Monday, January 05, 2015

மைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்

மைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்

ன்று, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களது சமூக-அரசியல் வாழ்வு மிக மோசமாக அந்நியச் சக்திகளிடம் அடிமைப்பட்டுக்கிடக்கிறது.முள்ளிவாய்காலில் புலிகள் ஈழத்தைக் காவு கொடுத்தபோது இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மட்டும் அநாதவராக விடப்பட்டிருக்கிறது. இவர்களே இலங்கை சிங்கள மேலாதிக்கத்தால் இனவழிப்புக்குட்பட்டனர்.புலிகள் பரந்துபட்ட மக்களுக்கெதிராகத் "தமிழீழப்போராட்டஞ்"செய்தபோது இலட்சக்கணக்கானவர்கள் அந்தப் போராட்டத்தால்பழிவாங்கப்பட்டு அந்நியர்களுக்காகப் பலியெடுக்கப்பட்டனர்.அண்ணளவாக மூன்று இலட்சம் மக்கள் அழிக்கப்பட்டனர்.இருந்தும்,முள்ளிவாய்க்கால்வரை "தமிழீழம்" காணும் யுத்தம்புரிந்த புலிகள், தமது போராட்டச் செல்நெறியின்வழியாக இந்த அரசியல் வாழ்வைச் சிறுபான்மை இனங்களது தலையில் சுமத்திவிட்டுத் தமிழ்பேசும் மக்களது செல்வத்தோடு கோடிக்கணக்கில் வியாபாரஞ் செய்யவும்,சிங்கள-இந்திய அரசுகளுக்குச் சிறுபான்மை இன மக்களை மட்டுமல்ல முழு இலங்கை மக்களையும் காட்டிக்கொடுக்கவுமென அரசியல் செய்யும்போது, இவர்களைக் குறித்து எங்ஙனம் புரிந்துகொள்வது?

வரும் இலங்கை அதிபர் தேர்தலையொட்டிப் பல பத்துப் புலி -தேசிய வேடாதாரிகளும்,முன்னாள் அராஜ இயக்கங்களும் மீளவும், தமிழ்பேசும் மக்களிடம் ஜனநாயகம்பேசி வேட்டைக்குத் தயாராகும்போது,அந்த இயக்களிலிருந்து இந்தியாவுக்கும் உலக ஏகாதிபத்தியங்களுக்கும் துணைபோனவர்கள் நூல்கள் வெளியிடுவதும்,அதனூடாகப் போராட்ட வாழ்வின் வரலாற்றைச் சொல்வதெனும்போர்வையில் ஆதிக்கச் சக்திகளுக்குத் துணைபோய், அவர்களது ஏஜென்டுகளாக இயங்கும் இன்றைய தருணத்தில்இவர்கள் பேசும் ஜனநாயகம்,மாற்றுக் கருத்துக்குச் செவி சாய்ப்பது என்பதெல்லாம் என்ன? அந்நியச் சக்திகளுக்கேற்ப அரசியல் பேசும் சுதந்திரமா?என்றபோதும்,ஜனநாயகத்தின் குரலை எழுப்புகிறவர்களுக்கு ஜனநாயமென்பது என்னவென்றே புரிந்தபாடில்லையென்பதை அவர்களது பெருயுரையாடலூடாக இன்றைய தலைமுறை பார்த்துக்கொண்டிருக்கிறது-வெறும் பார்வையாளராக!

நாம் ஜனநாயகத்துக்குள்ளேதாம் வாழ முனைதல் அவசியமானது.எனினும்,முதலாளித்துவத்தின் அதீத அடக்குமுறைகளை அது ஜனநாயகக் கோலமாகக் காட்டுவதின் தொடரில் ஜனநாயகம் பல கோலத்தில் புரியவைக்கப்படுகிறது. இது,இலங்கையின் இன்றைய ஜனாதிபதித் தேர்தலுடன் மேலும் நமக்கு வெறுக்கத்தக்க வகைகளில் அர்த்தப்படுத்தப்படுகிறது.

