்றுச் செயல்படுபவர். அந்த அரசியலது தொடரில் இயங்கிவருவதும்,இலங்கை அரச பாசிசத்தின் பின் அணிவகுத்த அரசியலது தெரிவில் ஜனநாயககங் காண்பவர் ,நீங்களென நாம் அறிவோம்.

அப்படியானவர்களது அரசியலுக்கு முட்டுக்கொடுக்கும் இரயாவின் காட்டிக்கொடுப்பு-லொபி அரசியலானது முள்ளி வாய்க்கால்வரை புலிக்காக அனைவரையும் உள்ளிழுத்துச் சிதைத்துக் காட்டிக்கொடுத்தது. அதையே ,இப்போது இலங்கை ஆளும் வர்க்கத்துக்காக இரயாகரன் செய்துண்மையென்பதை நீங்களே பயன்படுத்தும் போது ,நாம் இன்னும் அதிகமாகப் புரிகிறோம்.

இரயா குறித்த அனைத்து மாயையும் விலகட்டும்.

எந்ததரப்பில் எவருக்கு ஏவல் நாயாகக் காலத்தைக் கடத்தும் இந்த இரயாக் குழுவானது மாபியாக்களென்பதை இதிலிருந்தாவது உணரவேண்டியது புரட்சிகரச் சக்திகளது கடமை!



ஜெயன் தேவா :  உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, ஸ்ரீ ரங்கன்.நான் தேவானந்தாவையோ, இரயாகரனையோ இதுவரை சந்தித்ததில்லை. ஆனாலும் அவலப்பட்ட மக்கள் தமது கால்களில் எழுந்து நிற்பதற்காகவேனும் தேவானந்தாவின் சில முயற்சிகள் உதவக் கூடும் என நான் எதிர்பார்த்தது உண்மை. அதற்காக நான் அவருக்கு பாராட்டுக் கடிதமோ வாழ்த்து மாலை புனைந்தோ அனுப்பவில்லை. அதைத் தவிர நான் யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்வதற்காகவோ அல்லது நான் பிறந்த மண்ணைப் பிரிந்து 30 வருடங்கள் அகதியாய் அலைந்த நிலையில் சலிப்பேற்பட்டு ஒரு முறையேனும் யாழ்ப்பாணம் (பாதுகாப்பாக) போய் வர உதவும் என்பதற்காகவோ நான் தேவானந்தாவுக்கு ஆதரவு அளிக்கப் புறப்படவில்லை.புலிப் பாசிசம் அழிக்கப் பட்ட பின் மக்களுக்குக் கிடைத்த வெற்றிடம் சரியான முறையில் பயன்படுத்தப் பட்டால் மட்டுமே அரச பாசிசத்திலிருந்து தமிழ் மக்கள் மீள முடியும் என்ற சிந்தனை யின் காரணமாக, இந்த வேலைகளுக்கு தேவானந்தா ஒரு போர்வையாக அமைய முடிய்ம் என்று நினைத்தேன். அதை நாட்டில் அனுமானித்து செயற்படக் கூடிய முறையில் தமிழ் மக்களிடையே ஒரு அரசியல் தலைமை தோன்றாமல் போனது பெரும் கவலைக்குரிய விஷயம். இதைவிட தமிழ் மக்கள் தமது அடிமை நிலையில் இருந்து மீள்வதற்கு வேறு எந்த செயல் முறையும் அண்மைக் காலத்தில் சாத்தியமாகிவிட முடியும் என எனது சிறு மூளைக்கு எட்டவில்லை. அதைவிட பசியுடனும், பட்டினியுடனும் தவிக்கும் மக்களுக்கு உணவு வேண்டி அதே பாசிச அரசைத் தான் இறைஞ்ச வேண்டியிருக்கிறது.அந்த மக்களுக்காக எவ்வளவுதான் தமது நிலையில் இருந்து கீழிறங்கியெயேனும் தொண்டு செய்பவர்கள் மதிக்கப் பட வேண்டியவர்களே. மருத்துவர் சிவதாசும் அத்தகையவர் என்பது எனது தீர்மானம். Investigative jounralism செய்கிரோம் என்ற பெயரில் புலம் பெயர் ஊடகங்கள் நடத்தும் கூத்துக்கள் சகிக்க முடியாதவை.இறுதியில் ஏழைப் பெண் பிள்ளைகள் வாழ்க்கையுடன் விளையாடும் இந்த ஊடகங்களின் சித்து விளையாட்டை இரயாகரன் சரியாகவே குறிப்பிட்டிருக்கிறார் என்று பட்டதால் அதை மீள் பதிவு செய்தேன்.

