Saturday, January 09, 2016

100 நாட்களுக்குள் ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றியமைப்பேன்

"ஜனநாயக ஆட்சியின் " ஓராண்டு பூர்த்தியைமுன்னிட்டு...
 
ஜனாதிபதி (இ)மைத்ரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்று ஆண்டொன்று முடிகிறதாம்.“நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி முறை " இன்னுந் தொடர்கிறது.நடந்தேறிய சனாதிபதித் தேர்தலில் மாபெரும் சனநாயகக் கோசமாகவும் ;கருத்தியல் ரீதியாக மிகப்பெரும் விவதமாக்கப்பட்ட இந்த“நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதிமுறை" குறித்து ,இப்போது எவரும் வகுப்பெடுக்கவுமில்லை ;அதைக் குறித்து மூச்சும் விடுவதில்லை! புலம் பெயர் சூழலில் பெரிய விவாதமாக ;அதுகுறித்த சனநாயக வகுப்பெடுக்களைச் செய்தவர்கள் ;மைத்திரியை சனநாதிபதியாக்குவதற்காக படாதபாடுபட்டனர்

.இவர்கள் அனைவரும் இப்போது “நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதிமுறை " குறித்து எந்த அரிப்புமற்றக் கிடப்பதன் மர்மம் என்ன?

கீழ்ச் சொன்ன தேர்தற் கோசத்துள் எதை ,மைத்திரி ஆற்றியுள்ளார்? :

1. 100 நாட்களுக்குள் ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றியமைப்பேன்.

2. ரணிலுக்கு பிரதமர் பதவி.

3. சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள்

4.18 ஆவது திருத்தம் நீக்கப்படும்.

5. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். கூடவே ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அனைத்துக்கும் இடமளிக்கப்படும்.

புலம் பெயர் “மாற்றுக் குழுக்கள்” தம் சார்புக்குப் பேட்டி -உரையாடலெனத் தொலைக்காட்சி,அச்சுவூடகங்களிலும் இதையேபேசியும்,எழுதியும் வந்தனர்.தேனீ என்றொரு இணையத்தளத்தை நடாத்தும் நண்பர் கங்காதரன்(ஜெமினி) தனக்குத் தெரிந்த பெரும் மேதைகளான இரத்தின ஜீவன் கூல்,இராஜன் கூல்,அழகலிங்கமெனப் பல பிரபலங்களை வைத்து, மகிந்தாவுக்குள் ஜனநாயக நீரோட்டம் இருப்பதைக் கண்டறிந்தார் அன்று . அவர்களுள் , இரத்தின ஜீவன் கூல் பல்ட்டியடித்து இலங்கையில் சட்டத்துக்குட்பட்ட அரசு இல்லை.அங்கு சட்டம்,ஒழுங்கு இல்லாதவொரு பயங்கரவாதக் கொலைக்காரத் தலைமையிலான அரசே இருப்பதாகவும்,மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வைப்பதன் முலம் சட்டத்துக்குட்டபட்ட நீதியானவொரு அரசு மீளத் தலையெடுக்குமென்றும் கொழும்பு ரெலிக்கிராப்பில் எழுதி மகிழ்ந்தார்.உங்களுக்கு என்னங்கடா நடந்தது? அல்ஸ்கைமர் நோய் [ Alzheimer disease /Die Alzheimer-Krankheit ]ஏதன் இருக்கா அண்ணன்,அக்காமாரே?


சரி இனித் தமிழ் மக்களிடம் வருவோம்.இவர்கள் கூறுகிறார்கள்: சட்டத்துக்குட்பட்ட அரசு, நீதியான அரசு,ஜனநாயகப் பண்புடைய அரசு,சட்டத்தால் நிர்வாகிகக்கப்படும் ஊழலற்ற அரசு உங்களுக்குக் கிடைக்கத் தமிழ் மக்கள் மைத்திரிக்கு ஓட்டுப்போடும்படி கோரினார்கள்.இரத்தின ஜீவன் முதல் நம்ம அண்ண்ன் சுசீந்திரன்வரை கும்பிட்டுக் கேட்டுக்கொண்டனர்.

இவர்கள் எல்லோரது குரலும் இப்போது எங்கே?மைத்திரி ஆட்சியின் ஒரு வருடப் பூர்த்தியிலும்“நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி முறை "அப்படியேதாம் தொடர்கிதே! இதுகுறித்த விவாதங்கள் ஏன் மேலெழவில்லை?இங்குதாம் காலத்துக்குக் காலம் தத்தம் தேவைக்கேற்ப கருத்தியற் பரப்புரையை முன் தளளும் ஆளும்வர்க்க வியூகங் குறித்துப் பேசப்பட வேண்டும்.

நடைமுறைசார்ந்து செயற்படுவதற்கான சூழல் மற்றும் ,இலங்கையில் நிலவும் நிலவரங்கள் குறித்த திரு.சிவலிங்கத்தின் அன்றைய கேள்விகள் ;மக்களது அன்றாட வாழ்வில் நிகழும் பிரச்சனைகள் குறித்து அதிலிருந்தொரு அரசியற் தலையீடு மற்றும் செயல் முறைசார்ந்து அதிகாரங்களை மக்களுக்கு அண்மையில் எடுத்துச் செல்வதற்கான தேவையை உறுதிப்படுத்துவது.ஆனால் ,அதையவர் இலங்கையின் ஆட்சிமாற்றத்துக்கானவொரு வியூகமாகப் பாவித்தது சுத்து ஏமாற்று வித்தை.

நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி முறையை அகற்றுதல் தொடர்பாகக் அண்மையிற் காலஞ்சென்ற வணக்கத்துக்குரிய சோபித தேரர் அன்று பெரும் விவாதத்தைத் தொடக்கினார்.இவரது கருத்துப் பெரும்பான்மைச் சமூகத்திலிருந்தெழும் முற்போக்குக் குரலெனப் பலர் வகுப்பெடுத்து விவாதித்தபோது நான் இப்படி எழுதினேன் :

" முதலாளித்துவச் சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியாமாகும் “இந்த” அதிகாரத்தை மக்களை அண்மித்தெடுத்துச் செல்வதென்பது ஒரு கட்டத்தில் இது Regime change என்றளவில் உலகெல்லாம் நாம் காணும் “மக்கள்”போராட்டங்கள் -எழுச்சிகளுக்குள் மேற்சொன்ன சாத்தியத்தை முதலாளித்துவம் அநுமதித்திருக்கிறது.அதை க் கிழக்கு ஐரோப்பியத் தேசங்களிலும் ;அரேபிய வசந்தத்திலும் ஏனிப்போது உக்கரமாக நடைபெறும் ஊக்கிரைன் “எழுச்சி”யிலும் பார்க்கத் தக்கதே.இதன் அடி நாதமாக The Center for Applied Nonviolent Action and Strategies (CANVAS) தலைவர் திரு. Srdja Popovic (Otpor!) தகவமைக்கும் “மக்கள் திரள்”போராட்டங்கள் ஏலவே பல ஆட்சி மாற்றங்களைச் செய்திருக்கிறது. திபேத்தின் தலைலாமாவுக்கும் [Dalai Lama) இந்தக் CANVAS நிகழ்ச்சி நிரலுக்குங்கூட வலு வக்கணையான தொடர்புகளும்-வழிகாட்டல்களும் [ Deutschen Buddhistischen Union (DBU), ]தொடர்கிறது.திபேத்துக்கொரு Dalai Lama இலங்கைக்கொரு சோபித தேரர் எனத் தொடரும் சந்தர்ப்பங்களைக் குறித்து கேள்விகள் -சந்தேகங்கள் தவிர்க்க முடியாதவை."
இந்த எனது வாதத்தின்படி இலங்கையிலொரு ஆட்சிமாற்றந்தாம் நிகழ்ந்ததேலொழிய அது "அதிகாரத்தை மக்களை அண்மித்தெடுத்துச் செல்வதென்பது " பொய்யான கோசமெனத் தற்போது புரிய வைத்திருக்கிறது. இன்றய மைத்திரியின் ஓராண்டு அதிகாரத்தின் வெளிப்பாடு அதைப் போற்றுவதிலும் ;நிலைப்படுத்துவதிலும் அதே பௌத்த மகாசபைகளின் காலில் வீழ்நஇது எழும்பும்போது எங்பே இவர்கள் சொன்னதைச் செய்தனரென்ற சிறு கேள்வியின்றி இந்தத் தமிழ் மரமண்டைகள் இன்னும் எவரது காதிற் பூ வைப்பார்கள்?

இப்போது இலங்கையில் நடந்திருப்பது என்ன? ;.“நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி முறை " அகற்றப்பட்டுப் பாரளுமன்றத்துக் அதிகாரங்கள் பரவலாகச் சமாந்திரமாகப் பகிரப்பட்டு அதை மக்கைள அண்மித்து இயங்குவதற்கான என்ன அரசியற் சாசனச் சட்டமாற்றம் நிகழ்ந்துள்ளது?இந்த ஆட்சியின் ஒரு வருடப் பூர்தியைக் குறித்து ஆளும் வர்க்கம் ஏன் கொண்டாடுகிறது?

இன்றைய இலங்கையின் ஒரு பகுதி ஆளும் வர்க்கப் பரிவின்பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே, காலத்துக்கு முந்திய அதிகாரப் போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த ,பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.இந்தப் புள்ளியற்றாம் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறைமைகுறித்த கேள்விகள் -முரண்பாடுகள் செயற்கையாக முன் தள்ளப்பட்டது.அது மகிந்தாவைத் தூக்கியெறியும் நோக்ககங்கொண்ட மேற்குலகஞ்சார்ந்த இலங்கையின் ஆளும்வர்க்கப் பிளவின் ஒரு தெரிவே.இதைப் பலமான கோரிக்கையாக -அரசியல் முரண்பாடாக மாற்றுவதில் வணக்கத்துக்குரிய சோபித தேரரது அரசியற் பிரவேசம் ஒத்துழைத்தது.

எனினும்,இன்றைய சூழ்நிலையில் மக்களது அடிப்படைப் பிரச்சனைகள் ; அரசுக்கும் மக்களுக்குமுள்ள பாரிய முரண்பாடுகள் சனநாயகத்தை மறுத்தொதுக்கும் மாபியாப் பொருளாதார நகர்வுகளது தெரிவின் வழியென்பதால் இத்தகையப் பொருளாதார நெறியைகக் குறித்து என்ன புரிதலை தமிழ்க் கட்சிகளும் ; இடதுசாரிகளும் ;மாற்றுக் கருத்தியலாளர்களும் கொண்டிருந்தனர்?இது ஒட்போரது காலம்[Non-violent Actions and Strategies -S. Popovic) ]அமெரிக்க,மேற்குலகினது கை இலங்கையில் ஒங்கி ,அது மைதிரியின் தலைமையில் -யு.என்.பி.கட்சியின் சனநாயக ஆட்சியாக வேடம் பூண்டதைத் தவிர வேறென்னதை இலங்கை மக்களுக்குச் செய்தது?

ப.வி.ஶ்ரீரங்கன்