ஜனநாயகம், முதலாளித்துவத்தின் விளையாட்டு முறைமைக்குள் பல அக்கிரமங்களுக்கிசைவாகச் சட்டவாக்கஞ் செய்துகொள்ளும் அரச பயங்கர வாதத்துக்கிசைவானதாகப்பட்டுள்ளது.இதைப் பாராளுமன்ற ஆட்சியமைப்புக்குள் குறுக்கிக்கொண்டு, அதன் முழு அர்த்தத்தையும் மேட்டிமைக்குழு தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதில் மக்களுக்கு எட்டாக்கனியாக்கிறது.இன்றைய இலங்கைக்கு 5-6 ஆண்டுகால பாராளுமன்றத்தும் அனைத்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆளுமையும் சட்டவாக்கம் பெற்று நிலைப்படுத்தப்படுகிறது.இதைப் பலமாக்கிக் கொள்ளும் கட்சியாதிக்கம் தாம் சார் மேட்டிமைக் குழுவுக்கேற்ற அனைத்து வழி வகைகளையும் இதன் தர்க்கத்தின்வாயிலாக நிறைவேற்றுவதில் ஜனநாயகத்தினது குடிசார் இருப்பை இல்லாதிக்கொள்கிறது.இது பரவலாகப் பயன்படுத்தும் மொழி, ஜனநாயகத்துக்கு விரோதமானதாகவே-"ஈழப் போராட்டம்" தோற்கடிக்கப்பட்ட நிலையிலும்-மக்களது உரிமைகளை மறுப்பதில் அதிகாரத்தை நிலைப்படுத்தும் நியாயவாதமாக மாற்றப்படுகிறது.இதைக் கட்சி ஆதிக்கம் பரலவாலக அதனதுத் தொங்குசதைக் குழுக்களால்-அமைப்புபுகளால் செய்து முடிக்கிறது.

இதோ,"இந்தியாவின் துணையோடுதாம் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும்.இந்தியாவைப் பகைக்காத அரசியலைத் தமிழர்கள் முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவேதாம் தமிழ் மக்களது பிரச்சனையில் தலையிட்டுத் தீர்த்து வைக்கவேண்டும்.இந்திய-இலங்கை அரசை குறை கூறாமல்,திட்டித் தீர்க்காமல் அவர்களோடானவொரு இணக்க-இணைவரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்திய நலனுக்குப் பாதிப்பில்லாத அரசியல் தீர்வுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்,எனவே,அத்தகைய அரசியலுக்குள் இந்தியாவை இழுப்பது அவசியம்என்றவர்கள் இப்போது, மைத்திரிபால சிறீசேனவை நமக்கு ஜனநாயகக் காவலராகக் காட்டுகின்றனர்.

இவர்களிற் பலர்  தற்போது இடது-வலது ,புலி,எலி,சிங்கம் என்ற எல்லா இயக்கத் தளங்களிலுமிருந்து இத்தகைய கோசத்தினடிப்படையில் ஒன்றாய்க் கைகோர்க்கின்னரே,இ வர்கள்தாம் இப்போது மிகப்பெரும் ஜனநாயக வெளிக்கு நம்மையழைத்துச் செல்லப்போகின்றனர்!

வன்முறைசார் கருத்தியல் வடிவம் மற்றும், வன் முறை சாராக் கருத்தியல் தளத்தைக் காத்து,நிர்வாகித்துவரும் அரசுகளோ அமைப்பாண்மையுடைய கட்சிகள்-திடீர் இயக்கம்,பேரவை,சங்கம்-கழகம்,மகாசபை எனும் பலவற்றின் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய-புதிய லொபிகளை உருவாக்குகிறது.இங்கே,புதியவர்கள் பழைய தலைகளது பெயரினூடாக அவர்களை மேதைகளாகவும்-மக்கள் தலைவர்களாகவும் பிரகடனப்படுத்தியபடி "படைப்பாளிகளாக-கவிஞர்களாக வலம் வருகின்றனர்.இவர்களே மைத்திரிபால சிறிசேனவைக்கூடத் தமிழ்பேசும் மக்களுக்கான பெருந்தலைவர்ரென வகுப்பெடுக்கின்றனர்.


புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள்மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை"ஜனநாயக" உரையாடலாகக் குறுக்கிக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகவதற்கான அரசியல் - ஜனநாயக வெளிக்கு மைத்திரி வெல்லவும் வேண்டுமெனத் தீர்ப்பெழுதுகின்றனர்.


இத்தகைய நபர்கள் -குழுக்களது வருகையானது பல அரசியல்-இயக்க அமைப்புகளிலிருந்தும்,போராட்ட அநுபவங்களைக் காவி வரும் படைப்பாக்க முயற்சிக்குள்ளிலுருந்தும் ஒரு நரித்தனமான கருத்தாடல் முகிழ்கிறது.இது,இலங்கையின்சிறுபான்மை இனங்களது பிரச்சனைகளை மெல்ல இலங்கையில் மீள நல்லாட்சி,ஜனநாயகம்,சட்டத்தின் அரசு எழுவதிலிந்து தீர்த்துவிட இயலுமெனக் கருத்தாடுகின்றனர்.இதுவுண்மையில் சாத்தியமானதென்று இவர்களால் ஆதரிக்கப்படும் கட்சியும் அதன் பொதுவேட்பாளரும் எந்தவுறுதிப்பாட்டையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறித்துரைக்கவில்லை!மைத்திரியின் -மேற்குலகின் லொபிகளாவுள்ளவர்களது கற்பனையான கருத்துக்கள் மீளவும், நம்மை ஏமாற்றிவிடுவதில் இந்த இலங்கை அதிபர் தேர்தலும்நமக்கு மீளவும்துரோக வரலாற்றுப் படிப்பினையத் தரலாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
05.01.2015