Sri Rangan Vijayaratnam: வணக்கம்,ஜெயதேவன்.தங்கள் கருத்துகளுக்கு நன்றி.இந்த அரசியலைக்குறித்து எவருமே "நல்லது-கெட்டது", "பாவம்-புண்ணியம்,கொடூரம்" எனவுணர்வு வழிப்பட்டுச் சிந்தக்கமுடியாது.இது, வர்க்கச் சமுதாயம்.இங்கே, வர்க்க அரசியலே முதன்மையான நலன்களைத் தீர்மானிக்கின்றன.இதுள், இரயாகரன்-டக்ளஸ்தேவாநந்தாவெல்லாம் ஒரு பொருட்டல்ல.மாறாக,அவர்கள் எந்த வர்க்கக் குணாம்சத்தோடு அரசியலை முன் தள்ளுகின்றனரென்பதே நம்முன் இருக்கும் விஷயம்.இதிலிருந்து எவருமே தப்பமுடியாது.

புலிப்பாசிசமானது குணாம்சத்தில் தமிழ் மேட்டுக் குடியின் உணர்வுகளை-நலன்களைப் பிரதிநிதப்படுத்தியவொரு அமைப்பு.2000 க்குப்பின்பு அந்த அமைப்பினது மேல்மட்டத் தலைவர்கள் அனைவரும் புதிய தரகு முதலாளிகளாக மாறிவிட்ட சூழலில் அந்த அமைப்பினது குணாம்சமானது எப்போதும்,எவரோடும் சமரசஞ் செய்து அந்த வர்க்கத்தின் நலனையடைய முனைந்த வரலாற்றில் அஃது,அந்நிய அடியாட்படையாக நமது அப்பாவி இளைஞர்களது இனவொடுக்குமுறைக்கெதிரான உணர்வைச் சிதைத்துத் தமது வர்க்கத்துக்கேற்பத் தமிழ் மக்களைச் சிதைத்துக் கொன்றொரு அரசியலை முள்ளி வாய்க்கால்வரை நகர்த்தியது.

அது, முள்ளி வாய்க்காலில் சரணடைந்து அழியும்வரை அப்பாவி மக்களைக் கேடயமாகப் பாவித்துத் தமது இயக்க நலனையும்-இருப்பையும் காக்க முனைந்தது.அவர்களது இருப்பு அந்நியச் சக்திகளுக்கு அவசியமின்றிப் போனபோது தனியே தமிழ்மேட்டுக்குடி மாபியாக்களுக்காகப் பல்லாயிரம் மக்களைச் சாகக் கொடுத்தது.

இதுள்,நான் உங்களோடு முரண்படுவதும்,இரயா குழுவோடு முரண்படுவதும் நமது பரந்துபட்ட மக்களது நலனிலிருந்து மட்டுமே!

