Thursday, January 31, 2013

முஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்

ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான தமிழ்நாடு மற்றும் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்


திரு.இத்திரயாஸ்அவர்கள் எழுதிய கட்டுரையான "ரிஷானா குற்றமும் தண்டனையும்" எனும் தொடர் கட்டுரைகள் விவாதிக்கும் குதர்க்கத்துக்கும்-தர்க்கத்துக்கும் இந்த இஸ்லாமியப் படைப்பாளிகள் -அறிஞர்களது கூட்டு "அறிக்கை"க்கும் எந்த வேறுபாடுமில்லை!இத்திரியாசாவது சரியாவின் வன் கொடுமைத்தண்டனையை இடம்-சூழலில் வைத்து மிகச் சாதுரியமான வார்த்தைகளால் விவாதித்து-விசாரித்து அதைக் காக்கின்றார்.இந்த அறிக்கையோ சரியாவைக் குறித்து வாயே திறக்காது "குற்றவியல்-மன்னிப்பு"எனும் பொது மொழியால் உரையாடிக்கொள்கிறது.இது ,1993 வீனாப் பிரகடனமும் நடவடிக்கைகளுக்கான திட்டத்தையும் [Vienna Declaration and Programme of Action-VDPA ]ஒரு பொருட்டாகக் கணக்காக எடுக்காதவொரு  கூட்டறிக்கை.இஸ்லாமியச் சிந்தனையாளர்கள் விரிந்த தளத்திலான மதங்கடந்த மனித நேயக் கருத்தாடலுக்குள் சிக்குப்படாத மதவாதச் சிந்தனையாளர்களாவிருப்பதன் அர்த்தம் என்ன?

எந்த அதிகாரத்துக்கும் கட்டுப்படாத கலகத்தனமான போராட்டமென்பது பெரும்பகுதி மக்களை அண்மித்தியங்கும் அரசியலாகவே இருக்க முடியும்.அத்தகைய இலக்கை மறுத்துவிட்டு மதவாதிகளாகவிருந்துகொண்டு  சரியாவின்  வன் கொடுமை மனிதவிரோதச் சட்டங்களுக்கெதிராகக்  குரல் கொடுக்க முடியாது!

இங்கு, குற்றிவியல் சார்ந்த வெறும் சட்டவாதப் பிரச்சனையாக இந்த மனிதவிரோதக் -கழுத்தறுப்பு - ஒறுப்புச் சட்டமான சரியாவைக் காப்பதில் கொலை செய்யப்பட்ட ரிஷானாவை இவர்கள் மீளவும், கொலை செய்கின்றனர்.

சரியாவின் இருப்பானதும்,அதை இலங்கை-இந்தியச் சூழலில் நிலைப்படுத்த முனையும் ஒவ்வொரு  எழுத்தும்  தொடர்ந்து    பல ரிஷானாக்களது கழுத்துக்களைத் தேடியலைவதாகவே பார்க்கப்படவேண்டும்.

இது,நியாயமா?

இந்தக் கூட்டறிக்கை மானுட நேயமான அறிக்கையாக இருக்குமா?

சரியாச் சட்டங்களையும்,அதன் பாதகத்தையும் குறித்து Islamophobia க்கு மாற்று  வெளியில் உலகில் பல பலதளத்தில் நேர்மையானவுரையாடலெழுகிறது.ஆனால், இந்திய-இலங்கைச் சூழலலோ மிகக் கெடுதியான முறையில் சரியாவையும் அதன் வன் கொடுமையையும் நிலை நிறுத்தவும்,நியாயப்படுத்தவும் முனைகிறது.இதை வன்மையாகக் கண்டிப்பதோடு இதுள் இருக்கும் மதவாதப் புனைவுகள்,அதன்வழி மீள மனிதவிரோதச் சட்டங்களை நிலைப்படுத்தும் ஆதிக்கத்தின் விசுவாசமும் அம்பலப்படுத்தப்படவேண்டும்.

இங்கே நான் சுட்டும் புள்ளியில் இந்த மனிதவிரோத அறிக்கையையும்,இஸ்லாமியத் தாரளவாதிகளது சரியாவின் மீதான மறைமுக ஆதரவும் தெளிவாக மறுக்கப்படவேண்டுமென்பதே எனது கருத்து.

நவீன திறந்த சமுதாயத்துக்கெதிரான இத்தகைய மழுப்பு அறிக்கைளால் இன்னொரு ரிஷானா படுகொலையாவதை மனித நேயமிக்க மனிதர்கள் எவருமே விரும்பார்.அத்தகைய மனித நேயமிக்கோர் இதுபோன்ற அறிக்கைகளைத் தொடர்ந்து விவாதித்து இதற்குள் மறைக்கப்படும் மனிதவிரோத ஆதிக்க உளவியலைத் தோலுரிப்பர்.இனியொரு இந்த அறிக்கைமீது எந்த ஆய்வுக் கண்ணோட்டத்தையும் வைக்காது சதித்தனமாக இஸ்லாமியச் சட்ட ஓழங்கான சரியாவைக் காக்கும் தந்திரத்துக்குப் பலியாவதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இது சார்ந்து நான் தொடராக விமசர்னத்துக்குட்படுத்தும் சரியாவைக் காக்கும் இஸ்லாமியத் தாராளவாத எழுத்துக்கள்மீதான கருத்துக்களாகவே மேற் கூறுபவைகள் தொடர்ந்து எழுதப்படுகிறது.

அத்தோடு இந்தக் கூட்டறிக்கையானது ரிஷானாவின் படுகொலைக்குடந்தையான சவுதி அரேபிய நிலைப்பாடுகளைச் சர்வதேசரீதியாகக் கொண்டு சென்றிருக்க வேண்டுமெனச் சொல்வதிலிருந்து இவர்கள் ரிஷானாவின் படுகொலைக்குப் பின்பேதாம் இந்த விஷயத்துள் தலை வைத்திருக்கின்றனரென்று தெரிகிறது.

சாதரணமாக இந்த ரிஷானாவுக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சர்வதேச அமைப்புகளே இறுக்கமாகப் போராடியுள்ளதைக்கூட இவர்கள் கவனிக்காது அறிக்கை எழுதுவது பெரும் மோசடியானது.

இலங்கை அரசு  ஒரு காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கைகளிலிருக்கும்போது அந்தவரசிடம் போய் நீதி-நியாயம் கேட்பது சுத்த மோசடி.அந்தத் தேசத்தில் சட்டவாத அரசுக்கான தர்மம் முள்ளி வாய்க்காலுக்குப்பின் அடிபட்டுப் போயிருப்பதைக்கூட இவர்கள் புரிந்துகொள்ளவில்லையா அல்லது ஷரியாவின் கொடிய கழுத்தறுப்பைத் திசைதிருப்புந் தந்திருத்துக்கான பொறிக்குள் இலங்கை அரசிடம் எதிர்பார்ப்பைக் குவித்து அப்பாவிகள் போல் நடித்தலா இஃது?

சவுதியில் நிலவும் கழுத்துவெட்டுஞ் சட்டமெனவுரைப்பதிலும் அத்தகைய சட்டங்களை இஸ்லாமிய நாடுகளே பயன்படுத்துவதில்லையென்பதிலிருந்தும் ஷரியாச் சட்டவொழுங்கு வேறானது சவுதியில் நிலவும் சட்டம் வேறானதெனக் காட்டும் கருத்தின்வழி மறைமுகமாக இஸ்லாமியச் ஷரியாச் சட்டவொழுங்கையும் அதன் மனிதவிரோதக் கோரத் தண்டனைகளையும் நீதியாகவும்-நேர்மையானதாகவும் உணர்த்துகின்றனர்.ஷரியாவின் கொடிய முகத்தைச் சவுதிக்குள் தேடுவதைவிட சோமாலியாவிலும்,நைஜீரியாவிலும் தேடுங்கள்.அங்கே,கை-கால்-மூக்கு அறுக்கப்பட்ட பல்லாயிரும் மனிதர்கள் நாளாந்தம் அவஸ்த்தைப்படுவதப்போது  தெரியும்.ஷரியாச்சட்டமானது இத்தகையமத அடைப்படைவாதத் தேசத்தில் மிகப்பெரும் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதைக்கூட இவர்கள் அறியாதிருப்பதென்பது நமது காலத்துச் சாபக்கேடாகும்.

சர்வதேசரீதியாக ரிஷனாவின்மீதான விதிக்கப்பட்ட தண்டனைக்கெதிரான பாரிய போராட்டமெல்லாம் ஷரியாவின் முன் செல்லாக்காசாக்கிய இஸ்லாமிய மத அடிப்படைவாதமானது தொடர்ந்து விமர்சனத்துக்குட்படுவதை இத்தகைய கூட்டறிக்கைகள் மெல்லத் தவிர்த்துவிட்டு வெறும்"தண்டனையும்-மன்னிப்பும்" எனவிந்தக் கொடிய ஷரியாவைக் குறித்து இஸ்லாத்தின் வழி நியாயத்தை அடுக்குவதும்,அத்தோடு அரசுகளின்மீது பழியைப்போட்டுவிட்டு மனிதவிரோத இஸ்லாமிய அடைப்படைவாதத்தை இவர்கள் காத்துக்கொண்டு விடுகிறார்கள்.இது,கூட்டறிக்கை எழுதிய அனைவரதும் போக்காகப் பார்க்காது நிலவும் மத அடிப்படைவாத்தின் இறுகிய ஜனநாயகவிரோதப் போக்காவே நாம் பார்த்தாகவேண்டும்.

இவர்களது தெரிவிலான இஸ்லாம் சார்ந்த மென்போக்கும் ,அதையொட்டிய ஷரியாச் சட்டத்தின் மீதான நியாயப்படுத்தல்களும் மனித அறத்துக்கெதிரானது.இதைப் புரிந்துகொள்ளத்தக்க முறைமைகளோடு இதை விரிந்த தளத்தில் பார்த்தாகவேண்டும்.
மனிதவுரிமை,தண்டனை,சட்டம் என்பதெல்லாமே இப்போது கசாப்புக் கடைக்கு நிகராச்சு.நிலவும் உடமைகளைக் காப்பதிலும்,உலகிலுள்ள அனைத்து வளங்களையும் தமதாக்க முனைந்த கடந்த கால ஆதிக்கமுடையவர்கள் தமக்கேற்ப அமைத்துக்கொண்ட கொடிய சட்டங்களை இறைவன் பெயரால் எழுதியபோது அது நீதியாகவும்-நேர்மையானதாகவும் புரிந்துகொள்கிறோம்-புரிந்துகொள்ள வைக்கப்பட்டோம்.

இயற்கையில் ஜடப்பொருள்கள்மீதும்,உயிர்களது உடல் வரை நிகழ்த்தப்படும் அரசியலானது பௌதிகவிருத்தலைத் தமது அதிகாரத்துக்குட்படுத்தும் முயற்சியில் இத்தகைய கொடிய"திறந்த சமுதாயத்துக்கு எதிரான"அன்றைய காட்டுமிராண்டிகளது உணர்வுக்கும்,அகவொழுங்குக்கும் அமைய அதிகார மனிதர்கள்அமைத்துக்கொண்டனர்.

எனவேதாம், கி.மு. 1770 களில் பாபிலோனியச் சமுதாயத்துள் கமுராபியின் [Hammurabi]ஆளுமைகளை நிலை நாட்டும் தந்திரத்துள்:
"இறைவன்அரசனின் நிழல் அதுபோல் அரசனது நிழல் மனிதர்கள்"என விளக்கப்பட்டது.[ Zu den ersten Gesetzessammlungen gehörte die des König Ur-Nammu aus der Ur-III-Zeit. Die ersten babylonischen Gesetze stammten aus der Zeit des Herrschers Lipit-Ischtar (1934-1924 v. Chr.) ]

இத்தகைய ஒழுங்கை கி.மு. 6 ஆம்நூற்றாண்டில் கிரேக்க சட்டவாதி டிராக்கோன் [ Drakon der Athener‘ um 650 v. Chr. ]மிக நுணுக்கமாகப் பாவித்து, இன்றை அரேபியக் காண்டுமிராண்டித்தனத்தின் அன்றைய முளையை ஊன்றினான்.






பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இஸ்லாமோ அதைத் தகவமைத்துக் கொண்டு இன்றுவரை அதை மனிதர்களது உடலில் எழுதிவரும் குறியீடுகளைக் கழுத்து-கை-கால்,மூக்கிழந்த மனிதர்களில் வாசிக்க முடியும்.இதைத்தாம் காட்டுமிராண்டிகளென்றும்,  நாய்கள், என்றும்,கபோதிகளென்றும் திட்டித் தீர்த்து இந்த குறியீட்டைக் காவும் ஒவ்வொரு மனிதர்மீதும் இரங்கிக்கொள்கிறேன்.

அவர்களைத் தகவமைத்த "குற்றம்"இந்தச் சமுதாயத்தினது. மனிதர்களது வாழ்நிலைதாம் சமூகவுணர்வைத் தீர்மானப்பதில் பெரும் ஆதிகாரஞ் செலுத்துகிறது.எனவே,குற்றமென்பது நிகழக் காரணமானது இந்த அமைப்பு முறையே.ஆதலால் ,குற்றமென்பது வெறும் தனிநபர் நடாத்தையல்ல.

இத்தகைய கொடிய தண்டனைகள் யாவும் அதிகாரத்தை நம்ப வைப்பதற்கும் அதை நிலைப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டவை.

களவு,கொலை,சச்சரவுகள் அனைத்தும் இந்தத் தோற்று வாயிலிருந்து ஆரம்பமாவது.மனிதர்களது உடல் மீதானவுரிமையானது அடிமைகளையுருவாக்கிய அன்றைய சமுதாயத்தின் நேரடியான அராஜகம் இத்தகைய வடிவில் உருவாகியது.இதே கொடிய உடலாதிக்க-உலகாதிக்க அரசியல்,அதிகாரம்,சட்டமாகவும்,கருத்தியலாகவும்,குறியீடுகள் ரீதியாகவும் இப்போதும் கொடிய அடக்குமுறையாகக் கண்ணுக்தெரியாத நவீனவொழுங்காச்சு.

நான்,இங்கு உரையாடுவது மனித நடாத்தை குறித்து.உணர்வு வழிப்பட்ட அநுதாபத்தின் அடிப்படையை தள்ளிவைத்துவிட்டும்,பொதுப் புரிதலை அழித்துவிட்டும் "குற்றமும்,தண்டனையும்"குறித்த வரலாற்றுப் புரிதலிலிருந்து இதை அணுகவும்.

அதைவிட , இது குறித்த புரிதல்கள் ஏலவே பூப்கா போன்ற பிரஞ்சியச் சிந்தனையாளர்களால் தெளிவாகப் புரிய வைக்கப்பட்டுள்ளது.பூப்காவின் "கண்காணிப்பும் தண்டனையும்"எனும் நூலை[ Discipline and Punish] வாசித்தால் குரானும்,ஷரியாவும் வகுத்துரைக்கும் ஒழுங்குகள் புரிந்துபோகும்.

குழந்தையின் மரணத்தைக் கொலையா,விபத்தாவென அறியும் அடிப்படைப் புரிதலற்றவொரு தீர்புக்கும் நாகரீகமேயற்ற கழுத்தறுப்புக்கும் அல்லாவையும்,மதத்தையும் சார்ந்து மனிதத்தைத் தொலைப்பதே இன்றைய இத்தகைய அரேபியப் பயங்கரவாதிகளைக் காக்கிறதில் முடிகிறது. காட்டுமிராண்டிகளாகச் சிந்திக்கும் காலம் கடந்துவிட்டது.


இங்கே,சட்டம்-தண்டனைகள் குறித்துப் புதிய புரிதல்களைப் பாமரத்தனமாக மதவாதியாவிருந்து புரியமுடியாது!!

மதம் கொண்டு மனிதத்தை அளவிடாது,நிகழ்த்தப்படும் அராஜகத்தைப் புரிய முனையுங்கள்-மனிதனாக!

ஒரு மதவாதியாக மனிதத்தைத் தொடமுனைந்தால் இறுதியில் நமது தேசங்களிலெல்லாம் ஒரு அரேபியக் காட்டுமிராண்டிகளது கழுமரம் முற்றத்துக்கு வந்துவிடும்.

இதை, ஏலவே நாம்கண்ட வரலாறு நமக்குப் போதும்.

முதலில் மனிதனாக வாழ்வதற்கு வரலாற்றையும்,மதங்கள்-சட்டங்கள்,அரசு,அமைப்பு,பொருளாதார முறைமைகள் குறித்து ஓரளவாவது விஞ்ஞான பூர்வமாக அறிய முனையுங்கள். இதற்கும்,மதத்துக்கும் என்ன சம்பந்தமென்ற கேள்வியோடு. மற்றும்படி,கழுத்தறுத்துப் போட்டுக் காசப்புக் கடை நடாத்தும் ஷரியாவைக் கொண்டாடும் வக்கிரம் எனக்கு இல்லை!

நான் எந்த மதத்தையும் ஏற்க்கப்போவதில்லை!

அனைத்துமே மனிதவிரோதப் பயங்கர நச்சுப் பொருட்கள்.இதற்கு உலகிற் தோன்றிய எந்த முதமும் விலகல்ல!

அனைத்துமே இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் காலப் பொருத்தமற்ற கபட விஷக்கருத்தியல் கட்டுமானங்கள்.அதிகார வர்க்கத்துக்கு பாதுகாப்பளிக்கும் பெரும் நிறுவனங்கள் இவை.இத்தகைய மேற்கட்டுமானமின்றி இந்த அரேபிய-உலக பெரும் பணக்காரரின் பொருள் வாழ்வு நிலைக்காது.

