Friday, March 30, 2007

தோழி இலஷ்மிக்கான தோழமைக் கரமொன்று...

நிழற்கூத்தின் நிழலாடு படலம்.


(உயிரை நிழலாய் விரிக்கும் அன்புத் தோழி இலஷ்மிக்கான தோழமைக் கரமொன்று மெல்ல வருடும் தரணங்களாய்...)


இந்தக் கணம் வரை இந்தக் குதிரை நேரான பாதையிழந்து பிரயாணிப்பதை அதன்மீதிருந்து சவாரிக்கும் அந்தப் "பேரறிஞன்"அறிவதாகவும் இல்லை.இருந்தும் அவன் மீது காதல் கொண்டவர்களும் தம்முயிர் நீக்கும் பாசத்துக்குரிய தம்பிகளும் அந்தக் குதிரையைச் சரியான திசையில் சவாரிக்கும்படி கோருவதற்கும் எந்தப் பெரு மனமும் கொள்ளவேயில்லை.கலைக்குக் கொலை-கொலைக்குக் கலை,கலையின் கொலையில் கலைக்கு முயற்சிக்கும் நெடுந்துயில் கலைப்பில் மனதை வருடும் இசைப்பின் ஓரத்துச் சொற்றெறிப்பில் மருண்ட மனதுங் துறவு கொண்டே தொலைந்து போகும் ஒற்றைத் தரணங் காவுகொள்ளுமொரு தமிழர் உரிமைப் பொழுதின் அழிவில் நின்று...

நாமிருப்பது நலிந்துபோன பொருளுலகில்.நித்திரை செய்யும்போதுங்கூட வாடகை வீட்டின் கூலி பற்றியும் கூட்டுக் கொம்பனிகளென்ற பங்குச் சந்தைப் பெருந் தொழிலகத்தின் விடியலில் கைமாறப்பட்ட புதுப் பெரு முதலாளிகளின் கனவுக்குத் தீனியாவது எப்படியெனும் பயத்தில் தூக்கம் தொலைக்கும் இந்தக் கும்மிருட்டில் தன் முயற்சியில் சிறிதும் மனந் தளராத நம்மூர் விக்கிரமாதித்தனின் வினை முடுக்கிவிடும் வேகத்துள் வினையாகும் வெட்டேந்தித் தொழிலுக்கு "துரோகம்"எனும் முக மூடிப் பண்பு தமிழில் உச்சபட்ச பரப்புரையில் பொழுதெல்லாம் புடம்போட்ட சில புண்ணிய குறிப்புக்களுக்கு புகை சூழ்ந்த நம் குதிரைப் பாகனின் பகற் கனவு சிதலமடைந்து, சில சின்னத் தனங்கள் சிரசைக் குறிவைக்கும் நவீனத் தனங்களை நல்லதொரு வினையாகத் தினம் முடுக்குவதில் "அவன்"தேர்ந்த வியாபாரியாக இருந்தான்.ஆவணமென்றால் அஞ்சிக்கொள்ளும் அரண்ட விழிகளின் மருண்ட பார்வைக் கெடுதல் பழித்தொதுக்கும் பஞ்சிப் பொழுதுகள் படைத்தலற்ற புறத்தே வெருட்டவேண்டிய நிர்வாணப் புனைவு, நெடுந் தொலைவில் ஆடும் அக்கப்போர் எந்தப் பெயரில் "மையங்"கொள்ளும் எத்தனை ஆயிரம் சேர்த்து?

