கந்தோரடை அகழ்வின்வழி கிடைக்கப் பெற்ற பௌத மத அடையாளம் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களே...
இறுதியான "ஈழயுத்தம்" இலங்கைச் சிங்கள இராணுவத்தின் சில ஆயிரம் தலைகளை உருட்டிவிட்டால் "ஈழம்"மலர்ந்துவிடுவதாக எண்ணிக்கொண்ட குழந்தைகளுக்கு முள்ளி வாய்க்காலில் விடைகிடைத்தவுடன் இப்போது விக்கிரமசிங்கே-சரத்திடமும்,மகிந்தாவிடமும் இன்னுஞ்சிலருக்கு விக்கிரமபாகுவிடமும் தமிழருக்கான"தீர்வு"த் திறவுகோல் இருக்கிறதாகக் கனவு...
இன்னும் பலரோ இப்போது போடும் பட்டியலானது புலிகள்-சிங்கள அரசுகள் கேடயங்களாகக்கொண்ட தமிழ் மக்களது நிலைமைகளில் எவரிடம்,எவர் மக்களை விடுவிப்பதற்குக் கோரிக்கை வைத்து நின்றாரென்பது.
இந்திய-சீன மற்றும் மேற்குத்தேசங்களது இலங்கைமீதான பொருளாதார யுத்தத்தில் இப்போது கேடயங்களாக வைக்கப்பட்ட முழு இலங்கை மக்களையும் விடுவிக்க எவரும் கோரிக்கை வைத்ததாகத் தெரியவில்லை... போங்கடாப் .... மக்களே!
நமது வடக்குக் கிழக்கு மக்களோ, இந்த இனவழிப்பையெல்லாம் மறந்து, நல்லூர்த் தேரிழுத்தும்,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது, அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.
கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் இராகவன் போன்ற மூத்த புலி உறுப்பினர்கள்(முன்னாள்) நம்புகிறார்கள்(அன்றைய ஆயுதம் ஏந்தும் சூழல் இன்று அவசியம் இல்லை எனப் பகுப்பதிலிருந்து...).
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களம் பேசும் மக்கள் மீளத் தமது தாயகத்துக்கு வந்தபோது, அவர்களைச் சந்தித்த கையோடு இராகவன் அண்ணா பேட்டி வழங்கியதொரு திசையில்"புதைபொருள் ஆராச்சியின் மூலம் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த மத அடையாளங்களெல்லாம் வரலாற்று ரீதியாகச் சிங்கள மக்கள் இங்கெல்லாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களென" வேறு வரலாற்று நூல்கள்வழி உண்மையுண்டென இராகவன் அண்ணா சொன்னபோது எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லாரிப்பு!
முதலியார், செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை போன்றோரது ஆய்வுகளை முன்வைத்து தமிழ்ப் பிரதேசங்களில் கண்டடைந்த பௌத்த மத அடையாளங்களைச் சிங்கள மக்களது வாழ்வின் எச்சமெனக்கொள்ளும் புத்திக்கு வரலாற்றைப் புரிவதில் பேரினவாத்தின் புகழ்ச்சி அவசியமாக இருக்கிறது.
"பௌத்தம் என்றால் சிங்களவர்கள்,சிங்களவர்கள் என்றால் பௌத்தம்"
பேய்க்குப் பேன் பார்த்த பேய்ப்... னாக்கள்!
இலங்கையின் வடபிராந்தியத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்ததும்,அவர்களது அடையாளங்களும் பௌத்த மதத்தோடு பிணைந்திருந்ததை எங்கே போய்ச் சொல்ல?
பௌத்தம் என்பது சிங்களவருக்கு மட்டுமே இலங்கையிற் சொந்தமெனக் காணும் தமிழ் வரண்ட மூளைக்குத் தன் முன்னோர் ஆரம்பத்தில் பௌத்தர்களாக,சமணர்களாக வாழ்ந்திருந்தனரென்று அறிய முடியவில்லையென்றால் வாயை மூடி மௌனித்தல் நலமே...
பாவலர் துரையப்பாப்பிள்ளை,கணபதிப் பிள்ளை, பத்தம நாதனைக் கடந்து, டாக்டர் இந்திரபாலாவிடம் வருபவர்களுக்குத் தமிழ்ப் பிரதேசமென இப்போது வகுத்திருக்கும் எல்லை மேலும் எங்கோ விரிவதும் புரியத்தக்கது.தமிழ்ப் பௌத்தர்கள் வாழ்ந்திருக்கவும் காண்பர்.பேராசிரியர் சிற்றம்பலம் நமது வரலாற்றுப் புரிதல்களைப் பார்த்துத் தூக்குக் கயிறு ஏந்தாது இருந்தால் அதுவே பெரிய புண்ணியம்.
இத்தகைய நம்பிக்கை(யாழ்ப்பாணத்தில்-கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த அடையாளங்களது வழியில் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் வடக்கில்...) வெறும் மனவிருப்பாகவும்-புலிப் பாசிச ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள்(மாற்று-மாற்றுக் கருத்தாளர்களிடம்) நிலை பெறுகிறது.வரலாற்றை மகாவம்சம் கற்றுக்கொடுக்கும்வழி புரிய முடியுமா?அல்லது ,ஜனநாயகம்,விளிம்பு,பல்-கல்-புல்,அல் கொல்லெனப் புரிய முடியுமா?
இஃது, ஒருவகையில் கட்சி-பாராளுமன்றக் கோமாளிகளை நம்பும் பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத்துக்கொள்வே பயன்படும்.
சிங்களப் பேரினவாதம் எங்கெங்கு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியுமோ அங்கெல்லாம் இப்படிக் கயிறுவிடும் கோணங்கிகளையும் வைத்துக்கொண்டு தன் காரியத்தை நிறைவாகச் செய்கிறது.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.10.2010
No comments:
Post a Comment