மனிதர்களை முதலில் மொழியிலிருந்தும்,மதத்திலிருந்தும் விடுவிக்கும்போது அதன் வழியிலான குறியீட்டுவினை அகச் சிந்தனை-நினைவுகளிலிருந்தும்,வாழ்நிலையில் உணர்வுபெறும் ஊக்கத்தோடு இவை இரட்டிப்பாகிப் ஏதோவொன்றின்மீது பைத்தியமாகித் தனது சுய இலபத்துக்கு-பாதுகாப்புக்கு"ஒரு இறைவன்"தேவையெனப் பிரதியெடுக்கும் மனிதர்களது நினைவிலி மனதுக்கும் இந்த விடுதலை சாத்தியமாகும்.

தறித்தெறியும் தலைகளைக் கண்டும்"குற்றம்-தண்டனை"எனவும்,முஸ்லீம் எனவும் உரையாட நெஞ்சு வலிக்கா உங்கள் குணம்தாம் அல்லாவினதும்-ஆண்டவனதும், இறைவனதும்,கர்த்தரினதும் மகிமை!

இந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.

"இது,ஏன்? "என்று, யாரும் புரிய முற்பட்டால்-அஃது, " இந்த வகையில் ஒன்றுக்கொன்று முரணாகவுரைத்தும்-விளக்கியும்,உண்மையானவொரு கொலையை,கொலையெனச் சொல்லாது கருத்தாடும் இத்திரியாசினது கட்டுரையை வாசிக்கும்போது,அந்த அதிகாரக் குழுவினது ஆதிக்கத்தைத் தொடர்ந்து, மெலினப்பட்டவர்களுள் "இறையச்சம்" செய்து அஃது, கடவுளால் அருளப்பட்ட "மேன்மை-நியாயம்" என்றெல்லாஞ் சொல்லித் தப்பிக்க வைக்கப்படும் டிராக்கோனியின்[draconian] சட்டவரைவின் கொப்பியான ஷரீயாவுக்கு இப்படியெத்தனை பேர்கள் ஒத்தூதுவர்?" என்று நம்மை, நாம் கேட்டுக்கொள்ளலாம்!

எனக்கு  இத்திரியாசைவிட   மிகப்பெரும் அறிஞர்களும்,நவ  இஸ்லதமியச் சிந்தனையாளர்களான திரு.பாஷான்  ரைபியையும்[Prof. Dr.Bassam Tibi  ],ராறிக் ராமடானையும்[ Prof.Dr. Tariq Ramadan ],நன்றாகவே புரியும்.எனவே,இத்திரியாஸ் கூறும் [ரிசானா மீதான மரணதண்டனை: எதிர்வினைகளும் பதில்களும் ]கருத்துக் கலவை வடித்தெடுத்த கயமையானது!ஒரு கொலையை நியாயப்படுத்துவதென்ற புள்ளியில் நேரடியான கருத்தைக் கூறுவதிலிருந்து தப்பிக்கும்பொருட்டு, படுகொலை செய்யப்பட்ட    ரிஷானாவின்பக்கம் நியாயத்தைச் சொல்லிச் ஷரியாவின் பெயரால் நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தைக் கருத்துக்களால் நீத்துப்போக வைக்கும் இவர்களை யாரால் மன்னிக்க முடியும்?

நாம்,உண்மைகளைப் பாதிக்கப்படும் பெரும்பகுதி மக்களது பக்கம் நின்றும்,அவர்களது நலனுக்காவும் கருத்தாடுகிறோம்.இத்தகைய இத்திரியாஸ்போன்று நிலவும் அதிகார வர்க்கத்தின் நிறுவனங்களை இறைவனதோ அன்றி எதன் பேராலும் நாம் தக்கவைக்க-நியாயப்படுத்த முனையவில்லை!ஆனால்,முற்போக்கு முஸ்லீம் அறிஞர்கள்-சிந்தனையாளர்கள் இந்த அப்பாவி பெண்ணைப் படுகொலை செய்த "சட்ட" அறத்தைக் காப்பதிலேயேதாம் குறியாகக் கருத்தாடுகிறார்கள்.

கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட உடலைப் பார்த்தும் இப்படியாகவா கருத்து வைத்துச் ஷரியாவைக் காப்போம்?குறிப்பாக, ஏபிஎம் இத்ரீஸ் சின் கட்டுரையையொட்டி. அவரது கருத்துக்களை ஆழ்ந்த புரிதலற்ற வாசகர்கள் " சிறப்பானது-நேர்மையானதென்பது" இந்தப் போக்கின் ஆபத்தின் தொடர்ச்சியை இன்னொரு  தளத்துக்கு[ dar al-islam ]நகர்த்துவதாகும்.

உலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டின் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

இலங்கைப் பெண் ரிஷான சவுதியரசாலும்,அதன் இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் படுகொலை செய்யப் பட்டதை இலங்கை முஸ்லீம்கள் பலர் குறிப்பாக,ஏ பி எம் இத்ரீஸ் புதிய விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் புதியதில்லை!

இங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களை யொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.

1992 இல் பாசான் ரைபியால் [Bassam Tibi ] உருவாக்கப்பட்ட நவ இஸ்லாம் எனும் கருத்துக்கொட்ப [ Liberal movements within Islam involve Muslims who have produced a considerable body of liberal thought on the re-interpretation and reform of Islamic understanding and practice. Their work is sometimes characterised as "progressive Islam". ]இவர் [ஏபிஎம் இத்ரீஸ் எழுதியுள்ள ‘ரிசானா மீதான மரணதண்டனை-எதிர்வினைகளும் பதில்களும் ]உரையாடுகிறார்.

இது நிலவுகின்ற அதிகாரத்தைத் தொடர்ந்திருத்தும் புதியவகையான மொழியாடல்கள்[Dar asch-Schahada ].இதற்குள் மறைந்திருப்பது ஷரியாவைக் காத்து நிலைப்படுத்தும் தந்திரம்.ராறிக் ராமாடான் [Tariq Ramadan ] போன்றவர்கள் ஐரோப்பாவுக்குள் வாழும் இஸ்லாமியர்களுக்கான நவ லிபரல் மட்டத்திலான இஸ்லாம் பேசுவதும்,அவ்வண்ணம் ஷரியாவைத் தமக்குள் இணைப்பதென்பதில் நிலவும் ஐரோப்பிய ஜனநாயகப் பண்புகளோடு அண்மித்த புதிய போக்குகளைப் புதிதாகவிணைப்பதும், பெருப்பிப்பதும்,மனிதவிரோதத் தன்மையுள் இணைவு மறுவாக்கஞ் செய்ய முனையும் ஷரியாவின் நுட்பத்துள் அவரும் , மேற்கூறிய இத்திரீயாஸ்கூட அமைப்பாண்மை-நிறுவனப்பட்ட அதிகாரத்துக்கிசைந்த ஷரியாவை மறு விளக்கமளித்துக்  காக்க முனைவதைச்  சுட்டிக் காட்டுவது என் தலை முறைக்கு அவசியம்.

எனவே,இந்த ஆபத்தைப் புரிவதற்கு நான் மேலே சொன்ன ஐரோ-இஸ்லாம் குறித்த புரிதலை நிலவும் அதிகாரத்தோடான புரிதலிருந்து புரியும்போது இத்திரியாஸ் கூறுவதும் முற்றிலும் மனிதவிரோதத் தன்மையிலான புதிய அடிமைப்படுத்தும் அதிகாரத்துக்கமைவான எண்ணங்களென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 ரிசானவென்ற பெண்ணை வைத்துப் புரட்சி-அரசியல் செய்யும் பலருக்குள் நான் இதை எனது அறிதலுக்கும் மானுடப் பெரு நோக்கிலும் வைத்துரைப்பதில் இன்னுஞ் சிலவற்றைச் சொல்வேன்.
 இந்தவுலகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.அரசியலின் பெயராலும்,மதத்தின் பெயராலும்-சமூக விரோதத்தின் பெயராலும் பலர் கொல்லப்படுகின்றனர். இதையெழுதும்போது கூட இவ்வுலகத்தின் ஒரு மூலையில் அநியாயமாகவொரு மனிதர் எதன் பெயராலோ கொல்லப்பட்டிருப்பார்.

யுத்தம்-தூக்கு-மருந்தூசியடித்துக் கொலையெனப் பலரூபத்தில் இந்தச்சாவு மனிதருக்கு நேரிடுகிறது.எனவே,மதங்கள்,அரசியல் அதன் ஓழுங்குவெனும் அனைத்து மனிதவிரோத முறைமைகளது பெயராலும் மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர்-கொலை செய்யப்படுகின்றனர். அஃது, எந்தவொரு அரசுக்கும் விதிவிலக்கல்ல!ஆனால், இஸ்லாத்தின்-ஷரியாச் சட்டத்தின் பெயரால் நடாத்தப்படும் அட்டூழியம் மிகப்பெரும் அவஸ்த்தை இவ்வுலகுக்கு-திறந்த சமுதாயத்துக்கு-வரலாற்றுக்கு!

கொடூவாள்-கழுத்தறுப்பு!

வாழும் மனிதவிருப்பைச் சில கபோதிகள் ஆட்டை வெட்டுவதுபோல் மனிதரை வெட்டும் அரேபிய முஸ்லீம் நாய்களை அணுக்குண்டடித்துக் கொல்வதில் முனைப்புறும் இஸ்ரேலுக்குச் சமமாகவே பார்க்கவேண்டும்!

இஸ்லாத்தின் ஷரியா!

இது,மனிதவுரிமையையே மறுத்தவொரு மிகக் கெடுதியானவொரு சட்டமாகும். 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தபடி, கற்கால நினைவுகளோடும்,அநுபவத்தோடும் இந்த மோசமான அரபு நாடுகள் செய்யும் மனிதவிரோதத் தன்மையிலான கொலைகள்-தண்டனைகள் இந்தவுலகத்துக்கு அச்சத்தைத் தருகிறது.

கடந்த 09.01.2013 அன்று, படுகொலை செய்யப்பட்ட என் தேச மகளது சின்னஞ்சிறு கனவை அரேபிய நாய்களும் அந்த நாய்களது இஸ்லாமிய மத எருமைகளும்,அவர்களது மனித விரோதச் சட்டமான ஷரியாவுஞ் சேர்ந்து, கொடூவாளால் வெட்டிச் சரித்திருக்கிறார்கள்.

இது திறந்த சமுதாயத்துக்கு எதிரானது.

 மக்களது இருப்புக்கு அச்சமான ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் பணத் திமிர் பிடித்த காட்டுமிராண்டிகளது மதமான இஸ்லாத்தின் அராஜகம் இது.இஸ்லாத்தின் பெயரால் நடாத்தப்படும் மனிதவிரோதமான கொடுமை இதுவென்பதில் எவருமே முரண்பட முடியாது.

 மனித மகத்துவத்துக்கான திறந்த சமுதாயத்தின் எதிரிகளா நாம் ???

கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளனும்,பௌதிகவாதியுமான கார்ல் போப்பரது [Sir Karl Raimund Popper   ]"திறந்த சமூதாயமும் அதன் எதிரிகளும்" The Open Society and Its Enemies எனும் தலை சிறந்த நூலானது இந்த நூற்றாண்டில் இஸ்லாமியப் பயங்கரவாதிகளது காட்டுமிராண்டித்தனத்தை உங்வாங்கத் தக்க நூலாகும்.இந்தக் கார்ல் போப்பரே 1935 ஆம் ஆண்டில் மிகப்பெரும் இளஞ் சோசலிஸ்ட்டாகவிருந்து அதைவிட்டே ஓடியவன்.வீன் மாநகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும்,பொலிசுக்கும் ஏற்பட்ட கலகமானது 1935 ஆம் ஆண்டில்  எட்டுப் பொலிசுக்காரர்களைக் கொல்லும் நிலைக்கெட்டியபோது போப்பர் அந்தச் சோசலிச அமைப்பையே விட்டொழித்து விலகியவர்.அவ்வளவு பெரிய மானுட நேசிப்பில் ஒரு பெரும் மக்கள் புரட்சிகரப் போராட்டத்தையே[wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker. In der damals einzigartigen Wiener Atmosphäre begegnete er Menschen wie Ruth Fischer, Hanns Eisler, Paul Lazarsfeld, Oskar Kokoschka, Adolf Loos, Arnold Schönberg und Rudolf Serkin.] நிராகரித்தவர்.மனிதாபிமானம் வர்க்கஞ்சார்ந்ததென வகுப்பெடுப்பதும் அதன்வழி அனைத்து வர்க்கமும் கொலை செய்வதும் எனக்கு உடன்பாடற்றது.

இந்தவுலகத்தில் முதலாளிய-ஏகாதிபத்தியங்கள் மட்டும் மக்கள் விரோதிகளல்ல.அனைத்து மதவாதிகளும்தாம் இந்த விரோதக் கூட்டத்துள் இருக்கிறார்கள். உலகுக்கு இதுவொரு புதிய நடவடிக்கை அன்று!

போப்பர் கொலையைக் கண்டித்து அதைவிட்டு வெளியேறிச் சாகும்வரை தனது ஆய்வுகளைச் செய்தவர்.கார்ல் போப்பரைப்போல் ,ரிசானாவின் படுகொலையைப் பார்க்கும் ஒவ்வொரு இந்திய-இலங்கை "முஸ்லீமும்" அந்த மதத்தை விட்டு மனிதராக  வெளியேற வேண்டும்.

இப்படியொரு மனித விரோதச் சட்டத்தையும்,மக்கள் விரோதப் பக்கத்தையும்[Xenophobia] நியாயப்படுத்தும் எந்த மதமும் மக்களுக்குத் தேவையில்லை.இதுவொரு கொடிய மதம்.இஸ்லாம் என்பது மிகப் பெரும் விலங்கு.மனித வளர்ச்சிக்கும்,மனிதப் பெறுமானத்துக்கும் எதிரான இந்த மதம் அரேபிய அணுக்குண்டாகும்.

கீழ்வரும் இணைப்பில் ஷரியாவால் எழுத்தப்பட்ட சட்டத்தின் அகோரத்தை இந்த இணைப்பிலுள்ள முகங்களில், அங்கங்களில் வாசித்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே!


-ப.வி.ஸ்ரீரங்கன்

Saturday, January 05, 2013

இராணுவம் சார்ந்ததாக முத்திரை குத்துகின்றனர்

இனவாதிகள், மண்ணில் இருந்து வரும் சுயாதீனமான குரல்களை இராணுவம் சார்ந்ததாக முத்திரை குத்துகின்றனர்

ஜெயன் தேவா : //Ndp Front

 அரசு என்ன செய்ய விரும்புகின்றதோ அதையே புலம்பெயர் இனவாதம் செய்கின்றது. முன்பு புலிகள் தாம் அல்லாத அனைத்தையும் அரசு சார்பானதாகக் காட்டியது போல், இன்று இடதுசாரிய வேஷம் போட்ட இனவாதிகள், மண்ணில் இருந்து வரும் சுயாதீனமான குரல்களை இராணுவம் சார்ந்ததாக முத்திரை குத்துகின்றனர். அந்தப் பெண்களை போதாதற்கு தாங்களும் ஊடகம் மூலம் “வன்புணர்ந்ததை” மூடிமறைக்க தத்துவவாதங்கள், தர்க்கங்கள்.

    எந்த உண்மையையும், எந்தச் சரியான கருத்தையும், இனவாதத்துக்குள் தேடமுடியாது. மறுதளத்தில் எந்த உண்மையும் மண்ணில் இருந்து சுதந்திரமாக வரமுடியாது என்பதன் மூலம், புலம்பெயர் இனவாதத்தை மண்ணில் திணிக்க முனைகின்றனர்.//
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8817%3A2013-01-03-205450&catid=368%3A2013

Sri Rangan Vijayaratnam ஜெயன் தேவா ,நீங்களே அடிக் கோடிட்டுக் காட்டிப் பிரசுரிக்கிற அளவுக்கு இரயாவின் நிலை வந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி. நீங்களும்,தேவநந்தாவை அரசியற்றலைவாக ஏற்றுச் செயல்படுபவர். அந்த அரசியலது தொடரில் இயங்கிவருவதும்,இலங்கை அரச பாசிசத்தின் பின் அணிவகுத்த அரசியலது தெரிவில் ஜனநாயககங் காண்பவர் ,நீங்களென நாம் அறிவோம்.

அப்படியானவர்களது அரசியலுக்கு முட்டுக்கொடுக்கும் இரயாவின் காட்டிக்கொடுப்பு-லொபி அரசியலானது முள்ளி வாய்க்கால்வரை புலிக்காக அனைவரையும் உள்ளிழுத்துச் சிதைத்துக் காட்டிக்கொடுத்தது. அதையே ,இப்போது இலங்கை ஆளும் வர்க்கத்துக்காக இரயாகரன் செய்துண்மையென்பதை நீங்களே பயன்படுத்தும் போது ,நாம் இன்னும் அதிகமாகப் புரிகிறோம்.

இரயா குறித்த அனைத்து மாயையும் விலகட்டும்.

எந்ததரப்பில் எவருக்கு ஏவல் நாயாகக் காலத்தைக் கடத்தும் இந்த இரயாக் குழுவானது மாபியாக்களென்பதை இதிலிருந்தாவது உணரவேண்டியது புரட்சிகரச் சக்திகளது கடமை!