என்றோ ஓர் நாள் பொழிகின்ற பதவிப் பெருமழையின் பெரு விருப்போடு எல்லாம் மறந்த "அவன்"மீளவும் உயிர்த்திருப்பதற்கானவொரு திடீர் பாய்ச்சலாகத் தன்னம்பைக் குகைப் பாத்திரமறிந்து "படாத பாடுகள்" படுத்திய தமிழ்ப் புரவலர்களைப் பிடித்த சனியனின் வாலில் தைக்க வைத்து- தான் தொங்குவதென்று திடமனதோடான மிகைவிருப்பில், தன் பணி பிணி செய்து கிடப்பதேயென்பதாகச் செய்யுங் கடாசலில் பேரென்ன புகழென்ன எல்லாம் போகினும்"எனக்கெதிரான எந்தத் தும்மலையும்"நிறுத்தி விடுவதற்கேனும் தும்மலுக்குச் சொந்தமான மூக்கையறுக்கும் சூர்பனகைக் கோலத்தைக் கனாக் கண்டபடி கண்ணயர்ந்த சந்தர்ப்பத்தில் திடீர் நிலை மறுத்தொதுக்கி, அவன் வெருண்டெழுகின்ற திசையில் பேனைகளின் ஊர்வலம் அவனைப் பிய்த்தெறிவதற்கானவொரு மெட்டுக் கட்டுவதை- அவனுக்கு அருவெறுப்பாக இருப்பதை அவன் காவடி தூக்கிகளுக்கு மெயில் வரைந்த ஒரு நொடிப் பொழுதில், திரண்ட தமிழ்ப் பால் குருதிகளின் புடைப்புக்கு "பெட்டை"ஒருத்தி தன் நண்பன் போன திசை மறந்து திரண்ட வெண்ணையில் மிதந்த ஒரு சில மனிதக் கணங்களில் மெல்லக் கன்னம் வைத்த வெட்கம் பறந்த "மாவீரர்கள்"வானம் போய் கானம்பாடிக் கொண்டு இருவிரல் நீட்டிய வெற்றியும் மருண்ட கதையாய் கலைச்செல்வன் பொண்டாட்டியின் மனை புகுந்து புதுப் போராட்ட இலக்கில் போன உயிராய்ப்போன "சபாலிங்கத்தின் சமாதியின்" இன்றைய கதையும் தம் நிலை சொல்லும் சாத்திரமுண்டானால் சகலதையும் தொலைத்துவிடும் தமிழ் நெறிப் பரம்பலில் "எங்களுக்கென்ற"வினைப் பயன் நெடுக்கும் குறுக்குமாய் வெட்டும் விழுதில் தொங்கிய குரங்காய் அந்தப்"பேரறிஞன்!"

பிந்திய பொழுதொன்றின் பிறழ்வின் பின் வலிக் காலமொன்று நமக்கு நக்குத் தண்ணிக்கும் வழியற்ற பெரு வெளியைச் சுட்டி,வெருட்டிக் கொள்ளும் வினையொன்று புறத்தே வருமென்றெவர் புகல்வரொ அவர் குருடர்!நமக்கு நாமே கொள்ளி பிடிக்கும் கொடுங்கரத்தை இன்னொரு பொழுதில் தமிழின் நலமென்ற நலமடிப்பில் நம்ப வைக்கும் நடுச் சாமத்தில் பொழிகின்ற சுழியோட்டத்தில் கருமுளைக்குங் கொடு நிகழ்வில்லையென்ற உண்மைப் பொலிவுறும் பொழுதே தமிழின் இறுதிச் சாவோலை வரையும் காலம்.
விதி!

இதைவிடுத்தெதை விதைப்பேன் சொல் இலஷ்மி?

பரமுவேலன் கருணாநந்தன்
30.03.2007







Monday, February 19, 2007

எஸ்.எஸ்.குகநாதன்: என்னைப்பற்றிய...



எஸ்.எஸ்.குகநாதன்:
என்னைப்பற்றிய அவதூறுகளுக்குப்பதில்!


அன்பு வாசகர்களே,வணக்கம்!


நம்ம தேசத்துத் தமிழர்கள் தனி நாடு கேட்டுப் போராட வெளிக்கிட்டான்கள்.

அதை தத்தமது தேவைக்காகவும்,தமது வர்த்தக மற்றும் நிதிச் சேகரிப்புக்காவும்,பொருள் குவிப்புப் போட்டிக்காகவும் தொடங்கி, இப்போது பல்லாயிரம் மக்களைக் கொன்று- இந்தத் தொகை இலட்சத்தை எட்டும்போது, புலம் பெயர்ந்த மண்ணில் தத்தமது வியாபாரப் போட்டிக்காகப் புலிகளின் பினாமிகளும் ஈழத்து வியாபாரத் திமிங்கிலங்களும் தெருச் சண்டை போடுகிறாங்கள்.

