Monday, April 18, 2016

தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை கள்:மொக்குகளது பித்தலாட்டம்!


 
தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் ;சனநாயகவழிமுறை ; 
கட்டமைப்பு ;பன்மைத்துவம் :கடைந்தெடுத்த முட்டாள்கள்தம் 
மூலமறியா மொக்கு வாதங்கள்! -சில முக்கியமான தரவுகள்.
 
 
 
“எதுவுமே அறியாத புலம் பெயர் தமிழர்கள் தம்மைப் பின் நவீனத்துவாதிகள் ;தலித்துவவாதிகள் என்பதில் தமிழகத்து “மொக்கு”ப் பேராசிரியர்களது மேற்குலக வாந்தியின் மொழியாக்கத்தை அப்படியே உறிஞ்சுகிறார்கள். நானறியப் புலம்பெயர் தமிழ் இளைஞர்களிற் பலர் எம்.ஜி. சுரேஷ்சுக்கு விசிறிகள்.தமிழகத்து முட்டாள்கள் பலர் இத்தகைய வாதங்களுக்குப் பின்னேயுள்ள மூலத்தைக் குறித்த அறிவற்ற சடங்கள்.இவர்கள் வாந்தியெடுக்கும் அரசியல் ;தத்துவார்த்த நுனிப்புல் மேச்சலுக்குள் புகுந்து விளையாடும் ஏகாதிபத்தியம் இந்தியாவில் பல அசீசு நந்திகளை (Ashis Nandy) தமக்கான கருத்தியிற் பீரங்கிகளாக்கிய பின் தமிழகத்த அறிசீவிகளை நினைத்தால் எள்ளி நகையாடவே முனைவேன்.”
 
 
 
நண்பர்களே,இந்தக் குறிப்பு எழுதத்தாம் வேண்டுமாவென ஒரு கேள்வி.இன்றிருக்கும் தமிழ் வாசகச் சூழலில் "இது அவசியமா?" என்ற கேள்வி.எனினும் ,இதைக் குறித்துத்தாம் ஆகவேண்டும்.புலம்பெயர் சூழலில் தமிழகத்து க் கற்றுக் குட்டிகள் மொழியாக்கும் மேற்சொன்ன மேற்கத்தைய எழுத்துக்களைத் தமிழில் வாசித்துவிட்டுத் தம்மைப் பெரும் பின் நவீனத்துவவாதிகளாகக் கருதும் அறிவூக்கமற்ற சடங்களுக்கு நடுவே அதன் சூத்திரம் குறித்துச் சொல்வது அவசியமே!
 
 
போல்சுவிக் "புரட்சிக்கு"ப்பின்பான மேற்குலக அரசியல் ,கலை -இலக்கியத் தத்துவார்த்தப் போக்கும் அதுசார்ந்த விஞ்ஞான விளையாட்டுக்களும் முதலாளித்துவ -ஏகாதிபத்தியவுலகுக்கொரு திடமான கருத்தியற் போரை ஊக்குவித்தது.அதன் சூத்திரதாரர்கள் அமெரிக்க -ஐரோப்பிய ஆளும் வர்க்கமாகும். கொம்யூனிசமென்பதைத் இப்படியும் சாத்தியமாக்கலாமென நிரூபித்த இருசிய ஓக்ரோபர் புரட்சியின் முன் திகைப்படைந்த ஏகாதிபத்தியமானது தனது வலுவுக்கெட்டியபடி இராண்டாமுலகப் போருக்குப் பின்பான காலத்தை இதற்காகவே முடக்கி விட்டது.
 
 
பனிபோரைத் [The Cold War ] தொடக்கி அதை வளர்ப்பதற்கான அறிவையும் ;வழிகாட்டலையும் கல்வித்துறைகக்குள் புகுத்தி அதையொரு கம்யூனிசத் தத்துவார்த்த எதிர்ப்புத் தளமாக விரிவுப்படுத்திய அமெரிக்கா,அதன் தலைமையிலான ஆளும் வர்க்கமானது 1947 ஆம் ஆண்டுமுதல் கண்டடைந்த பொருளியல் விஞ்ஞானத் துறைக்கு "Die Mont Pèlerin Society " என்ற அமைப்பாகும்[ https://de.wikipedia.org/wiki/Mont_… ].
 
 
இதற்காக திருவாளர் பிரிட்டிறீக் காயக் ( Friedrich von Hayek)தலைமை ஏற்க அந்தப் போக்குக்கு "தாராளவாதப் பொருளியல்( Wirtschaftsliberalismus ) எனத் தத்துவார்த்த அரசியற் கருத்தியற்றளமிடப்படுக்கிறது.திருவாளர் கார்ல் போப்பர் (Karl Popper) இதற்கான எதிர் மார்ச்சிய விமர்சனத்தை மிக நுணுக்கமான கணிதவியற்றரவுகளோடு முன்வைக்கும் தலைமையைப் பொறுப்பேற்கத் சுதந்திரச் சந்தைப் பொருளாதார நகர்வென(freier Marktwirtschaft )இரண்டாம் உலகமாகாயுத்தத்துக்குப் பின்பான ஏகாதிபத்திய உயரடுக்கு வர்க்கத்துக்கான பாதுகாப்பு அரண் தொழிலாள வர்க்கத்தைப் புதிய திசையில் வேட்டையாடுவதற்கானவொரு இலக்கைக் கண்டடைந்தது. 
 

பொறுப்பை யேர்மனிய அன்றைய நிதி மந்திரி Ludwig Wilhelm Erhard ஏற்ற கையுடன் அவர் அதற்கான (சுதந்திரச் சந்தைப் பொருளாதாரம்) மாற்றை சமூகச் சந்தைப் பொருளாதாரம்(Soziale Marktwirtschaft )என அழைத்து முழுமூச்சாகக் கம்யூனிச எதிர்பைப் பொருளாதரம் மற்றும் அரசியற்றளத்தில் கட்டியமைக்க, அவரால் அழைத்திணைக்கப்பட்டவர்கள் : Maurice Allais, Walter Eucken, Milton Friedman, Friedrich August von Hayek, Frank Knight, Fritz Machlup, Ludwig von Mises, Karl Popper, Wilhelm Röpke, George Stigler.இத்தகைப் பெருந் தலைகளாகும்.இவர்கள் அனைவரும் அமெரிக்கச் சி.ஐ.ஏ.வால் தகவமைக்கப்பட்ட பொருளியல் விற்பனகர்கள்.
 
 
சரி.சோசலிசப் பொருளாதாரப் பொறி முறைக்கு எதிரான பொருளாதார அறிஞர்கள் அணியைத் தகவமைத்த சி.ஐ.ஏ இதைத் தொடர்ந்து நியாயப்படுத்தும் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போக்கையும் அதுசார்ந்த கலை -இலக்கிய நகர்வையும் ஒருவழிமுறைக்குட்பட்ட தெரிவுடன்(கம்யூனிசத்தைத் தொடர்ந்து பயங்கரமாகவும் ;அடக்குமுறை வடிவமாகவும் ;சனநாயகத்துக்குப் புறம்பான சர்வதிகாரமாகவும் சித்தரித்தல்)கட்டியமைக்க முனைந்தது.இதன் தொடரிற்றாம் பிரஞ்சிய மேட்டிமை வர்க்க அறிவுத்துறையை அண்மித்த பின் நவீனத்துவ உரையாடல்கள்(Die Postmoderne ) Jean-François Lyotards, Francis Fukuyamas, Susan Sontag,Michel Foucault, Jacques Derrida, Roland Barthes[ Dekonstruktivismus, Poststrukturalismus ,Diskursanalyse ] ,Luce Irigaray [Erasmus-Universität Rotterdam ],Jacques Lacans,Melanie Klein, Hélène Cixous, Gilles Deleuze மேற்காணும் முகாமுக்குள் சி.ஐ.ஏ.வால் நிகழ்த்தப்பட்டுக்கொன்டிருக்க இதற்கு நிகராகக் கலை -இலக்கியத்துறைக்கும் ;கல்விசார் பெரும் பல்கலைக்கழகங்கள் ;உயர் பாடசாலைகளுக்குள் அமெரிக்க வல்லாதிக்கம் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது.
அங்கே, Frankfurter Schule முதற்பலியாகிறது.Max Horkheimer தனது நிலையிலிருந்து இராண்டாவது மகா யுத்தக் காலத்தில் இடம்பெயரக் கல்வித்துறை செனிவாவில் (Genf -Schweiz )நிறுவப்படுகிறது.கோர்க்கைமரோ கொலிம்பியாப் பல்கலைக்கழகத்துக்குள்( Columbia University ) தனது ஆய்வைத் திணித்தபோது சி.ஐ.ஏ அவரைமட்டுமல்ல ஆடர்னோவையும்( Adorno ) தமக்குள் மெல்ல உள்வாங்குகிறது.இவர்கள் மூலமாகத்தான் காபர் மாசு(Jürgen Habermas );ஓசுக்கார் நேக்ற் ( Oskar Negt )மகாயுத்தத்துக்குப்பின் சி.ஐ.ஏ. தலைமையில் கோர்கைமரது மரணத்தோடு பிராங்பேர்ட் பள்ளியைக் கைப்பற்றினர்.
இன்று, உலகம் முழுவதும் சி.ஐ.ஏ கல்வித்துறையைக் கைப்பற்றி கம்யூனிசத்துக்கெதிரான கருத்தியற்றனத்தைப் பல்வேறு தத்துவங்களுக்கூடாக நகர்த்துகிறது.அதுள், பின்நவீனத்துப் பாணி உரையாடல்கள் முன்னிலையுள் நிலைபெற்றன.50 களில் நடைபெற்ற மிகப் பெரும் பனிப்போர் (Kalter Krieg )ஆரம்பத்தில் ( 1947 bis 1989 ) எழுந்த அனைத்துத்துறைசார் அறிவும் அமெரிக்காவல் தகவமைக்கப்பட்ட சி.ஐ.ஏ.வால் மேர்பார்வைக்கும் , பொருளாதார ஒத்துழைப்புக்கும் உட்பட்டே எழுந்தன.
 
 
இவை கம்யூனிசத்தைக் கருவறுக்கும் கருத்தியலைக் கல்வித்துறைக்குள் கற்பனைக்கெட்டாத முறையுள் நகர்த்தினார்கள்.அமெரிக்க ஏகாதிபத்தியம் இத்துடன் ஓயவேயில்லை அது 1950 ஆம் ஆண்டு பண்பாட்டுச் சுதந்திரம்(Cultural Freedom) என்று கூறியபடி தனக்கான பல்தளத் தத்துவார்த்தக் கருத்தியலைக் கணிசமாகவுர்த்திபண்ணி மார்க்சியத்தை வேரோடு பிடுங்க உலகமெல்லாம் சுமார் 37 நாடுகளில் The Congress for Cultural Freedom (CCF) எனும் அமைப்புக்டாகக் கல்வியாளர்களைத் தகவமைத்தது.
 
 
இந்தியாவில் அதற்காக ஒரு பத்திகையை(Quest (Indian journal) ) ஆரம்பித்துக் கீழ்காணும் புரவலர்களை இந்திய வரலாற்றியலாளராகவும் ;புத்திசீவிகளாகவும் உருவாக்கியது. அவர்களுள் இவர்கள் : Nirad Chaudhuri, Dilip Chitre, Allen Ginsberg, Jyotirmoy Datta, Mujibur Rehman, Agha Shahid Ali, Jayanta Mahapatra Dom Moraes, Ashis Nandy, Gauri Deshpande, Adil Jussawalla, Mahapatra, A.K. Ramanujan, Saleem Peeradina, Kolatkar, Chitre, Keki Daruwalla, Anita Desai, Kiran Nagarkar and Abraham Eraly முக்கியமான சி.ஐ.ஏ.புத்திசீவிகள். 
 
 
அமெரிக்க வல்லாதிக்கம் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முடிவில்லாத யுத்தங்கள் வாயிலாகத் தனது உலகத் தலைமையை - ஆதிக்கத்தை அடுத்த ஐம்பதாண்டுகளுக்காவேவேனும் தற்போது நிலைநாட்டப் புறப்பட்ட இந்த நெருக்கடியின் ஒரு பகுதி தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த மூன்றாது உலகயுத்தத்தின் கடைசி அத்தியாயத்துக்குள் நுழைகிறது.இது இந்தப் புதிய முகத்தோடான முன்றாவது உலக யுத்தத்தை ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவிற்கூட விரிவாக்கும் அமெரிக்க உயரடுக்கு மக்கட்டொகுதி இங்கெல்லாம் பெருந்தொகையான மக்களைப் பலியெடுத்தோயப் போகிறதென்பதே உண்மை!
 
அதற்காக இந்தத் தேசம் தனது அனைத்து வகை வலுவையும் திரட்டியபடி உலகத்தின் அனைத்து மக்கட்டொகுதிக்குள்ளும் நாசகார வியூகங்களை வைத்து மூளையுழைப்பைப்பெற்றுக்கொண்டு, தன்னை மேலல் நிலைக்குக் கொணர்ந்துள்ளது.பள்ளி செல்லும் பத்துவயது குழந்தையிலிருந்து Phd.ப் பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை இந்த அமெரிக் க உளவுப்படைக்குத் "தாம் செய்வது -ஆய்வது" எவருக்கானதென்றறியாமலே அமெரிக்காவுக்கு உந்து துணையாக மாற்றப்பட்டுவிட்டனர்.ஜேர்மனியில் நானறியப் பல தமிழ்ச் சிறார்களை இப்போதே அமெரிக்க உளவு ஆசிரியர்கள் பாடசாலைக்குள் வழி நடாத்தி வருகின்றனர்.இவர்கள்தாம் இம் மாணவர்களை Biochemistry கண்டிப்பாகப் படிக்கத்தூண்டுகின்றனர்.இரசாயன ஆயுதங்களின்[Biological warfare ] விருத்திக்கு மற்றும் மரபணமாற்றப் பயிர்களுக்காக புதிய தேடல்கனளுக்காவும் இந்த மூளைகள் இப்போதே பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது!
 
 
இங்கு,உழைப்பவர்களது குழந்தைகளே தமது நிலையை -தாம் இருக்கும் சமுதாயத்துள் தமது தளத்தை அறியாது கல்வியென்றவொன்றின் குறிக்கோளோடு கழுத்தில் மட்டை மாட்டப்பட்ட விலங்குகளாகத் தமது தளத்துக்கு(வர்க்கம்)த் தீங்கிழைத்து வருகின்றனர்.
கார்ல் போப்பர் (Karl R. Popper ) அவர்கள் தொடர்ந்து தன் வாழ்நாட் பூராகவும் மார்க்சியத்தை வெறும் கதையாடலாகப் பிழையான போதனையாக வர்ணித்துக் கொண்டிருந்தபோதுதாம் அவருக்கு London School of Economics and Political Science பல்கலைக் கழகத்துள் விரிவுரையாளராகும் தகுதியை அதி மேற்ராணியார் எலிசபெத்து அம்மையார் ஏற்படுத்திப்பின் Sir பட்டத்தையும் ஒட்டிவிட்டார்.
 
 
ஏகாதிபத்தியத்துக்குத் தன்னைப் பலியாக்கியவொரு கல்வியாளன் போப்பர்!ஆனால், அவருடைய தேசத்து Ludwig Wittgenstein( இவர்தாம் தருக்கவியலின் கொடுமுடி) மற்றும் Erwin Schrödinger( இவர் குவாண்டம் இயங்கியலின் தந்தை) போன்றோருடும் உறவு ரீதியாகப் பெரும் காழ்ப்புணர்வோடு இருந்தார்.Ludwig Wittgenstein னை ஒரு தடவை சந்தித்தபின் சாகும்வரை போப்பர் சந்திக்கவில்லை!இது, ஏனென்பதில் எனக்கு ஒரே குடைச்சல்!
 
 
இன்றும்,இதே ஏகாதிகத்தியம் அன்று பல கார்ல் போப்பர்களை உருவாக்கி வைத்து மார்க்சியத்தை வேரறுத்ததுபோன்றே தொடர்கிறது.
 
 
இது தற்போது, பற்பல இனத்துக்குள் உருவாகும் புத்தாசாலி மாணவர்களைப் பாடசாலைகளிலேயே பிடித்து அமுக்கிக் காயடிக்கிறது.அப்படிப் பிஞ்சிலேயே காயடிக்கப்படும் தமிழ்மாணவர்கள் ஐரோப்பாவில் ஏராளம்.எனக்குத் தெரிந்த அப்படியொரு தமிழ் மாணவனை அவனது 13 வயதினிலேயே அமெரிக்க வல்லாதிக்கம் அமுக்கிப் பிடித்து ,அவனது பெயரில் தனது இசுலாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை நூலாக வெளியிட்டு அவனை இரும்புப் பிடிக்குள் வைத்துள்ளது.எதிர்காலத்தில் பெரும் விஞ்ஞானியாக உருவாக வேண்டிய அவ் மாணவன் அமெரிக்க இராணுவத்துக்கு இரசயான ஆயுதங்கள் செய்யத்தக்கபடி இப்போதே அதை நோக்கிய (Biochemistry)ஆய்வுக்குள் தள்ளப்பட்டுள்ளான்.
 

-ப.வி.ஶ்ரீரங்கன்
18.04.2016
 
 
உசாத்துணை :
Wer die Zeche zahlt. Der CIA und die Kultur im Kalten Krieg.von Historian Frances Stonor Saunders

US-Militär finanziert deutsche Forscher
Pentagon finanziert deutsche Forschung :

Aufträge vom Pentagon: Die Naivität der deutschen Forscher

Friday, April 01, 2016

மக்களிடம் பெறப்பட்ட கப்பம் பணத்தில் பிரான்ஸில் முதலீடு !

