Monday, October 04, 2010

அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும்,..

ப் புனைவு முன்னொரு காலத்தில் எழுதப்பட்டது.இதன் கருத்துருவம் நமக்குள் நடக்கும் குத்துவெட்டுகள் குறித்து இன்னும் வலுவாகச் சுட்டுவதிலும் அஃதை நையாண்டியின்வழி அம்பலப்படுத்தி, நேரியதை நாடுவதற்காக எண்ணிப் புனையப்பட்டது.இது,இன்றும் நமது குத்து வெட்டுகளுக்குப் பொருந்துகிறது.அதுள் "மாற்றுக்கருத்தாளர்கள்-புரட்(டு)சீ"காரரானெமக்குப் பொருந்துகிறது.

இதை எதிர்த்து அன்று சயந்தன் ஒரு புனைவுசெய்தான்.அது,இன்னும் நமக்குப் பொருத்தமானது.

ஓன் மான் சோ-one-man show(Anton Chekhov: On the Harmful Effects of Tobacco) புரட்சியின்வழி , இந்த அரசியல் அண்ணாச்சிக்கும்,அந்தத் தம்பிகளுக்கும் இது பொருத்தமோ இல்லையோ எனக்கு நன்றாகவே பொருந்திப்போகிறது.

எனது சுயதிருப்(ப :-)தி இன்பத்தின் மிகை இரசிப்புக்காக இதைப் பதிவிட்டுத் திருப்பதிகாண் எல்லையைத் தேடி அலைகிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
05.10.2010


அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும்,
ஆசியன் கடையும்.



டேய் சின்ராசா வாடா வா!என்னமாதிரிப்போச்சு?

அண்ணோய் மெல்ல.இது அவங்கட காசில நடக்கிற ஆசியன் கடை.உங்கட கதையள அடக்கி அவிழ்க்கிறதுதான் நல்லது.

சரி விடடா,எல்லாம் சிறப்புற நடந்தேறிவிட்டது,அப்பாடா!

என்னண்ணோய் சொல்லுறியள்?

அண்ணர்களின்,தம்பிமார்களின்-தோழர்களின்,நண்பர்களின் நல்லது,கெட்டதுகளின் நமக்குப்பட்டதைச் செய்தும் போட்டோம்-இல்லையா?


இனியென்ன?

பத்தரைமாதத்துத் தங்கம்,தோழமையின் தூண்,துரும்பு...என்ன அரிகண்டமோ,இப்படிக் கழுத்தில் கிடந்து நம்மைச் சீரழிக்கிறது!


எங்கு திரும்பினாலும் ஒன்று தாங்கள் கும்பிடுற தெய்வ வணக்கம்-இல்லையென்றால் மீனுக்கும்,பாம்புக்கும் தலை வால் காட்டும் புத்திசீவிகளின் புதுத் தத்துவங்கள் புருவங்களை உடைத்துப் புதுப் புனலாய் புண்ணிய நம் கண்களுக்குள்...


சீச்சீ, இப்படியெல்லாம் நாம கதைச்சால் நடுச் சாமத்தில் கெட்டகெட்ட கனவெல்லாம் வந்து நித்திரையைக் குழப்பிப்போடும்.பையப்பைய ஆராவது இப்படி வந்து, தன் பங்குக்குப் பாட்டோ அல்லது ஓரிரு பல்லவியோ பாடித் துலைக்கிறபோது,அப்பப்பப் பொடிவைக்கிறது வழமைதான் குஞ்சு.பகிடிக்குப் பொடிவைக்கிறமாதிரித்தான் இதுவும் குஞ்சு.நான் மனிதன்,எனக்கும் கவனிப்பும்,கண்ணீரும் உண்டெல்லோ,இல்லையாடி அப்பன்?


இருக்காதா அண்ணே!
எடுத்துவிடுங்கோ,எப்பவும் நீங்கள்தான் என்ர உதாரணப் புருஷர்.என்ர தேகத்தின் குரலும்,உணர்வும் நீங்கதான்.


ஏன்ரா தம்பி சின்ராசா,எங்கேயடா ஆளக்காணோம் இவ்வளவு நாளா?


அண்ணே,கோவியாதேங்கோ.நேற்றுத்தான் வந்தனான்.போன இடத்தில மாட்டுப்பட்டுப் போயிட்டன்.புண்ணாக்கன்கள் புடிச்சு உள்ள போட்டுட்டான்கள்.


எடா மசிராண்டி உன்னை ஆருடா ஊருக்குப் போகச் சொன்னது?கண்கடை தெரியாதா அவளுக்கு ?உன்ர பொண்டாட்டியும் உன்னோட வந்தவளா?(எனக்கு என்ர உறவுக்காரப் பெண்மீது எப்பவும் ஒரு கண்.அவளை இந்தப் பரதேசி கட்டிப்போட்டுக் காடாத்திறான் நெடுக).


