Sunday, November 30, 2014

எஸ்.பொன்னுத்துரைக்கும் இன்னும் எவரெவருக்கோவெல்லாம்நினைவேந்தல்...

... "மக்களுக்காக" மரித்த அனைத்தியக்கப் போராளிகளுக்கும் நினைவு கூர்வதாகவேறு வகப்பெடுக்கின்றனர்.


மிழர்கள் மிகக் கெடுதியானவொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.என்னையும் இணைத்தே சொல்கிறேன்.நாம்மிகப் பொறுப்பற்ற பிழைப்பு வாதிகள்.அன்றுமின்றும்,அரிசிக்குள் குறுங் கற்களையும்,மாவுக்குள் முருகங் கற்றூளையும்,மிளகாய்த் தூளுக்குள் ஓட்டுத் தூளையும் கலந்து வர்த்தகம் பண்ணும்இந்தப் பிழைப்புவாதத் தமிழ்ச் சமுதாயும்,முள்ளி வாய்க்கால்வரை  மூன்று இலட்சம் மக்களைப் படுகொலைசெய்தும்,கட்டாயமாகக் கொலைக்களத்துள் தள்ளியும் இலங்கை அரசோடு "தமிழீழ வார்த்தகஞ்" செய்து போட்டியிட்டனர்.

இத்தகைய வர்த்தகத்தின் மிக முன்னேறிய வடிவமாக இயக்ககங்கள்"போதை வஸ்த்துக்களை"க் கடத்தி, உலகம் பூராகவுமுள்ள மக்களைக் கொல்வதற்கு உடந்தையானர்கள்.இந்த வர்த்தகத்துள் சேர்ந்த பணங்களை வைத்து மேலும் வாத்தகக் குழுமங்களை உருவாக்கிக் கொண்டனர்.இதன் உச்சத்தில்தாம் தமது கொலை அரசியலைத் தமிழீழமெனச் சொல்லி இந்திய -மேற்குலகத் தேசங்களுக்குத் தரகர்களாகவும் -அடியாட்களாகவும் இந்தத் தமிழ் மாபியாக்கள்செயற்பட்டனர் - செயற்படுகின்றனர்.


இவர்களோ இன்று, எஸ்.பொன்னுத்துரைக்கும் இன்னும் எவரெவருக்கோவெல்லாம்நினைவேந்தல் -அஞ்சலியெனத் தமது இருப்புக்காக கூட்டங்களும் -நோட்டீசுகளுமாக வெளிப்பட்டுக்கொள்வதற்கான முக மூடிகளைத் தேடுகின்றனர்.
இத்தகைய தமிழ்ச் சமுதாயமானது இதுவரை தாம் சொல்லி வந்த "தேசியத் தலைவர்" என்ற மனிதனின் மரணத்தைப்பற்றியோ அன்றி, அவனது நினைவஞ்சலி குறித்தோ இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவும் இல்லை -புலிகளது இறுதி முடிவுக்கான எந்தத் தார்மீகப் பொறுப்பும் எடுக்கவுமில்லை!

பிரபாகரன் இருக்கும்வரை தமிழ்ச் சிறார்களது உயிரைத் "தமிழீழ விடுதலைக்கு" என்று துஷ்பிரயோகஞ் செய்து பிழைத்த , இந்த மாபியாக்கள், பிரபாகரனது கொலையோடு தமிழ்மக்கள்மீது தாம் மேற்கொண்ட கொலை அரசியலையும்வரலாற்றிலிருந்து மூடிமறைப்பதற்காகத் தொடர்ந்து "மக்களுக்காக" மரித்த அனைத்தியக்கப் போராளிகளுக்கும் நினைவு கூர்வதாகவேறு வகப்பெடுக்கின்றனர்.

ஒவ்வொரு இயக்கமும் மக்களைக் கொன்று குவித்த வரலாறானது இப்போது, "மக்களுக்காக" என்ற கபட நாடகத்தோடு தாம் செய்த கொலைகளுக்குத் தமிழ் மாபியாக்கள் விளக்கமளிக்கின்றனர்.

இது எவ்வளவு பெரிய ஏமாற்று மோசடி!

இத்தகைய மோசடிக்காரர்கள் உண்மையில் மக்களது அழிவுகுறித்தும்,சிங்கள அரசுகளது இனவாத  அராஜகங் குறித்தும் எந்தக் கவலையுமற்ற வர்த்தகாகள்.இவர்கள்தாம் இப்போது இலங்கையில் அரசு  மாற்றத்தை ஏற்படுத்தும்  மேற்குலகச் சதிக்கு ஆதரவானவொரு அரசியற் பிழைப்பு வாதத்தைச் செய்து, அதற்கான வர்த்தகச் சூதாட்டத்துள் பணம் தேடுகின்றனர்.இவர்களை நம்பி, இவர்கள் செய்யும் "அஞ்சலி! அரசியலுக்குள் குப்பற விழுகின்றவர்கள் தமிழ்பேசும் மக்களது அரசியல் எதிர்கால வாழ்வில் மீளவும் நெருப்புக் கொள்ளியைச் சொருகுபவர்களே!.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.11.2014

Thursday, November 27, 2014

கார்த்திகை 27: தேசியத் தலைவர் !



செல்வா கனகநாயத்துக்கும்,
எஸ்.பொ. வுக்கும் அஞ்சலியும், அழுகையும்கொண்டு
கோலமிட்ட தெருவெல்லாம்
நடந்து களைத்து விட்டேன்!

எங்கும்,
பிரபாகரனுக்கான தடயம் இருக்கவில்லை!

பல்லாயிரம் பாலர்களைக் கொன்ற
"தமிழீழ விடுதலை"ப் போரென்ற அராஜகக் கூத்துள்
காணமாற்போன சனங்களைப் போலவே
பிரபாகரனும் எப்போதோ காணாது போனான்-
ஒரு தெருவோரச் சொறி நாயின் சாவைப் போல!

போடா போ!
உனது காலத்துள்
உன்னைத் "தேசியத் தலைவர்" என்ற
வஞ்சகக் குரல்களுக்குள் நீ மயங்கிக் கிடந்தாய்.

ஆனால்,
உன்னைக் கொல்வதற்கு
நீயே காரணமான
உனது அராஜகக் காலத்துள்
முளையரும்பிய
உனது கொலைச் சேட்டைகளே
உன் உச்சி பிளந்த
துட்டக் கைமுனுக்களை
உனக்குள் உருவாக்கி வைத்தபோது
உன்னை
எவன் கோலமிடுவான்-என்னைத் தவிர?

ப.வி.ஸ்ரீரங்கன்
27.11.2014