இந்த விவாதங்களைக் கவனியுங்கள் இளைஞர்களே!அன்றைக்கு இந்த ஒத்தோடிகள் ;சிங்கள அரச -இந்திய அரச அடியாட்கள் எப்படி இயங்கினார்கள் -இன்றெப்படி நமக்குச் சனநாயகப் படங் காட்டுகிறார்கள் என்றும் புரிந்துணரமுடியும்.இது தேசம் நெட்டில் நடந்த விவாதம். உடைப்பில் நான் இன்று பதிவேற்றிய கட்டுரை [ கருணாவிற்காக ஞானம் வாங்கிய அத்தனை பினாமி சொத்தின் விபரமும் திலீபன் வசம் இருந்தது.  ] தீப்பொறியில் அம்பலப்படுத்தப்பட்டது.இங்கு பவனிக்க வேண்டியது இவர்கள் அனைவரும் ஆதிக்கச் சக்திகளர் லொபிகள் என்பதையே!என்னிடம் இவை போன்று பல நூறு கட்டுரைகள் உண்டு.அப்பப்ப  இவை மீள் வாசிப்புக்கும் ; இளைஞர்கள் இவற்றைப் புரிந்துகொள்ளவும் பகிரப்படும்.நன்றி!
-ப.வி.ஶ்ரீரங்கன்
============================================சின்னமாஸ்டர் அல்லது ஸ்டாலின் அல்லது ஞானம் என்று அழைக்கபடும் மாசிலாமணி இராஜேந்திரன் என்ற நபர் ஜனநாயகத்தைப் பற்றியோ அல்லது ஊடகத்துறை பற்றியோ பேசுவதற்கு இவருக்கு என்ன அருகதை உள்ளது.தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா பிரான்ஸ் வந்து லண்டன் சென்றதாகக் கூறப்படுவதற்கும் கருணாவின் நிதி பரிமாற்றங்களுடன் தான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் எம் ஆர் ஸ்ராலின். 21 ஒக்ரோபர் 2007 தலித் மாநாட்டின் இறுதியில் ஸ்ராலினுடன் தேசம்நெற் இணையத்தளம் சார்பாக வினவிய போதே ஸ்டாலின் இம் மறுப்பைத் தெரிவித்தார். அப்படியானால் ஏன் இதுவரை இது தொடர்பான எந்த மறுப்பையும் வெளியிடவில்லை எனக் கேட்டதற்கு அது தொடர்பாக தான் சிந்திப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
மாற்றுக் கருதுக்கொண்ட ஊடகங்களான ரிபிசி வானோலி, tamilweek இணையத்தளம் போன்றவையே இவ்வாறான ஒரு சேறடிப்பைச் செய்தது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஸ்ராலின் தனது மனவருத்தத்தை வெளியிட்டார்.
பொறுப்பு மிக்க ஊடகவியலாளர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் டிபிஎஸ் ஜெயராஜ் பொறுப்பற்ற தீப்பொறி போன்ற இணையத் தளங்களை மேற்கோள் காட்டி எழுதுவது அவரது செய்தித் தகமையின் தரத்தையே காட்டுகிறது எனவும் ஸ்ராலின் தேசம்நெற் இணையத் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவது இன்றைய காலத்தின் அவசரத் தேவையாகும். அந்த வகையில் ஸ்டாலினுடைய இக்குற்றச்சாட்டுக்கு பொறுப்புள்ள ஊடகங்கள் என்ற வகையில் பொறுப்புடைய நபர்கள் என்ற வகையில் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புடன் பதிலளிப்பது அவசியமானதும் அவசரமானதுமாகும். நெருப்பில்லாமல் புகையாது என்பதற்காக வதந்திகளை செய்திகளாக்க முடியாது.
என்மீதான சேறடிப்புகளையும் குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுக்கின்றேன்.
எம்.ஆர்.ஸ்ராலின் (ஞானம்)
கடந்த சில வாரங்களாக ரி.எம்.வி.பி. அமைப்பினருடன் தொடர்பு படுத்தி என்மீது பலவேறு குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஐரோப்பிய மட்டத்தில் வதந்திகள் மூலம் ஓருசில மோசமான நபர்களால் மேற்படி குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டுவந்தன. அதன் பின்னர் ரி.பி.சி. வனொலி மேற்படி குற்றச்சாட்டுக்களை பெயர் குறிப்பிடாது பூடகமான முறையில் தனது நாளாந்த செய்திகளாக வெளியிடத் தொடங்கியது. கருணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்கின்ற செய்திகளுடன் இணைத்து எனது பெயரை தீப்பொறி எனும் இணையத்தளம் தனது ஆங்கிலப் பக்கத்தில் ஒக்டோபர் 07 ஆம் திகதியில் பிரசுரித்தது. ஆதாரமற்ற வகையிலும் அநாகரிகமாகவும் வெளியாகின்ற புலிகளின் நிதர்சனம் போன்ற இணைத்தளங்களை நான் எப்படிக் கண்டுகொள்வதில்லையோ அதைபோல் இவற்றையும் நான் கண்டுகொள்ளவில்லை.
ஆனாலும் பொறுப்புமிக்க பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாகச் செயற்பட்டுவரும் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் ஒக்டோபர் 13 ம் திகதியன்று தனது தமிழ் வீக் கட்டுரையொன்றில் கருணாவினுடைய லண்டன் பயணம் குறித்து நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் எனது பெயரையும் இணைத்து பாரிஸ் ஊடான அவரது பயணத்திற்கு நான் உதவியதாகவும், பாரிசிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் உளவுப்பிரிவினருடன் தொடர்பு கொண்டதாகவும் பொய்யான செய்திகளை அதில் குறிப்பிட்டிருந்தார். எந்தவித ஆதாரங்களும் இன்றி சமூக விரோதிகளால் நடாத்தப்படுகின்ற தீப்பொறி போன்ற இணையத்தளங்கள் வெளியிடும் சேறடிப்புகளை தனது இராணுவ அரசியல் ஆய்வுக் கட்டுரைகளில் தகவல்களாக சேர்த்துக்கொள்வது ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்களின் பொறுப்பற்ற செயலாகும். இதுபோன்ற செய்தி பொறுக்கித்தனங்கள் அவரது கடந்தகால மற்றும் எதிர்கால எழுத்துகள் மீதான நம்பகத் தன்மை மீது கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி மீண்டும் தீப்பொறி இணையத்தளம் தனது தமிழ் செய்தித் தளத்தில் ரி.எம்.வி.பி. யின் உட்கட்சிப் போராட்ட சிக்கலுக்குள் என்னை இணைத்து எனது பெயரில் பாரிசில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் என்னை, எனது எழுத்துகளை, எனது ஜனநாயக வேலைத்திட்டங்களை மதிக்கின்ற பலரது வேண்டுகோளின் பெயரிலேயே இந்த மறுப்புச் செய்தி எழுதும் முடிவுக்கு வந்தேன். கடந்த 17வருடங்களாக பிரான்சில் வாழும் நான் என்னால் முடிந்தவரை ஒடுக்கப்படுகின்ற மக்கள் மீதான கரிசனை கொண்டு செயற்பட்டு வருபவன். கருத்துச் சுதந்திரத்துக்காகவும் ஜனநாயக மீட்புக்காகவும் மிகவும் கடுமையான உழைப்பை தொடர்ச்சியாகச் செய்து வருபவன். அதுபோன்ற செயற்பாட்டில் இருப்பவர்களுடன் இணைந்தும் பங்களித்தும் என்னை அடையாளம் காட்டி வந்துள்ளேன். அது சிறு சஞ்சிகை, பத்திரிகை, நூல்வெளியீட்டுத்துறை, வானொலி, இலக்கியச்சந்திப்பு, இணையத்தளங்கள்….. என்று எவ்வித ஊடகங்களாக இருந்தாலும்சரி புலிகளது அராஜகத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் குறிப்பாக ஒடுக்கப்படும் பிரிவினரான முஸ்லிம்கள், தலித்துகள் போன்றோரின் அரசியல் உரிமைக்காக புகலிட இலக்கிய அரசியல் துறையினூடாக கணிசமான பங்களிப்பினை செய்து வந்துள்ளேன். அந்த வகையில் யாழ்ப்பாணப் பிரதேச மேலாதிக்கத்தினால் ஒடுக்கப்படுகின்ற பிரதேசங்கள் குறித்து மிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றேன். அதனூடாக கிழக்கு மாகாண மக்களின் முன்னேற்றம், அவர்களது அரசியல் எதிர்காலம் என்பவற்றுக்காக மிக நீண்டகாலமாகவே எனது குரல்கள் ஒலித்து வருகின்றது. இவையனைத்தும் நான் இரகசியமாக செய்துவரும் வேலைத்திட்டங்கள் அல்ல. மிகப் பகிரங்கமாகவே எனது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
கிழக்கிலங்கை மாணவர்களின் மேம்பாடு கருதி கிழக்கிலங்கை கல்வி கலாசார ஒன்றியம் எனும் அமைப்பினையும், அப்பிரதேசத்தின் ஜனநாயக மீட்சிக்காக ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி எனும் அமைப்பையும் உருவாக்கி செயற்பட்டு வருகின்றேன். இவ்விரு அமைப்பினதும் உருவாக்கங்கள் புலிகளிலிருந்து கருணா பிளவு படுவதற்கும் ரி.எம்.வி.பி யின் உருவாக்கத்திற்கும் முற்பட்டவையாகும். இவற்றையெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான எனது வேலைத்திட்டங்களில் ஒரு பகுதியாகவே நான் கருதிவருகின்றேன். ஆனால் இவ்வேலைத்திட்டங்கள் மீது அதிருப்தியும் காழ்ப்பும் கொண்டிருக்கக் கூடிய சில மக்கள் விரோதச் சக்திகள் என்னை ஒரு பிரதேசவாதியாக சித்தரித்து வந்துள்ளனர். தற்போது ரி.எம்.வி.பி.இற்குள் ஏற்பட்ட உட்கட்சி ஜனநாயகத்துக்கான போராட்டங்களும் அதனை ஒட்டி பரப்பப்பட்டு வரும் வதந்திகளும் என்னை பிரதேசவாதியாக சித்தரித்து வந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பினை வழங்கியுள்ளது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்மீது சேறடிக்கும் முயற்சியில் மேற்படி சக்திகள் இப்போது இறங்கியிருக்கின்றன. ஐரோப்பா எங்கும் நடந்து வருகின்ற அரசியல் விவாதங்களிலும் தீர்வுத்திட்டங்கள் நோக்கிய உரையாடல்களிலும் ஓயாது நான் முன்வைத்து வருகின்ற கருத்துக்களுக்கு மாறான கருத்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு பகுதியினரே இத்தகைய சேறு பூசலில் இறங்கியிருக்கின்றனர்.
கடந்த 17 வருடங்களாக புலிகளது ஜனநாயக மீறல்களுக்கு எதிராக நான் பகிரங்கமாக செயற்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை தனிப்பட்ட முறையில் என்மீதும் எனது பெயர் மீதும் புலிகளால் கூட களங்கம் ஏற்படுத்த முடியவில்லை. காரணம் நான் இயக்கவாதங்களுக்கு அப்பாற்பட்டு எந்தவொரு கட்சியையோ குழுவையோ சாராது சுயமாகவும், சுதந்திரமாகவும் இயங்கி வருபவன். அத்தோடு தனிப்பட்ட வாழ்வில் உண்மையாகவும், எளிமையாகவும், நேர்மையாகவும் வாழந்துவருபவன். ஆனால் இன்று நான் கொண்டுள்ள அரசியல் கருத்துக்களை மலினப்படுத்த குறுக்கு வழியைக் கையாளும் நிலைக்கு ஜனநாயக முகம்கொண்ட வேடதாரிகள் சிலர் களமிறங்கியுள்ளனர். கருத்துக்களை கருத்துக்களால் வெல்லமுடியாத கோழைகளாகவே இவர்களை நான் காண்கின்றேன். என்னை வன்முறையாளனாகவும் அதிகார சக்திகளுக்கு விலை போகின்றவனாகவும் காட்டி எனது குரல்களை அடக்கி ஒடுக்கவும், அரசியலில் இருந்து என்னை ஓரம்கட்டவும் போடப்பட்டிருக்கின்ற சதித்திட்டமும் இதுவென கருதுகின்றேன்.
கிழக்கு மாகாண அரசியல் குறித்து நான் கொண்டுள்ள கருத்துக்கள் இச்சேறடிப்புகளுக்கு வாய்ப்பானதாய் அமைந்துள்ளது. அது ரி.எம்.வி.பி. யினருடன் என்னை இணைத்துப் பேச இத்தீய சக்திகளுக்கு வாய்ப்பளித்துள்ளது. கிழக்கு மாகாண மக்கள் குறித்து பேசுவதென்பது ரி.எம்.வி.பி. இற்கு மட்டும் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட ஒன்றல்ல. கிழக்கு மக்களின் தனித்துவங்களுக்காக குரல் கொடுக்கின்ற எல்லோருக்கும் ரி.எம்.வி.பி. சாயம் பூசுவதானால் தமிழ் பேசும் மக்கள் என்று உச்சரிக்கின்ற ஒவ்வொருவரும் முதலில் தங்கள் மீது புலிச்சாயங்களை பூசிக்கொள்ளட்டும். அரசியல் ரீதியில் எனது வேலைத்திட்டங்கள் பகிரங்கமானவை. ரி.எம்.வி.பி. இன் உருவாக்கம் அதன் நோக்கம் போன்றவை கிழக்கு மாகாண மக்களின் நலன்களுடன் ஒத்துப்போகின்ற புள்ளிகளில் நான் அவர்களை ஆதரிப்பவன் என்பதில் எவ்வித ஒழிவு மறைவுமில்லை. இவற்றை பகிரங்கமாக ஒத்துக்கொள்ள நான் தயங்குபவன் அல்ல. அது எனது அரசியல் உரிமை. அதை எந்தவொரு கணத்திலும் யாரிடமும் நான் விட்டுக்கொடுக்கப்போதில்லை. ஆனால் இந்த கோட்பாட்டு ரீதியான ஒத்திசைவென்பது வேறு, ரி.எம்.வி.பி. இயக்கத்தினுடைய கட்சிசார் நடவடிக்கைகள், நடைமுறைப் பிறழ்வுகள் என்பவை வேறு.
ஆகவே திட்டமிடப்பட்ட வகையில் ரி.எம்வி.பி.யின் உட்கட்சிப் போராட்டம் சார்ந்த சிக்கலுக்குள் எனது பெயரை சம்பந்தப்படுத்துவதை நான் கடுமையாக மறுதலிக்கின்றேன். அதையொட்டி என்மீது ஏற்படுத்தப்படுகின்ற கறை பூசல்கள் யாவும் அரசியல் நேர்மையற்ற போக்கிரித்தனங்களின் வெளிப்பாடேயாகும். எனது ஆரம்ப கால அரசியல் நடவடிக்கைகளில் நான் புளொட் அமைப்பினுடைய தமிழீழ மாணவர் பேரவையுடன் மட்டுமே சம்பந்தப்பட்டவன். என்னைத் தெரிந்த அனைவருக்கும் இது பகிரங்கமான உண்மை. இதைக்கூட அறிந்துகொள்ள முடியாது நான் ஒரு முன்னாள் புலிப்போராளி என ஜெயராஜ் எழுதியுள்ளார். தீப்பொறியின் பொய்மூட்டைகளுக்கு குஞ்சம் கட்டி ஊடக அந்தஸ்து கொடுத்திருக்கும் டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்களின் ஆய்வு நகைப்புக்குரியதொன்று. நான் பங்கெடுத்த இயக்கத்தின் பெயரைக்கூட அறிந்துகொள்ள முடியாத டி.பி.எஸ்.ஜெயராஜ் அவர்கள் கருணாவின் நகர்வுகள் குறித்து கதை எழுதுவதை எண்ணி என் வாய் அல்ல பிண்டமே சிரிக்கிறது.
இதுபோன்ற செய்திகள் எனை நோக்கி புலிகளின் பார்வையை திருப்பிவிட்டு என்னை ஆபத்தில் மாட்டிவிடும் நயவஞ்சககர்கள் ஒருசிலரின் குள்ள நோக்கில் இருந்து எழுபவை என்பதை ஜெயராஜ் போன்றவர்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். என்னை உள ரீதியாக நோகடித்து எனது இலக்கிய அரசியல் வேலைத்திட்டங்களில் இருந்து ஓரம் கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கின்ற அரசியல் போக்கிரிகளின் பூச்சாண்டிகள் எதுவுமே எனது உண்மையான ஜனநாயக செயற்பாடுகளின் முன்னால் வேகாது என்று அறிவிப்பதோடு, என்மீதான இந்த சேறு பூசல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை, அநீதியானவை என்று கூறி இவை அனைத்தையும் கடுமையாக மறுக்கின்றேன்.« பாரிஸ் தலித் மாநாடும் அதையொட்டிய கருத்துப் பதிவுகளும் | Home | தலித்தியம்: தேவைதானா ? :சபா நாவலன் »Related posts:
Will be added soon here...
உங்கள் கருத்த

This entry was posted on Thursday, October 25th, 2007 at 9:00 pm and is filed under செய்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
27 Comments so far
kumar on October 26, 2007 4:46 pm
LTTE is a no 1. Our leader Pirapakaran.
விதுரன் on October 27, 2007 11:19 am
ஸ்ராலின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டு ரி.பி.சி. அவரது தன்னிலை விளக்கத்தை தனது செய்தி அறிக்கையில் சேர்த்துக் கொள்ளாதது, நடுநிலை வானொலியாக ரி.பி.சி. தொடர்ந்து செயல்படும் என்பது சுத்த பம்மாத்து.
kumar on October 29, 2007 1:12 pm
our ledar prpakaran our netiol tamil eelam
don;t riget ane ?????????
Karunithasan on October 29, 2007 9:50 pm
நண்பர் ஞானம் என்கின்ற ஸ்டாலினுக்கு:
உங்களின் கட்டுரை வாசித்தேன் அழகான புனைவுகளைக் கொண்டு அக்கட்டுரைக்கு வடிவம் கொடுத்துள்ளீர்கள் .உங்களின் எழுத்துத்திறமைக்கு என் பாராட்டுக்கள். உங்களை அறியாத அப்பாவி வாசகர்ளை உங்களின் இந்த பட்சாதாப புனைவுக் கடிதம் உங்கள் மீது அனுதாபங் கொள்ள வைத்திருக்குமென்றே நம்புகின்றேன் .அந்தவகையில் நீங்கள் எடுத்த இந்த பதில் அறிக்கை முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் மறுபுறம் உங்களை நன்கறிந்த பலருக்கு உங்களின் அறிக்கை கவுண்டமணியின் நகைச்சுவை உணர்வையே தருகின்றது.
நண்பரே நான் எழுதும் இக்கடிதம் கருணா அம்மானுக்கும் உங்களுக்குமான கொடுக்கல் வாங்கல் பற்றியோ அல்லது அவர் பணத்தில் பிரான்சில் நீங்கள் வாங்கியதாக சொல்லப்படுகின்ற சொத்துக்கள பற்றியதோ அல்ல. இது உங்களுக்கும் கருணா அம்மானுக்கும்மான விடயம்.
நான் கூறவிரும்புவதெல்லாம் நீங்கள் உங்கள் அறிக்கையில் கூறியுள்ள “புனைவுக் கதைகள்” தொடர்பாகவே. முதலாவதாக நீங்கள் கிழக்கிழங்கை மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி கிழக்கிழங்கை கல்வி கலாச்சார ஒன்றியம் எனும் அமைப்பினையும் அப்பிரதேசத்தின் ஜனநாயக மீட்சிக்காக ஜனநாயகத்திற்கான கிழக்கிழங்கை ஜனநாயக முன்னனி எனும் அமைப்பினையும் உருவாக்கி செயல்படுவதாக கூறியிருக்கிறீர்கள். நண்பரே பென்னாம்பெரிய புசனிக்காயை கொஞ்சுண்டு சோற்றுக்குள் மறைக்கும் செயலாக இது உங்களுக்கு படவில்லையா நண்பரே கிழக்கிழங்கை கல்வி கலாச்சார ஒன்றியத்தின் தோற்றம் என்பது கிழக்கு மக்களின் கல்வி மீதும் பொருளாதார கலாச்சார வளர்ச்சி மீதும் சமூக அக்கறை கொண்ட சில நண்பர்களின் அயராதமுயற்சியினால் உருவாக்கப்பட்டதொன்று. அதனுள் நீங்கள் நயவஞ்சகமான திட்டங்களோடு உட் புகுந்து உங்கள் கிறீமினல் மூளையை பயன்படுத்தி நீங்கள் செய்த திருவிளையாடல்களை பிரான்சில் உள்ள கிழக்கின் மைந்தர்கள் அறிவார்கள். உங்களின் கிறீமினல் தனங்களை தட்டிக் கேட்ட நண்பரொருவரை நீங்கள் புலிகளின் பினாமிகளை வைத்து பிரான்ஸ் லாச்சபலில் தட்டிக் கேட்ட வரலாற்றை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை. இச் சம்பவத்திற்கெதிராக அன்றைய நேரத்தில் புலம்பெயர்ந்த சூழலில் பல நண்பர்களினால் கண்டன அறிக்கைள் விடப்பட்டதை கொஞ்சம் நீங்கள் ஞாபகங்கொள்வது நலமென்றே நினைக்கின்றேன் (நண்பரே அக்காலத்தில் வந்த கண்டன அறிக்கைகள் பல இன்னமும் என்னிடம் உள்ளன. நீங்கள் ஞாபகம்கொள்ள விரும்பினால் உங்களுக்கு என்னால் அனுப்பிவைக்கமுடியும்.) கிழக்கிலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட அந்த ஒன்றியம் உங்களின் சுயநல நடவடிக்கையினாலும் கடைந்தெடுக்கப்பட்ட பிரதேசவாத சேற்றினாலும் சீரழிந்து அதன் செயற்பாட்டு நண்பர்கள் உங்களின் சகவாசமே வேண்டாமென்று விலகி நிற்பதும் அதன் நிமித்தம் இவ் ஒன்றியம் முடங்கிக் கிடப்பதும் மிக வேதனைக்குரிய விடயமென்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா. நீங்கள் பேசுகின்ற யாழ்ப்பாண மேலாதிக்கமென்ற கருத்தும் பச்சத்தனமான பிரதேச வாதமும் உங்களின் அரசியல்இவியாபார நலன் கருதியதேயன்றி அது உண்மையான கிழக்குமாகாண விசுவாசத்தில் ஏற்பட்டது அல்ல என்ற உண்மையை உங்களோடு பழகியவர்கள் நன்கு அறிவார்கள். பிரான்சில் இருக்கும் யாழ் மையவாத வேளாள இந்து சதானிகளோடு உங்களுக்குள்ள கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபார உறவுகளுக்கு என்ன பெயர் நண்பரே உங்கள் அகராதியில்.
இரண்டாவதாக புகலிடத்தில் 17 வருடங்களாக புகலிட அரசியல் இலக்கியத்திற்காக பங்களிப்பினை செய்துவருவதாக குறிப்பிட்டுள்ளீர்கள் உண்மையில் உங்களுக்கு மிகவும் தையிரியம்தான். கடந்த காலங்களை மனித மனம் மறந்துவிடும் என்பதில் உங்களுக்கு பலத்த நம்பிக்கை இருப்பதுபோல் தெரிகின்றது நண்பரே. புகலிடத்தில் காத்திரமான ஒரு மாற்றுச் சஞ்சிகையாக லட்சுமி கலைச்செல்வன் ஆகியோரால் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட எக்ஸில் சஞ்சிகையை இல்லாமல் ஆக்கி அதன்பெயரில் நீங்களும் உங்கள் பினாமிகளும் செய்த “இலக்கிய சேவை” உண்மையில் நீங்கள் சொல்வதுபோல் இலக்கிய பங்களிப்புத்தான் நண்பரே. நீங்கள் எக்ஸில் என்ற அதே பெயரில் ஒரு சஞ்சிகையை கொண்டுவந்து அச் சஞ்சிகையில் மாற்றுக் கருத்தாளர்களை புகலிடத்தில் புலிகளின் வன்முறைகளை அராஐகங்களுக்கு எதிராக குரல் கொடுத்த இலக்கிய வாதிகளை கொச்சைப்படுத்தி புலிகளுக்கு காட்டிக்கொடுத்தவரலாறு உங்கள் பாசையில் இலக்கிய சேவைதான். உலகத்தில் என் அறிவுக்கு எட்டியவரை இலக்கிய சஞ்சிகை ஒன்றில் அட்டையில் ஒரு பெண்ணைப்பற்றி கேவலமாக எழுதி வெளியிட்டு இலக்கியசேவை செய்த ஒரே நபர் நீங்கள்தான்; நண்பரே. அந்தவகையில் உங்களின் இலக்கிய சேவை மகாசேவைதான்! பெண்ணியவாதியும் மாற்றுச்சிந்தனையாளருமான லட்சுமி மீது நீங்கள் எழுதிய அந்த அட்டைப்பட வசனங்கள் இன்றும் என்னுள் ஞாபகம் உள்ளது நண்பரே. புகலிடத்தில் இருபதுவருடங்களுக்கு மேலாக நடந்துவரும் இலக்கிய சந்திப்பை இல்லாமல் ஆக்குவதற்கு அதன் மீது நீங்களும் உங்கள் பினாமிகளும் வைத்த குற்றச்சாட்டுக்களை மீண்டும் ஞாபகம்கொள்ளுங்கள் நண்பரே. உங்களுக்கு எப்பொழுதும் வன்முறைகளை எதிர்கின்றவர்கள் மீதும் மாற்றுச் சிந்தனையாளர்கள் மீதும் மனித உரிமைகள் பற்றிப்பேசுகின்ற ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி சிந்திக்கின்ற இடதுசாரி கொள்கை பற்றாளார்கள் மீதும் நீங்கள் காட்டி வருகின்ற காழ்ப்புணர்ச்சி நிறைந்த கபடத்தனமான நடவடிக்கைகளை சற்றுக் குறைத்துக் கொள்ளுங்கள் நண்பரே. நல்ல மனிதனாக வாழ்வதற்கு குறைந்தபட்சமாவது நேர்மையும் உண்மையும் அவசியம் எனக் கருகின்றவன் நான். அந்த வகையில் இனிமேலாவது நீங்கள் கொஞ்சமாவது நேர்மையோடு உண்மைபேச முயலுங்கள். பொய்கள் புரட்டுக்கள் பித்தலாட்டங்கள் செய்யும்போது எப்படிப்பட்ட மனிதர்களுக்கும் கொஞ்சம் பதட்டம் வருமென்றே நான் அறிந்திருக்கின்றேன். உங்கள் விடயத்தில் அது கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லாமல்போய்விட்டதே. உண்மையிலேயே நீங்கள் ரொம்ப தையிரியசாலிதான்.
மேலும் நண்பரே இலங்கை உளவுப்பிரிவுடன் உங்களுக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பொய்யான தகவலை சில இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளதாகவும் அது உங்கள் மீதான சேறடிப்பாக நீங்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள் உண்மையில் இச் செய்தியில் உண்மை இல்லையெனில் மிக மிக கண்டிக்கப்பட வேண்டியதொன்று. ஆனால் நண்பரே உங்களின் கடந்த கால வரலாற்றை புரட்டும்போது மேற்கூறிய குற்றச்சாட்டுக்கு நம்பகத்தன்மை கூடுகின்றது. இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் உரிமைப்போராட்டம் உச்சநிலை அடைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஐக்கியதேசிய கட்சியின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் நிதி உதவியோடு “உண்மை” என்றபெயரில் கொழும்பிலிருந்து மாதா மாதம் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது. தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தை தொடர்புடக சாதனங்கள் மூலம் (Media as a weapon of power) முயன்ற பாதுகாப்பு அமைச்சின் வெளிப்பாடே உண்மை பிரசுரத்தின் அரசியலாகும். இப் பிரசுர வெளியீட்டுக்கு கொழும்பு துறைமுக கூட்டுத்தாபனதில் பணிபுரிந்த ஒரு தமிழ்பேசும் தொழில் சங்கவாதி பொறுப்பாக இருந்தார். இவ் பிரசுர விநியோகப் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சே பொறுப்பெடுத்து தமிழ் பிரதேசங்களுக்கு தபால்; மூலம் இலவசமாக விநியோகித்துவந்தது. இதுதான் உண்மை பிரசுரத்தின் உண்மை வரலாறாகும். நண்பரே இதன் பின்னால் உள்ள இன்னுமொரு உண்மை வரலாற்றைப் பார்ப்போமா? இந்த வெளியீட்டு முயற்சியில் அந்த தொழில் சங்கவாதிக்கு உறுதுணயாக இருந்து செயல்பட்டவர் நீங்கள்தான் என்பதை நாங்கள் மறக்கமுடியுமா..? இவ்வாறு உங்களைப்பற்றிய பற்பல உண்மை வரலாறுகளை நாம் கூறமுடியும். குறிப்பாக உங்களின் சந்தர்ப்பவாத சுயநலத்திற்காக புலிகளிடம் தங்கள் உயிரைக் பறிகொடுத்த மட்டக்களப்பு புளொட் அமைப்புத் தோழர்கள் மூவரையும் நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை. அந்த தோழர்கள் எங்கள் கண்களிற்குள்ளும் நினைவுக்குள்ளும் இருக்கிறார்கள்.
நண்பரே பிரபல பத்திரிகையாளர் D.B.S Jeyaraj அவர்கள் உங்களை புலி என்று குறிப்பிட்டுள்ளதாக குறைப்பட்டுக் கொண்டுள்ளீர்கள். இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தும் உங்களின் பேச்சுக்கள் வன்முறை சார்ந்த உங்களின் எண்ணக் கருத்துக்கள் மற்றும் உங்களின் செயல்பாடுகளை அவதானிக்கும் பலரும் உங்களை ஒரு முன்னால் புலியென்றே கருதுகின்றனர். புளொட்டின் மாணவர் அமைப்பில் நீங்கள் அங்கம் வகித்ததாக கூறியுள்ளீர்கள். புகலிடத்திலுள்ள புளொட் தோழர்கள் வன்முறைகளுக்கு எதிரானவர்களாகவும் ஐனநாயகத்தை கோருகின்றவர்களாகவும் இருக்கும்போது நீங்கள் மாத்திரம் வன்முறைக்கு ஆதரவாளனாக கிழக்கில் நடந்தேறும் படுகொலைகள் ஆட்கடத்தல்கள் சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தல் மற்றும் அனைத்து மனித உரிமை மீறல்களையும் கருணா அம்மானின் பெயரால் நியாயப்படுத்துகின்றீர்களே. கருணா அம்மான் கூட இவ்வாறு நியாயப்படுத்தமாட்டார் என நினைக்கின்றேன். இவ்வாறான உங்களின் செயல்பாடுகளின் நிமித்தம்தான் D.B.S Jeyaraj; அவர்கள் உங்களை ஒரு புலியென அடையாளப்படுத்தி cள்ளாரென நினைக்கிறேன். எனினும் அவரின் இக் கூற்று தவறென்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். கருணா அம்மான் கிழக்குமாகாண அபிவிருத்தி பற்றியும் அதன் தனித்துவம் பற்றியும் பேசினாரே அன்றி உங்களைப்போல் பிரதேசவாதம் பேசவில்லை. உங்களின் பிரான்ஸ் நடவடிக்கைகள் தமிழ மக்கள் விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவுகளை கொடுக்கின்றதே அன்றி எவ்வித முன்னேற்றத்தையும் வரவேற்பையும் கொடுக்கவில்லை என்பதை நீங்கள் தயவாய் புரிந்துகொள்ளவேண்டும்.
நண்பரே மனிதர்கள் தவறுகள் இழைப்பது வரலாற்றில் சகஐம். வாழ்வில் துரோகம் இழைத்தவர்களும் தவறுபுரிந்தவர்களும் காலங்களின் நீரோட்டத்தில் நல்லவர்களாக வல்லவர்களாக மாறிய தருணங்களை நாம் கண்டிருக்கிறோம். இது வாழ்வுச் சூழலில் சகஐமானது. ஆனால் உங்களின் வாழ்கைப்பாதை இந்த வரலாற்று நியதியிலிருந்து மாறுபட்டதாகவே இருக்கின்றது. நீங்கள் உண்மையோடும் நேர்மையோடும் வாழவேண்டுமென்று நான் விரும்புகின்றேன். உங்களின் நிகழ்கால நடவடிக்கைகளை சுயபரீசோதனைக்கு உட்படுத்துங்கள். மற்றவர்களின் தேவையற்ற குற்றச் சாட்டுக்களை விடுத்து உங்கள் மனதுக்கு தெரிந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து வெளியேற முயலுங்கள். கிழக்கு மக்களுக்கான சேவையென்பது புகலிடத்தில் எங்களை வளம்படுத்திக்கொண்டு சொத்துக்கள் சேர்ப்பதல்ல அதற்கப்பாலும் அந்த மக்களுக்காக அந்த மக்களின் துயரங்களுக்காக விடிவுகளை தேடி அதனை அடைய முயல்வதே ஆகும். அறிக்கைப்போரினை விட்டுவிட்டு நிகழ்கால தவறுகளில் இருந்து மீட்சிகொண்டு விழித்தெழுவதே நாம் செய்யும் சுயவிமர்சனமாகும். உங்களின் பொய்மை களைந்த நேர்மை கொண்ட எதிர்கால வாழ்வுக்கு என் வாழ்த்துக்கள்.
நன்றி நண்பர
அன்புடன்
கருணைதாசன்
karunithisan@hotmail.com
mani on October 30, 2007 10:48 am
gnanam anpavarai nanraaka therium.suyanalam pedtthe manusan.evani pattri kathithu enna pirayosanam?
mani
Theepori on October 31, 2007 11:59 am
கருணாவின் சமூக விரோத நடவடிக்கையின் மூலம் மக்களிடம் பெறப்பட்ட கப்பம் பணத்தில் பிரான்ஸில் முதலீடு !
எமது இணையத்தளத்தில் கருணாவின் பிரான்ஸ் பொறுப்பாளர் பற்றிய தமிழ் ஆங்கில இணைய பக்கங்களில் வெளியான விபரமான தகவல் அடங்கிய கட்டுரைகளுக்கு நேரடியாக பதில் கொடுக்க முடியாத சின்னமாஸ்டர் அல்லது ஸ்டாலின் அல்லது ஞானம் என்று அழைக்கபடும் மாசிலாமணி இராஜேந்திரன் என்ற நபர் ஜனநாயகத்தைப் பற்றியோ அல்லது ஊடகத்துறை பற்றியோ பேசுவதற்கு இவருக்கு என்ன அருகதை உள்ளது. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இனி விடயத்துக்கு வருவோம்.
எமது இணையமான தீப்பொறி இணையத்தில் நாம் வெளியிட்ட அக்டோபர் 22—2007 திகதி செய்திக் குறிப்பில் மட்டக்களப்பில் இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பில் கருணா பிள்ளையான் அணி உறுப்பினர்கள் இணைந்து இரு குழுக்கள் உருவாக்கம் என்ற தலைப்பின் கீழ் வெளியான செய்தியியையிட்டு இதுவரை கருணாவோ அல்லது பிள்ளையனோ மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதே வேளை அந்தக் கூட்டத்திலே பிள்ளையான் இராணுவ அதிகாரியிடம் கேட்ட கேள்வி ஒன்றின் போது லண்டனில் புங்குடுதீவு கிருஸ்ணன் ஊடாக கருணா முதலீடு செய்துள்ளது போல் பிரான்ஸில் சின்ன மாஸ்டர் அல்லது ஞானம் என்று அழைக்கப்படும் மாசிலாமணி இராஜேந்திரன் பெயரில் பாரீஸில் வாங்கப்பட்ட வீடுகள் மற்றும் முதலீடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிள்ளையானால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது தொடர்பாக தனது கட்டுரையில் எவ்வித கருத்துக்களையும் கூறாமல் மறுத்தது ஏன்.?
இவர் தனது பதிலில்; எனது எழுத்துக்களை மதிக்கும் ஒரு சிலரின் வேண்டுகோளை ஏற்று மறுப்பு தெரிவிப்பதாக கூறும் இவர், அங்கு வாங்கப்பட்ட சொத்துக்கள் பற்றிய விடயங்கள் தொடர்பாக எவ்வித மறுப்பையும் இவரால் வெளியிட முடியவில்லை. ஆனால் முழு விபரங்களை வெளியிட்டிருந்தால் அவரின் எழுத்துக்களை மதிக்கும் அந்த ஒரு சில நபர்கள் சந்தோசப்பட்டிருப்பார்கள். அல்லது புரிந்திருப்பார்கள். அவரது எழுத்துக்களை மதிப்பவர்கள் சிலராக இருந்து பலராக கூடி இருப்பார்கள்.
அத்தோடு இவர் தனது பதிலில் கருணா அணியின் உட்கட்சிப்போராட்டத்தில் தன்னை இணைத்ததாகவும் கூறுகின்றார். இவர் சொல்லும் இந்த உட்கட்சிபோராட்டம் பற்றி சற்று விளக்கம் தருவாரா? இவரின் எழுத்தை மதிக்கும் நபர்கள் கருணா அணிக்குள் இவர் நாடாத்திய உட்கட்சிப் போராடத்தை அறிய ஏதுவாக இருக்குமல்லவா.
இவர் 17 வருடங்களாக பிரான்ஸில் புலி எதிர்ப்பாளராக செயற்பட்டதாக தனக்கு தானே ஒரு அணிகலனை பூட்டிக் கொண்ட இவர் எந்தக் காலத்திலும் தனது சொந்தப் பெயரில் செயற்பட்டது கிடையாது. இவர் புலிகளுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இரட்டை வேடம் போட்டு செயற்பட்டதை தனது கட்டுரையில் அம்பலப்படுத்தியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான் செயற்படுவதாக கூறும் இவர் கிழக்கு மகாணத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கடந்தவாரம் பிரான்ஸில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது எதைக் காட்டுகிறது?
இவரை அரசியலில் இருந்து ஓரம் கட்ட போட்ட திட்டம் என கூறுகின்ற இவரின், கடந்கால அரசியல் நடவடிக்கைதான் என்ன? எதிர்கால அரசியல் தான் என்ன? என்பது புரியாத புதிராக உள்ளது.
குறிப்பு:
தீப்பொறி இணைய சஞ்சிகையால் அனுப்பபட்ட இக்கட்டுரையில் சம்பந்தப்பட்ட நபர் மீது வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் வைக்கப்படாததால் அவை இங்கு நீக்கப்பட்டு உள்ளது.
தேசம்நெற் இணைய நிர்வாகம்.
Mani on October 31, 2007 1:07 pm
saphas thippori. unkal pani thodarddum! gnanattin pholi vadevam ampalamaakaddum. vallka thesam. unkal panium thodarddum!
mani
பெயரிலி on October 31, 2007 3:51 pm
இந்தப் பிரச்சினையை தீப்பொறி எழுதியது. இப்போது கருணைதாசன் என்ற பெயரில் கடிதமொன்று விடப்பட்டிருக்கிறது. இதை எழுதியவர்கள் ஞானத்துக்குத் தெரிந்தவர்கள்தான் என்பதும் பிரான்சில் நடக்கும் ஒன்றுகூடல்களில் இவர்கள் சந்தித்துக் கொள்பவர்கள்தாம் என்பதும் இன்று அரசியல் இலக்கிய வட்டங்களில் இருப்பவர்களுக்கு ஊகிப்பதில் ஒரு பிரச்சினையுமேயில்லை. நேரில் காணும்போது இதுபற்றி இவர்கள் விவாதிக்கிருக்கலாமே. ஏன் அப்பிடியொரு பழக்கமேயில்லையா? அல்லது இந்தக் கருத்துகளில் நம்பகத்தன்மையில்லையா?. ஞானத்துக்கு எதிரான பிரச்சினையாக மட்டும் இதைப் பார்க்க முடியாது. உங்களுடன் அரசியல் இலக்கிய உறவுகளைக் கொண்டிருக்கும் என் போன்ற எல்லோருக்கும் பூச்சுற்றும் வேலையும்தான் இது. உங்களுடன் அரசியலில் உடன்பாடற்றவர்களை நீங்கள் இப்படியாக எதிர்கொள்ளப் போகிறீர்களா என்ன? கருணைதாசன் என்ற பெயரில் எழுதிய கடிதத்தின் உள்ளடக்கமும் அதன் வசன நடையும் இதை எழுதிய நபர் அசோக் (பாரிஸ்) என்பதை ஊகிக்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில் அசோக் இதை பகிரங்கமாக மறுக்கட்டும். கருணாவின் பிரிவின்போதான ஞானம் ரிபிசி கூட்டு அரசியல்கள் பேச்சுக்கள் பிரச்சினைக்குரியதாக என்போன்றவர்களுக்கும்தான் இருந்தது. அதை நேரடி விவாதங்களில் எதிர்கொள்வதற்குப் பதில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சோடிப்புகளுடன் அணுகுவது நேர்மையற்ற செயல். வெளியே வந்து விவாதியுங்கள். அது பிரயோசனம் தரும். - (இப்போதைக்குப்) பெயரில
சேனன் on October 31, 2007 5:09 pm
கண்டபடிக்கு கதையளந்து கற்பனைகளை செய்தியாக்கும் தற்போதய தமிழ் ஊடகவியல் - ஏதாவது ஒரு அரசியல் சார்பின் பிரச்சார நடவடிக்கையாக வளர்ந்து வருகிறது.
யார் யாருக்காக திரிபுசெய்கிறார்கள் என்பதை கவனித்து வருபவர்களுக்கு ‘நடுநிலை’ என்ற புணிதத்தை நிறுவி ‘பலமான’ அரசியல் பக்கம் சாரும் எழுத்துக்களை ஊடுருவி உண்மை அறிய முடியும். ‘நடுநிலை’ என்பதன் அர்த்தம் ஆதிக்க அரசியல் சார்பு என்றே தொடர்ந்து நிறுவப்பட்டு வருகிறது.
‘செய்தி வெளியிடலின்’ பின்னனியை காட்டச்சொல்லி நாம் கேட்பதும் காரன காரியத்துடன் செய்தியை நிறுவச்சொல்லி கேட்பதும் ஒன்றல்ல. அதேபோல் குறிப்பிட்ட செய்தியின் பின்னனியை கேட்பதன் பின்னால் அச்செய்திக்கு எதிர் அரசியலை நாம் வைத்துக்கொண்டிருக்கிறோம் என்றுமில்லை.
இந்த சின்ன அறிவித்தலுடன் நாம் D.B.S. Jeyarajக்கு அனுப்பிவைத்த கடிதத்தை இங்கு வெளியிடுகிறோம்.
26/10/2007
Dear D.B.S. Jeyaraj,
I write to request that you, as a well-respected journalist, demonstrate your journalistic integrity with regards your comments in your article, ‘Will “Col” Karuna Re-Appear Dramatically or Simply Disappear?’ published on October 13th, 2007.
You wrote:
According to some reports Karuna boarded a Sr Lankan Airlines flight and reached Paris some days ago. He was received in Paris by a writer cum journalist known as “Gnanam” who himself is an ex - LTTE cadre of the Eastern soil. “Suresh”an intelligence operative attached to the Lankan Embassy in France was also in attendance. After spending a few days in Paris with Gnanam the TMVP leader has vanished into the blue.
In the current political climate the above claims have very serious implications for the safety of Gnanam. I would like to point out that, as presented, they are clearly unsubstantiated and as such cannot be taken as fact. I request that you explain your motivation for making these claims and also provide Gnanam with the opportunity to defend himself.
It is at least in your interest to point out that these claims come from an unreliable source or you are just oiling the cogs of the rumour-mill. I will welcome the publication of your evidence. At least please provide further explanation to support your case.
I have to say that I do not share any of Gnanam’s political views or have any personal interest in defending him. However I write to you in the interest of establishing the facts. Also as you already know, the singling out of any name will only help to put that person’s life at risk.
Gnanam has already denied his involvement in his statement published in thesamnet.net and thenee.com. I hope you will look into this serious matter and reply with your thoughts.
I look forward to your reply,
Thanks.
Senan
Rayakaran on October 31, 2007 8:35 pm
தம்மை மூடிமறைத்துக் கொண்டு இயங்கும், இயக்கவாதிகளின் நோக்கம் என்ன?
ஏன் எதற்காக தம்மைத்தாம் மூடிமறைக்கின்றனர். எதனால் வெளிப்படையாக மக்கள் முன் வரமுடிவதில்லை. தாம் ஜனநாயகவாதிகளாக, வன்முறைக்கு எதிரானவர்களாக, கொலைகளை கண்டிப்பவர்களாக காட்டிக்கொண்ட, காட்டிக்கொள்கின்றவர்கள், எத்தனை எத்தனையோ கவர்ச்சிகரமான வேஷங்கள்.
இயக்கத்தின் உறுப்பினராக, அவர்களுடன் தொடர்புடையவராக வலம் வரும் இந்த வேஷதாரிகளின் வேஷம் படுபிற்போக்கானது. ஒருவன் தன்னை புலி என்று கூறி வேலை செய்வதில் ஒரு நேர்மையும், அதில் ஒரு ஒழுக்கமும் உண்டு. அதைக் கூட செய்யமுடியாதவர்கள் தான் ஜனநாயகவாதிகள். இப்படிப்பட்டவர்கள் படுபிற்போக்குவாதிகள். உண்மையில் தம்மையும், தமது மனித விரோத நடைமுறைகளையும் மக்கள் முன் மூடிமறைப்பது தான், தம்மை மூடிமறைப்பதன் நோக்கம்.
இப்படிப்பட்டவர்கள் மக்களின் முன்னும், தமது கருத்துக்களை வைக்கும் இடங்களிலும், தமது இயக்க அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லை. இதேபோல் தம்மை ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும், அராஜகவாத லும்பன் உதிரிகள் இந்த இயக்கவாத கும்பலுடன் அடிக்கும் கூத்துகள் சொல்லிமாளாது. இவர்களின் இழிவு கெட்ட அரசியலோ, அரசியல் சதியாகின்றது. தலித் மாநாட்டிலும் கலந்து கொண்ட இந்த இயக்கப் பேர்வழிகள், தம்மை முழுமையாக மூடிமறைத்துக் கொண்டு, தலித் மக்களுக்கு எதிராகவே சதி செய்தனர்.
இப்படி பல புனைபெயர் பேர்வழிகள் எழுத்தில் உலவுகின்றனர். சொந்தப் பெயரில் அதை சொல்லும் அரசியல் நேர்மையற்று, சதிகளை மூலமாகிக்கொண்டு இயங்குகின்றனர். அண்மையில் ஞானம் தொடர்பாக தீப்பொறி இணையமும், அதை மீள வெளியிட்ட நிதர்சனச் செய்தியின் உண்மைத் தன்மையும் கூட, இங்கு இப்படிப்பட்டதுதான். ஞானம் பற்றிய குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்வதல்ல, இந்த சதி வழிமுறை பற்றியதே எம்முன்னுள்ள விடையம்.
ஞானம் தனது அரசியல் செயல்பாட்டையும், கருணா என்ற பாசிச புலிக் கும்பல் பற்றிய, அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக இதுவரை முன்வைக்கவில்லை. யாழ்மேலாதிக்கத்தின் பெயரால், கிழக்கு வாதங்கள் மூலம், அதை அரசியல் ரீதியாக பாதுகாத்து விடமுடியாது. இதையொட்டி தேனீயில் அவர் எழுதிய கட்டுரை, எதையும் அரசியல் ரீதியாக தெளிவாக்காத வகையில், சூக்குமமாக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் சதிகாரர்களின் தொடர் குற்றச்சாட்டுக்கு, அதுவே மேலும் பக்கபலமாக உள்ளது.
இந்த விடையத்தை அரசியல் சதியாகவே முன்னெடுத்த பின்னணியோ, அதைவிட சூக்குமானது. ஈ.என்.டி.எல்.எப் என்ற இந்தியக் கூலிக் குழுவின் இணையத்தில் தான், இந்த சதி திட்டமிட்டு வெளிவருகின்றது. இதில் அரசியல் நேர்மை பற்றிய விடையமும், சதி பற்றிய சூக்குமமும் அம்பலமாகின்றது. ஈ.என்.டி.எல்.எப் என்ற கொலைகார கும்பலினதும், இந்திய சதிக் கும்பலினதும் இணையம் தான் தீப்பொறி. இதில் ஒரு புனைபெயர் வழியாக, வருகின்ற சதிக்குரிய நபரை, அனைவரும் அறிவர்.
[cut]
இப்படி இயக்க சதிகள், ஜனநாயகத்தின் பெயரில் அரங்கேறுகின்றது. இதில் ஈ.என்.டி.எல்.எப் யை, கருணா கும்பல் ஜனநாயக விரோதமாக கிழக்கில் விழுங்கி ஏப்பமிட்டதை பழி தீர்க்கும் அரசியல், ஞானம் விவகாரம் ஊடாக பூதமாகி வீங்குகின்றது.
ஞானத்துடன் தீரா பகை கொண்டு திரியும் ‘அனைத்து வன்முறைக்கும் எதிரானவர்” நடத்தும் நாடகம் தான், ஞானம் பற்றிய தொடர்ச்சியான செய்திகள். ‘யன்னiலைத் திற” என்ற அசோக்கின் வெளியீடு இதைத்தான் அப்படியே முன்பு செய்ய முனைந்தது. இப்ப எழுத்தில் புனைபெயர்கள். இப்படி புனைபெயர் கட்டுரைகள் பல. கருணைதாசன் என்ற புனைபெயரில் தீப்பொறியில் வந்ததும் சரி, ஈழமுரசில் கருணைதாசன் என்ற பெயரில் மகாஜனா பழைய மாணவர் சங்கம் பற்றி எழுதியவரும் ஓருவரே. அண்மையில் தேனீயில் மலைதாசன் (பெயர்?) என்ற பெயரில் சோபாசக்தியை தாக்கிய, புனைபெயர் அனைத்திலும் ஒருவரே. இப்படி அரசியல் சதியை சூதாட்டமாக நடத்துகின்றனர். ஞானத்தின் அன்றைய துரோகத்தை பட்டியல் இடுபவர்கள், அந்த வீட்டில் பல வருடக்கணக்காக இதையெல்லாம் தெரிந்து கொண்டு சாப்பிட்ட அந்த துரோகத்தை மட்டும், எதிலும் யாரும் குறிப்பிடுவதில்லை. அப்போது ஞானம் துரோகியல்ல, இப்ப துரோகி.
இது போன்ற குற்றச்சாட்டுகளின் சரிபிழைக்கு அப்பால், சொந்தப் பெயரில் செய்ய முடியாது கேடுகெட்ட கேவலமே போதுமானது, இந்த சதியை ஆராய. இவர்களின் அரசியல் நேர்மை பற்றி பேசுவதற்கு. அதுவும் ஈ.என்.டி.எல்.எப் என்ற அனைத்து வன்முறையும் செய்த செய்யும் ஒரு இணையத்தில் இது அரங்கேறுகின்றது. இந்தக் கேவலமும், அனைத்து வன்முறையையும் எதிர்ப்பதாக கூறுவதன் அர்த்தமும் வெட்கக்கேடானது.
கிழக்கு பிரதேசவாதத்தை வைப்பது என்பது அவரின் அரசியல். அதை அரசியல் ரீதியாக எதிர்கொன்ள முடியாமல் போவது ஏன். இதை மறுக்கும் நீங்கள் வைக்கும் மாற்று அரசியல் தான் என்ன? அதைவிட உயர்வாக என்னத்தை வைக்கின்றீர்கள். ஈ.என்.டி.எல்.எப் என்ற இந்தியக் கூலிக் குழுவின் இணையத்தில் படுத்துக்கிடப்பது, ஞானத்தின் மீதான குற்றச்சாட்டை விட எந்தவகையில் உயர்ந்தது. புலியெதிர்ப்பின் பின் நடத்துகின்ற அரசியல் வக்கிரம், ஞானத்தின் அரசியலை விட எந்தவிதத்திலும் உயர்ந்ததல்ல.
இயக்கங்களுடன் நடத்துகின்ற இரகசிய உறவுகள், தொலைபேசி உரையாடல்கள், கூட்டுச் சதிகள், இயக்கத் தலைவர்களுடன் கொண்டுள்ள உறவு, என்று மொத்தத்திலேயே கேவலமானது. யார் வன்முறை செய்கின்றனரோ, அவர்களுடன் அரசியல் விபச்சாரம். வன்முறை மறுப்பதாக கூறிக்கொண்டு, கேடுகெட்ட அரசியல் விபச்சாரமல்லவா இவை. புலிகள் மட்டுமே வன்முறை செய்வதாக கூறிக்கொண்டும், கருணாவும் அப்படி செய்வதாக காட்டிக் கொண்டும், ஈ.என்.டி.எல்.எப் வுடன் குலாவுவது எப்படிப்பட்ட பொறுக்கித்தனம். நீங்கள் டக்கிளஸ்சுடன் ஆனந்தசங்கரியுடனும் கூடி (அவர்கள் கோடிக்கணக்கில் துரோகத்துக்கு பணம் வாங்குகின்றனர்.) அரசியல் கோஸ்டி கானம் பாடும் போது, ஞானம் தனியாக பாடினால் தான் என்ன? நீங்கள் செய்வது புரட்சியோ?
இப்படி டக்கிளஸ்சுடன் ஆனந்தசங்கரியுடனும் ஆலவட்டம் பிடித்து திரிகின்றவர்கள், தங்களை மூடி மறைத்துக் கொண்டு, புனைபெயரில் பம்முகின்ற அரசியல் யோக்கியதை தான் என்ன? ஞானம் தனது அரசியல் நிலையை வைக்க மறுப்பது என்பது, எமக்கு முன்னுள்ள தெளிவான விமர்சனம். கருணா பற்றிய அவரின் நிலைப்பாட்டை கோருகின்றோம். ஆனால் அதை நீங்கள் வைப்பதற்கு, உங்களுக்கு எந்த அரசியல் அடிப்படையுமே கிடையாது. அதுவும் ஈ.என்.டி.எல்.எப் இணையத்தில்! சொந்த அரசியல் நிலையைக் கூட வைக்க முடியாதவர்கள், ஞானத்தைப் பற்றி பேசுவது மிகமிக மலிவானது. உங்கள் அரசியல் என்பது, இழிவான மலிவான பிரச்சாரங்கள் தான். அதே புளட்டின் சதித் தனங்கள் தவிர, வேறு எதுவும் அங்கு அரங்கேறுவதில்லை.
தேசம்நெற் இணைய நிர்வாகம் on October 31, 2007 10:51 pm
தீப்பொறி இணையமும், அதை மீள வெளியிட்ட நிதர்சனச் செய்தியின் உண்மைத் தன்மையும் பற்றி விமர்சிக்கும் றயாகரன் எதுவித பொறுப்பும் அற்று தான் பக்கத்தில் நின்று பாத்ததுபோல் சில விசயங்களை வர்னிக்கிறார். குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் வைக்கப்படாததால் அவை இங்கு நீக்கப்பட்டு உள்ளது.
தேசம்நெற் இணைய நிர்வாகம்.
rayakaran on November 1, 2007 7:07 am
தேசம் இணையத்துக்க
ஆதாரம் என்பது, அரசியல் நடைமுறைகளுடன் தொடர்புடையது. இவாகளுக்கு இடையில் தேன் நிலவு மறுக்க முடியாத ஒன்று. ரீ.பீ.சீ க்குள் நடத்த குத்த வெட்டில் இவை வெளிவந்தவை தான். பார்க்க எனது கட்டுரையை.
உளவு அமைப்புகள் தான் ரீ.பீ.சீயை இயக்குகின்றது
http://www.tamilcircle.net/unicode/general_unicode/203_general_unicode.html
அரசியல் ரீதியாக அதை செய்பவர்கள் தான். உதாரணமாக ராஜனி தினகரமமை புலிகள் கொன்றனர் என்று கூறினால் (இப்படி பல கொலைகள்), அதற்கு ஆதாரம் இல்லை என்று எப்படி தேசம் கூற முடியும்.
இப்படிக் கூறி குற்றங்களை பாதுகாக்கின்ற அரசியல் நடைமுiறாகிவிடுகின்றது. அரசியல் ரீதியாக மக்கள் விரோததைக்கொண்டவார்கள், இதை செய்யாமல் எதைத்தான் செய்வார்கள். அதையவாது யாரும் சொல்ல முடியமா?
பி.இரயாகரன
rayakaran on November 1, 2007 7:37 am
மேலதிகமாக
இன்ற இனம் தெரியாத கடத்தல்களை பெருமளவில் அரசுசெய்கின்றது. கடந்த 2 வருடத்துக்கு முன்பாக இனம் தெரியாத பெலமளவு கொலைகளை புலி செய்தது. இதை சொல்ல ஆதாரமில்லை என்று எப்பஉ நீங்க முடியும்.
நிதர்சனம் டொட் கொம், தீப்பொறி செய்திகள் பரஸ்;பர இணக்கத்துடன் பிரசுரிப்பதற்கு பின்னனி உண்டு. ஆய்வு என்பது அதைக் காரண காரியத்துடன் ஆராய்வது தான். புலி பற்றிய விமர்சனத்தை தீப்பொறி பேசமறுப்பது ஏன். ஞானம் கருணா பற்றி விமாசனத்தை செய்ய மறுப்பது போல். கருணா கடித்துக் குதறும் தீப்பொறி, புலியுடன் அதுவும் நிதர்சனத்துடன் கொண்டுள்ள அரசியல் நிலைபாடு அம்மானமானது.