அன்றைக்குத் தமிழ் ஒலி-தமிழ் ஒளி எனும் வானொலி,தொலைக்காட்சியை எழுத்தாளர் காவலூர் ஜெகநாதனின் தம்பி குகநாதன் புலம்பெயர் நாட்டில் முதன் முதலாக ஆரம்பித்து வியாபாரத்தில் ஓ.ஓஓஓஓஓஓஓஓஓ என்று ஓங்கியபோது, அதைப் புலிகள் கைப்பற்ற தலையால் கிடங்கிட்டுப் பற்பல மோசடியூடே கைப்பற்றினார்கள்.


குகநாதனோ வர்த்தகத் துறையில் முறைப்படிப் பட்டங்கள் பெற்றுத் தொழிலைத் திறம்பட நடாத்துவதில் எல்லோரையும் விஞ்சுபவர்.அவருக்கே தண்ணி காட்டிய புலிப் பினாமி வர்த்தகர்கள், மீளவும் இலண்டனில் இருந்து ஒலிப் பரப்பாகிய ஐ.பி.சி. எனும் வானொலியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது அதை ஸ்தாபித்த நம்ம குரு திரு.தாசியஸ் என்ற முன்னாள் கல்விப் பரிசோதகர்-நாடக இயக்குனர் எவ்வளவு போராடியும் முடியாது ஓரம் போனார்.அந்தோ அதுவும் புலிகள் வசமாகின.

இப்போது புதிய போர்!

புலிகளின் பினாமி வர்த்தகர்களுக்கும் பொதுஜனச் சாதரண வர்த்தகர்களுக்கும் போட்டி மேல் போட்டி.இப்போது தெருச் சண்டை போட்டு,ஆளாளுக்குத் தாக்குதல் தொடுத்தபடி.

இது ஈழப் போராட்டத்தின் அடுத்த பிரதிபலிப்பு.

ஈழத்தில் இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சி எப்படி இலட்சம் மக்களைக் கொல்லும் போராட்டமாக மாறியதோ,அதேமாதிரி இங்கேயும் ஐரோப்பாவில் தமிழன் அடிபடுகிறான் வர்த்தகப் போட்டியில்.


இவன்கள் எப்போது திருந்துவது?

சாதரணமாக இதை எடுத்துவிடாதீர்கள்.

இதற்கும் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கும் மிகவும் பல ஒற்றுமைகள் உண்டு.அதனது முரண்பாடு இங்கே துலக்கமுறுகிறது.

இந்தத் தெரு நாய்கள்தான் தமிழருக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பான்களாம்!

ஒருவனையொருவன் துரோகி சொல்லிப் பணம் உழைக்கும் தற்குறிகளா நமது மக்களின் விடுதலைக்குப் போராடி,வென்றெடுத்து நமது மக்களை விடுதலை செய்வது?

எல்லாம் பணத்துக்கும்-சந்தை வாய்புக்கும்தான் தமிழ்,தமிழ்-உறுவே,தொப்பிள் கொடி உறவே!கருணாநிதியும் திராவிடக் கட்சிகளும் இவர்களிடம் பிச்சை எடுக்க வேணும்.

இன்னும் அமைதியானால் சொல்லுவான்கள் பல.
கேளுங்கள் இவர்கள்தான் தமிழின் காவலர்கள்!
தூ....


கருணாநந்தன பரமுவேலன்
19.02.07



---------------------------------------------


என்னைப்பற்றிய அவதூறுகளுக்குப்பதில்:

எஸ்.எஸ்.குகநாதன்

.
கடந்த சில நாட்களாக என்னைப்பற்றியும் டான் தொலைக்காட்சி பற்றியும் உண்மைக்குப்புறம்பான செய்திகளை சில இணையத்தளங்கள் வெளியிட்டுவருகின்றன. தமிழகத்தில் எமது டான் தொலைக்காட்சி தமிழகத்திலுள்ள தொலைக்காட்சி விநியோகஸ்தர்களை மோசடி செய்துவிட்டது போலவும் அதற்காக எனது பெயரைக் குறிப்பிட்டு குகநாதனின் மோசடி என்றும் அந்த இணையத்தளங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

முதலில் டான் தொலைக்காட்சி எனக்கு மாத்திரம் சொந்தமானதல்ல என்பதும், குறிப்பாக இந்தியாவில் டான் தொலைக்காட்சியை ஒளிபரப்பிவரும் டான் ரெலிவிசன் நிறுவனத்தில் நான் 30 சதவீத பங்குகளை மாத்திரமே கொண்டிருக்கின்றேன் என்பதையும் மிகுதி 70 வீத பங்குகளுக்கு இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களே சொந்தக்காரர்கள் என்பதையும் இந்த இணையத்தளங்கள் மிக இலகுவாக மறந்துவிடுகின்றன.
தமிழகத்தில் 2 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு நடிகர் பாண்டியனைக் கைதுசெய்கின்ற பொலிசார் பல லட்சங்களை மோசடி செய்திருந்தால் அந்த இந்தியர்களை விட்டுவைப்பார்களா என்பதை யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

டான் தொலைக்காட்சியின் விநியோகஸ்தர்களாக அவர்களே விரும்பி அதற்காக முறைப்படி ஒப்பந்தம் செய்துகொண்டு விநியோகஸ்தர்களாகினார்கள். அதற்காக முற்பணமும் அந்த நிறுவனத்தின் பெயரில் அதன் வங்கிக் கணக்கிற்குத்தான் செலுத்தினார்கள். அவர்களை டான் நிறுவனம் ஏமாற்றியதென்றால் அந்த நிறுவனத்தின் மீதுதான் அவர்கள் புகார் கூறலாம். அந்தப் பணத்தை நான் தனிப்பட்ட முறையில் மோசடி செய்திருந்தால் அந்த நிறுவனத்தின் மற்றைய பங்குதாரர்கள் தான் என்மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சுமத்தலாம்.அதுதவிர, மூன்று தொலைக்கட்சி சேவைகளை தமிழிலும் ஐரோப்பாவின் பிரபல தொலைக்காட்சிகளான ய+ரோ நிய+ஸ(Euro news) ரேஸ்ரிவி (Trace TV) என்ற மிய+சிக் செனல் ஆகியவற்றையும் இந்தியாவில் ஒளிபரப்பி வந்தது வருகின்றது டான் ரெலிவிசன் நிறுவனம். இந்த ஐந்து தொலைக்காட்சிகளையும் 2005 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஒளிபரப்புவதற்கு அந்த நிறுவனம் எத்தனை கோடிகளை முதலிட்டிருக்கும் என்பதையும் இந்த இணையத்தளங்கள் மறந்துவிடுகின்றன.



டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி இன்றும் இந்தியாவில் ஒளிபரப்பாகி வருகின்றது என்பது மாத்திரமல்ல ஐரோப்பாவின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ய+ரோ நிய+ஸ் தொலைக்காட்சியை இந்தியாவில் மறுஒளிபரப்புச் செய்துவருவதும் டான் ரெலிவிசன் நிறுவனம்தான் என்பதும் பலருக்குத் தெரியாவிட்டாலும் அந்த விநியோகஸ்தர்களுக்குத் தெரியும். டான் ரிவி தமிழகத்தில் ஒளிபரப்பைத் தொடங்கியபோது அதனை தமிழகத்தில் சன்ரிவிக்குச் சொந்தமான எஸ்.சி.வி. என்ற கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் தவிர்ந்த ஏனைய அனைத்து கேபிள் ரிவி ஆப்பரேட்டர்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்பினார்கள் என்பதையும் சில அதிகாரத்திலுள்ளவர்களின் நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் அந்த கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் ஒளிபரப்பியதையும் ஏன் இந்த இணையத்தளங்கள் குறிப்பிட மறந்துவிட்டன என்பதும் தெரியவில்லை.

ஒரு ஈழத்தமிழனின் தொலைக்காட்சியைக் கண்டு அந்த ஜாம்பவான்களே பயந்தார்கள் என்றால் அதைக்கண்டு உண்மையான ஈழத்தமிழன் மகிழ்ச்சியே அடைந்திருப்பான். ய+ரோ நிய+ஸ் தொலைக்காட்சி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டில் ஒளிபரப்பாகும் ஒரு மிகப்பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தின் தொலைக்காட்சியை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு ஒரு ஈழத்தமிழன் அனுமதியைப் பெற்றிருக்கின்றான். இது என்னைப்பொறுத்தவரை பெருமைக்குரியவையே எம்மை ஒழிப்பதற்காக என்றே சிலர் எடுத்த நடவடிக்கையின் விளைவாக நாம் எமது செயற்பாடுகளை சென்னையில் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கின்றோமே தவிர, எமது செயற்பாடுகளை முற்றாக நிறுத்திவிடவில்லை.ய+ரோ நிய+ஸ், ரேஸ்ரிவி என்பன இன்றும் இந்தியா எங்கும் ஒளிபரப்பாகிவருவதுடன், இந்தியாவின் முன்னணி டிரிஎச் சேவையான டிஷ் ரிவியிலும் இன்றும் ஒளிபரப்பாகிவருகின்றது. டான் ரெலிவிசன் நிறுவனம் பாண்டிச்சேரியில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம், அதன் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் இல்லத்திலேயே இயங்கிவருகின்றது. சென்னை கலையகம் மாத்திரமே தற்காலிகமாக மூடப்படிருக்கின்றது. நான் இந்தியாவுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த இணையத்தளங்கள் குறிப்பிட்டுவருகின்றன. நான் கடந்த வாரமும் அங்குதான் இருந்தேன் என்பதை எமது நண்பர்கள் அறிவார்கள்.
(படங்களுக்கு நன்றி.நிதர்சனம்.கொம்)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சேர்ந்து தொலைக்காட்சியைத் தொடங்க வேண்டும் என்றாலும் அதற்காக கோவை நந்தனை அனுப்பி அந்த ஏற்பாடுகளைச் செய்கின்ற அளவிற்கு ஒன்றும் விபரம் தெரியாதவன் நானல்ல. தொலைக்காட்சி நடாத்துவது என்பது இணையத்தளங்களை நடாத்துவது போன்ற ஒன்று என்று கருதுபவர்கள் தான் கோவை நந்தனை அனுப்பி அந்த பணிகளை செய்ய முயலலாம்.என்னைத் தனிப்பட்ட வகையில் கேவலப்படுத்துவதற்காக சில இணையத்தளங்களும் சில தனிப்பட்டவர்களும் செய்துவருகின்ற விசமப்பிரச்சாரமே இது என்பதை எமது ஊடகப்பணியை நேசிக்கும் அன்பர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.அண்மையில் பாரிஸ் நகரில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாரிஸ் வந்தபோது நானே கூட்டத்திற்கு இடம் ஏற்பாடுசெய்ததாகவும் புதிய கதை ஒன்று சோடிக்கப்பட்டிருந்தது.

ஒரு அமைச்சரின் வருகைக்காக கூட்டத்தை தமது அலுவலகத்திலேயே சிறிலங்கா தூதரகம் ஏற்பாடுசெய்திருந்தது. இதற்கு குகநாதனின் உதவி எதற்காக பயன்பட்டது என்பது தெரியவில்லை. அதுமாத்திரமல்ல, அவர் வருகையின்போது நான் இந்தியாவில் இருந்தேன்.ஓராண்டிற்கு முன்பு பிரான்சிலிருந்து ஒளிபரப்பான குகநாதனின் தமிழ்ஒளி என்கின்ற தொலைக்காட்சி இப்போது இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது என்று மிகச் சாதாரணமாக இந்த இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன. ஓராண்டிற்கு முன்பு மாத்திரமல்ல, பத்து ஆண்டுகளாக தமிழ்ஒளி ஐரோப்பிய மண்ணில் வந்துகொண்டிருக்கின்றது என்பதும் சில வாரங்களாக மாத்திரம் காணாமல்போன அந்த தொலைக்காட்சி இவ்வாரம் முதல் மீண்டும் வந்திருக்கின்றது என்பதையும் இந்த இணையத்தளங்கள் வேண்டும்என்றே மறைத்துவிட்டன. தமிழ்ஒளி என்ற அந்த தொல்லைக்காட்சி தான் இன்று ரிரிஎன் என்ற பெயரில் தேசியத்தொலைக்காட்சியாக மாற்றப்பட்டது என்பதையும் இன்று புதிதாக இணையத்தளம் மூலம் ஊடகத்துறைக்கு வந்த இளசுகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இனியாவது தெரிந்துகொள்வது நல்லது.

நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் நண்பர்கள் சிலருடன் இணைந்து தொலைக்காட்சியை ஆரம்பித்தபோது என்னை நம்பி நிதி உதவி செய்துவிட்டு இன்றுவரை அது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் நண்பர்கள் - இன்று வரை என்னுடன் கைகோர்த்து நிற்கும் பணியாளர்கள் வேண்டுமானால் என்னை நோக்கி தங்கள் சுட்டுவிரல்களை நீட்டலாம். வேறு எவருக்கும் என்னை நோக்கி சுட்டுவிரல்களை மாத்திரமல்ல கண்பார்வையைக் கூடத் திருப்பும் தகுதியோ அருகதையோ இல்லை.


தேனியீலிருநது...

Thursday, February 08, 2007

பொட்டிட்டு மாலையணிவித்த பூசாரி கொலை.

பொட்டிட்டு மாலையணிவித்த பூசாரி கொலை.


கொலையும்,அதன் பின்னான கருத்துக் கட்டல்களும் மனிதரைத் துச்சமாக மதிக்கும் இழி நிலையாக...

நியாயப்படுத்தல் -பழியை மற்றவர்கள் மீது தூக்கி வாரி எறிவதும் ஒழிக!


கொலையுண்ட மனிதர்களை, அவர்கள் குடும்பத்தின் வலியை உணரத்தக்கவொரு காலம் எழுக.எத்தனை கொலைகள் "துரோகி" அரசியலில் நடந்துவிட்டன!

இந்தக் கொலைகளின் பின்பு அரசியல் நடத்துபவர்கள்,கொலைகளையே கூலிக்குச் செய்பவர்கள் என்றபடி இலங்கை மண்ணில் கொலை மொழியைப் புரிந்து கொள்ள முடியாதளவு அது கடினமான மொழியாக இருக்கிறது.இது மனித மொழிகளுக்கு அப்பாற்பட்ட பணமொழியோடு உறவாடுவது.இங்கே அதைப் புரிவதற்கு இலங்கைக் கொலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்தே புரிந்து கொள்ள வேண்டும்.



இலங்கையில் நிலவுகின்ற இரு வேறு அரச ஜந்திரங்கள் தத்தமது இருப்புக்கும்,போட்டி அரசியலுக்கும் அப்பாவி மக்களைப் பலியெடுப்பது நாள்தோறும் நடை பெறும் அற்ப விசயமாகப் போய்விட்டது.ஒன்று ஈழத்துக்கானது மற்றது தேச ஒருமைப்பாட்டுக்கானது என்ற பரப்புரைகளோடு நாளொரு வண்ணம் மேனியொரு பொழுதாய் வளரும் கொலை அரசியல் இலங்கையெங்கும் மனிதத் தலைகளை உருட்டியபடி...


அரசியலில் ஊக்கம் பெறும் நலன்கள்மீதான அதீத அக்கறை தமது இருப்பின் நிச்சியமற்ற உணர்வில் அழிக்க முனையும் இலக்கு மனித உயிர், உடமையாக இருக்கிறது.நடப்பது மக்களின் நலனுக்கான-விடுதலைக்கான யுத்தமாக இலங்கையின் இருவேறு இராணுவ ஜந்திரங்களும் சொல்கின்றன.ஆனால் விடுதலையென்பதை நிசத்தில் அவர்களுணருவது தமது ஆளுமையை மட்டுமேயாகும்.இத்தகைய நோக்கு நிலையிலிருந்து முன் தள்ளப்படும் இன முரண்பாடுகள் முற்றிலும் மக்கள் நலனிலிருந்து அன்னியப்பட்டவொரு அரசியலை முன் மொழிகின்ற இன்றைய சூழல், மனிதக் கொலைகளின் பின்னே தனது வக்கிரமான அதிகார வெறியை மறைத்துத் துரோகியாகக் கொலையுண்டவரின் பிணத்தின் மீதேறி அரசியல் செய்கிறது.

பச்சைப் பாலகன் துரோகி,
கற்பிணித் தாய் துரோகி,
பல்லுப் போன பாட்டன் துரோகி,
ஏர் பிடிப்பவன் துரோகி,
போராடுபவன்(ள்) துரோகி,
அவன் துரோகி-இவள் துரோகி
துரோகி,துரோகி...


கொலையுண்டோரே! என்ன சொல்ல?


இதுவரை கொலையாகாத நாங்கள் உங்கள் மறைவுக்குச் சடங்கு செய்ய முனையவில்லை.மாறாக நீங்கள் கொல்லப்பட்டதற்கான காரணங்களைத் தேடுகிறோம், இனியும் இன்னொரு கொலையாகாத அரசியலைக் கோருவதற்காக.


போராட்ட அரசியலானது இன்று எந்தவொரு மனிதரையும் துரோகியாக்கியோ அல்லது எதன் பெயராலோ கொல்லுகிறது.







Monday, January 29, 2007

நாம் போற்றத்தக்க மகா கலைஞன்!


நாம் போற்றத்தக்க மகா கலைஞன்!



கீற்று இணையச் சஞ்சிகையில் திருவாளர் சார்ளிச் சப்பிளின் குறித்தவொரு துணுக்கு எழுதப்பட்டள்ளது!அதை வாசித்தபோது எனக்கு அவரது ஞாபகம் மேவிக்கொள்கிறது.அநேகமாகச் சார்ளிச் சப்பளீனின் அனைத்துப் படங்களையும் பார்த்துவிட்டேன.; கூடவே அவரது அனைத்துப் படங்களும் என்னிடம் இருக்கிறது.இந்த மனிதரின் படங்கள் யாவையும் எனது மனதுக்குப் பிடித்துப்போய் பொக்கிஷமாகச் சேர்த்து வைத்திருக்கிறேன்.


எதற்காக?


இவரது செயற்பாடுதான் என்ன?



உலகத்திலுள்ள எந்தத் திரைப்படக் கலைஞனுக்குமில்லாத சமூக அக்கறை இந்த மனிதரிடம் குடிகொண்டிருந்தது,மிகச் சிறப்பாக விளிம்புநிலை மக்களைப்பற்றிக் கரிசனையோடிருந்த இந்தக் கலைஞனை எனக்குப் பிடித்துப்போனது.


உலகத்தில் எத்தனையே மனிதர்கள் பிறக்கிறார்கள்,செத்தொழிந்து போகின்றார்கள்.ஆனால் சார்ளிக்குச் சாவேயில்லை என்பேன்!


சார்ளியின் படங்கள் எல்லாமே எனக்குப் பிடித்தவை.எனினும் அவரது நவீனக் காலம்((Modern Times -1936) எனும் படமே இந்த நூற்றாண்டிலும் பேசத்தக்க படமாகும்.