ஜெயன் தேவா :  உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, ஸ்ரீ ரங்கன்.நான் தேவானந்தாவையோ, இரயாகரனையோ இதுவரை சந்தித்ததில்லை. ஆனாலும் அவலப்பட்ட மக்கள் தமது கால்களில் எழுந்து நிற்பதற்காகவேனும் தேவானந்தாவின் சில முயற்சிகள் உதவக் கூடும் என நான் எதிர்பார்த்தது உண்மை. அதற்காக நான் அவருக்கு பாராட்டுக் கடிதமோ வாழ்த்து மாலை புனைந்தோ அனுப்பவில்லை. அதைத் தவிர நான் யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்வதற்காகவோ அல்லது நான் பிறந்த மண்ணைப் பிரிந்து 30 வருடங்கள் அகதியாய் அலைந்த நிலையில் சலிப்பேற்பட்டு ஒரு முறையேனும் யாழ்ப்பாணம் (பாதுகாப்பாக) போய் வர உதவும் என்பதற்காகவோ நான் தேவானந்தாவுக்கு ஆதரவு அளிக்கப் புறப்படவில்லை.புலிப் பாசிசம் அழிக்கப் பட்ட பின் மக்களுக்குக் கிடைத்த வெற்றிடம் சரியான முறையில் பயன்படுத்தப் பட்டால் மட்டுமே அரச பாசிசத்திலிருந்து தமிழ் மக்கள் மீள முடியும் என்ற சிந்தனை யின் காரணமாக, இந்த வேலைகளுக்கு தேவானந்தா ஒரு போர்வையாக அமைய முடிய்ம் என்று நினைத்தேன். அதை நாட்டில் அனுமானித்து செயற்படக் கூடிய முறையில் தமிழ் மக்களிடையே ஒரு அரசியல் தலைமை தோன்றாமல் போனது பெரும் கவலைக்குரிய விஷயம். இதைவிட தமிழ் மக்கள் தமது அடிமை நிலையில் இருந்து மீள்வதற்கு வேறு எந்த செயல் முறையும் அண்மைக் காலத்தில் சாத்தியமாகிவிட முடியும் என எனது சிறு மூளைக்கு எட்டவில்லை. அதைவிட பசியுடனும், பட்டினியுடனும் தவிக்கும் மக்களுக்கு உணவு வேண்டி அதே பாசிச அரசைத் தான் இறைஞ்ச வேண்டியிருக்கிறது.அந்த மக்களுக்காக எவ்வளவுதான் தமது நிலையில் இருந்து கீழிறங்கியெயேனும் தொண்டு செய்பவர்கள் மதிக்கப் பட வேண்டியவர்களே. மருத்துவர் சிவதாசும் அத்தகையவர் என்பது எனது தீர்மானம். Investigative jounralism செய்கிரோம் என்ற பெயரில் புலம் பெயர் ஊடகங்கள் நடத்தும் கூத்துக்கள் சகிக்க முடியாதவை.இறுதியில் ஏழைப் பெண் பிள்ளைகள் வாழ்க்கையுடன் விளையாடும் இந்த ஊடகங்களின் சித்து விளையாட்டை இரயாகரன் சரியாகவே குறிப்பிட்டிருக்கிறார் என்று பட்டதால் அதை மீள் பதிவு செய்தேன்.

Sri Rangan Vijayaratnam: வணக்கம்,ஜெயதேவன்.தங்கள் கருத்துகளுக்கு நன்றி.இந்த அரசியலைக்குறித்து எவருமே "நல்லது-கெட்டது", "பாவம்-புண்ணியம்,கொடூரம்" எனவுணர்வு வழிப்பட்டுச் சிந்தக்கமுடியாது.இது, வர்க்கச் சமுதாயம்.இங்கே, வர்க்க அரசியலே முதன்மையான நலன்களைத் தீர்மானிக்கின்றன.இதுள், இரயாகரன்-டக்ளஸ்தேவாநந்தாவெல்லாம் ஒரு பொருட்டல்ல.மாறாக,அவர்கள் எந்த வர்க்கக் குணாம்சத்தோடு அரசியலை முன் தள்ளுகின்றனரென்பதே நம்முன் இருக்கும் விஷயம்.இதிலிருந்து எவருமே தப்பமுடியாது.

புலிப்பாசிசமானது குணாம்சத்தில் தமிழ் மேட்டுக் குடியின் உணர்வுகளை-நலன்களைப் பிரதிநிதப்படுத்தியவொரு அமைப்பு.2000 க்குப்பின்பு அந்த அமைப்பினது மேல்மட்டத் தலைவர்கள் அனைவரும் புதிய தரகு முதலாளிகளாக மாறிவிட்ட சூழலில் அந்த அமைப்பினது குணாம்சமானது எப்போதும்,எவரோடும் சமரசஞ் செய்து அந்த வர்க்கத்தின் நலனையடைய முனைந்த வரலாற்றில் அஃது,அந்நிய அடியாட்படையாக நமது அப்பாவி இளைஞர்களது இனவொடுக்குமுறைக்கெதிரான உணர்வைச் சிதைத்துத் தமது வர்க்கத்துக்கேற்பத் தமிழ் மக்களைச் சிதைத்துக் கொன்றொரு அரசியலை முள்ளி வாய்க்கால்வரை நகர்த்தியது.

அது, முள்ளி வாய்க்காலில் சரணடைந்து அழியும்வரை அப்பாவி மக்களைக் கேடயமாகப் பாவித்துத் தமது இயக்க நலனையும்-இருப்பையும் காக்க முனைந்தது.அவர்களது இருப்பு அந்நியச் சக்திகளுக்கு அவசியமின்றிப் போனபோது தனியே தமிழ்மேட்டுக்குடி மாபியாக்களுக்காகப் பல்லாயிரம் மக்களைச் சாகக் கொடுத்தது.

இதுள்,நான் உங்களோடு முரண்படுவதும்,இரயா குழுவோடு முரண்படுவதும் நமது பரந்துபட்ட மக்களது நலனிலிருந்து மட்டுமே!

சிங்கள-பௌத்தவினவாதத்தின் மேலாதிக்கமானது தனியே சிங்கள ஆளும்வர்க்கத்தின் நிதி மூலதனத்தால் தூக்கி நிறுத்தப்படவில்லை.அஃது,இன்றைய மொத்தவுலகின் பெரிய சாவாலான ஆசிய மூலதனத்தால் காப்பாற்றப்பட்டுத் தாங்கப்படுகிறது.அதன் சாதக-பாதகமானது தமிழ்த் தேசியவினத்தை நாய்ப்பாடுபடுத்தினாலும் பரவாயில்லை ,ஆசிய மூலதனத்துக்கிசைவானதாவிருந்தாற் சரியென்பதே ஆசிய மூலதனத்தின் தலைமையைக் கைகயப்படுத்திய சீன-இந்தியக் கொள்கை.இதன்வழி,இலங்கையில் மேற்குலகங் சார்ந்த இலங்கையின் பிறிதொரு ஆளும்வர்க்க நலனைத் தகர்த்து மேற்குலக நவ லிபரல்களது கைப்பாவையான யூ.என்.பி.யை ஓரங்கட்டி மகிந்தாவைக் காக்கின்றன.இது,இலங்கையின் பண்டுதொட்ட தலைவிதி.இதுள் தமிழ் மேட்டுக்குடி வர்க்கமானது -புலி உட்பட- மேற்குலக எஜயமானர்களது கூஜாத் தூக்கிகள்.அதனாற்றாம் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும்,யூ.என்.பி.க்கும் எப்போதும் தேன்நிலவு அரும்புவது.இதைப் பண்டா-செல்வா ஒப்பந்தம்,பின் அவரைச் சி.ஐ.ஏ.கொன்று போடுவதுவரை நிகழ்ந்த வரலாற்றைத் திரும்பிப்பாருங்கள்.பண்டா இலங்கையின் சுயாண்மைக்கும்,தேசிய மூலதனத்துக்குமானவொரு பிரதிநிதி.அவரோதாம் தேசிய முதலாளித்துவத்தின் தலைவர்.

முள்ளி வாய்க்காலுக்குப்பின்னும் நமது மக்கள் தொடர்ந்து பயங்கரவாத அச்சத்துக்குள்ளும்,தமிழ் மேட்டுக்குடியின் விதேசியவாதப் போராட்டப் பயங்கரவாதத்திலிருந்தும் தமது அடிப்படையானவுரிமைகளைச் சிங்களத் தேசிய வாதத்திடம் இழந்து சாகின்றனர். சிங்கள இராணுவமானது தமிழ்பேசும் மக்களது ஐதீக மண்ணில் மிகப்பெரும் ஜனநாயக மறுப்பைச் செவய்து தனது இருப்பையும்-சிங்கள அரச ஆதிக்கத்தையும் நிலைநாட்ட நமது இளைஞர்களைப் பலியாக்கிறது.அதன்வழி மீளவும், வீதேசியவாதக் கருத்துக்கமைய அவர்களைப் போராட-கலகஞ்செய்யத் தூண்டுகிறது.இதை ஆதரித்து,சிங்கள மேலாதிக்கத்துக்கிணைவாக இரயாகரன் அரசியல் கட்டுரை எழுதுவது தனிப்பட்ட இரயாகரன் என்ற நபரது தெரிவல்ல.

இரயாகரன் எனும் தனிப்பட்ட நபரது பெயர் ஒரு குறியீடாகும்.

அந்தப் பெயருக்குள் மறைந்து நாளாந்தம் அரச-ஆதிகச்சக்திகளுக்கேற்ப எதிர்ப் புரட்சிகரக் கருத்துக்களை ஒரு குழு செய்து வருகிறது.அதற்குத் தகுந்த நிதி-ஊடக வசதிகள் உண்டு.அதன் அரசியல் வரலாற்றுச் செயல்கள் இதையுறுத்திப்படுத்தும்.

எனவேதாம்,விவாதமொன்றை இப்படி வைக்க ஏற்பட்டது.

நாம் எவரையும்-எந்தத் தலைவரையும் நம்புவதைவிடப் பாதிக்கப்படும் மக்களை நம்பி அவர்களோடு கை கோர்ப்பபோம்.

அப்போது, அவர்களே தமது சிக்கலை எடுத்துத் தமது தலைவிதியைத் தீர்மானிப்பார்கள்.

இதைத் தடுத்திடத்தாம் இரயாகரன் குழுவென்ற சிறு ஏவற்-லொபிக்குழுவும் பெரும்ஆதிக்க அரச வியூக வகுப்பாளர்களும், தலைவர்களும் கைகோர்க்கின்றனர்.

இதை, அம்பலப்படுத்துவதற்கேற்ற கருத்துக்களைப் பலவடிவில் சொல்லி விட்டேன்.

மீளவிங்கே, எழுதுவது அவசியமில்லை.தங்கள் கருத்துக்கு நன்றி.

அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
05.01.2013



Sunday, December 30, 2012

ஜீ.ரீ வியில்[GTV] "பேசாப் பொருள்

இன்று 29.12.2012 இரவு 21:30 மணிக்கு , ஜீ.ரீ வியில்[GTV] "பேசாப் பொருள்" குறித்தவுரையாடலொன்று நிகழ்ந்தது.

திரு.சம்பந்தனது "ஸ்ரீலங்கா இராணுவத்தை"தமிழ்ப் பிரதேசத்திலிருந்து வெளியேறத் தேவையில்லையெனும் பாராளுமன்றப் பேச்சின்மீதான  உரையாடலாகப் பேசாப் பொருள் நிகழ்வையின்று  நிகழ்த்தினார்கள்.

நிகழ்வுக்குத்  தோழர் நாவலன் வந்தார். நேற்றே என்னைப் பங்குபற்றும்படி கேட்டார்.ஆம் என்றேன்.

இன்றும், உரையாடலைச்  செய்வதற்குமுன்  அதுள் என்னையும் தொலைபேசி வாயிலாகவுரையாடும்படி நிகழ்வேற்பாட்டளரான  தயாநந்தாவும்,நாவலனும் வேண்டிக்கொண்டனர். நானும்,ஆம் என்றேன்.

கட்சிசார் அ ரசியலை விமர்சிப்பதும்,ஒரு கட்சியென்பது என்னவென்பதும் சொல்லியாகவேண்டும். பரந்துபட்ட  "மக்களது உணர்வுக்கு"  அப்பாற்பட்டு, அதை விளக்கும் தேவையும் உண்டு.எனவே,ஆவலோடு "ஆம் " என்றேன்.






இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(பொதுவாக அனைத்துக் கட்சியின் என்பதே சரியானது) நோக்கங்களையும்,சாரம்சத்தையும் மதிப்பிடுவதற்கு, கட்சிகள் முன்வைக்கும் அவர்களது" செயற்றிட்டம் "என்பதை ஆராய்வதைக்காட்டிலும்  வரலாற்றில் அவை என்ன செய்தனவென்றும்,மக்களை அண்மிக்கும் பல்வேறு பிரச்சனைகளில் எந்த முறையிலான அணுகுமுறையோடு எப்படியான தீர்வுகளைச் செய்கின்றனவென்றும் நாம் நோக்க வேண்டும்.

வர்க்க  மக்கள் சமுதாயத்துள் பல்வேறு வர்க்கங்களின், (விவசாயிகள், தொழிலாளர்கள், முதலாளிகள்,நிலச்சுவாந்திரர்களுப்பட்ட) இதரர்களது சீவியத்தின் பிரதான முரண்பாடுகளில் கட்சிகள்  எப்படி நடந்துகொள்கின்றனவென்பதிலிருந்தே  ஒரு கட்சியின் மீதான ஆய்வை முன் வைத்தாகவேண்டும். இதுதாம் மார்க்சிய-லெனினிய ஆய்வு முறையாகும்.

பேசப்பொருள் நிகழ்வில் இது குறித்து நாவலனோ அன்றி எந்த நேயருமோ உரையாடவில்லை!

என்னைப் பேச வேண்டுமெனக் கேட்டவர்கள்,பின் என்னையும் ஒரு நேயரின் நிலைக்குட்படுத்திப்  பொதுவான தொலைபேசியழைப்புக்கு வரவேண்டுமென்றார்கள். நானும் ஒரு மணி நேரமாக முயற்சித்தும்  அழைப்புக் கிடைக்கவில்லை.மணியொலிக்கும் நேரம் எனது தொலைபேசியை எடுக்காதிருக்கின்றனர்.பின் அழைப்பையிட்டால் அழைப்பில் மற்றவர்கள் நிற்கின்றனர்.

எனது கருத்தையும் அவசியமாகக் கருதியிருந்தால் அவர்களே அழைப்பைச்  செய்திருக்க முடியும்.

தமிழ் அரசியலுக்கு ஏமாற்றத் தெரிவதென்பது சொல்லியா ஆகணும்?

என்னுடைய 25 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இப்படி எங்கும்-எதுக்கும் ஏமாறிய வரலாறு தொடர்ந்து நிகழ்கிறது.

எவரையுமே நம்பமுடியவில்லை-நம்ப முடியவில்லை!


ஸ்ரீரங்கன்
30.12.2012

Saturday, December 08, 2012

புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணி (புலம் பெயர்)

புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணி (புலம் பெயர்) விடுக்கும் தோழமைக்கான அறைகூவலும், எச்சரிக்கையும்!


யாழ்ப் பல்கலைக்கழக மாணவரது போராட்டம் இலங்கை பூரகவும் படர்கிறது.இஃது, புரட்சிக் கிளை-விழுதெறிந்து மகிந்தா அரசினது பாசிசத்தைத் தோற்கடிக்கும். புதிய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியானது பெருந்தலைவர் தோழர் திரு.செந்தில்வேல் தலைமையில் சிங்கள முற்போக்குச் சக்திகளிடம் "புரட்சிக்குரிய புறநிலைகளைத் தகவமைத்துக் கொண்டு" வருகிறது.

புரட்சிக்குரிய "புறவயச் சூழல் மற்றும் அகவயக் காரணியின் ஒற்றுமைகள்" சிங்களச் சமுதாயச் சூழலில் எவ்வகையில் நிலவுகிறதென்பதைப் பேராசிரியர் Prof.Dr. சி.சிவசேகரம் அவர்களது தலைமையில் கட்சியானது  கள ஆய்வுப்பணியை முடுக்கி விட்டிருப்பது மகிழ்ச்சியே!

இந்தக் கள ஆய்வில்"புரட்சியின் அடிப்படை விதியை அலட்சியப்படுத்துவது அரசியலில் அதி சாகசத்துக்குட்பட்டுப் புரட்சியைத் தோல்விக்கிட்டுச் செல்லும்" என்பதால் தோழர்  இரயாகரன் தானே கவனித்துப் பரிசீலிப்பதற்கான பணியைப் பொறுப்பேற்றிருப்பதும் நமக்கு நம்பிக்கையை இரட்டிப்பாக்கிறது.


அந்த நம்பிக்கைக்கு, உரஞ் சேர்ப்பதுபோல தம்பி பழ.ரிச்சர்ட்டும் தொடர்ந்து நிலத்திலிருந்து புரட்சிகரமான நகர்வுகளைச் செய்து எதிரிக்கெதிராக நெஞ்சை நிறுத்தி, மக்கள் முன் வருகிறான்.இது,இன்றைய நிலத்து இளைய தலைமுறைக்கு வலுவான நம்பிக்கையைத் தருவதும்,புலம் பெயர் இளைய படைப்பாளிகள்,சிந்தனையாளர்களுக்கும் ஆதர்சத்தைத் தருவதாகவும் உணரப்படுகிறதென்றுணரப்படுகிறது.மொத்தத்தில் இஃது,ஒரு இளைய நட்ஷத்திரம்  உருப்பெற்றதன் பலனைக் கட்டியம் கூறி நிற்கிறது.