சிங்கள-பௌத்தவினவாதத்தின் மேலாதிக்கமானது தனியே சிங்கள ஆளும்வர்க்கத்தின் நிதி மூலதனத்தால் தூக்கி நிறுத்தப்படவில்லை.அஃது,இன்றைய மொத்தவுலகின் பெரிய சாவாலான ஆசிய மூலதனத்தால் காப்பாற்றப்பட்டுத் தாங்கப்படுகிறது.அதன் சாதக-பாதகமானது தமிழ்த் தேசியவினத்தை நாய்ப்பாடுபடுத்தினாலும் பரவாயில்லை ,ஆசிய மூலதனத்துக்கிசைவானதாவிருந்தாற் சரியென்பதே ஆசிய மூலதனத்தின் தலைமையைக் கைகயப்படுத்திய சீன-இந்தியக் கொள்கை.இதன்வழி,இலங்கையில் மேற்குலகங் சார்ந்த இலங்கையின் பிறிதொரு ஆளும்வர்க்க நலனைத் தகர்த்து மேற்குலக நவ லிபரல்களது கைப்பாவையான யூ.என்.பி.யை ஓரங்கட்டி மகிந்தாவைக் காக்கின்றன.இது,இலங்கையின் பண்டுதொட்ட தலைவிதி.இதுள் தமிழ் மேட்டுக்குடி வர்க்கமானது -புலி உட்பட- மேற்குலக எஜயமானர்களது கூஜாத் தூக்கிகள்.அதனாற்றாம் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும்,யூ.என்.பி.க்கும் எப்போதும் தேன்நிலவு அரும்புவது.இதைப் பண்டா-செல்வா ஒப்பந்தம்,பின் அவரைச் சி.ஐ.ஏ.கொன்று போடுவதுவரை நிகழ்ந்த வரலாற்றைத் திரும்பிப்பாருங்கள்.பண்டா இலங்கையின் சுயாண்மைக்கும்,தேசிய மூலதனத்துக்குமானவொரு பிரதிநிதி.அவரோதாம் தேசிய முதலாளித்துவத்தின் தலைவர்.

முள்ளி வாய்க்காலுக்குப்பின்னும் நமது மக்கள் தொடர்ந்து பயங்கரவாத அச்சத்துக்குள்ளும்,தமிழ் மேட்டுக்குடியின் விதேசியவாதப் போராட்டப் பயங்கரவாதத்திலிருந்தும் தமது அடிப்படையானவுரிமைகளைச் சிங்களத் தேசிய வாதத்திடம் இழந்து சாகின்றனர். சிங்கள இராணுவமானது தமிழ்பேசும் மக்களது ஐதீக மண்ணில் மிகப்பெரும் ஜனநாயக மறுப்பைச் செவய்து தனது இருப்பையும்-சிங்கள அரச ஆதிக்கத்தையும் நிலைநாட்ட நமது இளைஞர்களைப் பலியாக்கிறது.அதன்வழி மீளவும், வீதேசியவாதக் கருத்துக்கமைய அவர்களைப் போராட-கலகஞ்செய்யத் தூண்டுகிறது.இதை ஆதரித்து,சிங்கள மேலாதிக்கத்துக்கிணைவாக இரயாகரன் அரசியல் கட்டுரை எழுதுவது தனிப்பட்ட இரயாகரன் என்ற நபரது தெரிவல்ல.

இரயாகரன் எனும் தனிப்பட்ட நபரது பெயர் ஒரு குறியீடாகும்.

அந்தப் பெயருக்குள் மறைந்து நாளாந்தம் அரச-ஆதிகச்சக்திகளுக்கேற்ப எதிர்ப் புரட்சிகரக் கருத்துக்களை ஒரு குழு செய்து வருகிறது.அதற்குத் தகுந்த நிதி-ஊடக வசதிகள் உண்டு.அதன் அரசியல் வரலாற்றுச் செயல்கள் இதையுறுத்திப்படுத்தும்.

எனவேதாம்,விவாதமொன்றை இப்படி வைக்க ஏற்பட்டது.

நாம் எவரையும்-எந்தத் தலைவரையும் நம்புவதைவிடப் பாதிக்கப்படும் மக்களை நம்பி அவர்களோடு கை கோர்ப்பபோம்.

அப்போது, அவர்களே தமது சிக்கலை எடுத்துத் தமது தலைவிதியைத் தீர்மானிப்பார்கள்.

இதைத் தடுத்திடத்தாம் இரயாகரன் குழுவென்ற சிறு ஏவற்-லொபிக்குழுவும் பெரும்ஆதிக்க அரச வியூக வகுப்பாளர்களும், தலைவர்களும் கைகோர்க்கின்றனர்.

இதை, அம்பலப்படுத்துவதற்கேற்ற கருத்துக்களைப் பலவடிவில் சொல்லி விட்டேன்.

மீளவிங்கே, எழுதுவது அவசியமில்லை.தங்கள் கருத்துக்கு நன்றி.

அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
05.01.2013



No comments: