செல்வா கனகநாயத்துக்கும்,
எஸ்.பொ. வுக்கும் அஞ்சலியும், அழுகையும்கொண்டு
கோலமிட்ட தெருவெல்லாம்
நடந்து களைத்து விட்டேன்!

பிரபாகரனுக்கான தடயம் இருக்கவில்லை!
பல்லாயிரம் பாலர்களைக் கொன்ற
"தமிழீழ விடுதலை"ப் போரென்ற அராஜகக் கூத்துள்
காணமாற்போன சனங்களைப் போலவே
பிரபாகரனும் எப்போதோ காணாது போனான்-
ஒரு தெருவோரச் சொறி நாயின் சாவைப் போல!

போடா போ!
உனது காலத்துள்
உன்னைத் "தேசியத் தலைவர்" என்ற
வஞ்சகக் குரல்களுக்குள் நீ மயங்கிக் கிடந்தாய்.
ஆனால்,
உன்னைக் கொல்வதற்கு
நீயே காரணமான
உனது அராஜகக் காலத்துள்
முளையரும்பிய
உனது கொலைச் சேட்டைகளே
உன் உச்சி பிளந்த
துட்டக் கைமுனுக்களை
உனக்குள் உருவாக்கி வைத்தபோது
உன்னை
எவன் கோலமிடுவான்-என்னைத் தவிர?

ப.வி.ஸ்ரீரங்கன்
27.11.2014
No comments:
Post a Comment