இன்றைய முதலாளித்துவத்தின் பொது நெருக்கடிச் சகாப்தத்தில் பாசிச மகிந்தாவின் ஆட்சிக் கவிழ்ப்பு பிற்போக்கு வர்க்ககங்களின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையின் வெளிப்பாடாக இருக்குஞ் சந்தர்ப்பத்தைக் கவனத்திலெடுக்கும் பேராசான் தோழர் இரயாகரன் அவர்கள், இது, குறித்துக் கவனமாக இருக்கவேண்டுமெனத் தோழர் பழ.ரிச்சர்ட்டுக்கு எச்சரித்துக் கண்காணித்து வருகிறார்.எந்த நூல்களை-பத்திரிகைகளை,நபர்களை வாசிக்க-அணுக வேண்டுமெனவும் இளைய தோழருக்கு எடுத்தியம்பி வர்க்கவுணர்வுமிக்க உளவியற்றொடர்ச்சிக்கும் பணியை முடுக்கி விட்டிருக்கும் இந்தச் சூழலில் புரட்சியென்பது ஒரு தேசத்துக்குள் நிலவமுடியாதது.அது, உலகு தழுவியது-நீண்டகாலத்துக்கானதென்பதிலும் தோழர் ஸ்டாலினின் ஆலோசனையைப் படிப்பினையாகவும் நாம் கொண்டிருப்பதால் மகிந்தாவின் பாசிசத்தை முறியடித்து அவரது பதவிக் காலத்துக்கு முன்பே இலங்கைப் பாட்டாளியவர்க்கச் சர்வதிகாரத்தை நிறுவி இலங்கையில் புரட்சிகரமாகச் சமுதாயத்தை மாற்றியப்போம் என நாமும் பகிரங்கமாக அறைகூவுகிறோம்!புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணியினரான நாமும் நிலத்தில் புதிய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியான நமது தாய்க் கட்சியின் பின் தோழமையோடு புரட்சிகர போராட்டத்துள்புரட்சி நடைபோட்டுத் தொடர்கிறோம்.இஃது,உத்தியோக பூர்வமான எமது அறிவிப்புத் தோழர்களே,நமக்குத் தோழமையையும் தங்கள் பொருளாதாரவுதவியையும் மக்களது விடுதலைக்காகத் தமிழ்பேசும் மக்களது விடுதலைக்காகத்தந்து புரட்சியைத் தொடருமாறும் நாம் செவ் வணக்கமிட்டுச் சொல்கிறோம்.




அத்தோடு, புலி அழிப்புக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப் படுத்தப்படுகிறது.சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.சிங்கள அடையாளஞ்சார் பண்பாட்டு மேலாத்திக்கம் பற்பல வடிவத்தில் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்புகளில் கட்டியெழுப்பும் கருத்தியற் பலமானது மேலுஞ் சிக்கலான அக அழுத்தத்தைத் தமிழ்பேசும் மக்களிடம் உருவாக்கும்போது ,அவர்களால் "தமது அடையாளந் தள்ளிவைப்பதெனும் தப்பித்திலே" இந்தச் சிங்களப் பண்பாட்டு மேலாத்திகத்தால் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.இலங்கையை ஆளும் மகிந்தாவினது அரசுக்கு மிக அண்மையாக இயங்க முனையும் ஆசிய மூலதனமானது ஆசியாவின் இருபெரும் வல்லதேசங்களால்(இந்தியா-சீனா)நிர்வாகிக்கப்பட்டுப் புதிய சந்தை-கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் போக்குவரத்துக்கான வியூகத்தில், இலங்கையைக் குறிவைக்கின்றன.


இவ்வெதிர்காலப் பொருளாதார வல்லரசுகள், தமது நோக்கையை மிக இலகுவாக வென்றெடுக்கப் பலியாக்கப்படும் தென்னாசியச் சிறுபான்மை இனம் தமிழ்பேசும் இலங்கை மக்களாக வரலாற்றின் முன் நிற்கிறார்கள்.இந்நிலையுள்,சிங்கள வரலாற்றுப் புனைவுகளைப் புதுப்பிக்க முனையும் சிங்களப் பழமைவாத ஆதிக்க வர்க்கத்துக்குத் தமது தேசத்தின் இறைமையைவிடத் தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் நோக்குக்கு எவர் அங்கீகாரம் வழங்குகின்றனரோ அவருடன்கூடித் தேசத்தை மொட்டையடித்தாலுங்கூடத் தமிழ்பேசும் மக்களுக்குத் துண்டுவுரிமையும் இலங்கையில் நிலவக்கூடாதென்ற சமூகவெண்ணவோட்டத்தின் தொடரில் தமிழ் அரசியலோ(கட்சி-இயக்க,தலித்துவச் சங்கம் முதல் வேளாளச் சதி அரசியல்வரை) கலந்து சங்கமிக்கிறது.இதுதாம்,இந் நூற்றாண்டின் மிகக் கேடான அரசியல் சூதாட்டம். இவர்களையும் எச்சரித்துப் புலம் பெயர் தளத்தில் இலங்கையரசின்-மகிந்தாவின் பாசிசத்தின் தொங்கு சதைகளான ஞானம்,தேவதாசன்,கீரன்,ரெங்கன்,சோபா சகதி,போன்ற அனைத்து விரோதிகளையும் பேராசான் தோழர் இரயாகரன் தலைமையில் வீழ்த்துவோம் என்பதும் உறுதி.


இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
ப.வி.ஸ்ரீரங்கன்

மத்திய குழுவுறுப்பினர்
புதிய ஜனநாயக மக்கள் தோழமை முன்னணி (புலம் பெயர்)

08.12.2012 ஜேர்மனி.

Saturday, October 20, 2012

புலிப் பினாமிகளும்,இளையராசாவும் இசை வியாபாரமா?

புலிப் பினாமிகளும்,அதந்தப் பினாமிகளை ஆட்டிப்படைக்கும் புலிகளது மேல் நிலைத் தலைவர்களும் இப்போது தமது ஆயுதத் தலைமையை அழித்துவிட்ட கையோடு இலங்கை அரசுக்கு ஒத்தூதித் தமிழர்களது செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்வந்தர்களாகினார்கள்.அதை மேலும் நிலைப்படுத்தும் அதிகாரத்துக்கான கோதாவில் மீளவும்,"மாவீரர்"தினமெனவும்,தமிழர் உரிமை எனவும் பொய்யுரைத்துத் தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்ளையிலும்,கொலையிலும் ஈடுபட்டது பத்தாதென்று ஒருவருக்குள் ஒருவர் தொடர்ந்து மோதி இளையராசா இசை நிகழ்ச்சி வர்த்தகத்தில் தமது இலாபங்களை நோக்கிக் கேள்விகளையும்-காய் நகர்த்தலையுஞ் செய்கிறார்கள்!

சுத்த மானங்கெட்ட வியாபாரிகள்!இலட்சம் மக்களை அழித்துச் செல்வஞ் சேர்த்த புலிப் பினாமிகளுக்கு இப்போது நிதியீடு தேவையாகவிருக்கிறது.இதற்காகச் சகல வடிவிலும் முனைகிறார்கள்.மானங்கெட்ட தமிழ்ச் சினிமாக் குத்தாட்ட நிகழ்ச்சிகூட இந்த மானங்கெட்ட புலிகளுக்கு விதிவிலக்கல்ல! இவர்கள்தாம்"ஈழத்தில் சினிமாப் பாட்டுக்குத் தடை விதித்தவர்கள்!இப்போது பிழைப்புக்கு ஒரு இளையராச!தூ...




இத்தகைய புலிப் பினாமிகளது பிளவுபட்ட புலி இயக்கவாதக் குழுக்களுக்குள் நிலவுஞ் செல்வமானது தொடர்ந்து நிலைப்படுத்தப்படவும்-பெருக்கவும் இத்தகைய வடிவங்களுடாக ஒரு பாதுகாப்பான அத்திவாரத்தை நோக்கி மக்களைக் காயடிக்கிறது புலிப் பினாமிக் கூட்டம்!


தமிழ்பேசும் மக்களிடம் கறந்த செல்வமானது பல வடிவங்களில் முதலீடாக்கிய தெருச் சண்டியர்களுக்குப் புலிகளால் "வலுகட்டாயமாகப் பிடித்துக் களப்பலியாக்கப்பட்ட" அடிமட்டப் போராளிகளது தியாகம் தேவைப்படும்போது,அதைத் தினமும் தமிழ் தேசிய அபிலாசையூடாக அனுமதிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் களப்பலியான ஏழைகளது குழந்தைகளது மரணத்தைக் கொச்சைப்படுத்துவதுமல்லாது அதை வியாபாரமுமாக்கி விடுகின்றனர்.

புலிகள் செய்த யுத்தமானது சாரம்சத்தில் தேசியவிடுதலைப்போராட்டமோ அன்றித் தடுப்பு யுத்தமோ இல்லை.மாறாக,யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் அழிவு அரசியல் நடாத்தையின் நேரடி விளைவாகத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட யுத்தமாகும் இஃது!

இது,மக்கள் போராட்டத்துக்கு எதிரான தமிழ் ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தை.இதைத் தகவமைத்துக்கொடுத்த தமிழ் ஆளும்வர்க்கத்தினது அந்நிய எஜமானர்கள் இலங்கையின் புரட்சிக்கு எதிரான அழிப்பு-அழிவு யுத்தத்தைத் தமிழர்களது இன பிரச்சனையூடாகக்கட்டியமைத்துக் கொலைகளை நடாத்தி முடித்தார்கள்.இங்கே,இதே தொடர்கதையோடு தொடர்ந்து மக்களைப் பலிகொடுக்கும் நாசகார யுத்தம்,அதைச் செய்து வந்த புலிகளையே வேட்டையாடியபோது, வெளிநாடுகளில் அலையும்பினாமிப் புலிகள் தம்மிடம் சேர்ந்துள்ள மக்கள் பணத்தைக் காப்பதற்காகவும்-பெருக்கவும்"மாவீரர்"பயனையோடு அனைத்து விரோத நிகழ்வுகளையும்  செய்து மீளவும் தொடர்ந்து மக்களைக் காயடிக்கிறார்கள்!


இவர்களது ஒரு தரப்பு, முழு வர்த்தகத்தில் மக்களைக் கொள்ளையடித்த  பணத்தோடு  இயங்குவது சகலரும் அறிந்தது.

ஐங்கரன் நிறுவனத்தின் முழுச் சொத்தும் புலப் புலிப்  பினாமிகளது சொத்தாகவும்,அந்தப் புலிப் பினாமிகள் "தமிழீழஞ்"சொல்லி மக்களைப் பலோத்தகாரப்படுத்திப் பறித்த சொத்தோடு தம்மைப் பெரும் வர்த்தகர்களாக்கியுள்ளனர்.

அனைத்துச் செல்வமும் புலிகளுடையது கிடையாது-அவை மக்களுடையது.

இவற்றைச் சேர்ப்பதற்கு எத்தனை ஆயிரம் இளைஞர்களது உயிரைப் பறித்திருப்பார்கள் இந்தப் பாசிசவ் புலிகள்!

இவர்கள் நேர்மையானவர்கள்?

இவர்கள், சீமானைக் கேள்வி கேட்கும் தகமையுடையவர்கள்?


கேடுகெட்ட தெரு பொறுக்கிக் கூட்டமான பாசிசப் புலிப் பினாமிகள் இன்று ஜனநாயக வேடமிட்டுச் சீமானைக் கேள்வி கேட்கின்றனர்!


நமது மக்களது அழிவில் செல்வஞ் சேர்த்த புலிப் பொறுக்கிகள், தமிழ்நாட்டு அரசியலில் இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சீமானைச் சிறையிட வைப்பதில் எவரது நலனைப் பேணுகிறார்கள்?



அத்தோடு இந்தப் புலிப்பினாமி வர்த்தக மாபியாக்கள் தமது நிறுவனப்பட்ட அராஜகத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் நிலைப்படுத்தி, மக்களை உளவியல் ரீதியாகவும் அச்சத்துக்குள்ளாக் கின்றனர். இப்படியாகப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து, அச்சமூட்டபட்டும், அராஜகத்தின் மூலமும் தமிழ் விதேசிய வாதம் தொடர்ந்து இருத்திவைக்கப்படுகிறது.இது பாசிசமின்றி வேறென்ன?





குழந்தைகளைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று இதுவரை பலியாக்கியது தியாகமாக இருக்க முடியுமா? எவருக்கான-எதுக்கான"மாவீரர்"தினம்?வர்த்தகஞ் செய்வதற்காகவா?இதுள் முரண்பட்ட இருவேறு புலிப் பினாமிகள் சகல வடிவிலும் மக்களை வேட்டையாட முனையும் வினையுள் இளைஞராசா நிகழ்சியும் ஒன்று!

புலிப் பணப் பினாமிகள் குறித்து நாம் மனசாட்சியோடு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்.

ஏனெனில் இலட்சம் உயிர்களோடு விளையாடியவர்கள்இந்தப் பொறுக்கிகள்.

தமிழ்ச் சிறார்களது அளப்பரிய வாழும் ஆசையைக் குழிதோண்டிப் புதைத்தவர்கள் இந்தக் கேடுகெட்ட புலிப் பாசிஸ்டுக்கள்!இவர்களுக்கெதற்கிந்தச் சினிமாத் தனப் பிழைப்பு?

இவர்கள் கொல்லப்பட்ட மக்களுக்காகப் பொறுப்புணர்வோடு செற்பட்டார்களா?அல்லது, மக்களது அழிவுக்குத் தார்மீகப் பொறுப்பெடுத்து மன்னிப்புக் கோரினார்களா?இவையெல்லாவற்றையும் தள்ளிவிட்டுத் தமது வர்த்தகத்துக்காகத் "தமிழ் மக்கள்" நலன்-சீமான் எதிர்ப்பென வகுப்பெடுக்கும் இந்தத் தெரு நாய்களை ஒட்டு வெருட்டியாகவேண்டும்!


இவர்களும்,அழிந்து சாம்பாலய்ப்போன இவர்களது பொம்மைப் புலித் தலைமையும் சமூகக் குற்றவாளிகள்.

அத்தகையப் புலிப் பணப் பினாமிகள், தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல முழு இலங்கை உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரானவர்கள்.

புரட்சியைக் காட்டிக்கொடுத்த அந்நிய கைக்கூலிகள்.இவர்களுக்கு, இளையராசவின் இசையில் இப்போது செல்வஞ் சேர்க்கும் அவா!பிழைப்புவாத நாய்கள்!தூ...

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.10.2012

Saturday, September 01, 2012

கொலை செய்வேன்"ஓட்டுப் போடவேண்டும்"



கும்பிட்டுக் கேட்டகாலம்போய்,கொலை செய்வேன்"ஓட்டுப்
போடவேண்டும்" என்பதுதாம் ஜனநாயகம்.




இந்த மாகாணசபைத் தேர்தலில்

அடுத்த அராஜகத்தை-கொலைக் களத்தைத் திறந்திருக்கும் அரசியற் சூழ்ச்சியில் பலியாவது எது-என்ன?

 
குட்டி மாபியா பிள்ளையானின் உரையைக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல முழு இலங்கையிலே நிலவும் ஆயுத அராஜகத்தின் ஆதிக்கத்தை அளக்க முடியும்.
 
  
"தமிழ்த் தேசியமானது" இப்போது பிரதேச வாதமாகச் சுருங்கிக் கொலையாடலாக மாறுகிறது.
 
வெல்லப் போவது தமிழ்த் தேசியக் கள்வர்களாக இருந்தாலும் கொலைப்படப்போவது எவரென்பதே எனது நோக்கு!
 
 
எனவே,பிள்ளையானைக் கொலைக்காரக் கும்பலாகத் தொடர்ந்திருத்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கள்வர்கள் சதி அரசியலைச் செய்கின்றனர்.

 
பிள்ளையானுக்கு உரை மொழி வரவில்லையேதவிர அராஜக அரசியலது உண்மைகளைப் போட்டுடைக்கத் தெரிந்திருக்கிறது.
 
 
சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு எவ்வளவு பெரியவுதவியைத் தமிழ் அரசியல் செய்கிறதென்பதைக் குட்டி மாபியத் தலைவன் பிள்ளையான் மூலம் அறிய முடிகிறது.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கயமைக் கூட்டம் இந்த மாபியத்தனத்துள் ஜனநாயக இடைவெளியைத் தொட்டுக்காட்டும் ஒரு புள்ளியில்பிரதேச வாதத்தின் திரட்சியைக் காட்டவாவது ஒரு சந்தர்ப்பத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குச் சொல்லிக் கொள்கின்றனர்.


தன்னைத் தோற்கடித்தால் கொலை செய்வேன்-அழிப்பேன் என்ற குட்டி மாபியாப் பிள்ளையானின் கொலையாடலைக் கேட்டுப் பாருங்களேன்-இதுதாம் கிழக்குக்கு வசந்தமான மந்திரம்!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.09.2012







Saturday, March 31, 2012

கூடங்குள அணுவுலை மின்சாரத் திட்டத் தேவையும்-தவிர்க்கக்கூடியதா?

"இந்தியாபோன்ற தேசத்தின் சுயவளர்ச்சியானது அதன் சுயாதிபத்திய சக்தி வளத்திலேயேதாம் தங்கியிருக்கிறது."

இந்தியத் துணைக்கண்டப் பாதுகாப்பும் கூடங்குள அணுவுலை மின்சாரத் திட்டத் தேவையும்-தவிர்க்கக்கூடியதா?

இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.

இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிக்கத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது.

இந்தியத் துணைக்கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும்அவசியமான சக்திவளத்தைக் குறிவைத்தே இயங்குகிறது.இந்தியா வளர்ந்து வரும் தேசம். 110 கோடிகள் மக்கள் தொகைக்கேற்ப அது வளர்ந்தே தீரவேண்டும்.

ஐரோப்பாவானது மிகவும் வளர்ந்து, ஒரளவு சம நிலையை நகரத்துக்கும் கிராமத்துக்கும் பேணும் நிலையில் இந்தியா அத்தகைய வளர்ச்சியைக் கண்டடையும் உற்பத்தியையும்,அதுசார்ந்த கட்டுமானத்தையும் கொண்டியங்குவதாக இருந்தால் பல கூடங்குளங்கள் தோன்றவே செய்யும்.அதைத் தடுத்திடவே முடியாது.

இந்தியாவானது தனது உள் நாட்டுச் சந்தையைப் பூர்த்திசெய்யும் சுய படைப்பில் தன்னை நிலை நிறுத்த முனையும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதன் சக்தி வளத்தேவையானது முன்னைய காலத்தையும்விட 50 வீதத்தால் அதிகரித்திருக்கிறது.அதைப் பூர்த்தி செய்யும் தகுதி அணுமின்சாரத் தொழில் நுட்பத்துக்கே உண்டு.எனினும்,அணுமின்சாரமானதும்,அதுசார்ந்த மனவொப்புதலும்சிறுபிள்ளைத்தனமானது! இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

  • 1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக்காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.
  • 2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால் அணுக் கழிவுகளே மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்தியக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.

இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.

ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.

அது புவிப்பரப்பு எதிரானது!

ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.

இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுவர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியாவோ தொடர்ந்து அணுமின்சார ஆலைகளை உருவாக்கவேண்டிய தேவையில் இருக்கிறது.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்-நிறுவியே தீரவேண்டும்.

ஐரோப்பாவானது தனது ஜந்திரத்துக்கு மாற்று மின்சாரவூக்கிகளைக் கண்டடைந்திருப்பினும்,அவைகளைப் பெறுவதற்கான படைப்புச் சக்திகளை ஏலேவே அணுமின் துணைகொண்டுபெற்ற வளங்களது அடைப்படையிலிருந்தே பெற்றுக்கொண்டன.வளர்ச்சியுறும் தேசங்களைப்பார்த்து" சூழலியற் பாதுகாப்பு" எனக் கோசமிடும் தேசங்கள் தமக்கும்,தமது தொழிற்சாலைகளுக்குத் தீனிபோடவும்,தாமே தொடர்ந்தும் உலகத்துக்கு உற்பத்தியாளராகவும் இருக்கவே ஆசை கொள்கின்றனர்.வளரும் தேசத்து மக்களை வெறும் நுகர்வோராக்கும் சதியும் இதற்குள் ஒளிந்தே இருக்கிறதெனக் கருதவேண்டும்.

அரசியல் வாதிகள்எவ்வளவுதாம் கூச்சலிட்டாலும் அவர்களது எஜமானர்களுக்கு அவசியமான திசையிலேயேதாம் அவர்கள் காரியஞ் செய்தாகவேண்டும்.இந்தியாவினது நடுத்தரவர்க்கத்தின் உயர்வானது ஓரளவு நுகர்வுச் சக்தியை அதிகரிக்கிறது.அந்தச் சக்திக்கேற்ப தீனிபோடும் உள்நாட்டுவுற்பத்தி இயங்காதுபோனால் இந்தியாபோன்ற தேசம் முழுமையாக நவகாலனித்துவத்தின் கடைக்கோடியில் அமர்ந்திருக்கும் அபாயமுண்டாகிறது.

அணுக் கழிவுகளைத் தேட்டமாக்கியபடிதாம் ஒரு தேசம் இனிமேல் வளரவேண்டிய தேவையுண்டாகிறது.அதுவும் இந்தியாபோன்ற தேசத்தின் சுயவளர்ச்சியானது அதன் சுயாதிபத்திய சக்தி வளத்திலேயேதாம் தங்கியிருக்கிறது.இதை எத்தனைபேர்கள் விளங்கியுள்னர்?இந்தியாவின் சயாதிபத்தியம் என்பது அதன் தேசியவுற்பத்தியாளரது உற்பத்திச் சக்திகளென யாரும் புரிந்துகொண்டால் அது தப்பானது.எனவே,ஒரு தேசமானது சுயவுற்பத்தியைத் தனது மக்களுக்கேற்பவும்,அவர்களது தேவைக்கேற்பவும் கட்டிக்கொள்வது அவசியமானதென்பதைப் புரியும்போது,அணுமின்சாரத்தின் அவசியமும்உணரத்தக்கதாகவே இருக்கமுடியும்.ஆனாற் கழிவுகளை என்ன செய்வது?

அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்.இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.அந்தவகையில் அதன் அரைதரக் காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற்பகுதி24.000 ஆண்டுகளுக்;கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும்24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இதே தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான் மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும்.இந்தியாவல் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:

  1. கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.
  2. யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.
  3. வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
  4. பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.
  5. பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.
  6. ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
  7. கீழ்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
  8. நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
  9. ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாடும்போது இந்தியாபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதையெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.

இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின் மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.இந்தப் புளோட்டோனியம் நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம் மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.

இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:

  • -ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.
  • - ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது
  • -நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.
  • -ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.
  • -ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.
  • -ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.

இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?

எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?

நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுப+ர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?

இன்றைய சூழலியல் நெருக்கடியானது மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?

எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?

இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!

யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே

என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.

அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.

200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட்[Immanuel Kant (* 22. April 1724 in Königsberg; † 12. Februar 1804 ebenda] எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்

என்றபோதும்,இந்தியத் தேசத்தினது அணுசக்தித்திட்டமானது அரைகுறையான வளர்ச்சிக்கட்டத்துக்குள் இருக்கும் இந்தச் சூழலில் ஐரோப்பிய"சூழலியக் கோசத்தை"சட்டை செய்யாது.செய்வும் முடியாதது.ஐரோப்பா தன்னைக் காப்பதற்கானவொரு ஆயுதமாகவே சூழற்பாதுகாப்பை ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்துகிறது.அது,மாற்றுத் தேசங்களும்-மக்களும் தமக்கான உற்பத்தித் திறனைக்கொண்டியங்குவதைத் தடுப்பதிலேயேதாம் ஐரோப்பியாவின் பொருளாதாரத்தின் ஏற்றமுண்டு என்பதனைத் தெரிந்தே வைத்திருக்கிறது!

இருளுக்குள் இருப்பவர்கள் ஒளிவருமுன்னமே அந்த வழியைத் தடுப்பதில் உயிர் வாழ்ந்துதாம் என்ன-வாழாவிட்டாற்றாமென்ன?மனிதத் தேவைக்கேற்ப அனைத்தும் வந்தே தீரும்-மாறியே தீரும்!இன்றில்லாவிட்டாலும் எப்போதொரு பொழுதில் லிட்டில் போயும்[ Little Boy_was the codename for the atomic bomb dropped on Hiroshima on August 6, 1945 by the Boeing B-29 Superfortress Enola Gay, piloted by Colonel Paul Tibbets of the 393rd Bombardment Squadron, Heavy, of the United States Army Air Forces ] -பெற் மானும் [Fat Man_ is the codename for the atomic bomb that was detonated over Nagasaki, Japan, by the United States on August 9, 1945. ]இந்தவுலகத்தைப் பூண்டோடு பொசுக்கத்தாம் போகிறது.அதைச் செய்து காட்டிய கீரோசீமா-நாகசாகியை மறந்திட முடியாதல்லவா?பிறகென்ன?கூடங் குளமிருந்தாலென்ன-இல்லாது போனலென்ன?

ஸ்ரீரங்கன்
31.03.2012

Wednesday, January 18, 2012

சிறுபான்மை இனங்களைப் பிளந்து நடைபெறும் அரசியல் :

சிறுபான்மை இனங்களைப் பிளந்து நடைபெறும் அரசியல் :
71 நபர்கள்-கையெழுத்தும்,அறைகூவலும்!

இந்த உரையாடலது உள்ளடக்கஞ்சார்ந்து கருத்துக் கூறுவதென்பதைவிட,இந்த வகை உரையாடலுக்குள்ளும்,71 நபர்களது கோரிக்கை-அறிக்கையென்பதற்குள்ளும் இருக்கும் அரசியலைச் சமாந்தரமாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான அனைத்து முரண்பாடுகளும் ஏதோ இனக் குரோதத்தால்-ஐய்யப்பாடுகளால் எழுந்தாக இருக்கமுடியுமா?

இந்தக்கீரன்,அல்லது ரங்கன் தேவராஜன் போன்றவர்களது கருத்தானது இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கானவொரு அரசியல் தீர்வுக்கான பாதையுள்,ஒரு நீண்டகால அரசியல் தீர்வுசார்ந்த ஆரம்பப் புள்ளிகளையே குழப்பிச் சிறுபான்மை இனங்கள்மீது ஒவ்வொரு புறமாக அவநம்பிக்கையையும்,அவதூறையும் விதைத்துத் தொடர்ந்து வரலாற்றுப்பழியூடாக ஒரு இனத்தை இலங்கையில் எந்தவுரிமையுமற்ற நிலைக்குட்படுத்துவதற்கேற்ப சிங்கள ஆளும் வர்க்கத்துக்கிசைவான தெரிவுகளில்(மக்களுக்குள் நிலவும் பல்வேறு "வேறுபாடுகளை" மேல் நிலைக்குக்கொணர்ந்து அவையூடாகப் பிராதான கோரிக்கையை நீர்த்துப்போக வைத்தல்-திசை திருப்பிய அதிர்வுகளின்வழி, மீளப் பிரித்தாளும் வியூகத்தைத் திட்டமிட்டுச் சிங்கள அரசுக்கேற்ப இயக்குவது) அரசியலாகச் செய்கின்றனர்.

இதற்கு முன்மாதிரியாக நிர்மலா போன்றவர்கள் தமது சகோதரியின் படுகொலையை எப்படிப் பிரபலமாக்கி ஒரு அரசியலை இலங்கையரசுக்கேற்பச் செய்தார்களோ,அதையே, மீளவுஞ்செய்வதில் தொடர்ந்து கருத்தியற் போராட்டத்தை இத்தகைய வடிவங்களில் செய்கின்றனர்.

ராஜனி திரணகம போன்ற எத்தனை ஆயிரம் மக்கள் இலங்கையின் இனவொடுக்குமுறை அரசின் சூழ்ச்சியால்-ஒடுக்குமுறையால் கொல்லப்பட்டனர்.இந்த இனவொடுக்குமுறை அரசியற்றொடர்ச்சியால் பலபத்து இயக்கங்களைத் தோற்றுவித்த இந்திய நலனானது, இலங்கையின் மக்களுக்குள் நிகழ்த்திய அரசியலானது மக்களுக்கு விரோதமாக இயக்கங்களை வைத்தே காரியம் செய்துகொண்டது.

அதன் தொடர்ச்சியானது மீளவும், தமிழ்பேசும் மக்களை மொட்டையடிப்பதில் அதே தமிழர்களை வைத்தே நாடகமிடுகிறது. இதுள்,நிர்மலாவென்ன-கீரனென்ன?

அனைத்து நபர்களதும் பின்னே உருவாகி விருட்சமாகி இருக்கும் பிராந்திய நலன்சார் அரசியலது வேட்டைதாம் முக்கியமானது அதைப் பரவலாகவும் பேசியாக வேண்டும்.

நாவலன் வரும் 7ஆம் தேதி பெப்ரவரி,கேள்வி நேரத்தில் பங்குபெற முடியுமெனக் கருதுகிறேன்.

இந்த 71 பேர்களில் எவரும் வந்து விவாதிக்கக்கூடியவொரு களத்தை திறப்போம்.



இன்றைய சூழலில் இத்தகைய 71 பேர்களது முகத்தோடு வரும் கோரிக்கை-அறைகூவல்கள் யாவும் பின்னே அதிகார வர்க்கத்தின் அரசியல் நலத்தைப்க்கொண்டியங்குகின்றது.இது,இலங்கை அரசினது இனவொடுக்குமுறை நிகழ்வால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கோ அல்லது வேறெந்த மக்களுக்கோ எந்த விடிவையும் தரப்போவதில்லை!முஸ்லீம் மக்களது பெயரால் மேலெழும் இந்த அரசியலானது சமீபத்தில் தலித்துவ மக்கள் பேராலும் எழுந்து, இலங்கைச் சிறுபான்மை இனமக்களுக்குள் இனவொடுக்குமுறையென்ற ஒன்றே இல்லாததுபோலக் கட்டமைத்து.அதன் உச்சமாக இதுவும் மேலெழுந்து மேலுமொரு சிக்கலான முரண்வெளியை நமக்குள் தோற்றுவிப்பதில் இலங்கை-இந்திய அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் வெற்றி கொள்கின்றனர். இவர்களது லொபி அரசியற் செயற்பாட்டையும்,மீளவும் இந்திய அரசும்,இலங்கையும் இணைந்துத் தம் வலுக்கரத்தை இனங்களுக்கிடையில் மெல்ல திணித்துத் தமிழ்பேசும் மக்களது அரசிற் தீர்வுகள்-கோரிக்கைகளை நீர்த்துப்போக வைப்பதும்,வரும் வசந்தகாலத்தில் ஜெனிவாவில் நிகழும் மனிதவுரிமைசார் நிகழ்வூக்க இருக்கையில் இலங்கையின் பாசிச அரசினது இனவழிப்புக் குறித்தும் விவாதங்கள் எழ இருக்கிறது. இவற்றையெல்லாம் திசை திருப்பவும்,தமிழ்பேசும் மக்களும் தமக்குள் இனவாதத்தைக்கொண்டிருந்தனர், தமக்குள்வாழ்ந்த சிறுபான்மை இனத்தை ஒட்டமொட்டையடித்து வெருட்டியடித்தனர், என்பதெல்லாம் ஒரு அரசியலாக மேலெழுகிறது!

நிர்மலா தலைமையில் அணிவகுக்கும் 71 ஆட்டுக்குட்டிகளும்,சிங்கள மேலாதிக்க வாதத்தைக் காப்பதற்கெடுக்கும் முன்நிபந்தனையாகிறது.தமிழ்பேசும் மக்களுக்குள் ஒரு வலுவான அமுக்கக் குழுவாக இது இயங்க வைக்கப்படுவதற்கானவொரு முன்னோட்டமே இந்தக் கோரிக்கை-கையெழுத்து நடவடிக்கை.

இது,திட்டமிடப்பட்ட சதி.

இதற்கேற்பக் கீரன் தொடர்ந்து பேசும் விவேகமற்ற விதாண்டாவாதமானது அரசு என்றால் என்ன அதன் தாத்பாரியம் எப்படி ஆதிக்கமாக மக்களுக்குள் இயங்குகிறதென்பதை வேடிக்கையாகப் புரிந்துகொண்ட சந்தர்ப்பத்தை இவ் வுரையாடல் மூலஞ்செய்கிறார்.

இதுவொரு,தேவையோடுதாம் இத்தகைய முரட்டு மோடர்களை வைத்து இலங்கையின் அரச ஆதிக்கமும்,இந்திய அரசும் தமது நிகழ்ச்சி நிரலைக்குறித்து முன்னோட்டமாகச் சில கருத்துக்களத்தைத் தகவமைக்கிறது.இதனூடாக விரியும் அடுத்த நகர்வானது இலங்கையின்இனப்பிரச்சனையுள் எந்தவித அரசியற் தீர்வையும் தட்டிக்கழிப்பதற்கும்,அதன் வாயிலாக மக்களைத்தொடர்ந்து ஏமாற்றித் தமது அரச அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்குமான வியூகமே இப்போதைய தெரிவில் முதலிடம் வகிக்கிறது.

யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகளாக இருப்பவர்களே,முஸ்லீம் மக்களது வருகையை எதிர்ப்பதென்பதைத் தமிழர்களாக மொழிபெயர்ப்பதிலுள்ள சிக்கலைக் குறித்து எவரும் கவலைப்பட்டாதாகத் தெரியவில்லை.இதுவொரு தீங்கான திரிபு அரசியல்.

இனவழிப்பைச் செய்த அரசு,புலிகளை அழிக்கும்போது"புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறு"என்றார்கள்.அப்போ,தமிழ் பேசும் மக்களிலிருந்து வேறானவொரு இயக்கவாத அரசியலும் அதுசார்ந்த அரசியல் நகர்வுஞ் செய்த இஸ்லாமிய மக்களுக்கெதிரான அரசியலை ஏன் இப்போது தமிழ்பேசும் மக்களினத்தின் பெயரால் நீட்டி முடக்குகிறார்கள்?

இந்த"தமிழீழப் போராட்டம்"என்பதன் ஆரம்பமே சிங்கவாத அரசின் இனவொடுக்குமுறையின் விளைவுதானே?

இனவொடுக்குமுறையைக்கட்டவிழ்த்துவிட்டு, மக்களை ஒடுக்கிவரும் அரசானது,அத்தகைய ஒடுக்குமுறையத் தவிர்த்து இனங்களுக்கிடையில் சமாதான சக வாழ்வைச் செய்திருந்தால்,அரசியல்ரீதியாக நியாயமானவொரு தீர்வைச் சிறுபான்மை இனங்களுக்குள் ஏற்படுத்தியிருந்தால், புலிகள்போன்ற அந்நிய அடியாட்படை அமைப்புகள் தோன்றியிருக்க முடியாது.

அவ்வண்ணம், இந்திய சூழ்ச்சிக்குப் பலியாகி,இந்தியாவின் ஆலோசனைக்கிணங்க அநுராதபுரச் சிங்கள மக்கள் கொலைகள்-இஸ்லாமியர்களைத் துரத்தியடித்தலென்ற மக்கள்விரோதச் செயல்களை நமக்குள் செய்யும் இந்நிலை தோன்றியிருக்க முடியாது.

இது திட்டமிட்ட மேற்குலக மற்றும் இந்திய-இலங்கைச்சதி அரசியல்.

இன்றும், அதே பழையபாணிப் பிரித்தாளும் தந்திரத்துடன்,தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பைத் திட்டமிட்டு மறைக்கவும்,அதன்மீதான கவனத்தைத் திசைதிருப்பித் தம்மை நியாயப்படுத்த முனையும்,இலங்கை-இந்திய ஆளும்வர்க்கத்து அரசியலை முன்னெடுக்கும் இந்த 71 நபர்கள் அடங்கிய கூட்டம் மிகவும் மோசமானவொரு லொபிக்குழுவாக நமது மக்களதும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களதும் உரிமைகளை நசுக்குவதற்கேற்ப இந்த முரட்டுத்தனமான-முட்டாள்தனமான கோரிக்கையூடாக அந்நியத் தேசங்களுக்கு கருத்தியற் காவிகளாகவும்,எமக்குள் ஒரு அமுக்கக் குழுவாகவும் இறக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மிக விரிவாக வரும் 7 ஆம் தேதி கேள்வி நேரத்துள் உரையாடலாம்.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.01.2012

Sunday, January 08, 2012

கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம்

இப்பொழுது ,புலம் பெயர் தமிழர்கள் அதிகமாகப் புத்தகங்கள் போடுகிறார்கள்.

புலிகள் இருந்தபோது, ஒரு நூல் வெளிவருவதோ பெரிய முயற்சியாக இருந்திருக்க வேண்டும்.அல்லது ,உயிருக்குப் பயந்து எழுதமால் இருந்திருப்பினம்.

புலியிருக்கும்போது மக்கள் சாவதைத் தேசிய விடுதலையெனக் கள்ள மௌனம் சாதித்த பேய்களெல்லாம் இப்போது,கதை-கவிதைத் தொகுப்பென வெளியிடுகினம்.அதையும் , காலச்சுவடு முதல் கிழக்கு-மேற்குப் பதிப்பகங்களென வெளியிட ,தேசியப் பேச்சாளர் சேரன் பெறுகிறார்.


என்ன கொடுமையடா!,

நாம புலி-அரச பயங்கரவாதங்களைக் குறித்து எவ்வளவு பெறுமதியாக ,மக்களுக்காக உண்மைகளை பேச முற்பட்டிருப்பினும்"துரோகி-எட்டப்பன்"என்ற பட்டங்களைத்தாம் இந்தத் தமிழ்ச் சமூகம் தந்தது-என்ன கொடுமை!


அப்போது,மௌனித்தவர்களது நூல்கள் இப்போது எது குறித்துப் பேசும்?

புலியில்லை-சாவில்லை,பிறகென்ன எல்லாம் ஆறாத வடுக்களாகப் புண்பட்டிருக்கிறதென பாம்புப் புற்றுக்குளிருந்து தலைகாட்டும் இந்தக் காளான்கள் ,மக்கள் குறித்தும்,அவர்கள் வலி குறித்தும் வகுப்பெடுப்பதையும் நாம் இனிக் கேட்டாக வேண்டும்.


கடந்த இருபது ஆண்டாக மாடாய் அடித்து, ஓய்ந்துபோன நான் இதிலிருக்கும் இலண்டன் போகக் கஷ்டப்படும்போது,நேற்று ஐரோப்பாவுக்குள் வந்தவன் இன்று இந்தியா-இலங்கையென ஊர் சுத்த முடிகிறது-எங்கிருந்து பணம் புரள்கிறது?

எல்லாம் பெரிய குழப்பமாக இருக்கிறது.

கல்வி பயின்று,பட்டம்பெற்றுப் பேப்பரோடு வேலை செய்யும் எனக்கு 2200 யுரோ தான் அடிப்படைச் சம்பளம்.கழிவுபோகக் கையில் கிடைப்பது 1650 யுரோ!; இதற்குள் வாடகை வீட்டுக்கு வாடகை கட்டி,கரன்டு பில் கட்டி,தொலைபேசி பில்-கடன் பாக்கி,கட்டியும்,தவணைக்கடன் மாதாந்தஞ் செலுத்தியும் ,கையில் கிடைப்பது வெறும் 400 யுரோ.

இதற்குள், வேலைக்குப் போகக் காருக்கு பெற்றோல்,சாப்பாடு,பிள்ளைகளது படிப்புச் செலவு எனப் பிய்த்துவிடும்போது,மாத மத்தியில் சேடம் இழுக்கிறது.

வாற மாதச் சம்பளத்தை எடுத்து ,இந்த மாதம் வாழும் புலம் பெயர் வாழ்வில் சிலருக்கு எப்படி மேற்சொன்னபடி செலவுகள் செய்ய முடிகிறது?

விசயம் தெரிந்தால் சொல்லுங்கப்பா.

நானும்,இப்படி நாயாய்-ஓடாய்த் தேயத் தேவையில்லை.

50 வயதுக்குப் பிறகு உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது.எங்கேயாவது காசி,இராமேஸ்வரத்தை நோக்கி நடவென்று மனம் அலைக்கழிக்கிறது...

// இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது,அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ,போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே.//
-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்

08.01.2012

Friday, December 30, 2011

முரளிதரன் நடராஜா:புலி உறுப்பினர்...

முரளிதரன் நடராஜா:புலி உறுப்பினர்,அவருடன் எனது உரையாடல்.

இந்த உரையாடலானது,சமூக ஆவேசத்தின் மத்தியில் பாசிசப் புலிகளது ஒரு உறுப்பினரான கனடா வாழ் முரளிதரன் நடராஜாவோடு[ http://www.facebook.com/nadarajah.muralitharan ] அரண்மொழி வர்மன் முகநூல் நிலைத்தகவலில் [http://www.facebook.com/amvarman25/posts/117557498363033?ref=notif&notif_t=share_reply ]நடாத்தப்பட்டது.

புரட்சியாளர்கள் குறித்துக் குறுந்தேசியவாதிகள் கடந்தகாலத்தில் "கொலை செய்யக் குரைக்கும்" அதே பண்போடு,உரையாடுவதென்பது பாசிசத்துக்குப் புதிதில்லை!

பாசிசம் எப்போதும்,மக்களை இனத்தின்பெயரால்-தேசத்தின் பெயரால்,மொழியின் பெயரால் காயடித்தே தமது இலக்கை அடைவதற்கு முனைவர்.வளர்ச்சியடைந்த முதலாளியத்தின் உச்சக்கட்டமானது, தனது நெருக்கடியைத் தீர்ப்பதில் இரண்டு உலக மகா யுத்தங்களையும்,உலக மகாயுத்தமெனத் தெரியாதபடி இப்போது தொடர்ந்து நேட்டோத் தலைமையில் சுயாதீனமிக்க மக்களையும்-தேசங்களையும் வேட்டையாடுவது வரலாறாகும்.

இந்நிலையில்,வளர்ச்சியடையாதவொரு இனத்துள்,தோன்றிய முரண்பாடானது,ஒரு தேசத்தில் பல்லினங்கள் வாழும் சந்தர்ப்பத்தில் தோன்றும் இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சிப்போக்கில், இனங்களுக்குள் இருக்கும் ஆளும் வர்க்கமானது தனது முரண்பாட்டை"இனவிடுதலை-தேச விடுதலை"எனச் சொல்லி முதலாளியத்துக்கொப்பிய பண்போடு பாசிசமாக உச்சம்பெற்று மக்களைக் கொன்றுபோடுகிறது.

இதற்குச் சிங்கள இனவாத அரசைத் தாங்கும் சிங்கள ஆளும் வர்க்கமும்,தமிழ் இனவாத அரசியலை முன்னெடுக்கும் தமிழ் ஆளும் வர்க்கமும் சமீப காலத்தில்"புலி-சிங்கள அரசு"என்ற இரண்டு யுத்த ஜந்திரத்தின்வழி மக்களை வேட்டையாடியது வரலாறு.இதுவும் பாசிசத்தின் இன்னொரு முனையாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில்,தொடர்ந்து,சிங்கள ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலைத் தமதாக்கிப் புலிகளது இன்றைய தலைமை(கே.பி.,கருணா-பிள்ளையான்,நெடியவன்-விநாயகம்,உருத்திரகுமார்) தமிழ்பேசும் மக்களைச் சுயவெழிச்சி கொள்ளாமலும்,தொடர்ந்தேவப்படும் சிங்கள மேலாதிக்கத்தைப் புரியாதிருக்கவும் போடும் நடாகம்"அபிவிருத்தி-புனர்வாழ்வு"என்று விரியும்போது,அங்கே,மக்களைத் தொடர்ந்து சிங்களப் பாசிச அரசின் ஆதிக்கத்துக்கு உட்படுத்துவதே.

இதன் வாயிலாக சிங்கள இனத்தைத் தொடர்ந்து பகமைக்குட்படுத்தித் தமிழ் பேசும் மக்களைப் பலவீனப்படுத்தி அழிப்பதில், இவர்கள் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு ஒத்தாசையாக இருப்பதென்பது, புரியப்பட இந்தவுரையாடல் சாட்சியமாக இருக்கலாம்.

எனவே,புரட்சியை இலங்கையிலிருந்து ஓரங்கட்ட,புரட்சிகரச் சூழலை இல்லாதாக்கும் புலி அரசியலானது மக்களை அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுப்பதாகும்.

இதையுரைப்பதன் தொடரில், இந்தவுரையாடலின் உளவியலை ஆய்ந்து பார்க்கலாம்.அதிகாரம் என்பது பன்முகத் தகவமைப்பின்வழி, ஒரு குவியத்திலிருந்து இன்னொரு தளத்துக்குத் தாவிச் சென்று மீளவும், அந்தக் குவியத்துக்குச் சென்று வீங்குவது.அதை, வரலாற்றில் உரைப்பதன்வழி,இந்தவுரையாடலுக்குள் உடைத்துப் பார்க்கும் உளவியல் சில உண்மைகளைப் பேசுமென்றே கருதுகிறேன்.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
30.12.11


உரையாடல்:


Arunmozhi Varman
http://www.facebook.com/amvarman25/posts/117557498363033?ref=notif&notif_t=share_reply



Nadarajah Muralitharan “அதிகாரங்களை விசுவாசிப்பதன் மூலம் மனிதன் தன்னைத் தக்க வைத்துக்கொள்ள விரும்புகின்றான்” என்று சயந்தன் சொல்லுகிறார். அப்போது மாற்றுக் கருத்தாளர்களை் குறித்து என் நினைவைத் தாக்கியது என்னவெனில் ஏகாதிபத்தியங்களையும் , முதலாளித்துவத்தையும் சாடியவர்களில் பலரும் இந்த ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகளிலே தங்கள் இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதை எவ்வகையிலும் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்குவதில்லை. இவ்வாறு தாங்கள் சமரசத்துக்குள்ளாகுவதை , தங்கள் மனச்சாட்சிக்கு நியாயப்படுத்துவதை வசதியாக இவர்கள் பொதுவெளிக்கு மறைத்து விடுவார்கள்.
vor 13 Stunden · Gefällt mir · 4

Sri Rangan Vijayaratnam அதிகாரங்களை மனிதர்கள் விசுவாசிப்பதன் மூலம் தம்மைத் தக்கவைக்க முடியுமெனில் பிரபாகரன் ஏன் முள்ளி வாய்க்கலுக்குள் மண்டை பிளவுண்டு சாகவேண்டும்?


உலகில், கோடிக்கணக்கானவர்கள் ஏன் அகதியாகவும்,ஒரு வயிற்றுச் சோற்றுக்காவும் அலையவேண்டும்?


உயிர்த்திருப்பதற்கான ஆசையில், ஏன் அகதியாகி அலையவேண்டும்?


தமிழ் மக்களுக்குத் "தமிழீழம்"எடுத்துத் தருகிறோம் எனப்போராடியவர்கள்,இறுதியில் தமிழ் மக்களையே வேட்டையாடிவிட்டு-இலட்சம் மக்களை கொன்று குவித்து,சிங்கள அரச ஆதிகத்துக்கு அடிமையாக்கிவிட்டு,தமிழ் பேசும் மக்களது பாரம்பாரிய பூமியைச் சிங்கள-அந்நிய அரசுகளுக்கு அடிமைப் படுத்திய கையோடு,இன்று அமெரிக்காவுக்கும்,இந்தியாவுக்கும்,மேற்குலகுக்கும் தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளது கேவலமான பண மோகமும்-வியாபாரப் புத்தியும் மக்களது உயிரிலிருந்தும்-உழைப்பிலிருந்தும் பெற்ற செல்வங்களைத் தமக்குள் ஏப்பம் விட்டதும் போதாமல்,கருணாவென்றும்-கே.பி.என்றும்,விநாயகன்-நெடியவன் என்றும்மக்களது பணத்துக்காக அடிபட்டுச் சாகும் சந்தர்ப்பத்தில்,அதிகாரம் குறித்துக் கட்டுப்பெட்டித்தனமாக விமர்சிக்கும் உங்களுக்கு மாற்றுக் கருத்தாளர்களா இப்போது உயிர்விடவேண்டும்?


ஏன்டா இப்படி மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறீங்கள்?

போய் உம்பை வளைத்து வேலை செய்து உங்களைக் காப்பாத்துங்கோடா!அப்போது , தெரியும் அதிகாரத்தைத் தனிமனிர் விசுவாசிக்கிறாரா அல்லது அதிகாரம் தனிமனிதரை சுற்றி தனது வலுக்கரத்தை எப்படிப் பின்னியுள்ளதென்று.அந்நிய அதிகாரங்களை நக்கி-விசுவாசித்துத் தமிழருக்கு விடுதலையைப் பெற்றுத்தர முனைந்த புலிகள் எப்படி,விடுதலையானர்களென்பதைப் பாடமாக எடுங்கோடா...
vor 9 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan சிறிரங்கன் அவர்களே நீங்கள் வசிக்கும் நாடு முதலாளித்துவ நாடா அல்லது என்ன வகையறாவுக்குள் அடங்கும் நாடு என்பதை மாத்திரம் சொல்ல முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan உலகிலே நிறைய நாடுகள் இருந்தும் அந்த நாட்டை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று உங்களால் கூற முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan இன்று நான் நினைக்கின்றேன். உலக மாந்தர்களோடு சராசரியாக ஒப்பிடும்போது உங்கள் மாத வருமானமும் , சொத்திருப்பும் பல நுாறு மடங்குகள் அதிகம் அல்லவா? வருடத்தில் குறைந்த பட்சம் ஒரு மாத விடுமுறையை எடுத்துக்கொண்டு எந்த மூன்றாம் உலக நாடுகளுக்குச் சென்று , இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்று ஆய்வு செய்து, அரசியல் பணி செய்து வருகிறீர்கள் என்று விளக்க முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan பொதுவெளியல் நீர் அரசியல் கதைப்பதற்கு உமது மொழியின்படி உமது மாத , சொத்து வருமானங்களை மக்கள் முன்வைக்காமல் மற்றவர்களது வருமானங்கள் தொடர்பாகப் பேசுவது அயோக்கியத்தனம் இல்லையா ?
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam இதை நீர் கேட்பதுதாம் இன்றைய நூற்றாண்டின் சுவரிசியம்.அதுவும் நீர் புலிகளைச் சுத்துவதாக மக்களைச் சுத்தியதெல்லாம் போகட்டும்.முதலில் நெடியவனிடம் கேட்டு முழுச் சொத்து விபரத்தையும் வெளியிடும்.பிறகு எனது"சொத்து"விபரத்தை வெளியிடுகிறேன்.
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan ஜேர்மன் முதலாளித்துவ அரசின் சலுகைகளில் எவற்றை நீா் புறந்தள்ளி வாழுகிறீர்கள் என்ற பட்டியலைத் தர முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan அவர்களைக் கயவர்கள் , கொடியவர்கள் என்று கூறும் நீர்தானே முன்னுதாரணத்துக்காக இவற்றையெல்லாம் வெளியிட்டு உமது நேர்மையை, தார்மீக அறத்தை உலகத்துக்குப் பறை சாற்ற வேண்டும்.
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam முட்டாள் ,உலகமெல்லாம் மக்களுக்கானது.அதைக் கொள்ளையடித்தவனே முதலாளி,புலியும் மக்களைக்கொன்று முதலாளிகளாகியது.கிட்டரை முன்தள்ளிய ஜேர்மனியப் பெரு நிறுவனங்கள்போல்.அந்த முலாளிகளுக்கு அடிமைகளாக இருக்கும் தொழிலாளிகளில் நானும் ஒருவன்.அதனால்,இந்தவுலகத்தில் முதலாளிக்கு மட்டுமல்ல அவனை உருவாக்கும் உழைப்புக்கும்-உழைப்பாளிக்குமே இந்தவுலகம் சொந்தம்.இதைக்கூடப் புரியமுடியாதவொரு சாம்பிராணி"தேசியம்"பேசி மக்களை மொட்டையடிக்குது-தூ...
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan நான் சுத்தியவன் என்றால் நீர் தானே இந்த நுாற்றாண்டின் மாபெரும் புரட்சிவாதி! புரட்சிவாதி புரட்டல்காரர்களைச் சாட்டித் தப்பித்துக் கொள்வது மாபெரும் அவலமல்லவா ?
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam பரட்சிக்காரன் ஒவ்வொரு உழைப்பாளியும்தான் அவன் எந்தப் புரட்டல்காரனைச் சுத்தியவனென இந்த ப் பாசிஸ்டுக்கள்தாம் வகுப்பெடுக்கவேண்டும்?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan தாங்கள் ஜேர்மனிய முதலாளிகளிடம் சலுகை பெற்று மூன்றாம் உலக நாடுகளில் இன்னலுறுகின்ற தொழிலாளர்களைக் காட்டிலும் வசதியான வாழ்வை வாழ்பவர்தானே!
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் தங்களால் மூன்றாம் உலக நாடு ஒன்றில் தொழிலாளியாக வாழும் வாய்ப்பினைக் கொள்ள முடியாமல் உள்ளது?
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam சுவிசில் சுத்திக் கனடாவுக்குத் தப்பிய பீடைகளெல்லாம் மீண்டும் தேசியம்-விடுதலையென எவனது பிள்ளைகளையும்-எவளது தாலியையும் அறுக்க நியாயம் அளக்கிறீர்கள்.உங்களையெல்லாம் நடுத்தெருவில் வைத்துக் காறி உமிழவேண்டும்.அதற்கானவொரு காலம் கட்டாயம் வரும்.நீங்கள் மக்களாகி ஒவ்வொரு உழைப்பாளத் தமிழ் பேசுவனிடமிருந்தும் தப்ப முடியாது!
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan நேரடியாகப் பதில் சொல்லும்! நாங்களெல்லாம் மக்களுக்கு நடுவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உமது சொத்து வருமான விபரத்தை மக்கள் முன் வைக்காது தொழிலாள வர்க்கம் , புரட்சி என்று மக்களது காதில் புா சுற்ற வேண்டாம்.
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan இந்த உரையாடல்களில் இருந்து நீர் உம்மைப் போலிப் புரட்சியாளனாக அகில உலகுக்கும் பிரகடனப்படுத்தியுள்ளீர்கள்.
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
ஜேர்மனிய முதலாளியிடம் சலுகை?அது சலுகையல்ல மந்தாரம்.அவன் எமது உழைப்பைச் சுரண்டீ உயிர்வாழ்வதற்காக எமக்கிடும் பட்டுணிச் சம்பளம்.அதைக்கூட வன்னியில் பாலங்கட்டியவனுக்குப் புலிகள் கொடுக்காமல் போட்ட நாமத்துக்கு இங்கிருந்து உழைத்தனுப்பிய கதையெல்லாம் உண்டு.பாலங்கட்டச் சொன்னவர்களே,யுத்தம் கழுத்துக்குள் நெருங்கியபோது எல்லோருக்கும் நாமம் போட்டு,மக்கள் சொத்தை மூட்டை கட்டிக் கப்பலுகுக் காத்திருந்து, மண்டைபிளந்த கதையெல்லாம் சலுகைதாம் காவடியாரே?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan மற்றவனைச் சாட்டி தனது வருமான , சொத்து விபரங்களை மறைக்கின்ற இந்தத் தந்திரசாலியை மக்களே இனம் காணுங்கள்!
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan இந்த மனிதன் கூறுகின்றார் “நாங்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று”. ஒரு பேச்சுக்காக உண்மையென்றே வைத்துக் கொள்வோம். அனால் நான் கேட்கின்றேன். இந்த மனிதன் தனது மாதாந்த , சொத்து விபரங்ளை வெளியிட மறுக்கின்ற புரட்சி பற்றிக் குசாலாக முதலாளித்துவத்தின் முதுகில் குந்தியிருந்து ஏப்பம் விட்டவாறே பொழுதுபோக்கிற்குக் கதைக்கின்ற உண்மையான தொழிலாளி வர்க்கத்தை ஏய்க்கின்ற நபர் என்று.
vor 2 Stunden · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
சொத்து விபரம்?என்னிடம் இருப்பது சிற்றி பேங்க கடனும்,ஸ்பார்காஸ ஓவற்றாப்புந்தாம்.வீடுவாசல்,காணி பூமி வைத்திருக்கும் புலிப்பினாமிகள்தாம் சொத்து விபரம் தரவேண்டும்.அப்படிச் சொத்தையெல்லாம் நான் வைத்திருக்கவில்லை!கோவண்ங்கூட உழைத்து வேண்டியதடா ...இதுவெல்லாம் புலிகளது அகாராதியில் முடியுமா?மக்களை பேமானியாக்கி ,உயிரை-உழைப்பைத் தட்டிப் பறித்த கபோதிகள் நீங்கள்.ஒரு இனத்தையே வரலாற்றில் ஒட்ட மொட்டையடித்து,அடிமைப்படுத்திச் சென்றதுமில்லமால்,இன்னும் ஒட்டக் கழுத்தறுக்கும் குணத்தின் தொடர்ச்சியாக எஞ்சியிருப்பவரையும்,சுரண்ட முனையும் உங்களைச் சவுக்கால் அடித்துத் தண்டிக்க வேண்டும்.கடந்த காலத்தில்,லையிட் போஸ்ட்டில் பாண்-கோழி கழுவெடுத்தவனுக்குத் தண்டனை கொடுத்த பாசிச அராஜக வாதிகள்,இன்று மக்கள் பணத்தைத் தமதாக்கிப் பெரும் தொழில் நிறுவனர்கள்.தூ...
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan உந்த விடுகையை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு இலங்கைக்குச் சென்று தற்போழுது ஏன் உம்மால் தொழிலாளியாக வாழ முடியாதுள்ளது. அது பற்றிய பதிலைக் கூற முடியுமா ?
vor 2 Stunden · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் வன்னியையும், புலியையும் சாட்டி விவாதத்தை திசை திருப்ப முயலுகிறீர். நீர் யார் என்பதை மக்கள் முன் வையும். உம்மைப் பற்றித்தான் நீர் பேச வேண்டும். ஏனென்றால் நீர்தான் உலகப்புரட்சியை முன்னெடுப்பவர்.
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
அதை நீர் முதலில் செய்யும்.அதன்பின் நான் இலங்கைக்குச் செல்கிறேனா இல்லை ஜேர்மனியில் புடுங்கிறேனவெனப் பார்ப்போம்.உங்கட பாசிசத்தின் தொடர்ச்சியலேதாம்,ஜேர்மனியைத் தேடி அலைந்தவர்கள் மக்கள்.ரயர் போட்டெரித்த பாசிஸ்டுக்கள் எல்லாம்,இலங்கைக்குப் போவென்று சொல்லும் உரிமை உண்டா?பாசிசஸ்டுக்கு எந்தக் கருத்துரிமையுமுண்டா?பாசிசட்டுக்களே இப்போது,மக்களுக்காகக் கண்ணீர் விடுவதாகச் சொல்லிக்கொண்டு,மக்களது பணத்தின்மீதும்,அவர்களது பொருளும் மீதும் தேசியத்தின் பேரில் கைவைக்கும்போது, முல்லைத் தீவுக்குள் உள்ள ஏதோவொரு சிறு வாய்க்காலுக்காக தெருவெல்லாம் இறங்கியவன் புலம் பெயர்ந்த ஓட்டாண்டித் தமிழன்தான்.அவனுக்கு ஆப்பு வைத்துச் சிரத்தையோடு செல்வஞ் சேர்த்த நீங்களெல்லாம் இப்போதும்,வெள்ளை வேட்டி கட்டி வேட்டைக்குத் தயாராவதுதாம் இந்த நூற்றாண்டின் மிக மோசடி!
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan சார் நான் இப்போது உங்களைக் கேட்பது, தங்களால் இப்போது இலங்கைக்குச் சென்று தொழிலாளியாக வாழ்ந்து அந்தத் தொழிலாளிகளுக்காகப் ஏன் போராட முடியாதுள்ளது என்பதை சற்று இந்த உலகத்துக்கு விளக்குவீர்களா ?
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் என்னைச் செய்யச் சொல்லி வசதியாக நீர் ஓடி ஒழிகிறீர் ? நீர்தானே சர்வதேசப் புரட்சியாளர்!
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan நீர் ஒரு படு போலியென்பதை அப்பட்டமாக நிருபித்துவிட்டீர்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan நான் இலங்கைக்குச் சென்றால் மரணமும், உமக்கு செங்கம்பள வரவேற்பும் கிடைக்குமென்பதை இத்தால் யாவரும் அறிவார்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan நீர் ஜேர்மன் முதலாளித்துவத்தை நக்குவதன் மூலம் இலங்கைத் தொழிலாளி அடைய முடியாத சுகங்களையெல்லாம் அனுபவித்து இன்பம் கண்ட போலிப்புரட்டு வார்த்தையாளர்.
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam ஏன்,உமது தலைவர்களில் பலர் இலங்கை அரசின் செங்கம்பள வரவேற்பில் இருக்கும்போது,உமக்கென்ன தண்டனை அங்குகிடைக்கும்?நீர் அவர்களது நிகழ்ச்சி நிரலை இங்கு தேசியவிடுதலையெனச் சொல்லி இங்கிருக்கும் மக்களை ஒட்ட மொட்டையடிப்பதில்,இப்படியுரைப்பது அவசியம்தாம்.உமக்கு இலங்கை அரசு தண்டனை தருகிறதோ இல்லையோ நமது புலம்பெயர் மக்கள் விரைவில் தருவார்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் கடன் என்று சொல்லி ஏமாற்றப் பார்க்கிறீர். நீர்தான் மார்க்ஸியவாதி! பாட்டாளிவர்க்கப் புரட்சியாளன்! தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம். உமது குடும்பத்தின் மாத வருமானம், வீடு, சொத்து விபரங்களை நீர் அகில உலகப் பாட்டாளி வர்க்கத்திடம் முன்வைக்க வேண்டும்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan எனக்குத் தண்டனையைத் தருமுன் நீர் இலங்கை சென்று தொழிலாளியாகவும், தொழிலாளி வர்க்கப் புரட்சியாளனாகவும் ஏன் வாழமுடியாதுள்ளது என்பதை சிறிது அகில உலகத் தொழிலாள வர்க்கத்திடம் எடுத்தியம்புவீர்களா?
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
அதை அவர்கள் இன்னும் கேட்கவில்லை.அப்படிக் கேட்கும்போது நான் முன் வைப்பதில் சிரமமில்லை.முதலில்,இப்போது ஒவ்வொரு தமிழ் மகனும் கேட்கிறான்-கேட்கிறாள் "புலம்பெயர் தேசத்தில் இருக்கும் மக்களது சொத்தைப் புலிகள் தமதாக்கித் தலைமறைவாகியவர்களில் எவரெவர் இன்னும் எத்தனை மில்லியனோடு இருக்கின்றனர்?;அச் சொத்துகள் யாவும் மக்களது என்பதால் அதைப் பொது நிதியமாக்கி வன்னியில் வதைபடும் மக்களுக்கு நிவாரணமாகக் கொடுப்பதும் ,இங்கிருக்கும் நெடியவனிடம் எத்தானைகோடி மக்கள் பணம் இருப்பதென்பதை முதலில் கேட்டுச் சொல்லும்.அத்தோடு நீர் கொள்ளையடித்ததையும் கூறிவிடும்.சுவிசில் உம்மைத் தேடியவர்கள்.இப்போது கனடாவுக்குள் கால் வைத்துள்ளனர்...
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan இந்த நுாற்றாண்டின் மாபெரும் நகைச்சுவையை நீங்கள் வாசித்து மகிழ்ந்திருப்பீர்கள். தொழிலாள வர்க்கம் இந்த மாபெரும் செஞ்செனையின் தளபதி, பாட்டாளி வர்க்கக் கோட்பாளனின் காலடியில் மண்டியிட்டு வருமான , சொத்துவிபரங்களைக் கேட்காத வரைக்கும் எல்லாவற்றையும் மூடி மறைத்து வர்க்க ரகசியம் பேணுவார் என்பதை இத்தால் அகில உலகுக்கும் அதற்குமப்பாற்றபட்ட பிரபஞ்சத்திற்கும் பிரகடனப்படுத்துகிறோம். அதுவரை அவர்பின் அணி திரள்வோம்!
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan தனக்குப் பின்னால் நாலு சனத்தைத் திரட்டத் தெரியாதவன் குந்தியிருந்து மயிர் புடுங்கி மண்ணாங்கட்டியால் மந்திரவித்தை புரிகிறானாம்!
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
கே.பி.இடம் தூது அனுப்பி இருக்கிறேன்.அவரெனக்கு ஒரு வேலை தருவதாகவும் சொல்லி உள்ளார்.மிக விரைவில் ,"அண்ணன் பிரபாகரனால் சர்வதேசப் புலித் தலைவரெனச் சொல்லப்பட்ட கே.பி."இடம் வேலை செய்ய நான் போவதில் காரியம் நடக்கிறது.நீரும் வாரும்.உமக்கும் பொது மன்னிப்புத் தரும்படி நான் மகிந்தாவிடம் நேரடியாகவே சொல்லி உயிர்ப் பிச்சை தரவழிவகை செய்கிறேன்.அதற்கு, முதலில் இலட்சம் மக்களைக் கொல்வதற்கு நீர் உடந்தையாக இருந்ததும்,ஐரோப்பாவில் திட்டமிட்டு மாற்றுக் கருத்தாளர்களைப் படுகொலை செய்வதற்கும் நீரும் காரணமானதை ஒத்துக்கொண்டு,பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பைக் கோரி விடவேண்டும்.அத்தோடு, உமது சொத்துக்களை "என்னிடம்விட்ட கோரிக்கைப்படி" முன்வைத்து,அது மக்கள் சொத்தானால்,வன்னியில் வதைபடும் மக்களக்கு உதவி செய்ய முயற்சி செய்து ,அச் செல்வத்தை வன்னிக்கு அனுப்பி விடவேண்டும்.அப்போது ,உமையும் உயிர்வாழ மக்கள் அநுமதிப்பார்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan இவங்களுக்கு புலியையும், புலியின்ரை வாலையும் விட்டால் சொந்தமாய் ஒண்டுமே பண்ணத் தெரியாது.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan பத்துச் சனத்தைக் கூட்டிக் கூட்டம் போட்டால் 10,000 கட்சி உருவாக்குவாங்கள்.
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan இவர்களை உலகின் மூலையில் உள்ள எந்தத் தொழிலாளர்களும் நம்பவில்லை.
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
அதூதம் சொல்கிறேன்:எமது பிரச்சனை மக்களைத் திரட்டிப் பலிகொடுப்பதில்லை.நாம் தமிழீழஞ் சொல்லிüயும்,விடுதலை சொல்லியும் மக்களை ஆயுதம்காட்டிக் களத்துக்கு அனுப்பிக் கொல்பவர்களில்லை.புலிகள் செய்த இந்த மக்கள் விரோதத்தை எதன் பெயராலும் செய்யமாட்டேன்.ஆனால் ,இப்படிச் செய்ய முனையும் உம்மைப் போன்ற கயவர்களை-பாசிஸ்டுக்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதுதாம் முதல் வேலை!அதற்குப் பின் மக்களே தீர்மானிப்பார்கள் தமது தலைவிதியை.நீர்,இதைக்கூடப் புரிய முடியாத மண்டாக இருந்துகொண்டு ,மக்களைக் கொலைக்குத் தயார்படுத்துவதில் புலிகளது குப்பைகளைக் காவித் திரிகிறீரே?இன்னும் ,திருந்தி மக்களிடம் மன்னிப்புக் கேட்க முடியாதிருப்பதில் எந்த அதிகாரம் உம்மைத் தடுக்கிறது?
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan சனங்களுக்குக் கதை விடாதேயும். நான் கேட்பது உமது மார்க்சிச சித்தாந்தங்களின் அடிப்படையிலான தத்துவார்த்தம் வருமான , சொத்துவிபரங்கள் தொடர்பில் ஒரு மார்க்ஸியவாதி ஆற்ற வேண்டிய கடப்பாடு என்னவென்பது தொடர்பானதே?
vor etwa einer Stunde · Gefällt mir

Nadarajah Muralitharan நீர் கூறும் விளக்கம் மார்க்சீயத்தின் அடிப்படைகளோடு பெரும் முரண்பாடு கொள்கிறதே ?
vor etwa einer Stunde · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
அது மார்க்சிச வாதிக்குத் தெரியும்.அதைப் புலிப்பாசிஸ்டுக்கள் வகுப்பெடுப்பதுதாம் சுத்தக் கொடூரம்.அதை நாங்கள் செய்துகொள்வது இருக்கட்டும்.புலிகளாகிய பாசிஸ்டுக்கள் நீங்கள்,இறுதிவரை மக்களை வன்னிக்குள் வைத்து வேட்டையாடிய காட்டுமிராண்டிகள், இறுதியாகச் சரணடைந்தபோது- என்ன நடந்ததென்றாவது சொல்வீர்களா?அல்லது பிரபாகரனுக்கு என்ன நடந்ததேன்று மக்களுக்குச சொல்வீர்களா?ஏனெனில் ,மக்கள்தாம் தமது உயிரையும்,உடமைகளையும் உங்களிடம் பறிகொடுத்து,உங்களை நம்பி நடாற்றில் வீழ்ந்தவர்கள்.அதைச் செய்ய வக்கில்லாத நீங்கள்,மகத்தான புரட்சி குறித்து வகுப்பெடுப்பதற்கு உங்களுக்குக் கொலைகாரப் பாசிசப் புலிகளுக்கு என்னடா அருகதையுண்டு?
vor etwa einer Stunde · Gefällt mir
Nadarajah Muralitharan