ரீ.பீ.சீ புலியெதிர்ப்பை (இப்படி கூறுவதற்கு ஆதாரமில்லை என்று நீக்கிவிடாதீர்கள்) தொடங்க முன், வன்னியுடன் நெருங்கி தொடர்பு இருந்தது. முதல் மாவீரர் தின உரையை ரீ.பீ.சீ தான் வன்னியில் இருந்து ஒலிபரப்பியது. ஏன் புலிகளும் தமிழ்செல்வனும் இருந்த நேரடி சதி உறவுகள் கசந்த போது, அதை ரீ.பீ.சீ வனோலில், தமது பேரம் பற்றி உரையடலின் ஒரு பகுதியை, உண்ணவிரதம் பற்றிய கூத்துகளை நியாயப்படுத்த ரீ.பீ.சீ வெளியிட்டது. இது கூட பலருக்கு தெரியாத வரலாறாகிவிட்டது.
இப்படி ஈ.என்;.டி.எல்.எவ் புலியிடன் கொண்டிருந்த நெருக்கமான முன்னய உறவுகளைக் கூட, ரீ.பீ.சீ தன்னை நியாயப்படுத்த வெளியிட்டது.
அவர்களின் அரசியல், அவர்களின் நடைமுறை, அதைத் தாண்டி இன்றவரை எதுவும் நகரவில்லை. ஒரு கூலிக் குழுவின் அரசியல் நடத்தைகளை, அதன் இழிவுகளை சுமந்து செல்லும் நபர்களின் நடத்தைகளுக்கு, ஆதாரம் கேட்பது இன்னுமொரு அரசியலாகத்தான் மாறுகின்றது.
மருது on November 1, 2007 10:30 am
அடப்பாவி மக்கா. புலி ரி பி சி நடத்துதுன்னு சொல்லிற உன்ர நல்ல மனசுக்கு பூமாலை போட.
இந்த தேசம் உட்பட இன்னிக்கு எல்லா ஊடகத்துக்கு பின்னாலயும் ‘புலி’ தான். எவ்ளோ செலவு பன்னி இவங்க புதிசா இனையம் வைச்சு அதுக்குள்ள இது உலகம் பூரா பரவுதுன்னா புலியில்லாம சாத்தியமா? இது ஒரு ஆதாரபூர்வமான வாதம். ஏலுமின்னா கடிச்சுப்பாருங்க –பல்லுத்தான் பறக்கும்!
எம்ம சுத்தி ஆடுவதெல்லாம் புலிதானுங்கோ. அப்பப்ப சிங்கமும் சேந்து ஆடினாலும் அது முக்கியமில்லங்கோ. புலிமையவாதம் கனதூரம் போகும். வன்னி தாண்டி வயக்காடுதாண்டி பேரினவாதம் தாண்டி ஏகாதிபத்தியத்தின் குதிருக்குள்ளும் கும்மாளமிடும்.
புலிபத்தி கிலிகொண்டலையும் இந்த பேமானிகளை காப்பாத்த ஆரெண்டாலும் -அடச்சீ ஆண்டவா ஓடிவா. வந்தொரு பொட்டுவை.
த ஜெயபாலன் on November 1, 2007 11:06 am
நண்பர் ரயாகரனுக்கு,
ஆதரங்கள் பற்றிய உங்கள் குறிப்பில் நியாயமுண்டு. ஆனால் ஒரு குற்றச்சாட்டை ஒரு அமைப்பின் மீது வைப்பதற்கும் அதையே ஒரு தனிநபர் மீது வைப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒரு அமைப்பின் மீது குற்றச்சாட்டை வைக்கும் போது அதனை அரசியல் நடைமுறைகளுடன் தொடர்புபடுத்தி ஆராயலாம்.
அதன்படி ரஜனி திரணகமவை புலிகள் கொலை செய்தார்கள் என்று கூறும் போது அரசியல் நடைமுறைகளுடன் தொடர்புபடுத்தி அதனைப் பார்க்க முடியும். ஆனால் ரஜனிதிரணகமவை எக்ஸ் என்ற நபர் கொன்றார் என்று கூறுவதற்கு அரசியல் நடைமுறைகள் மட்டும் போதாது. அரசியல் நடைமுறைகள் என்ற போர்வையில் தனிநபர்கள் மீது இலகுவாக சேறடிக்கும் போக்கு தமிழ் அரசியல் சூழலில் பொதுவானதாகவே இருந்து வருகிறது.
பொம்பிளைக் கள்ளன், ரோவிடம் காசு வாங்கிறான் போன்ற குற்றச்சாட்டுகளை நீங்கள் யார் மீதும் வைக்கலாம் அதற்கு எந்த அரசியல் நடைமுறையையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள், ஜனநாயகம் என்றெல்லாம் பேசும் நாம், எமது கருத்துக்கள் மட்டுமே சுதந்திரமானவை என்றும் மனித உரிமைகளும் ஜனநாயகமும் எமக்கு மட்டுமே உரியது என்ற வகையிலுமே நடந்து கொள்கிறோம்.
குற்றச்சாட்டை வைப்பவர்களே அதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பையும் கொண்டு உள்ளனர். (விதிவிலக்கு பாலியல் வல்லுறவு.) ஆதாரங்கள் அற்ற குற்றச்சாட்டுகள் வெறும் சேறடிப்புகளே. அதனை தேசம்நெற் இணையத் தளம் தவிர்க்கவே விரும்புகிறது.
த ஜெயபாலன
rayakaran on November 1, 2007 4:20 pm
“அரசியல் நடைமுறைகள் என்ற போர்வையில் தனிநபர்கள் மீது இலகுவாக சேறடிக்கும் போக்கு” இது நடைமுறைக்கு வெளியில் தனிமனித புனிதனாக கட்டுகின்ற ஒன்று. அரசியல் நடைமுiயே குற்றமானதாக உள்ள போது, தனிமனிதன் அதற்கு உட்பட்டது தான்.
மறுபக்கத்தில் ‘அதன்படி ரஜனி திரணகமவை புலிகள் கொலை செய்தார்கள் என்று கூறும் போது அரசியல் நடைமுறைகளுடன் தொடர்புபடுத்தி அதனைப் பார்க்க முடியும்.” அரசியல் நடைமுறைகள் என்ற போர்வையில் இயக்கம் மீது இலகுவாக சேறடிக்கும் போக் உள்ளது நன்பரே.
குற்றச்சாட்டுகள் தனிநபர் சர்hந்தல்ல. அந்த இயக்கம் சார்ந்தது. அதாவது அந்த அரசியல் போக்கு மீது சார்ந்தது. தனிமனிதன அதன் மீது குற்றங்களை இளைக்கின்றான். இந்தியா கைக் கூலியாக ஒரு அமைப்பு, அது சாhந்த நபர் அரசியல் ரீதியாக இயங்கினால் இந்தியா கைக் கூலியாகத்தானே அடையளாம் கண வேண்டும்.
எப்படி கைக் கூலி என்று நிறுவவேண்டிய அவசியமில்லை. அந்த அரசியல் போதம். ஆதாரம் சாட்சியம் என்பது என்ன?. பாலியல் வல்லுறவு அல்லாதவை எல்லாம், அதாரம் வைத்து செய்வமாக கூறுவது அப்பத்தம்.
ஒரு அரசியல் இயக்கம், அதன் அரசியல் நடைமுறை, அதன் உறப்பினர்கள் என்று ஒரு வடட்டத்தைப் பற்றி பேசுகின்றொம் குற்றச்சாட்டின் நோக்கம், அது சார்ந்த அரசியல் நடைமுறைதான், உண்மைத் தன்மையை துல்லியமாக்கின்றது.
அரசியல் நெறி என்பது, மக்கள் பற்றிய அறநெறியுடன் தொடர்புடையது.
பொல்பொட் on November 1, 2007 7:17 pm
தேசம்நெற் சார்பாக ஜெயபாலன் முன்வைத்த கருத்துகள் பொதுவாக கருத்து எழுதும் சாதாரண இணையத்தள வாசிகளுக்கு பொருந்தலாம்.ஆனால், தனது உயிர், உடல், பொருள், ஆவி அனைத்தையும் புரட்சிக்காக தாரவார்த்து பாரிஸ் நகரில் தற்காலிகமாக வாழ்ந்து வரும் தோழர் இராயாகரனுக்கு கிஞ்சித்தும் பொருந்தாது என்பதை ஜெயபாலன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை புரட்சிகர தோழமையுடன் மிக கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர் இராயாகரன் ஒருவர் மீதோ அல்லது ஒரு அமைப்பின் மீதோ காட்டமான விமர்சிக்கிறார் என்றால் சோசலிச புரட்சி எம்மை நெருங்கி வருகின்றது என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
புரட்சியின் பெயரால் எவர்மீதும் எப்படி வேண்டுமானாலும் குற்றங்களை சுமத்த புரட்சிகர சக்திகளுக்கு தார்மீக தகுதி உண்டு.
rayakaran on November 2, 2007 7:22 am
‘தோழர் இராயாகரன் ஒருவர் மீதோ அல்லது ஒரு அமைப்பின் மீதோ காட்டமான விமர்சிக்கிறார் என்றால் சோசலிச புரட்சி எம்மை நெருங்கி வருகின்றது என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.” அண்ணை பொல்போட் அண்ணை என்ன சொல்லுகின்றார்.
எங்கள் எதிர்புரட்சி தான் களத்தில் உள்ளது, சோசலிசம் எல்லாம் சாத்தியமில்லை என்பதை நக்கலாக புனை பெயரில் சொல்லும், அந்த எதிர்புரட்சிதனம் வெளிப்டையானது. அவருக்கு சொந்த அரசியல் முதுகெழும்பே கிடையாது.
ஜெயபாலன் உடனான விவாதம், கோட்பாடு தொடர்பானது. தனிப்பட்ட அவருடானதல்ல. எப்படி இந்தியா இலங்கை கூலிக் குழுக்கள் எல்லாம் ஜனநாயகவாதிகளாக காட்டப்பட்டு, அதன் அடிப்படையில் பொது அறிவியல் தளத்தி அனுகப்படுகின்றதோ அப்படித்தான் இதுவும். இந்த கோட்பாட்டு வாதம் தனியான விமர்சனமாகவே ஆராய வேண்டி உள்ளது. விரைவில
த ஜெயபாலன் on November 2, 2007 8:38 am
நண்பர் ரயாகரனுக்கு,
நீங்கள் சொல்லும் சரியான அரசியல் நடைமுறை என்பது என்ன? நீங்கள் பின்பற்றுகின்ற அரசியல் நடைமுறையையே சொல்கிறீர்கள். தகுந்த ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம்சாட்ட முடியாது என்பது தான் எனது வாதம். அதன் அர்த்தம் யாரையும் புனிதராக்குவது அல்ல. ஆனால் நீங்கள் உங்களை ஒரு புனிதராகவும் புரட்சி தேவனாகவும் புரட்சியின் மகாத்மாவாகவும் காட்ட முயல்கிறீர்களோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டு உள்ளது. நீங்கள் புனிதமானவர் என்றும் உங்கள் குற்றச்சாட்டுக்கள் எப்போதுமே விசாரணைக்கு அப்பாற்பட்டதும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இது தான் உங்கள் அரசியல் நடைமுறையா?
ஒரு அரசியல் இயக்கத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும் ஒரு தனிநபர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும் வேறுபாடு இருக்கின்றது என நான் குறிப்பிடுவது குற்றச்சாட்டின் நிரூபனத்தன்மையை கருத்திற் கொண்டே. புலிகள் ரஜனி திரணகமவை படுகொலை செய்தார்கள் என்பதால் ஒவ்வொரு புலி உறுப்பினரையும் அப்படுகொலையுடன் குற்றம்சாட்ட முடியாது.
பாலியல் வல்லுறவு பற்றிய குற்றச்சாட்டுகளில் பெண்கள் தம்மீது மேற்கொள்ளப்படும் மிக மோசமான வன்முறைறைக்கு எதிராக குறற்றசாட்டை வைக்க முன்வருவதில்லை. சமூக அவமானம் இன்னோரன்ன காரணங்களால் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பை அளிக்கவே இந்த நடைமுறையுள்ளது. அதனால் குற்றம்சாட்டப்பட்டவர் தான் நிரபராதி என்பதை நீரூபிக்க வேண்டி உள்ளது. இது ஒரு விவாதத்திற்குரிய விடயமே.
ஆனால் மற்றைய எல்லாக் குற்றச்சாட்டுகளிலும் குற்றத்தைச் சுமத்துபவர் அக்குற்றத்தை நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகள் சேறடிப்புகளே. சரியான அரசியல் நடைமுறை என்துள் ஒழிந்துகொண்டு சேறடிப்புகளே செய்யப்படுகின்றன. இதில் வேதனையானது என்னவென்றால் சாஸ்திரிகளும் ரயாகரன்களும் ஒரே பதிலையே அளிக்கின்றனர்.
த ஜெயபாலன
Jeevan on November 2, 2007 12:36 pm
rayakarn annanar niraya puratche pesuvaar. aanaal hattan national bank pattik keddaal annar kadum tension aakiveduvaar. (ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு நீக்கப்பட்டு உள்ளது.) puratchi pnnuvaar. naam elitcha vayarkalla paarthukkonndu erukka. annarin purtche ponkaddm.
Jeevan
ரயாகரன் அண்ணர் நிறைய புரட்சியே பேசுவார். ஆனால் ஹற்றன் நசனல் பாங்க் பற்றிக் கேட்டால் அண்ணர் கடும் ரென்சன் ஆயிடுவார். (ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு நீக்கப்பட்டு உள்ளது.) புரட்சி பண்ணுவார். இழிச்ச வாயர்களா பார்த்துக்கொண்டு இருக்க. அண்ணரின் புரட்சியே பொங்கட்டும்.
Jeevan
rayakaran on November 2, 2007 2:15 pm
விவாதம் தனிநபர் தொடர்பதனதாக, குறுக்குவது அப்பத்தம். அரசிரலையே நாம் முன்வைக்கின்றோம்;, அதில் இருந்து கருத்துரைக்கின்றோம்;. மொத்த அரசியல் நடைமுறை மீதும், அதில் உள்ள நபர்களின் நடத்தை தொடர்பானது. மொத்த அரசியல் பற்றி நிலைபாடே இல்iiயென்றால், சாத்திரியுடன் ஒப்பிடுவது சாத்தியமானது.
எங்கள் அரசியல் தவறு என்றால் அதை முதலில் விவாதியுங்கள். அதற்கு பின்னால்லவா சரி பிழையை சொல்ல முடியும்.
சமூக இயக்கததில் குற்றத்தை தொழிலாக கொண்ட இயக்கத்தை, நாம் வைக்கும் அரசிலுடன் ஒரே தட்டில் போட்டு நிறுத்தும் அரசியல் அடிப்படை என்ன?
நீங்கள் நம்புடன் முதலளித்தவ சட்ட அமைப்பையே சாம் அரசியல் ரீதியாக எற்றக்கொள்வதில்லை. அதன் நீதிக் கோட்பாடு, அதன் ஜனசாயகம் என அதைத்தையும் தான்.
jeevan on November 2, 2007 4:32 pm
rayakan annar adkkadi naam naam naam einkinraar. onrum puriyavillai! naan arenthamaddel annaroodu annanai thyvera avaroodu oru manusanum eillai. annardam vellakkam keddu chellam.
jeevan
ரயாகரன் அண்ணர் அடிக்கடி நாம், நாம், நாம் என்கிறார். ஒன்றும் புரியவில்லை! நான் அறிந்தமட்டில் அண்ணரோடு அண்ணணைத் தவிர அவரோடு ஒரு மனுசனும் இல்லை.. அண்ணரிடம் விளக்கமா கேட்டு சொல்லும்.
jeevan
சுபேன் செல்லத்துரை on November 2, 2007 6:00 pm
ராசா! றயாகரா!
மில்லியன் கணக்கில் சாவடிச்ச ஸ்டாலினுக்கு சலாம் போடும் நீங்கள் -
வர்க்க அரசியலை வறட்டு வறட்டென்று வறட்டி கருக்கிச் சுருக்கி கமக்கட்டுக்குள் கொண்டுதிரியும் நீங்கள் -
முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சி, சமுதாயத்துக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பது பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல், இரவல் கனவுக்குள்ள போயிருந்துகொண்டு 1940களில் வாழும் நீங்கள் -
இண்றய சழூகத்திற்குள் இயங்கும் முரன்பாடுகளை
முக்கி முக்கி தீத்தினாலும் கையோட அவுக்கென்டு கக்கிப்போட்டு கா கா வென்று கரைந்ததையே கரையும் நீங்கள் -
பல்வேறு தனிநபர் தாக்குதல்களை முன்னின்று நடத்திய நீங்கள் -
- வெக்கம் மாணம் ரோசமில்லாமல் ஒரு மண்ணாங்கட்டி ‘அரசியல் நிலைப்பாடு;’ வைக்க எப்பிடி வருகுது துனிவு.
- நாங்கள் என்ன, விடிய எழும்பி கக்கூசு பொனா அதுக்கயே விழுந்து கிடக்கிறம் எண்ட நினைப்பா உங்களுக்கு?
அண்ணை இந்த வசனங்களையாவது கொஞ்சம் மனிசருக்கு விளங்கிற மாதிரி கொஞ்சம் பொறுமையா எழுதலாம்தானே.
உதாரனம் எடுத்தனென்டா இங்க இடம் கானாது!!
த ஜெயபாலன் on November 2, 2007 9:50 pm
நண்பர் ரயாகரனுக்க
உங்கள் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘அமெரிக்காவின் உருவாக்கம் தான் எய்ட்ஸ் கிருமி HIV’ என்ற கட்டுரை தேசம் சஞ்சிகைக்காக ச வேலு அவர்களால் தொகுக்கப்பட்டு இருந்தது. ”துப்பாக்கிகள் கற்கால மக்களுக்கு மட்டுமே!” என்ற வங்காரி மாத்தாய் (2004ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்) இன் வாசகத்துடன், ‘பேரழிவு ஆயுதம் - AIDS Made In America’ என்ற தலைப்பில் இதனை தேசம் சஞ்சிகையின் 25ம் இதழில் நவம்பர் - டிசம்பர் 2005ல் (பக்கம் 22 – 25) பிரசுரித்து இருந்தோம். அதனை மீள்பிரசுரம் செய்துள்ள நீங்கள் கட்டுரையின் தலைப்பை மாற்றி மூலத்தை தமிழர் இணையம் எனக் குறிப்பிட்டு உள்ளீர்கள். இதனை உங்கள் கவனத்திற்காகத் தெரியப்படுத்துகிறேன். நீங்கள் விரும்பினால் திருத்திக் கொள்ளவும்.
பரவலான வாசகர்களுக்குத் தகவல் சென்றடைவதையே நாம் விரும்புகிறோம். தேசம், இன்மை, லண்டன் குரல், லண்டன் உதயன், தேசம்நெற், ஆகியவற்றில் இருந்து ஆக்கங்களை எமது அனுமதி பெறாமல் ஆனால் அதில் எவ்வித மாற்றமும் செய்யாமல் யாரும் மீள்பிரசுரம் செய்யலாம். ஆனால் ஆக்கங்கள் தேசம், இன்மை சஞ்சிகைகளில் இருந்தோ, லண்டன் குரல், லண்டன் உதயன் பத்திரிகைகளில் இருந்தோ அல்லது தேசம்நெற் இணயத்தளத்தில் இருந்தோ பெறப்பட்டு இருந்தால், அதனை குறிப்பிடுவது மகிழ்ச்சிக்குரிய பண்பாக அமையும்.உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.
த ஜெயபாலன்.
rayakaran on November 2, 2007 10:33 pm
நாம் கட்டுரையை எடுத்த இடம் இது தான்.
http://thiagu1973.blogspot.com/2007/10/hiv.html
அவர் இட்ட மூலக் குறிப்பை சரியாகவே நாம் போட்டள்ளோம். நிங்கள் நிங்கள் உங்கள் உரிமைக்காக அந்த இணையத்துடன் தொடர் கொள்ளவும்.
Rayakaran on November 2, 2007 10:52 pm
கட்டுரை எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான இணைய முகவரியை இங்கு இணைத்துள்ளோம்.
http://thiagu1973.blogspot.com/2007/10/hiv.html
பெறப்பட்ட மூலத்தில் எவ்வாறிருந்ததோ அதனை அவ்வாறே திருத்தங்கள் எதுவுமின்றி மீள்பிரசுரமாக்கியிருந்தோம்.
இக்கட்டுரையை தனது இணையத்தில் பிரசுரித்த நண்பர் இது குறித்து தனது கருத்தை தங்களுக்கு தருவதே சரியானதாகும்.
மருது on November 2, 2007 11:14 pm
அட ஜெயபால! நீ நினைப்பதுபொல் மசியிற ஆலில்ல கானும் றயா! அவருக்கு தமிழ் மட்டுமே அறியும் கானும்- அதுவும் ஆரும் பிழையா எழுதிறத –அதையும் பிழையா விழங்கி – பொரும் தத்துவமாக்கும் பழக்கம் கனகாலமா கிடக்கப்பனே. நம்மிட பிரான்சுக் காரர் ஆராவது எழுதுங்கவன் அதப்பத்தி. அசோக் இந்த அடி வாங்கிப்போட்டும் பாத்துக்கின்னு இருக்கலாமோ? பழச கொஞ்சம் இழுத்தாத்தான் மீண’டும் அமைதி வரும் போல!
Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்


மார்க்ஸின் மனிதகுல வரலாறு:
முதன் முதலாக கார்ல் மார்க்ஸால் எழுதப்பட்ட மனிதகுல வரலாறு உலகத்திற்கு தெரிந்த போது, அறிவுலகம் ஆச்சரியத்தால் அதிர்ந்து போனது. எவ்வாறு மனிதகுலம் தனது வரலாற்றுக் கட்டங்களைக் கடந்து முதலாளித்துவம் வரை நகர்ந்திருக்கிறது என்று தர்க்கரீதியாக முன்வைக்கப்ப்ட்ட போது, உலகம் தொடர்பான புதிய தத்துவம் உருவானது. மனித குல வரலாறு என்பது ராகவன் கற்பனை செய்வது போல ஐரோப்பிய குல வரலாறல்ல. ஆசிய மனிதர்களது வரலாறல்ல. மொத்த மனித சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சிப்போக்காகும். ஏகாதிபத்தியங்கள் மூன்றாமுலக நாடுகளில் உள் நுழைந்து சமூகத்தின் சீரான வளர்ச்சிப் போக்கை, தமது நலனுக்காக திட்டமிட்டு சிதைக்கும் வரை ஐரோப்பிய நாடுகளைப் போலவே இந்த் வளர்ச்சிப் போக்கு அமைந்திருந்தது. இந்திய வரலாற்றை ஆராய்ந்த தொல்பொருலாளரும், தத்துவவியலாளரும், சமுக விஞ்ஞானியுமான ராகுல சங்கிருத்தியாயன் வொல்கா முதல் கங்கைவரை என்ற இலக்கியத்தை படைத்தபோது, இந்த வரலாற்றுப் பார்வை மேலும் வலுவடைந்தது. ஒருபுறத்தில் ராகவன் கூறுவது போல ஜுத-கிறிஸ்தவர்களின் ஐரோப்பியர்களின் தத்துவம் இது என நிராகரித்த மூன்றாமுலக நிலப்பிரபுத்துவ வாதிகளும், மனிதர்களின் சிந்தனைக் கற்பிதங்களை வரலாற்றைத் தீர்மானிக்கும் என வாதிட்ட மேற்கின் முதலாளித்துவ தத்துவ கர்த்தாக்களும் கைகோர்த்துக் கொண்டபோதுதான் இன்றைய சமூகத்தின் சீரழிவுகள் உருவாகின.
சமூகத்தின் இந்த வளர்ச்சிப் போக்கை ஆராய்வதற்கான முறை என்பதும் முன்னதாக இதே தத்துவாசிரியரால் முன்வைக்கப்பட்டிருந்த்தது. என்ற நூல் வரலாற்றை ஆராய்வதற்கான முறையை எமக்கு முன்னால் தெளிவாக விட்டுச்சென்றிருக்கிறது. ஆனால், வரலாற்றை ஒரு கருத்து என்பது தான் நிர்ணயிக்கும் என்று இந்த நூற்றாண்டில் வாதிடும் பலர் தம்மை மார்க்ஸிஸ்டுக்களாக அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். மத்தியதர வர்க்கத்திற்கே உரித்தான, பிரச்சனைகளை கருத்தின் அடிப்படையிலிருந்து ஆய்வு செய்யும் இந்த முறைமை மிகவும் அபாயகரமானதாகும்.
மனிதகுலத்தின் வரலாறு என்பது மூன்றாமுலக நாடுகள் ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக சீரழிக்கப்படும் வரை ஐரோப்பவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் பொதுவானதாகவே அமைந்திருந்த்தது. மனிதகுல வரலாற்றை யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ, ஏகாதிபத்திய நாடுகள் புரிந்துகொண்டதன் விளைவே மூன்றாமுலக நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட சமூகச் சிதைப்பாகும்.
இந்த அடிப்படையைப் புரிந்து கொள்வதனூடாகவே ஆசிய நாடுகளின் உற்பத்தி சக்திகளின் நிலை தொடர்பான முடிபுக்கு வரமுடியும் என்பதே எனது கருத்து.
முதலாளித்தவப் பொருளாதாரம்:
மனித குல வரலாற்றின் ஒரு குறித்த வளர்ச்சிக் கட்டத்தில் மனித உழைப்பு மற்றும் ஏனைய உழைப்புச் சாதனங்களைக் குறிப்பிடும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினுடாக முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு உருவானது. புறச்சூழ் நிலைகளின் தாக்கத்தால் ஐரோப்பாவில் முதலில் உருவான இந்த முதலாளித்துவப் பொருளாதார அமைப்பானது மூன்றாமுலக நாடுகளில் உருவாகாமல் தடுக்ககப்பட்டது என்பது பொதுவாக எல்லா சமூகவியலாளர்களும் ஒத்துக்கொள்ளும் உண்மையாகும்.
தேசிய இனங்களும் தேசியமும்:
ஐரோப்பாவில் உருவான முதலாளித்துவ பொருளாதாரம், மன்னன், சாம்ராஜ்யம், மதம் என்பவற்றால் இணைக்கப்பட்டிருந்த சமுதாயத்தை தேசியம் என்ற சங்கிலியால் இணைத்தது. மூலதனத்தோடு இணைந்தே தேசிய இனங்களும் உருவாகின. தேசங்கள் உருவாகின. பல மொழிகளைப் பேசியவர்கள் இணைந்து ஒரு மொழி உருவானது. 50 வீத மக்கள் மட்டுமே பேசிய கோலுவா மொழியானது பிரஞ்சு தேசத்தின் மொழியானது. 12 வீத மக்களே பேசிய இத்தாலிய மொழி இத்தாலிய தேசிய இனத்தின் மொழியானது.
மொழி மட்டுமல்ல அந்தந்த நாடுகளின் புறச்சூழ் நிலைகளிற்கேற்ப தனித்துவமான கலாச்சாரமும் உருவானது. பிரஞ்சுக் கலாச்சாரமானது ஜேர்மனியக் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டிருந்த்தது.
சமூகத்தின் உற்பத்தி சக்திகள் ஒன்றாக விருந்தாலும் அதன் மேற்கட்டுமானமான கலாச்சாரம் நாடுகளிற்கேற்ப மாறுபட்டிருந்தது.
இறுதியில் ஒரே கலாச்சாரத்தையும் மொழியையும் கொண்ட தேசங்கள் மற்றைய தேசங்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டினின்றன. இங்குதான் முதன் முதாலாக தேசியம் என்ற கருத்துக்கு வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிபடையில் நடைமுறை வடிவம் கொடுக்கப்பட்டது.
ஐரோப்பாவில் தேசியம் உருவான போது மக்கள் மத்தியிலிருந்த நிலப்பிரபுத்துவ வேலைப் பிரிவினை அடிப்படையிலுருந்த முரண்பாடுகள் அழிந்து படிப்படியாக ஒருதேசிய இனமாகப் பரிணமித்தனர்.
நிலப் பிரபுத்துவக் காலத்தில் எவ்வாறு வரலாற்றுக் கதைகளும் (Historical Myths) அரச பாரம்பரியமும் ஆரம்பத்திலிருந்தே உருவாக்கப்பட்டதோ, எவ்வாறு அதனைச் சமூகத்தின் ஆதிக்கத்திலிருந்த சக்திகள் உருவாக்கினவோ, தேசிய உணர்வும் சமூக வெளிப்பாடுகளும் நிலப்பிரபுத்துவத்திற்குப் பிற்பட்ட ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டன.
இந்தத் தேசிய அடையாளத்தின் உருவாக்கம் என்பது பழைய பாரம்பரியம், பண்பாட்டை பேணுவதிலிருந்தும் சில சமயம் அவற்றை அழிப்பதிலிருந்தும் உருவாகின்றது. ““qu’est ce qu’une nation” ” என்ற நூலில் Ernest Renan என்ற பிரஞ்சு எழுத்தாளன் தேசிய அடையாளம் என்பது பழைய பாரம்பரியங்களுடன் புதிய கருத்துக்கள் இணைவதிலிருந்து உருவாகுவதாகக் குறிப்பிடுகின்றார். தேசத்தின் உருவாக்கத்திற்கு பழைய வரலாறு திருத்தி எழுதப்படவேண்டும் என்கிறார்.
ஒரு புறத்தில் பாரம்பரியம் பின்பற்றப்பட வேண்டும் என்ற கோஷமும் மறுபுறத்தில் அதன் பிழையான பகுதிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோஷமும் புதிய தேசிய கலாச்சாரத்தை உருவாக்கிற்று. விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷம் உருவாகுவதற்கு இதுவே அடிப்படைக் காரணியாக அமைந்தது. வேறுபட்ட இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை முன்வைத்து ஒரு அரசுக்கு உட்பட்ட பொதுவான பிரதேசத்திற்குள் இருந்த மக்கள் கூட்டத்தை தேசிய இனமாக ஒன்றிணைத்தது.
சமூகத்தின் அடிக்கட்டுமானம் உருவாக்கிய இந்த வகையான மேற்கோப்பு ஐரோப்பா முழுவதும் தேசங்களையும் தேசிய இனங்களையும் உருவாக்கிற்று.
தேசிய இனங்கள் - இந்தியா, இலங்கை:
ஐரோப்பாவில் தேசிய இனங்கள் உருவாகிய அதேவேளை இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு முறை நிலவியது. விவசாய வளங்களையும், இயற்கையான மனித வாழ்விற்கான பௌதீகச் சூழலையும் கொண்டிருந்த இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தி சக்திகளின் புதிய நிலைக்கான வளர்ச்சியின் உடனடித் தேவை குறைவாகவே காணப்பட்டது. தவிர இந்து தத்துவத்தின் அமைப்பு மயப்படுத்தப்பட்ட சாதீயமானது முதலாளித்துவ வளர்ச்சிவேகத்தை மட்டுப்படுத்தியது.
இந்த நிலையில் தான் அன்னிய ஆதிக்கம் இந்தியாவிலும் இலங்கையிலும் நிறுவப்பட்டது.
காலனி ஆதிக்கத்தால் சின்னா பின்னமாக்கப்பட்ட இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது உலகத்தின் பெரும்பகுதியான மக்களின் தலைவிதியை மாற்றி எழுதியது.
நிலப் பிரபுத்துவக் காலகட்டம் வரை இயல்பாக பரிணாம வளர்ச்சியடைந்து வந்த மூன்றாம் உலக நாடுகள் வரலாற்றின் வளர்ச்சிப் போக்கிற்கு எதிராகத் திணிக்கப்பட்ட அந்நிய மூலதனம் என்பது இந்நாடுகளின் தேசிய முதலாளித்துவத்தின் வளர்ச்சியைத் தடுத்தது. தேசிய மூலதனத்தை அந்நிய மூலதனத்தால் பிரதியீடு செய்தது.
மத்தியதர வர்க்கத்தின் தோற்றம்:
அன்னிய மூலதனத்தின் சந்தைக்காகவும் அது சார்ந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்காகவும் திறந்து விடப்பட்ட உள்ளூர் சந்தை மூன்றாம் உலகத்திலும் மூலதனத்தை முதல் தடவையாக வளர்த்தது. வர்த்தகப் பொருளாதார வளர்ச்சிக்கான சூழல் உருவாகியதுடன் புதிய மூலதனத்தைக் கையாளும் வலிமையுள்ள மத்தியதர வர்க்கம் ஒன்றும் உருவாக ஆரம்பித்தது.
வர்த்தகப் பயிர்ச்செய்கை, நாடு முழுவதும் பரவி வளர ஆரம்பித்தது. புகையிலை, வெங்காயம், மிளகாய், ஆமணக்கு, நிலக்கடலை போன்ற பணப் பயிர்ச்செய்கை வகைகள் அதிகரித்தன.
1851ம் ஆண்டில் 10,000 ஏக்கர் நிலம் புகையிலைச் செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டது. மர வியாபாரம் அதிகரித்தது. ஏற்றுமதிப் பொருளாதாரம் வளர ஆரம்பித்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 1844இல் இருந்து 1873ஆம் ஆண்டுவரை விற்கப்பட்ட மரங்களின் மதிப்பு 19,54,537.00 ரூபாய்களாகும்.
இதே காலப்பகுதியில் தங்க வேலை, கொல்ல வேலை, தச்சு வேலை போன்ற பாரம்பரிய வினைத்திறன் கொண்ட வேலைகள் அமைப்பு மயப்படுத்தப்பட்டு நவீனமடையத் தொடங்கின. தையல், நெசவு, சாயமிடுதல் போன்ற ஏனைய தொழிற்துறைகளும் வளர்ச்சியடையத் தொடங்கின. இந்தியாவிலிருந்து துணி இறக்குமதி செய்யப்பட்டு சாயமிடப்பட்ட பின்னர் வேறு நாடுகளுக்கு அவை ஏற்றுமதி செய்யப்பட்டன. கோப்பி, தேயிலை போன்ற பணப் பயிர்ச்செய்கையுடன் கூடவே சிங்களப் பகுதிகளிலும் சந்தைப் பொளாதார அமைப்பு முறை வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
அதனால் புதிய உற்பத்தி உறவுகள் உருவாகின. போக்குவரத்து முகவர்களை உருவாக்கியது. மேலும் தரகர்கள், ஒப்பந்தக்காரர்கள், வியாபாரிகள், தொழிற்சாலை உரிமையாளர்கள் என்று தேசிய சந்தையின் பங்காளர்களையும் அது உருவாக்கியது. சமூகத்தின் மேற் கட்டுமானத்தின் பல கூறுகள் மாறத் தொடங்கின. குறிப்பாகப் புதிய பொருளாதாரத்தின் கீழ்நிலையில் இருந்த மீன்பிடிக்கும் இனத்தைச் சேர்ந்த கராவ சாதியினரும், கறுவாத் தொழிலாளர்களான சலகம சாதியினரும் மேல்நிலைக்கு வர ஆரம்பித்தனர்.
ஆங்கிலேயர்கள் மட்டுமே நாட்டின் நிர்வாகத் துறையில் இருந்த நிலைமையும் படிப்படியாக மாற்றமடையத் தொடங்கியது. புதிய படித்த மத்தியதர வர்க்கமொன்று அரச நிர்வாகத் துறைக்குள் புகுந்துகொள்ள ஆரம்பித்தது. இதில் பெரும்பாலானவர்கள் சிங்கள கராவ இனத்தைச் சார்ந்தவர்களும், தமிழர்களுமாவர். குறிப்பாக, வட- கிழக்கு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கல்வி என்பது பிரதான முதலீடாக எண்பதுகளின் பிற்பகுதிவரை காணப்பட்டது.
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கு, வடக்கு - கிழக்கு இலங்கை உகந்த இடமாகக் கருதப்பட்டமையாலும் புவியியல் சீதோஷ்ண நிலைமைகளாலும் இந்த ஆரம்பகால மாற்றங்களால் இப்பகுதிகள் பெரிதும் பாதிப்படையவில்லை. இதன் விளைவாகத் தென் பகுதியில் ஏற்பட்ட வேகமான சமூக மாற்றம் வடகிழக்கில் ஏற்படவில்லையானாலும் வியாபாரப் பயிர்ச் செய்கையையும் கல்வி கற்ற நிர்வாகிகளின் வரவும் சமூகத்தின் அமைப்பு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த ஆரம்பித்தன.
இந்தப் படித்த தமிழ் சிங்கள நிர்வாகத்துறையைச் சுற்றி புதிய மத்தியதர வர்க்கம் உருவாக ஆரம்பித்தது. வைத்தியத்துறை நவீனமயப்படுத்தப்பட்டதனூடாக புதிய வைத்தியர்களும் அதைச் சுற்றிய வியாபாரமும் உருவானது. இந்த வைத்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே. கல்லூரிகள், கல்வித்துறை ஆசிரியர்கள் விரிவுரையாளர்கள் என மொத்த நாட்டின் பொருளாதாரமுமே இன்னொரு புதிய மாற்றத்திற்கு உள்ளாகிக்கொண்டிருந்தது.
இந்த ஆரம்ப மாற்றங்கள் தேசியப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அத்திவாரமாக அமையக்கூடிய மாற்றங்களே. இவ்வாறான சமூக இயக்கமே மேற்கு நாடுகளின் முதலாளித்துவ உருவாக்கத்தின் ஆரம்பமாக அமைந்திருந்தது.
தேசிய மூலதனம்:
இவ்வாறான சமூக மாற்றங்களையும் சுய பொருளாதார உருவாக்கத்தையும் கண்டு பிரித்தானிய காலனி ஆதிக்க அரசு அச்சமடைய ஆரம்பித்தது. தேசியப் பொருளாதார உருவாக்கத்திற்கெதிரான எல்லா சக்திகளையும் ஒன்று திரட்டிக்கொண்ட பிரித்தானிய அரசு, தேசிய மூலதன வளர்ச்சியினால் அச்சமடைந்திருந்த நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்துகொண்டது.
ஒரு நாட்டில் தேசிய மூலதனம் உருவெடுக்கும் போது ஐரோப்பிய நாடுகளில் நடந்ததுபோல நிலப்பிரபுகளுக்கும் அவை சார்ந்த அமைப்பு முறைக்கும் எதிரான போராட்டங்கள் தோன்றுவதும், தேசிய உணர்வு என்பது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான உணர்வாக உருவெடுப்பதும் இயல்பு.
மூன்றாம் உலக நாடுகளிலும் இந்த நிலப்பிரபுக்களுக்கு எதிரான போராட்டங்களும் அதற்கு எதிரான உணர்வும் உருவான அதே நேரத்தில் தேசிய மூலதனத்திற்கு எதிரான அந்நிய மூலதனத்தின் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் எழுந்தன.
இந்த நிலையில் தேசிய மூலதன உருவாக்கத்திற்கும் தேசிய முதலாளித்துவத்திற்கும் எதிரான சக்திகள் ஒன்றிணைந்தன. அதாவது நிலப்பிரபுக்களும் அந்நிய ஆதிக்க சக்திகளும் ஒன்றிணைந்தன. இதனூடாக மூன்றாம் உலக நாடுகளில் நிலப்பிரபுக்கள் அந்நிய ஏகாதிபத்தியத்தின் நண்பர்களாயினர். இவர்களுக்கிடையில் அதிகாரப் போட்டிக்கான உள்முரண்பாடுகள் எழுந்தபோதிலும் தேசிய மூலதனம் தேசிய முதலாளித்துவம் என்ற பொது எதிரிக்கு எதிராக நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் என்ற இரு பகுதிகளும் ஒன்றிணைந்தன.
பிரித்தானியர்கள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை விட்டு வெளியேறிய பின்னர் இந்த நிலப் பிரபுக்களினதும் அவர்களின் ஆதரவு சக்திகளினதும் கைகளிலேயே ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது.
இது முன்னைய சமூக அமைப்பின் ஆதிக்க சக்திகளைப் பாதுகாப்பதாகவும் சமூகத்தினால் தூக்கியெறியப்படும் நிலையில் இருந்தவர்களை தரகுகள் ஆக்குவதனூடாக அவர்களை எகாதிபத்திய நாடுகள் பயன்படுத்திக்கொள்வதாகவும் அமைந்தது.
இங்குதான் மூன்றாமுலக நாடுகளில் புதிய சமூக அமைப்பு முறைககான அமைப்புமுறை உருவாக ஆரம்பித்தது.
காலனியாதிக்கத்திற்குப் பின்னைய சமூக மாற்றம்:
காலனிக்குப்பின் சமூகத்தின் அடிக்கோப்பை ஆராய்ந்து பார்த்தால், சமூகத்தால் தூக்கியெறியப்படும் நிலையிலிருந்த நிலப்பிரபுக்கள் அன்னிய மூலதனத்தின் தரகர்களாக மாறி சமூகத்தின் ஆதிக்க நிலையைக் கைப்பற்றிக் கொண்டனர்.
இதனால் நிலப்பிரபுத்துவ மேலணிகள் அழிக்கப்படுவதற்குப் பதிலாக மேலும் வலுவடைந்தன. மறுபுறத்தில் பண்ணை அடிமைகளாக இருந்த நிலப்பிரபுத்துவ விவசாயிகள் கூலி வறிய விவசாயிகளாக புதிய பண்ணை அடிமைத்தனத்துக்குள் தள்ளப்பட்டனர். சிறு நில உடமையாளர்கள் தமது நிலையைப் பேணிக்கொண்டனர்.
அதிகாரத்திலிருந்த நிலப்பிரபுத்துவ தரகுகளுக்கு இந்த சிறு நில உடமையாளர்கள் எந்தப் பாதிபையும் ஏற்படுத்தாத அதேவேளை தேசிய நலனில் அக்கறை இல்லாதவர்களாகவும் தேசிய உருவாக்கத்திற்கு எதிரானவர்களான பழமைவாதிகளாகவும் காணப்பட்டனர்.
இதனால் புதிய தரகுமுதலாளித்துவ அதிகார வர்க்கம் தேசிய மூலதன உருவாக்கத்திற்கெதிராக சிறு நில உடமையாளர்களூடாக நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பைப் பேணிக்கொண்டது.
இங்கே உருவான மேற்சொன்ன மத்தியத்ர வர்க்கம் நகரங்களையும் உப நரங்களையும் நேக்கி இடம்பெயர்ந்த படித்த சமூகக் குழுவால் உருவானது. இந்த வ்ர்க்கமானது ஒருபுறத்தில் கல்வியையும் மறுபுறத்தில் வியாபாரத்தையும் மூலதனமாகக்கொண்ட பழமைவாதத்திற்கெதிரானதாகக் காணப்பட்டது. தவிர்க்கமுடியாமல் தேசிய மூலதனத்தின் வளர்ச்சியில் தங்கியிருந்த இந்த மத்தியதர வர்க்கமே தேசிய உணர்வைப் பிரதினிதித்துவப் படுத்திய அன்னிய மூலதனத்திற்கெதிரான வர்க்கமாகக் காணப்பட்டது. இலங்கையின் குறிப்பான புறச்சூழலை கருத்தில் கொண்டால், தேசிய உணர்வை வளர்ப்பதில் மத்தியதர வர்க்கத்தின் பங்கு வலுவானதாகக் காணப்பட்டது.
ஆனால் இங்கு விசித்திரமானதும் ராகவனின் வாதத்திற்கு வலுச்சேர்க்க வல்லதுமான ஒரு சூழல் காணப்பட்டது. அதாவது மத்தியதர வர்க்கம் ஒரு குறித்த நிலைக்கப்பால் முன்னேறியதும் அன்னிய மூலதனத்துடன் போட்ட்டி போடமுடியாத நிலையில் தவிர்க்க முடியாமல் தரகு முதலாளிகளுடன் சமரசத்திற்கு வரவேண்டிய நிலையில் இருந்தது.
உதாரணாமாக, உள்ளூரில் கார் உற்பத்தி செய்யும் நிலைக்கு வளரும் மேல் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர், இதே காரை இறக்குமதி செய்யும் தரகு முதலாளியாக மாறும் போது பெரும் லாபமீட்டும் நிலைக்குத்தள்ளப்படுகிறார். உள்ளூர் அரசு இயந்திரமும் ஏகதிபத்திய சர்வதேச நிதிச் சங்கிலியும் இந்தச் சூழ்னிலையை மேலும் வலுப் படுத்துகின்றன.
ஆக, தேசிய முதலாளித்துவத்தின் இருப்பு மூன்றாமுலக நாடுகளில் சாத்தியமற்றதாக்கப்படுகிறது.
இறுதியாக நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்சங்கள் பேணப்பட, அன்னிய மூலதனத்தால் பிரதியிடப்பட்ட முதலாளித்துவ அமைப்பு முறையான தரகு முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்த தேசிய உணர்வுகொண்ட மத்தியதர வர்க்கமும் கூலி வறிய விவசாயிகளும் ஆதிக்கத்திற்கேதிரானவர்களான வினோதமான உற்பத்தி உறவுமுறை உருவானது.
சுதந்திரத்தையொட்டிய அதற்குப் பின்னான சமூக மாற்றம்:
இந்திய சுதந்திர போராட்டத்தாலும், மத்திய தரவர்க்கத்தின் தேசிய எழுற்சியாலும் மிரண்டுபோன ஏகதிபத்தியம், தமது தொடர்ச்சியான நலன்களுக்காக மொழி, மத, பிரதேச உணர்வுகளைத் தூண்டிவிட ஆரம்பித்தது. இது இரண்டு பிரதான கட்டடங்களைக் கோண்டது. முதல் கட்டடம் என்பது அனகாரிக தர்மபால எனப்படும் சிங்களவராலும், ஆறுமுக நாவலர் எனப்பட்ட பைபிளை தமிழில் மொழிபெயர்த்த தமிழராலும் தலைமைதாங்கப்பட்டது. இந்த இருவருமே கிறிஸ்தவ மதத்திற்கெதிரான கோஷங்களை முன்வைத்த போதிலும் நாடுதழுவிய தேசியவாதத்தைக் கூறு போடுவதில் முக்கிய பங்குவகித்தனர். அடிப்படையில் இவர்களை உருவாக்குவதில் ஏகாதிபத்தியங்கள் மிகப்பெரிய பங்குவகித்திருக்கின்றன.
இவர்களால் கூறுபோடப்பட்ட நாடு தழுவிய தேசியவாதப் போக்கானது, ஒருங்கிணைந்த தேசியச் சந்தையைக் கூறுபோட்டது.
மொழியைச் சுற்றி உருவான சந்தை, மொழி சார்ந்தும் மக்களை முற்றாக இணைக்கவில்லை.
ஏற்கனவே இருந்த கலாச்சார பிரதேசத் தொடர்புகளூடாக தேசியமூலதனம் மறுபடி வளர ஆரம்பித்த போது தேசிய மூலதன வளர்ச்சிக்கெதிரான ஏகதிபத்தியத்தின் இரண்டாவது கட்ட நடவடிகை ஆரம்பமானது.
பிரதேச,மொழி, கலாச்சாரத் தொடர்புகளூடாக ஆரம்பமான மூலதன வளர்ச்சியைக் கண்டு பயந்துபோன ஏகாதிபத்தியங்களும் அதன் தரகுகளும், இந்த மூலதன வளர்ச்சியுhடான தேசிய வாதத்தை தமக்குக் கிழ் அணி திரட்ட ஆரம்பித்தனர்.
மேல் மத்தியதர, மத்தியதர வர்க்கங்கள் தேசிய உணர்வுகொண்டு நாட்டையும் தேசியத்தையும் கட்டியமைக்க முற்பட்ட போதெல்லாம் இனவாதத்தை முன்னிறுத்தி அவர்களது குரல்கள் மழுங்கடிக்கப்பட்டன. இந்த இனவாத அரசியல் மறுபுறத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியில் விரக்தியையும் வெறுப்பையும் உருவாக்க, தேசிய விடுதலை இயக்கங்களும் தேசியக் கோரிக்கைக்காகவும் சிறுபான்மை இன மக்கள் மத்தியிலிருந்து உருவாகத் தொடங்கின.
சுதந்திரத்துக்குப் பின்னர் நிறுவப்பட்ட முதலாவது அரசாங்கம் டீ.எஸ்.சேனாநாயக்க தலைமையிலானதாகும். இவர்தான் இலங்கையின் முதலாவது பிரதம மந்திரியாவார். இவர் பதவிக்கு வந்த காலத்தில், மறுபடியும் தேசிய இயக்கங்களுக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் எதிராகவும், தமிழ் சிங்கள இணைவுபெற்ற நாடு தழுவிய தேசியவாதத்திற்கு எதிராகவும் தமது பலத்தை நிலைநாட்டவேண்டிய தேவை ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து குடியேறிய, தென்னிந்தியத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆங்கிலேயர்களால் காலத்திற்குக் காலம் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களாவர். சுதந்திரத்துக்கு முன்னர், இவர்களால் தெரிவுசெய்யப்பட்ட எட்டு அங்கத்தவர்கள் அரசவையில் இருந்தனர். 1947இல் பதவிக்கு வந்த டீ.எஸ்.சேனநாயக்கா அரசு இவர்களின் குடியுரிமையை, தனது குடியுரிமைச் சட்டத்தின்மூலம் ஒரே இரவுக்கள் பறித்து இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கிற்று.
இன ரீதியிலான அரசியலும், பௌத்த சிங்கள மேலாதிக்கமும் மேலும் வலுப்பெற ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பின் ஆதிக்க சக்திகளாக இருந்துவந்த தமிழ் நிலப்பிரபுக்கள் தமது சொந்த அரசியல் நோக்கங்களோடு பல கட்சிகளை ஆரம்பித்தனர்.
வடக்கு-கிழக்கின் சமூக மாற்றம்:
தெற்கைப் போலவே வடக்கு-கிழக்கிலும் உருவாகி வளர்ந்த தேசியவாதம் அடிப்படையில் தேசிய மூலதனத்தையும் தேசிய சந்தையையும் ஆதாரமாகக் கொண்டிருந்தது. இந்தத் தேசிய மூலதனம் என்பது நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பிற்கும் அந்நிய மூலதனத்திற்கும் எதிரானதாக அமைந்திருந்தது. நிலப்பிரபுக்கள் அந்நிய மூலதனத்தோடு சமரசம் செய்துகொள்ள, மத்தியதர வர்க்கத்தின் மேலணிகள் தேசிய முதலாளிகளாக உருவாக முடியாத நிலையில் அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்தியது.
இதனால் இயல்பாகவே தேசிய உணர்வுகொண்ட அந்நிய மூலதனத்திற்கும், நிலப்பிரபுத்துவத்திற்கும் எதிரான வர்க்கமாகத் திகழ்ந்த தேசிய உணர்வுகொண்ட இந்த மத்தியதர வர்க்கம் தமது தேசிய நலனுக்காக சிங்கள பெருந்தேசியவாதத்துடன் போராட வேண்டியநிலை ஏற்பட, அடிப்படை முரண்பாடாக அமைந்த நிலப்பிரபுக்களுக்கு எதிரான முரண்பாடானது இரண்டாம் பட்சமாகத் தள்ளப்பட்டது.
பிரதான முரண்பாடான பெருந்தேசியவாதம் மேல் நிலைக்கு வந்தது. இதனால் உற்பத்தி உறவுகளின் எதிர் எதிர் சக்திகள் சமரசம் செய்துகொள்ள, அடிப்படை முரண்பாட்டின் பிரதான எதிரிகளான நிலப்பிரபுக்கள் தமிழ் தேசியவாத்ததைக் கையிலெடுத்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மாறினர்.
இந்த சமூகப் பகைப் புலத்தின் அடிப்படையில் இந்திய சீர்திருத்த வாதிகளான அம்பேத்கார், பெரியார் போன்றவர்கள் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர். உண்மையில் நிலப்பிரபுக்களின் நலனுகாகப் பாவிக்கப்பட்ட தேசியக் வாதத்தின் விளைவே இந்தக்கருத்துக்கள். சமூகத்தின் புறச்சூழ்னிலை தொடர்பான சரியான ஆய்வின்றி இவ்வாறான கருத்துககளை முடிந்த முடிபாக ஏற்றுக்கொள்வது ஆபத்தானது. மறுபுறத்தில் இவற்றின் நியாயத் தன்மையை நிராகரிப்பதும் தவறானது.
ஐரோப்பவில் தேசிய இனங்களின் உருவாக்கத்திற்கு சற்று முன்னரும் நிலப்பிரபுத்துவ வீழ்ச்சிக் காலகட்டத்திலும் காணப்பட்ட தேசிய இனங்களுடன் ஒப்பிட்ட்டு நோக்கவல்ல வளரும் நிலையிலுள்ள மக்கட் பகுதிகளாக பூர்வீகத் தமிழர்களும், முஸ்லீம் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், சிங்களவர்களும் காணப்பட்டனர்.
பெரும் திரளான மத்தியதர வர்க்கத்தையும், நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்சங்களான சாதி அமைப்பு முறை போன்றவற்றையும், பிரதேச மற்றும் மத வாதத்தையும் கொண்ட தேசிய இனங்களாக வளரும் நிலையிலுள்ள இந்த மக்கள் கூட்டங்களின் தேசிய உணர்வுள பகுதியை நிரப்பிக்கொண்டிருப்பவர்கள் மத்தியதர வர்க்கத்தினரே.
தமிழர்கள் - தேசிய இனம்:
தேசிய இனமாக வளரும் நிலையிலுள்ள பூர்வீகத் தமிழர்களின் தேசிய இனத்தை நோக்கிய வளர்ச்சியானது, வரலாற்றின் தவிர்க்க முடியாத கட்டடம் என்ற கருத்து ஒருபுறம் இருக்க, இந்த வளர்ச்சியானது தமிழ் தேசிய இனத்தை எதிர்காலத்தில் உருவாக்குவாக்குவதுடன் அவர்கள் மத்தியிலான வேறுபாடுகளையும் களையும் என்பது வரலாற்றுண்மை. ஆனால் இது சாத்தியமானதா என்பதே எம்முன்னாலுள்ள பிரதான கேள்வி.
மறுபடி இலங்கையில் இருக்கும் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் பிரதான முரண்பாடானது, தரகு முதலாளித்துவ நிலப்பிரத்துவ மேலணிகளுக்கும் கூலி வறிய விவசாயிகளுக்கும் இடையேயான முரண்பாடாகும். இந்த முரண்பாட்டின் இடையில் தேசிய உணர்வுடைய மத்தியதர வர்க்கம். இந்த வர்க்கத்தின் மேலணிகள் தரகு முதலாளித்துவத்தை நோக்கி வளரும் நிலையிலும் மறுபகுதி மேலும் வறுமையை நேக்கி நகரும் நிலையிலும் இது நிலையற்ற வர்க்கமாகவே காணப்படும். இந்த நிலையில் தேசியவாதமானது ஒன்றில் கூலி வறிய விவசாயிகளாலோ அல்லது தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆதிக்க சக்திகளாலோ தலைமை தாங்கப்பட வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களான கூலி வறிய விவசாயிகளைப் பிரதினிதித்துவப்படுத்தும் இடதுசாரிகள் தேசிய வாதத்தைப் புறக்கணிக்கும் போது அது அதற்கெதிரான வர்க்கத்தால் அதாவது தரகு முதலாளித்துவத்தால் அதன் நலனுக்காகப் பாவிக்கப்படும். தேசியம் வியாபாரமாக்கப்படும். மக்களின் ஆதரவுடன் மக்கள் விரோத சக்திகள் போராட்டத்தைக் கையில் எடுக்க பாசிசம் உருவாகும்.
இவ்வாறு உருவான பாசிசம் தான் ராகவனின் தேசிய குழம்பலுக்குக் காரணம்.
எனவே அமைப்பு மயப்படுத்தப்பட்ட கூலி வறிய விவசாயிகளான தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமையில் வரலாற்றின் தவிர்க்க முடியாத மூலதன உருவாக்கம் அன்னிய முதலாளிகளுக்கெதிராகப் பிரதினிதித்துவப் படுத்தப்படும் போது மட்டும் தான் தேசம் விடுதலைபெறும் !
EPRLF இன் இறப்பு
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்பான இந்த சிறு நோக்கு தலித்தியமும் தேசியமும் தொடர்பான விவாதங்களுக்கு ஒரு நடைமுறை விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். EPRLF தொடர்பான ஆவணக் குறிப்புகள் ஏதும் இல்லாத நிலையில் இந்தக் குறிப்பினை இந்த இயக்கத்தின் முன்னை நாள் உறுப்பினர்கள் வளர்த்தெடுப்பார்கள் என நம்புகிறேன்.
முதன் முதலில் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பான சரியான அமைப்பு முறை ஒன்றை கொண்டிருந்த இந்த இயக்கமானது, கிராமங்களில் இருந்தே தனது ஆரம்ப வளர்ச்சிக் கருவினைக் கொண்டிருந்தது. ஏகாதிபத்தியம் தொடர்பான தனது குறை மதிப்பீட்டினால் அழிந்து போன இந்த அமைப்பானது, 80 களின் ஆரம்பத்தில் நம்பிக்கை தரும் சமூக சக்தியாகத் திகழ்ந்தது.
கிராமியத் தொழிலாளர் சங்கம், ஈழ மாணவர் பொது மன்றம், ஈழப் பெண்கள் அமைப்பு போன்ற மக்கட் பிரிவுகளை அமைப்பு மயப்படுத்தும் வெகுஜன அமைப்புக்களையும், ஈழ மக்கள் விடுதலை முன்னணி என்ற தேச விடுதலை இயக்கத்தையும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற புரட்சிக் கட்சியையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்த அமைப்பானது, ஆரம்பத்தில் இவ்வுள்ளக அமைப்புக்களிடையேயான உறவுகள் தொடர்பான தெளிவான பார்வையையும் கொண்டிருந்தது.
பத்மநாபா உள்பட இவ்வமைப்பின் பல தலைவர்கள், கிராமியத் தொழிலாளர் சங்கதினூடாக கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை அமைப்பு மயப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
மத்தாளோடை, உரெழு, மாதகல், போன்ற வறிய கூலிவிவசாயிகளின் கிராமங்கள் பலவற்றில் பத்ம நாபா 83 இற்குப் பின்னர் கூட இயக்கத்தின் தலைவராக அறியப்படவில்லை. கிராமியத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பளராகவே தாழ்த்தப்பட்ட மக்களால் அறியப்பட்டிருந்தார்.
பல தாழ்த்தப் பட்ட மக்களின் போராட்டங்களில் முன்னின்று பங்காற்றிய கிராமிய உழைப்பாள்ர் சங்கம், இந்த மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்றிருந்தது. ஈழ மக்கள் புரட்ட்சிகர விடுதலை முன்னணி கிராமியத் தொழிலாளர் முன்னணியில் தங்கியிருந்தது. சங்கம் சுயாதீனமாக இயங்கியதுடன் கட்சியினதும் இயக்கதினதும் சொந்த நலனுக்கு அப்பாற்பட்டதாகவும், வறிய கூலி விவசாயிகளின் நலன்களைப் பிரதினிதித்துவப் படுத்துவதாகவும் அமைந்தது.
ஈழப் பெண்கள் முன்னணியும், ஈழ மாணவர் பொது மன்றமும் இவ்வாறே அமைந்திருந்தன. எந்த ஒரு மககட் பிரிவினதும் மிகப் பலமான ஆயுதம், அந்த மக்களின் வர்க்க அடிப்படையில் ஒருங்கிணைந்த அமைப்பேயாகும். இந்த வகையில் மிகவும் பலம் பெற்று வந்த கிராமியத் தொழிலாளர் சங்கம் முற்போக்காளர்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்த்ரமாகத் திகழ்ந்தது.
1983 இல் ஏற்பட்ட இயக்கங்களின் பாய்ச்சல் நிலை வீக்கம் காரணமாக, இந்த இயக்கத்திலும் கோஷ்டி வாதப் போக்கு மேல்னிலைக்கு வந்தது. இந்திய அரசால் வழங்கப்பட்ட இராணுப்பயிற்சிக்கு அவசரமாக ஆள்சேர்ப்பதில் ஆர்வம் காட்டிய இவர்கள் திடீரென பெண்கள் மாணவர் விவசாயிகள் அமைப்புக்களை EPRLF இன் அங்கங்களாக மாற்றத்தீர்மானித்தனர். சுவரொட்டிகளூடாகவும், துண்டுபிரசுரங்களூடாகவும் இந்தப் பிரகடனத்தைப் பிரச்சாரம் செய்தனர். இதனால் மூன்று முக்கிய விளைவுகள் ஏற்பட்டன.
1. மேற்படி எல்லா வெகுஜன அமைப்புக்களும் சட்டவிரோத அமைப்புக்களாகக் காட்டிக் கொடுக்கப்பட்டதுடன், அதன் உறுப்பினர்களும் சிறிலங்கா அரசால் தேடப்பட்டனர்.
2. கட்சியின் அங்கங்களான வெகுஜன அமைப்புக்கள் கட்சியின் நேரடிக் கட்டுப்பட்டுக்குள் வர மக்கள அமைப்புக்களில் கட்சி தங்கியிருக்கும் நிலை மாறியதுடன், கட்சியில் இந்த அமைப்புக்கள் தங்கியிருக்கும் நிலை உருவானது.
3. மக்கள், குறிப்பாக கூலி வறிய விவசாயிகள், கிராமிய உழைப்பளர் சங்கத்தை தமது நலன்களுக்கான அமிப்பாக அல்லாமல் கட்சியின் நாலன்களுக்கான அமைப்பாகக் கருதினர்.
இதனால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பு முதற்தடைவையாக மரணத்தின் விழிம்பிற்குள் தள்ளப்பட்டது.
ஆனால் EPRLF இற்குள் இருந்த, குறிப்பாக அதன் மத்திய குழுவிலிருந்த பல உறுப்பினர்கள் வெகுஜன அமைப்புக்கள் தனித்துவமாக அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்தினர். 1985 இறுதிவரை தொடர்ந்த இந்தப் போராட்டத்திற்கு சுரேஷ், பத்மநாபா போன்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறான உறுப்பினர்களை சுரேஷ் தலைமையிலான உளவுப்பிரிவு நாபாவின் உத்தரவின் பேரில் கண்காணிகவும் ஆரம்பித்தது.
மறு புறத்தில் சுத்த ராணுவப் போக்கையே தனது வாளாகக் கருதிய டக்ளஸ் தேவானத்தா போன்றோர் LTTE போன்ற அமைப்பைக் கட்டியெழுப்புவதையே தமது நோக்காகக் கொண்டு செயற்பட, இயக்கத்துள் பதவிப் போட்டி உருவானதுடன், முற்போக்காளர்களின் குரல் முற்றாக மழுங்கடிக்கப்பட EPRLF இன்னொரு LTTE ஆக மாறிப்போனது. ஏற்கனவே இருந்த ஜனனாயகத் தன்மைகள் இந்த சுத்த ராணுவப் போக்கிற்கு எதிரானாதாக அமைய, EPRLF ராணுவம் பலம்ழந்ததாகக் காணப்பட்ட நிலையில் LTTE இனால் நிர்முலமாக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்களான வறிய கூலி விவசாயிகளின் பலமான தலைமையை இழந்த போதே இறந்துபோன EPRLF இன்னொரு LTTE ஆக மாறுவதும் சாத்தியமற்றதாகிப் போனது.
Navalan
peiyan on November 4, 2007 7:32 am
ராகவன் ரயாகரனோடு தலைமறைவு!
ஏரம்பு: on November 4, 2007 9:43 am
ஏரம்பு:
கருத்துக்களை எழுதும் போது முன்வைக்கபட்ட வாதத்தின் அடிப்படையில் கருத்தினைப் பதிவு செய்வதே நாகரீகம். ராகவன் தனது வாதத்தை வைத்துள்ளார். அதுபற்றிய விவாதத்திற்கும் தயாராக உள்ளார். இந்த ஜனநாயகப் பண்பை முன் வைத்து கருத்தக்களை முன் வையுங்கள். யாரும் தத்துவ ஆசிரியர்களாகப் பிறப்பதில்லை. தனது கருத்துக்களை விவாதிக்கத் தயாராக உள்ள ராகவனின் ஜனநாயக் பண்புக்கு வாழ்த்துக்கள்!!
mani on November 4, 2007 10:10 am
navalain kaddurai pala vedayankali pesukiinrathu. paaraaddukkal. evar rayakaranodu samar enra sanjikaiyi nadatti pinpu rayakarn navalanin arachiyal chenthani mithu poraamy kondu corinaai vesar condu thuratti adtthavar.ethu francel ulla pala paarkalutku therunthirukkum.rayakaranodu nmpe enthaviha uraum kollamudiyathu. evar rayakarn paasaiel cholvathynnal rayaakarn oru araciyal viyaapaari. naavalanuddu (deleted) hattan national bank collai paitri nanraaka thrium. avar ethu patri eiluthaveendum.
Mani
நாவலனின் கட்டுரை பல விடயங்களைப் பேசுது. பாராட்டுக்கள். அவர் ரயாகரனோடு சமர் என்ற சஞ்சிகையை நடத்தி, பின்பு ரயாகரன் நாவலனின் அரசியல் சிந்தனை மீது பொறாமை கொண்டு துரத்தி அடித்தவர். இது பிரான்ஸில் உள்ள பலபேருக்குத் தெரிந்திருக்கும். ரயாகரனோடு எந்தவித உறவும் கொள்ளமுடியாது. அவர் ரயாகரன் பாசையில் சொல்வதானால் ரயாகரன் ஒரு அரசியல் வியாபாரி. நாவலனுக்கு (நீக்கப்பட்டு உள்ளது) ஹற்றன் நசனல் பாங்க் கொள்ளை பற்றி நன்றாகத் தெரியும். அவர் இது பற்றி எழுத வேண்டும்.
மண
navalan on November 4, 2007 3:07 pm
தயவுசெய்து தத்துவார்த்தப் பிரச்சனைகளைமட்டும் விவாதிப்பேம். எமது சமூகத்திற்குத்தேவையானது ரயாகரனின் தனிப்பட்ட பிரச்சனைகளல்ல. தனினபர்கள் மீதான தாக்குதல் என்பது குறித்த பிரச்ச்சனை தொடர்பான ஆய்வைத் திசைதிருப்புவதில் மட்டுமே முடிவடையும். ரயாகரனின் சரியான பல கருத்துக்கள் கூட இவரின் இவ்வாறான போக்கினால் அடிபட்டுப் போய்விடுகிறது. நான் ரயாகரனாக மாற விருபவில்லை. இன்று எம்முன்ன்னாலுள்ள தலிதியல் தொடர்ப அபாயகரமான கருத்து விடுதலைப் புலிகளின் பாசிசத்தை ஒத்த தாக்கங்களை ஏற்படுத்த வல்லதாக நான் கருதுகிறேன். இது தொடர்பான விவாதங்கள் அவசியமானதும் அவசரமானதுமாகும்.
மருது on November 4, 2007 6:59 pm
இந்த தலித்மாநாடு எந்த இயக்கமும் சார்ந்து நடத்தபடவில்லை என்று அறிவித்ததாகத்தான் நான் கேள்விப்பட்டேன். இதற்குள் ஏன் இயக்க மூலாம் பூச வபறியள்? தலித்தியத்தையும் புலியையும் பாசிசத்தையும் ஒப்பிடுவது போன்ற ஒரு பயித்தியக்காரதன்தை என்ன சொல்வது? கொஞ்சம் பொறுமையாக யோசித்தால் தெரியும். புலியெதிர்ப்பு முத்திரையை நீங்கள் தலித் அமைப்புகளுக்கு குத்த முன்னிற்பதால் உங்களுக்கு என்ன லாபம். தேசிய விடுதலை மேல் மோகம் கொண்டுள்ள தலித்துகளை தனிமை படுத்தி தலித்துகளின் ஒருங்கினைப்பை உடைப்பதை தவிர இதற்கு பின்னால் ஒரு மண்ணாங்கட்டியுமில்ல
Navalan on November 4, 2007 7:29 pm
மக்களின் ஆதரவுடனான, சமூக இயக்கதிற்கெதிரான எந்தவொரு போக்கும் பாசிசத்தை உருவாக்கும் அபாயமுள்ளதாகும். அதற்காக இதுதான் பாசிசம் என நான் வரையறுக்கவில்லை. இதற்கும் புலி எத்ர்ப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்தியாவில் தலித்தியம் அது தொடர்பான பொருள் முதல்வதப் பார்வை என்பனவற்றின் குறைபாடுகள் காரணமாக பல நக்சல்பாரி அமைப்புக்களின் பாசிசத்தன்மையை உங்களுக்கு சுட்டிக்காட்ட முடியும்.
இன்றைய உலகமயமாதலின் பின்னணியில் எழுந்துள்ள தலித் இயக்கங்கள் தொடர்பான சரியான பார்வையை நாம் உருவாக பின்னிற்போமானால் இதன் விழைவுகள் ஆபத்தானவையாகலாம் என்ற ஆதங்கத்திலிருந்து எழுதப்பட்டது தான் எனது குறிப்பு. இதற்கும் புலிக்கும் எந்தத் தொடர்பையும் நான் குறிப்பிடவிலை. அவ்வாறு அது தொனித்திருன்ட்தால் எனது மன்னிப்புக்கள்.
Navalan


Sunday, March 27, 2016

புலம் பெயர் புலிப்பினாமிகள்-பிரமுகர்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள்.

வன்னியில் பசியால் வாடும்  போராளிகளை ;மக்களைக் காப்பதற்கு இன்றே  புலம் பெயர்  புலிப்பினாமிகள்-பிரமுகர்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள்.


" இன்றைய அண்ணளவான கணப்பீட்டின்படி,இலங்கைக்கு வெளியே புலிகளால் திரட்டப்பட்ட நிதி 16 பில்லியன்கள்(மில்லியன்கள் அல்ல.1000.மில்லியன்கள் 1 பில்லியன் என்பது ஒரு குறிப்புக்காக...)  அமெரிக்க டொலர் வரை புலிப் பினாமிகளிடமும்,புலிப்பிரமுகர்களிடம் தேங்கிக்கிடக்கிறது.இது,இலங்கை இரூபாயில்160 இலட்சம் கோடிகள் இரூபாயாகும்.இலட்சக்கணக்கான கோடிகளைச் சொந்தமாக்க முனையும் புலிப் புதிய ஆளும் வர்க்கத்துக்கு இவைகள் எந்தப் பொழுதிலும் சொந்தமில்லை!அங்ஙனம், ஆக்கவும் விடக்கூடாது!! "


மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளிய புலிவழித்தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பின்றியிருக்கத்தக்கபடி, அந்தப் புலி அமைப்புக்கு முண்டுகொடுத்தவர்கள் பலர். இவர்கள்,இப்போது புலிகளது "பூண்டோடான அழிப்புக்கு" ஆசிய மூலதனத்தோடு ஒத்திசைவாகிப் புலித் தலைமையை நயவஞ்சகத்தின் மூலஞ் சாகடித்த வெளியுலகப் புலிப் பெரும் பணக்காரர்களைக் காத்தபடி, தமது தவறுகளைப் "பெருந்தலைவரின் வீர மரணத்தில்"மறைத்துக்கொள்ள முனையும்போது,எல்லாமே முடிந்தபின் தமது தவறுகள் குறித்து ஒப்புதால் வாக்கு மூலம் தருகிறார்கள்.இவர்கள் இன்று கூறித் தவிக்கும் "தப்புகள்"குறித்து நாம் ஏலவே பலவருடங்களாகச் சொல்லி முடித்தாச்சு.இந்த நிலையில்,நாம் இவர்களிடமிருந்து இத்தகையதை எதிர்பார்த்துக் கிடக்கவில்லை!


மாறாகப் புலிகளது தோல்விகுறித்து மிகக் கராராகவும்,அறிவியல் ரீதியாகவும் ஆய்வுகளையே கோரிக்கொண்டோம்.புலிகளது இராணுவத் தலைமையை வழிநடாத்திய புலிகளுக்குள் உருவாகிய புதிய ஆளும் வர்க்கமானது பிரபாகரனையே கொன்று, குவிக்கும் ஓரவஞ்சனையினூடாகத் தமது நலனை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் வெறுமனவே கவனிப்பாரற்றுக்கிடக்கிறது.இது, பெரும்பாலும் சமூக விரோதிகளுக்குடந்தையானவொரு சூழலை மீளவும் வற்புறுத்தி, புலம்பெயர் மக்களை மேலும் மொட்டையடிக்கும் இன்னொரு தொடர்ச்சிக்குக் காரணமாக முடியப்போகிறது.
 "புலிகளுக்குப் பின்னாலுள்ள ஆளும் வர்க்கம்-ஆளும் வர்க்கம்"
என்று நாம் கூறியபோது,அது என்னவென்று கேலி பேசிய "புலிப்பொடியள்"இப்போது தலைவரது படுகொலையை செய்வித்து,அதை மறைப்பவர்களது வீடுகளுக்குள் இதை இனங்காணலாம்.


இதைவிட்டு நாம் பேசவேண்டிய விடையத்துக்கு நேரடியாகச் செல்லுவோம்.


பிரபாகரனைப் படுகொலை செய்வித்த, புலிகளுக்குள் உருவாகிய புதிய ஆளும் வர்க்கம்,இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு, தமிழ்ச்சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.இது, எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.இங்கேதாம் நமது மரபு ரீதியான புலி இயகக் அரசியல் புரிவானதின் இயலாமை நம்மைப் போட்டுக் குழப்பிக் கொள்வதை நாம் அநுமதிக்கிறோம். இத்தகையவொரு விருப்புறுதியானது நம்மால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட "எதிர்பார்ப்புகளால் "ஆனதாகா! இது காலாகாலமாக புலிகளது அழிவு அரசியல் பண்பாட்டுத் தகவமைப்புகளால் வார்க்கப்பட்ட வொரு வடிவமாக நம்முன் வேறொரு காரணத்தைக் கற்பிக்கும்படியும், மீளவும் "ஈழக் கனவு" காணத்தக்கக் கலவையைத் தயார்ப்படுத்தி நமது நோக்கத்தையே திசை திருப்புகிறது.


கடந்தகாலத்தில் புலிகளது இராணுவத் தலைமைக்கான மையக்கனவுகள் இன்று தகர்ந்து நொருங்கியபின்,புலம்பெயர் தமிழ்மக்களது குருதியில் திரட்டப்பட்ட பெரும் மூலதனம் புலிகளது பினாமிகளிடம்,இலங்கைக்கு வெளியே உலாவரும் புலிப்பிரமுகர்களிடமும் முடங்கிப் போகிறது.


"தமிழருக்கு ஈழமே தாயகம்,போராட்டம் தொடரும்,தலைவர் வருவார்,நாங்கள் இன்னும் வீச்சாகப் புலிகளது கரங்களைப் பலப்படுத்த வேண்டும்"என்ற-இத்தகைய மனவிருப்புக்களால் புலிப் பிரமுகர்கள் தப்பித்து மக்களது செல்வத்தோடு கோடிஸ்வரர்களாகக் கும்மாளம் அடிக்கிறார்கள். இவர்களே, பிரபாகரனைக் கொன்று குவிக்க இலங்கைக்கு-உலகத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள்!


இதை எத்தனை பேர்கள் புரிந்துள்ளோம்?அல்லது, இன்றைய இளைய தலைமுறை இதைப் புரிந்துள்ளதா?


வன்னியில் அவதியுறும் மக்களுக்குக் காசு சேர்க்க முனையும் மனது புலிப்பினாமிகளிடம் குவிந்துள்ள செல்வத்தைக் குறித்து என்ன மதிப்பீடு வைத்திருக்கிறது?


இப்போது,இந்தத் தருணத்திலும் இராணுவத் தடுப்பு முகாங்களுக்குள் முடக்கப்பட்ட  போராளிகளுக்கு -வன்னி மக்களுக்கு உதவுவதற்காக "புலியல்லாத மாற்றுக் கருத்தாளர்கள்,புரட்சி பேசுபவர்களைக் காசு சேர்த்து வன்னியில்கொண்டுபோய் கொடுக்கும்படி"கூச்சலிடும் புலிப் பொடிப்பசல்கள்-புலி அனுதாபிகள் இணையங்களில் ஒருவலம் வருகிறார்கள்.எங்கேயும் வன்னி மக்களுக்கு ஒரு நேரவுணக்கான கதையும்,அந்த மக்களுக்கான இரங்கலுமாக இருக்கிறது.

தலைவர் உயிரோடு மக்களுக்குள் மறைந்திருந்தபோது அது(புலிகளால் செய்யப்பட்ட தடுப்பு யுத்தம்) மக்களது விடுதலைக்கான போராகவே இவர்களால் உரைக்கப்பட்ட நிலையில், தலைவரது படுகொலைக்குப் பின்னான காலத்தில் மக்களது ஒருநேரக்கஞ்சிக்கு வழிதேடுகின்றார்கள்,புலி அனுதாபிகள்.


இஃது நல்லதே.இது குறித்து எந்த விமர்சனமும் எமக்கு அவசியமில்லை!ஆனால்,"காசு சேர்த்து-உணவுசேர்த்து" வன்னிக்குக் கப்பல்
அனுப்புவது, கொண்டுபோய்க் கொடுப்பதென்பதைக் குறித்துப் பேசுபவர்களால் இன்னொரு முயற்சியும் நடந்தாகவேண்டும்.இது குறித்து இவர்களது புத்திக்கு இன்னும் உறைக்காத விஷயம் ஒன்றுண்டு.அது குறித்து நாம் மிகவும் கவனமாகவே இருக்கின்றோம்."தமிழீழ விடுதலை"ப் போர் செய்து, பல பத்தாயிரம் போராளிகளையும் அவர்களது பெற்றோர்களையும்,முழுமொத்தத் தமிழர்களையும் நாசமாக்கியவர்களின் பின்னே, இன்னுமொரு துரோகம் நிறைந்திருக்கிறது.உயிர்களைக் குடித்த "ஈழக் கனவு"தமிழ்பேசும் மக்களது
குருதியினால் குவிந்த செல்வங்களையும் குவித்துக் கொண்டுள்ளது.இதைத் தமதாக்கும் முயற்சியில் தலைவரையே சாகடித்துவிட்டு மறைப்புக் கட்டுவதுதாம் இன்றைய கடைந்தெடுத்ததுரோகம்.


இத் துரோகத்தை மறைக்க"மார்க்சியம்,மார்புக் கச்சை,புரட்சி"எல்லாம் பொய்.வன்னி மக்களுக்கான மனிதாபிமான முயற்சிகள்,இலங்கை அரசை அம்பலப்படுத்துவதுதாம் முக்கியம்"என்பதும் காணக்கூடிய எதிர்வாதந்தாம்.


முப்பது வருடமாகப் புலிகளது அம்பலப்படுத்தல்கள்போய், இப்போது தனி நபர்களது அம்பலப்படுத்தலால் இலங்கையில் தன்னைத் தகவமைக்கும் ஆசிய மூலதனம் மிரண்டுவிடப் போகிறது.பாருங்கள் இதுதாம் இன்றைய புலிகளது புதிய வார்ப்பு!


 ஈராக்கில் நடந்த சதாம் அழிப்பில்,மேற்குலகத்திடமும்,அமெரிக்காவிடமும் தனது மூலதனத்தை,நலத்தைப் பறிகொடுத்த சீனா-இருஷ்சியா போன்ற நாடுகள், இலங்கையில் மேற்குலகத்துக்கு வால்பிடித்த புலிகளது
கதையை முடித்து மேற்குலகத்தைப் பழிவாங்கும் ஆசிய மூலதனமாக இலங்கையில் தகவமைக்கும் அரசியலானது, பற்பல தொடர் நடவடிக்கைகளை அன்று முடுக்கியது.இதன் தெரிவில் புலிகளை
முடித்துப் புதிய கதை வரைவுக்கு இன்னொரு முன்னோட்டம் மகிந்தா குடும்பமாகும்.


இது, இப்போது மைத்திரி மேற்குலகமாக யிருக்க-நாம் மக்களைக் காக்கும் நிதி பற்றிச் சிந்திப்போம்!


இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்து குடியேறிய மக்களை அச்சமூட்டிப் பெறப்பட்ட கப்பம்-நிதி என்ற போர்வையில் புலிப் பிரமுகர்களாகத் தம்மை உருவாக்கிய கயமைமிகு தமிழர்களிடம் குவிந்திருக்கிறது.

இவர்கள் மக்களிடம் பெறப்பட்ட நிதிகளை அசையும்-அசையாச் சொத்துக்களாக மாற்றித் தமது உடமையாகக் குவித்துள்ளார்கள்.போராளிகள் -மக்கள் வன்னியில் ஒரு நேரவுணவுக்கு இரங்கும்போது,இவர்கள் தமது சொகுசான வாழ்வுக்காகப் புலம்பெயர்ந்த மக்களிடம் திரட்டிய நிதியோடு ஒடித்தப்பிவிடுவது நியாயமாகுமா?


இன்றைய அண்ணளவான கணப்பீட்டின்படி,இலங்கைக்கு வெளியே புலிகளால் திரட்டப்பட்ட நிதி 16 பில்லியன்கள்(மில்லியன்கள் அல்ல.1000.மில்லியன்கள் 1 பில்லியன் என்பது ஒரு குறிப்புக்காக...)  அமெரிக்க டொலர் வரை புலிப் பினாமிகளிடமும்,புலிப்பிரமுகர்களிடம் தேங்கிக்கிடக்கிறது.இது,இலங்கை இரூபாயில்160 இலட்சம் கோடிகள் இரூபாயாகும்.இலட்சக்கணக்கான கோடிகளைச் சொந்தமாக்க முனையும் புலிப் புதிய ஆளும் வர்க்கத்துக்கு இவைகள் எந்தப் பொழுதிலும் சொந்தமில்லை!அங்ஙனம், ஆக்கவும் விடக்கூடாது!!


இப்பெரும் தொகையான செல்வம் இலங்கையிலுள்ள-வன்னியில் வதைபடும் போராளிகளுக்கு -மக்களுக்கு அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படவேண்டும்-அவர்களது பசிக்கு இவை உணவாக வேண்டும்.இதைத் தட்டிக்கேட்பதற்காகவும்,அச் செல்வங்களை மக்களுக்காகப் பயன்படுத்தும்படியும் புலம்பெயர் நாடுகளிலுள்ள ஒவ்வொரு புலிப்பிரமுகர்களது வீட்டு வாசலையும் முற்றுகைப் போராட்டத்தின்மூலம் திறந்தாகவேண்டும்.


செய்வது யார்?


இன்றைக்குப் புலம்பெயர் தமிழ்மக்களது குழந்தைகள் வீதிக்கு வந்து போராட முனைகிறார்கள்.எமது மக்களுக்காக இலங்கை அரசபயங்கரவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுத்துப் புலம்பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளையே தட்டிக் கேட்டார்கள்.இது, வீரம் மிக்க செயல்.இத்தகைய இன்னொரு வீரம் மிக்க போராட்டமாகப் புலிகளது வெளியுலகப் பிரமுகர்களை முற்றுகையிடும் போராட்டம் வெடித்தாகவேண்டும்.


எமது இளையோர்களேதாம் இதையும் இப்போது நடாத்தியாகவேண்டும்.


தாமதமாகும் ஒவ்வொரு கணமும், மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதிகளோடு கம்பி நீட்டிவிடும் கயவர்களாகப் புலிப் பிரமுகர்கள் மாறி விடுவார்கள்.வன்னியில் வாழ்வாதார-அடிப்படை வசதிகளை இழந்து தவிக்கும் மக்களது நல்வாழ்வுக்காகப் புலிகளிடம் திரண்டுபோய்க் கிடக்கும் அனைத்துச் செல்வங்களும் மக்களுக்காகப் பயன்பட்டாகவேண்டும்.இது மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் யோசிக்கும் விடையம்.ஜெயலலிதாவின் தேர்தல் செலுவுக்காக கோபாலசாமி ஊடாக 500 கோடி நிதியளித்த புலிப் பினாமிகள், எமது மக்களது வயிற்றுப் பசிக்காகத் தம்மால் பயமுறுத்தித் திரட்டப்பட்ட மக்கள் பணத்தை வன்னியில் வதைபடும் மக்களுக்காகப் பயன்படுத்த நேர்மையோடு முன்வரவேண்டும்.ஆனால்,இந்த நேர்மையைப் புலிப்பினாமிகளிடமோ அல்லது புலிப் பிரமுகர்களிடமோ நாம் எதிர்பார்க்க முடியாது.இவர்கள் தமது சதியால் கொல்லப்பட்ட தமது தலைவருக்கே தண்ணிகாட்டியவர்கள்.இப்போது, வன்னியில் வதைபடும் மக்களுக்காக இரங்குவார்கள்?


ஆகவே,இளையோரே இலங்கைக்கு வெளியே புலிப்பிரமுகர்களாக வாழும் புலிகளைது இல்லங்களை முற்றுகையிடுங்கள்-முடிந்தால் அவர்களிடம் அனைத்துக் கணக்கு விபரங்களையும் பெறுங்கள்.இதை நீங்கள் வாழும் தேசங்களது சட்ட எல்லைக்குள் மிக இலகுவாக நீங்கள் செய்துவிட முடியும்.இத் தேசங்களது காவற்றுறையூடாக-இறைவரித் திணைக்கழகங்கட்கூடாகவும் இவற்றைச் செய்து முடிக்க முடியும்.மக்களது நல்வாழ்வுக்காகவே புலிகளிடம் முடங்கியுள்ள மக்களது நிதிகள் பயன்பட்டாகவேண்டும்.


இதைவிட்டுத் தனிநபர்கள் இவ்வளவு பெருந்தொகை பணத்தையும் கையாடித் தமது குழந்தைகளுக்காகப் பயன்படுத்த முனைவது சமூகக் குற்றமாகும்.வன்னி மக்களுக்காகத் தெருவில் இறங்கிப் பிச்சை எடுப்பது இப்போது இருக்கட்டும்!


புலிகளது வீடுகளை முற்றுகையிடுங்கள்.


திரட்டப்பட்ட நிதி,எங்கே,எவ்வகையில் மூலதனமாக மாற்றப்பட்டு இயங்குவதென்று துருவித் தேடுங்கள்.அத்தகைய நிதியைக்கொண்டு நமது மக்களை வாழவைக்க முனையுங்கள்.


வீதிக்கிறங்கிப் போரிடும் இளையோரே!, இதுவும் உங்கள் கடமையே.


புலம் பெயர் தேசங்களில் ஒருவர் வேலை செய்து சம்பாதித்துச் செல்வத்தைத் திரட்டுவதென்பது குதிரைக்கொம்பாகும்.


தனக்குச் சொந்தமில்லாத, மக்களது பணத்தில் புலிப்பினாமிகள் சொகுசு வீடுகளும்,கார்களும் வைத்திருப்பதற்கு அனுமதிக்காதீர்கள்!


அவர்களிடம் உள்ள செல்வம் உங்களது பெற்றோர்கள் குருதி சிந்தி உழைத்த செல்வம்.விட்டுவிடாதீர்கள்.


அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும்.


மக்களது செல்வத்தையும் அது சூறையாட அனுமதிக்காதீர்கள்.


இவர்களிடமுள்ள அனைத்துச் செல்வமும் புலிகளது பெயரால் மக்களிடம் தட்டிப் பறித்தெடுக்கப்பட்டதென்பதை மறக்காதீர்கள்.இனி என்ன தயக்கம்?


போராட்டத்துக்கு துணையில்லையா?


அதை உங்களது பெற்றோர்களைக்கொண்டே நிறைவு செய்யுங்கள்.
ஊரார் பணத்தில் புலிகளது பினாமிகளும்,பிரமுகர்களும் இனியும் தின்று கொழுப்பதை அனுமதிக்காதீர்கள்!!!


அங்கே-வன்னியில் பசியால் வாடும் முன்னாள் போராளிகளை -மக்களைக் காப்பதற்கு, இன்றே புலிப்பினாமிகள்-பிரமுகர்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள்.இதுவே இன்றைக்கு உங்கள் முன்னுள்ள அவசியமான பணி!-மறுக்காதீர்கள்-மறந்திடாது போராடப் புறப்பிடுங்கள்-புயலாக,உங்களைத் தடுக்க எவராலும் முடியாது.ஏனெனில், உங்களிடம் நியாயமும்,உண்மையும் இருக்கிறது.


வாய்மையை வெல்லும்!வழிதொடருங்கள்-வீதிகளில் தோழமையும் பெறுவீர்கள் இளையோரே!


ப.வி.ஸ்ரீரங்கன்