எடச் சீ!இந்தக் கோதாரி புடிச்ச அண்ணைக்கு என்னத்துக்கும் ஊர் நினைவுதான். நான் சொல்லுற புண்ணாக்கன்கள் இந்த ஆசுப்பத்திரிக்காரன்கள் அண்ணை.


எட இழவு,என்னடா நடந்தது?


அண்ணோய்,அதுக்க கான்சர்,இதுக்க கான்சர் எண்டுறான்கள்.


உம்!இது பெரியாக்களுக்கு வாற வருத்தம்.இப்ப உனக்கும் வேறு அது வந்திட்டுது.நானென்டாலும் உனக்கு ஒரு பாட்டாவது பாடுவன் யோசிக்காத.


அண்ணோய் ஆட்டைக் கடிச்சு,மாட்டைக்கடிச்சு...இப்ப என்னையும் கடிச்சுக் குதறுகிற எண்ணமோ?மனுசன் படுகிற பாட்டுக்கு ஊர் வம்புகளெல்லாம் வேண்டாம்.பிறகு உங்களுக்கும்,எனக்கும் நித்திரையில் கெட்டகெட்ட கனவெல்லாம் வந்து துலையும் எல்லே!


எட அப்பன்,அவருக்குப் பின்னாலா அந்த ஆடு மேய்ஞ்சுகொண்டெல்லே இருந்தது,அந்த ஆட்டுக்கு இனியென்ன பென்சனோ?


ஆருக்கண்ண தெரியும்?அதெல்லாம் பெரும் தொகையளோட விளையாடுற விஷயங்கள் அண்ண,இந்தப் பயலுக்கு ஒண்டுமாய் விளங்குதில்லை.நீங்கள் ஏதாவது நினைச்சுக் கொட்டாவி விடுகிறியளோ?,போங்கண்ணை.உங்களுக்கு நோச் சான்சு!


சரி,சரி விட்டுத் துலையடா.ஏதாவொரு நப்பாசை இப்படிக் கிடந்து பழைய கள்ளுக் கொட்டில் கனவைக் காண வைக்கிறது, இந்தப் பாழாய்ப்போன மனசு.அவங்களுக்குப் பின்னால நிண்டாலாவது அப்பப்ப மூக்கு முட்ட விடலாமெல்லோ!


எதுக்கும் ஒருக்கால் நல்ல டொக்டரைப் பாருங்கோ அண்ணை.என்ர டொக்டர் ஒரு மனோதத்துவ டொக்டரும்கூட உங்களுக்கு அவரின்ர விலாசத்தைத் தரட்டோ?நாளைக்கு வீட்டுப் பக்கம் வாங்கோவன்,கூழ் காச்சிக் குடிச்சுக்கொண்டு உங்கட பிரச்சனைகளையும் விலாவாரியாக் கதைப்பம்.


ஓம்போலத்தான் இருக்கடாப்பா.கூழுக்கு என்ன போடப்போறாய்?என்ர மனுசியும் இண்டைக்கு ஆட்டிறிச்சியோடக் குத்தரசிச் சோறு காச்சிறாபோலக் கிடக்கு...


கூப்பிடமாட்டீங்களே... நிச்சியமா மனுசரின்ர தலைகளில்லை அண்ணோய்!பயப்படதேங்கோ.
தலையெண்டிறபோதூன் ஞாபகம் வருகுது அந்த நாளைய யாழ்பாணத்தில எரிஞ்ச தலைகளும் ரயர்களுமாக் கண்ட கோலமெல்லாம் ஒரு காரணமான குரலுக்குச் சொந்தமெண்டு.


நல்லதடா பையா.உனக்காவது நானொரு கூழ்தாசனாக இருக்கிறேன் தானே?அதுக்காவது நாலு சிரட்டையைச் செதுக்கி வை.அப்பிடியே இன்னொரு தலையையும் கூட்டிக்கொண்டு வாறன்.


அண்ணோய்.இது சரி வராது.என்ர வீட்டில் உங்களுக்கு மட்டுதான் எலவ்ட்.தெரியுந்தானே?பிறகு மனுசி கலையெடுத்திடுவா.கூழ்ச்சிரட்டைக்குப் பதிலாக என்ர மண்டையோடுதான் உங்களுக்கு வரும்.அண்ணோய்,அடுப்படியில கிடக்கிறதுகளை உசுப்பக் கூடாதண்ணை.பிறகு கரடிக்கு வாற பலத்தைப்போல அங்கேயும் ஒரு பலம் வந்திடும்.பேந்து, எங்கட திண்ணைப் பேச்சுக்குப் பதிலாக கோழியை வெட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.


உன்னைப் போல அனுபவஸ்தானாலதான் பட்டும் படாமலும்,பல்லில நாக்குப்படாமல் கதைக்க முடியுது.எங்கேயடா தம்பி இப்படிப் படிச்சாய்?