இலங்கை அரசு பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டதாகக் கூறுகிறது. நீர் அம்பலப்படுத்தப் போகிறன் எண்டு சொல்லிறியள். மற்றும் இங்கு மக்கள் என்பதில் தொழிலாளர்களையும் இணைக்கின்றீர்களா ? மக்கள் , தொழிலாளர்கள் எண்டு பேசும்போது லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் வாழும் மக்களை, தொழிலாளிகளை எப்படி முதலாம் உலகநாட்டிலே மாத்திரம் தொழிலாளியாக வாழுவேன் என்று அடம்பிடிக்கும் உம்போன்ற அதியுயர் சலுகை பெற்ற தொழிலாளர்களோடு இணைத்துக் கொள்வீர்கள் என்பது தொடர்பான சந்தேகங்கள் எழும். அதை எப்படித் தங்களது கோட்பாட்டுத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவீர்கள் என்பதையும் அறிய அகில உலகப்பாட்டாளி வர்க்கம் காத்து நிற்கின்றது.
vor 59 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
நான் கேட்ட கேள்விக்குப் பதிலைத் தாரும்.அதன்பின் பாட்டாளிய வர்க்கம்,முதலாம்-இரண்டாம்-மூன்றாம் உலகம் பற்றிப் புலிகளுக்கு வகுப்பெடுக்க அவசியமொன்றுருவானால் அதைச் செய்ய எப்பவும் தாயராக இருக்கிறோம்.முதலில் உங்கள் மறைப்பு அரசியலில் பக்ககங்களைத் திறந்து ,மக்களுக்கு உண்மையையும்,அவர்களிடம் மன்னிப்பும்,புலம்பெயர் தேசத்தில் மக்களிடம் தட்டிப் பறித்த செல்வத்தைத் தமாதாக்கி வைத்திருக்கும் உம்மைப் போன்ற புலிப்பினாமிகளிடமிருந்து மீள மக்களிடம் சென்றறைடைய வழியைச் சொல்லும்.
vor 53 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan அண்ணா ! ஆத்திரப்படாதீர்கள்! உங்கள் நிதானமின்மை கண்டு மார்க்சின் கல்லறை திறந்து கொண்டுவிடும். நீங்கள் தானே தொடர்ந்து சொல்லுகிறீர்கள். அவர்களெல்லாம் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டு விட்டார்களென்று. எனவே உங்கள் திட்டம் பற்றிப் பேசுங்கள். எத்தனை இலட்சம் இலங்கைச் சிறுபான்மையின மக்கள் தங்கள் பின்னால் அணிவகுத்துள்ளார்கள் என்பது பற்றி மொழியுங்கள்.!
vor 52 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan என்னண்ணா ! குழந்தை மாதிரிப் பேசுறியள். அவையளையெல்லாம்(மக்களை) மீட்டாயிற்று என்று உங்களை மாதிரி இடதுசாரி ஆட்கள் சொல்ல நீங்கள் மக்கள் கண்களில் விழிப்பு உண்டாயிற்று, அவர்கள் புதிய வழியில் அணிதிரள்வார்கள் என்றும் ஆருடம் சொல்லி நிறைய நாளாயிற்று! பேந்தும் புலி, கிலியெண்டு ஏன் அண்ணை வெருளிறியள்?
vor 45 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan அவர்கள் அம்பலப்பட்டாயிற்று! தோற்கடிக்கப்பட்டாயிற்று! கதை முடிந்தது! என்று கூப்பாடு போடும் நீங்கள் இப்பவும் அவை அதைச் செய்ய வேணும், இதைச் செய்ய வேணும் எண்டு குதியாய் குதிக்கிறியள் ?
vor 43 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam
இதனூடாக மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்.தொடர்ந்து பாசிஸ்டுக்களாகிய நீங்கள் மக்களிடம் உண்மை பேச மறுத்துவிட்டு,மற்றவர்களிடம் புரட்சி குறித்துக் கேட்கிறீர்கள்.நாமோ புரட்சிக்குரிய சூழலே இன்னும் உருவாகவில்லையெனச் சொல்லி கருத்தாடும்போது,புரட்சி-விடுதலையென அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு அடியாட் படையாகவிருந்து முழு இலங்கை மக்களையும் வேட்டையாடிய நீங்கள்,சிறார்களை உயிராயுதம் எனப் பிடித்துக் குண்டைக்கட்டிக் கொன்று குவித்த நீங்கள்,இப்படி உயிர்த் துஷ்பிரயோகஞ் செய்த நீங்கள்தாம்,உண்மையில் என்ன நடந்தது.எது நடந்தது-எப்படி இவ்வளவு கொலைகளையும் தியாகம்-தேசமெனச் சொல்ல முடிந்ததென்பதை உரைத்தாகவேண்டும்.தொடர்ந்த மக்களுக்குள் இனவாதத்தை விதைத்து,மக்களினங்களைப் பிளவுபடுத்தி ,மீள ,உயிர்ப்பலியூடாகப் பதவி-பணம் அடைய முனையும் புலிப் பினாமிகளைக் குறித்து மக்கள் மிக விரைவாகவே வன்னிக்குள் படித்துவிட்டனர்.ஆக,நீங்களாகத் திருந்த முடியாதவொரு அதிகாரத்துக்குள் ஒளித்து வைத்திருக்கும் மக்கள் விரோத அரசியலை இதுள் வெளிப்படுத்த முடியாது திண்டாடும் உம்மை நான் மன்னித்தாலும்,மக்கள் மன்னிக்க மாட்டார்கள் ஓய்!
vor 41 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan ஏன் அண்ணை ? உண்மையாய்த்தான் கேக்கிறன்! குறை நினையாதையுங்கோ! அவையள் இப்பவும் இருக்கினமா? இருந்தாலும் பலமாய் இருக்கினமா ?
vor 40 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan அண்ணை! நீங்கள் ஜேர்மனியிலை குந்தியிருந்து ஈரோவிலையெல்லை சம்பளம் எடுக்கிறியள். அதாலைதானோ புரட்சிக்குரிய சூழல் உருவாகவில்லையெண்டு கதை விடுறியள் அல்லது ......
vor 38 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam புரட்சிக்குரிய சூழலையே இந்தியாவுக்கு-ஆளும் வர்க்கத்துக்குக் காட்டிக்கொடுத்துப் புரட்சியாளர்களை வேட்டையாடி புலிகள்,எந்த நயவஞ்சகத்தோடு இப்படி மீளவும் கொலைக்காரப் பாசையில் உரையாட முடிகிறது?எந்த ஏகாதிபத்தியத்தின் தயவில் நீர் ரூபாயில் சம்பளம் எடுக்கிறீர்?
vor 35 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan நீங்களண்ணை ஒரு மக்கள் தலைவன்தான்! உங்கள் பின்னால் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்களில் எவ்வளவு பேர் அணிவகுத்துத் திரண்டெழுந்து நிக்கினம் எண்டும் சொல்லுங்கோ! சாதாரணமாக நீங்கள் போடுற கூட்டத்துக்கு எத்தனை ஆயிரம் பேர் வாறவையெண்டும் சொல்லுங்கோ!
vor 32 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan நீங்கதானை அண்ணை ஈரோவிலை கொத்துக் கொத்தாய் சம்பளம் எடுக்கிறனியள்!
vor 30 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan இதைவிட்டிட்டு நீங்கள் ஒரு இடமும் புரட்சிக்காகப் புலம்பெயர மாட்டீங்கள் எண்டும் உங்களுடைய செந்தோழர்களுக்கு நன்றாகவே புரியும்!
vor 29 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan நான் இலங்கைக்குப் போய் தொழிலாளர்களுக்காய் வேலை செய்யுங்கோ எண்டு சொல்லேக்கை உங்களின்ரை அடிவயிறு பத்தியெரிஞ்சதை என்னால் உணரக் கூடியதாக இருந்துது!
vor 26 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan எந்நத் தியாகத்தையும் பாட்டாளிகளுக்காகச் செய்ய முடியாத வக்கற்ற கூட்டத்தில் நீர் தலையானவர் என்பதை யாம் அறிவோம்!
vor 25 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan ஜேர்மனிய முதலாளிய அடிவருடியான நீவிர் மலையகம் சென்று வருடத்தில ஒரு மாதம் வேலை செய்ய முடியாதா ?
vor 23 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam நான் உடல்வருத்திக் கொத்துக்கொத்தாக யூரோவில் சம்பளம் எடுப்பதில் பெருமைகொள்கிறேன்.ஆனால்,நீங்கள் அனைவரும் கொலைக்களத்துக்குப் பாலகர்களை அனுப்பியபடி,மக்களை"அதோ தமிழீழம் மலர்கிறது"என்ற பொய்யுரைத்து ஏமாற்றியபடி, உண்டியல் குலக்கியும்,உள்வீட்டுக்குள் மிரட்டியும் தட்டிப்பறித்தல்லவா யூரோக்களை-டொலர்களைப் பெற்றீர்கள்!;அதைத் தொடருவதற்காக எத்தனை உயிர்களைத் துடைத்துக் குப்பையில் போட்டீர்கள்!இது பெருமையானதா முரளிதரன்-சொல்லுங்கள்!
vor 21 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan அதற்கான பணபலமும், படை (இடதுசாரி) பலமும் இருந்தும் குசியாய் இருந்து கதைவிட்டுக் கொண்டு புரட்சியாளனாய் இணையத்திலும், முகப்புத்தகத்திலும் வலம் வருவது விலாச விளையாட்டுத்தானே!
vor 20 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan உமது மொழியில் பாசிஸ்ட்டுகள் எதையும் செய்யட்டுமே! ஆனால் உண்மையான மார்சீயப் பொதுவுடமைவாதியான நீவிர் அவ்வாறு செய்ய முடியாது!
vor 18 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan ஒரு பாசிஸ்ட்டை பொதுவுடைமைவாதியோடு ஒப்பிட்டு நியாயம் பேசுதல் தகுமா ?
vor 16 Minuten · Gefällt mir

Sri Rangan Vijayaratnam ஒன்றுக்கொன்று மாற்றிப் பின்னூட்டுப் போடாதீர்கள் முரளிதரன்,புரட்சியை நாசமறுத்ததுமல்லாது,சொந்தச் சகோதரர்களையே வேட்டையாடிய நீங்கள்,இப்போது இலங்கைக்குப் போய் மலையகத்தில் வேலை செய் என்று எம்மைப் பார்த்துக் கட்டளையிடுவதை எந்த அதிகாரத்திலிருந்து சொல்கிறீர்?
vor 14 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan நீர் கொத்துக் கொத்தாய் சம்பளம் எடுக்கும் ஈரோவிலும் மூன்றாம் உலகங்களின் ரத்தம் ஊறிக்கிடக்கிறது.
vor 13 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan இது கட்டளையல்ல தோழரே! ஒரு பொதுவுடமைவாதி பணியாற்ற வேண்டிய களங்கள் அகிலமெங்கணும் விரிந்து கிடப்பினும் அதனை மறுத்து சலுகைகளையும், சுகங்களையும் ஒப்பீட்டு ரீதியில் வேண்டி ஐரோப்பிய மண்ணில் முகத்தைப் புதைத்து வாழும் உம் போன்றோரிடம் தார்மீக அடிப்படையில் விடு்க்கப்படகின்ற அறக் கேள்வி இது!
vor 9 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam நான் உழைக்கும் யூரோவில்,இரத்தம் மட்டும்தாம் ஊறிக்கிடக்கு முரளி,ஆனால்,நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் மக்கள் சொத்தில் ,எத்தனை உயிரினது ஆன்மா ஒட்டிக்கிடக்கிறது தெரியுமா-எத்தனை பெண்ணின் விதவைக்கோலம்-எத்தனை தாயின் கண்ணீர் ஒட்டியிருக்கிறது தெரியுமா?"நியாயம்-தர்மம்,அறம் "பற்றிப் பேசும் தகுதி புலிப் பினாமிகளுக்கு இருக்கிறதா?எந்த மனசாட்சியோடு இப்படி உரையாடுகிறீர்கள்?அது உங்களிடம் இல்லையென்பதாற்றாம், இதுவரை மக்களது வாழ்வோடு தமிழீழம் சொல்லிக் கொள்ளையிட முடிகிறது.வன்னியில் சாவின் எல்லைவரை சென்றவர்களை அம்போவெனவிட்டுவிட்டு,அவர்களால்-அவர்களது உயிரால் போராட்டமெனச் சொல்லிக் கொள்ளையிட்ட பணத்தோடு,மீளவும் கணனிமுன் உட்கார்ந்து உம்மால் தமிழ் தட்ட முடிகிறதென எண்ணும்போது,நீங்கள் மனிதர்களே இல்லை!மிக மோசமான மக்கள் விரோதிகள் என்பதைத் தொடருரைத்து விடுகிறீர்கள்.இந்தவுரையாடலை நாளைய தலை முறைக்குச் சாட்சியாக்குகிறேன்-வணக்கம் மக்கள் விரோதிப் பாசிசப் புலியே!
vor 4 Minuten · Gefällt mir


Nadarajah Muralitharan தோழரே தங்களிடம் எத்தனை தடவைகள் கூறிவிட்டேன்! ஆத்திரப்படாதீர்கள்! எம்மை சுயவிமர்சனம் செய்யாமல் வரலாற்றில் நாம் நிறைவான நகர்வை நிகழ்த்திவிட முடியாது. ஆனால் ஒரு பொதுவுடமைவாதி தான் சுயவிமர்சனத்தை நிகழ்த்த மறுத்து தேசியவாதிகளிடம் விளக்கம் கேட்டு உரையாடுவது வரலாற்று அபத்தமல்லவா ?
vor 11 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam அதைத்தாம் நானுஞ் சொல்கிறேன்.புலிகள் மக்களிடம் ,தம்மைச் சுய விமர்சனஞ் செய்து உண்மைகளையுரைத்துப் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதும்,மக்கள் சொத்தை வன்னியில் வதைபடும் மக்களுக்குக் கையளிப்பதும்,மீளப் போராட்டத்தைச் சொல்லிக் கொள்ளையிடாது,மக்களைத் தம்மைத்தாமே தீர்மானித்து இயங்கும் நிலைக்கு விட்டுவிடச்சொல்லி...நானும் ,இதையேதாம் சொல்கிறேன்.தலைவர்கள் மக்கள்தாமேயொழிய நாம் அல்ல!உங்கள் பாசையின்[புலியிசத் தலைமைவழிபாடு ]"தேசியத் தலைவர்"இலட்சம் உயிருக்குத்தாம் வேட்டு வைக்க முடிந்திருக்கிறது.நாமோ ,மக்களையே தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்வதில் மக்கள் முதற்கட்டமாக வெற்றிகொள்வது,இயக்காவாத மாயையிலிருந்து விடுதலையடைவதென்று அர்த்தம்.
vor 2 Sekunden · Gefällt mir


Nadarajah Muralitharan
இந்த உரையாடலை நானும் திறந்த மனதோடு சாட்சியமாக்குகிறேன்! வரலாற்றில் எந்தவித ஆதாரமும் அற்று தனிமனிதர்கள் மீது எவ்வாறான அவதுாறுகள் பொதுவுடமைவாதிகள் என்று சொல்லிக் கொள்வோரால் நிகழ்த்தப்படுகின்றன என்பதற்கு இது ஓர் சாட்சியம்! மற்றும் பொதுவுடமைவாதியென்று அழைத்துக்கொள்ளும் ஒருவன் தேசியவாதிகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த அரசியற் பிரக்ஞையற்று பக்குவமற்ற முறையில் விவாதத்தைக் கையாளும் அணுகுமுறையை அவதானிப்பதற்கும் இது ஓர் சாட்சியம்! பொதுவுடமைக் கோட்பாளராகத் தன்னை வரித்துக்கொள்வதில் பிரியமுடைய ஒருவர் எவ்வாறு வார்த்தைகளை நாகரீகமற்றமுறையில் பயன்படுத்துகிறார் என்பதற்கும் இன்றைய வார்த்தையாடல்கள் ஓர் சாட்சியம்!
vor 20 Minuten · Gefällt mir

Nadarajah Muralitharan நன்றி நண்பரே! மீண்டும் பேசிக்கொள்வோமு்!
vor 17 Minuten · Gefällt mir


Sri Rangan Vijayaratnam நாங்கள் வார்த்தைகளை மட்டுமேதாம் "நாகரீகம்"அற்றுச் செய்தோமெனப் பகிரங்கமாகச் சொல்வோம்.புலிகளாகிய நீங்களோ,மனிதர்களின் உயிர்களையல்லவா, நாகரீகமற்ற முறையில் கொன்று தொலைத்தீர்கள்.தேசியத்தைச் சொல்லி,மக்களைக் கொலைக்குத் தயார்படுத்திய நீங்கள்,வார்த்தைகளுக்கும் நாகரீகம் கற்பிக்கும் இன்றைய நிலையில்,ஒரு யுகம் பிறந்திருக்கே-அது,நிச்சியம் உங்களைக் கேள்வி கேட்கும்!;நாளைய தலைமுறை, கொலையரசியலையும்,மாற்றுக் கருத்துக்குக் கொலையையே பரிசளித்து, ஒரு இனத்தை தேசியவாதத்தூடாகக் காயடித்துக் குறந்தேசிய வெறியின்வழி எங்ஙளம் இன்னொரு இனதுக்கு அடிமையாக்கியதென்பதை இந்தவுரையாடலது பண்பிலும்,கொலைவெறியாளர்கள் எங்ஙனம் மக்கள் நலவிரும்பிகளெனும் போர்வையில் மீளவும், தமது கோரப் பற்களை பதியம்போடும் தந்திரத்தையும்,புரட்சியாளர்களைச் சொல்லி மறைப்பதில் கிட்லரது பிரச்சாரகன் கொய்ப்பிள்சை [ nationalsozialistischer Propaganda war das von Propagandaminister Joseph Goebbels geleitete Reichsministerium für Volksaufklärung und Propaganda.]மிஞ்சியவர்ளென்பதை, இந்த உரையாடல்வழி புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.அந்தவகையில் முரளிதரன் ,தமிழ்பேசும் மக்கள் தமது அழிவிலும்,ஒரு உண்மையை இனங்காண வாய்புண்டு-அது,பாசிஸ்டுக்கள் இந்தச் சமுதாயத்தின் அடித்தளத்தில் வாய்ப்பிழந்தபின் தம்மை மறைத்துக்கொள்வர்.சந்தர்ப்பஞ் சரியாக வரும்போது மீளத் தமது கைவரிசையை, அந்நியச் சக்திகளோடு சேர்ந்து காட்டுவார்கள் என்று.அதற்கு ஒரு முரளிதரனும் சாட்சியாகட்டுமே!-நன்றி!.
vor einigen Sekunden · Gefällt mir