ஓ, அண்ணோய் என்ர படிப்புப் பற்றிக் கேட்டுப்போட்டீங்க.உங்களுக்குச் சொல்லாட்டி...பிறகு பெயருக்கு முன்னாலயாவது தமிழுக்குள்ளாவது போடாமல் போனால் என்ர ஆத்துமா அந்தரிக்குமெல்லோ!அண்ணோய் மந்திகையில எம்.ஏ.பிறகு அங்கொடயில கலாநிதிப் பட்டம்.எனக்கும் கலாநிதியைச் சேர்ப்பீங்களோ?


அதுதான் நீயாய்ச் சேர்த்து அடுப்படியில அலையவிட்டபிறகு இன்னொருக்கால் சேர்த்தால் உன்ர மடிதாங்காது.


மடிதாங்காட்டியும் மனசு தாங்கும் அண்ணோய்.பேசாமால் அதையும் சேர்த்துவிடுங்கோ.


சேர்க்கிறத விடு,இப்ப உன்ர வீட்டுக் ஆரோவொரு வெளி நாட்டுக்காரனையும் போட்டிருக்கிறான்களாம்.ஏன்ரா உலகத்தில இவ்வளவு பேர்கள் இருக்க, இவனை ஏன்ரா கூப்பிட்டாய்?


நானா கூப்பிட்டானான்?அவையல்லோ அனுப்பினவை!


ச்சீ.அப்பிடிச் சொல்லாதை.உலகத்தில இவன் கெட்டிக்காரன்.குடும்பப் பிரச்சனையள நல்லாத் தீர்த்துப்போட்டு,முற்போக்காத் திரியிறான்.அதனாலதான் அவன் உன்னட்டையும் வந்தது எண்டு சொல்லு.


மண்ணாங்கட்டி.என்ன சொல்லுறியள்?உங்களையும் என்ர குரலெண்டு நான் சொன்னது தப்பாப் போச்சு!போங்கண்ணை.அவன் சோசல்காரன் தங்கட கட்டிடத்தில எவனையும் கொண்டுவந்து தள்ளுவான்.அதை அகதியாகி ஒண்டின நாங்கள் தடுக்கேலாது.நீங்கள் வேறு...


சரி,சரி.என்ர குரலும் வீட்டின்ர குரலாகக் கிடக்குது ஆரும்...


அண்ண அப்ப நாளைக்குக் கூழோடு சந்திப்பம்.நீங்க மட்டும் இல்லைக் கையிலவொரு போத்திலை...



போத்திலை?டேய் அப்பன் அது கஷ்டமடா கண்டியோ?



பேசாம எல்லாத்தையும் ஒரு பம்பலாச் சொல்லுங்கோ.பகிடியெண்டு நான் எடுக்கமாட்டன் கண்டியளோ.



ப.வி.ஸ்ரீரங்கன்

7 comments:

-/பெயரிலி. said...

/சுயதிருப்பதி இன்பம்..../
கோவிந்தோ கோவிந்தா! ஏடுகொண்டலவாசா! உது தமிழுக்கு மெத்தப்புதிசு அண்ணை! ;-)

P.V.Sri Rangan said...

பெயரிலித் தம்பி , உது "சுயதிருப்த்தி இன்பம்"என்றெழுதுவது தமிழுக்குப் புதிதாகவிருக்கலாம்.ஆனால், பிரக்டிக்கல் பழையதுதானே?நாம் அதில் உருவெடுத்துலுப்பி ஏகினோமில்லையா?

-/பெயரிலி. said...

அண்ணை, பிரச்சனை அதில்லையே! எதுக்கு சுயத்திலே ஏடுகொண்டலவாசனுக்கு நாமம்போடுறியளெண்டெல்லோ கேட்டன். கோவிந்தா! இதிலையுமோ சுயதிருப்தி... சேச்சே! சுய திருப்பதி?

P.V.Sri Rangan said...

இரமணி,நீங்கள் நவீனச் சோனாவரையர் என்று நான் வணங்கி விடைபெறலாமா?; என்னால் முடியவில்லை!லெக்கானுக்கு(Jacques Lacan) நிகராக நீங்கள் தமிழில் உரை செய்வது குறித்து நான் தமிழுக்குள் சோனாவரையாரை உமக்குப் பொருத்தி வாபஸ் வேண்டுகிறேன் சாமி! :-)

Unknown said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 



நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

Anonymous said...

சோனாவரையர் சொல்வதாவது... தமிழிலே நீங்களுங்கூடத் தட்டான் தவறு விடலாமா? சுயதிருப்திக்கும் சுயதிருப்பதிக்கும் வேறுபாடு வேண்டாமா, அண்ணே?

P.V.Sri Rangan said...

அநானி,கண் தெரியுதில்லை!தமிழில பிழைவிடுதலே மேதமையின் இலக்கணம்!வேற்று மொழியில் விட்டால் அறிவற்றவன்... ;-)