இந்தவுலகத்தில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்காக உழைத்து ஓடாய்ப்போகும் வதையைப்பேசும் அற்புதமான படைப்பு! அவரது இந்தப்படமானது நவீனக்காலத்தின் உருவாக்கமானது மனிதர்களை அவர்களது படைப்பாற்றிலிலிருந்து அன்னியப்படுத்தும் காலத்தின் கொடுமையையும்,அதன் வாயிலாக ஜந்திரத்தின் முன் மனிதன் செல்லாக் காசாக அடிமைப்பட்டுப்போன அவஸ்த்தையைச் சொல்லும் விதத்தில், சார்ளிச் சப்பிளின் மிக நேர்த்தியாகக் கலைப்படைப்பைக் கையாளுகிறார்.


இவரது அரிய கலைத்திறானது மக்களின் நலனை முதன்மைப்படுத்தி,அவர்களது உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்த திறனாகும்.காலத்தில் வாழ்ந்த கடைசி மனிதர் இந்தச் சார்ளிச் சப்பிளின்தான் என்று அறைகூவ முடியும்.


இன்றிருக்கும் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையானது வெறுமனவே இலாப வேட்கையுடையதல்ல.அது தனது வியாபித்த இருப்புக்கான போராட்டத்தையும் செயற்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு பொறிமுறையாகும்.இந்தச் சூழலில் மனித நாகரீகத்துக்குப் புறம்பான வகைகளில் அதன் அனைத்துப் பரிணாமங்களும் நிலைபெற்றிருக்கும் தறுவாயில் சாப்பிளீனின் நவீனக் காலமெனும் படம் மிகப் பெரிய அளவில் இந்தச் சமுதாயத்தைக் கேலிக் குள்ளாக்கி விமர்சிக்கிறது.ஜந்திரத்தோடு ஜந்திரமாகும் மனிதர்கள் இறுதியில் அதன் வீச்சுக் ஈடுகொடுக்க முடியாது அழியும் அவலத்தைப் பேசுவதையே முதன்படுத்தி,மக்களின் உரிமைக்காகப் பேசுவதில் சார்ளி மனித்துவத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறர்ர்.


இன்றையத் தமிழ்ச் சினிமாவைப் பார்க்கும்போது நமது சமுதாயத்தில் மனிதநேயத்தை உணராதவர்களே அதிகமாகி வருவதை அறியமுடியும்(சேரன் நீங்கலாக) கோடம்பாக்கமானது வர்த்தகச் சினிமாவின் வடிகட்டிய மாபியாக்களின் இருப்பிடமாகும்.இங்கு ஆணையும் பெண்ணையும் அறுத்து அந்தரத்தில் தொங்கப்போடும் கசாப்புக்கடை நிலையில், காசுபண்ணும் நிலையே கலையாகிறது.நாம் சார்ளிச் சப்ளீனிடமிருந்து நிறையக் கற்கவேண்டும்.


இந்தச் சமுதாயத்திலிருந்துகொண்டு,அதாவது கொடிய அடக்குமுறைச் சமுதாயத்துள் தானுமொரு உறுப்பினராக இருந்துகொண்டே மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் இன்றையச் சினிமா நட்ஷத்திரங்கள் ,சார்ளிச் சப்பிளினிடமிருந்து மனித நேசிப்பையும், அதனூடாகச் சமுதாயத்தில் உழைப்பவர்கள்படும் துன்பத்தையும் காணமுயலும் சூழல் வரவேண்டும்.என்றுமில்லாதவாறு உழைப்பவர்கள் படும் துன்பம் இன்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.அந்த அவலத்தைப் பேசத்தக்க எந்தக் கலைவடிவத்தையும் தமிழர்கள் இதுவரை நேர்த்தியாகத் தரவில்லை.மானுட நேசிப்பற்றவொரு சூழலில் எவராலும் அந்த மகத்தான பங்கைச் செய்யமுடியாதென்பதற்குத் தமிழ்ச் சினிமாவும் அதன் கலைஞர்களுமே சாட்சியாக இருக்கின்றார்கள்!


இங்கேதான் சார்ளியின் சமூகநோக்கும்,வர்க்கவுணர்வும் மிகவும் ஒழுங்கமைந்த முறையில் உருவாகி அவரை மனிதத்தைப் பேசத்தூண்டும் மகத்தான மனிதராக்கிறது!இழந்துவரும் வாழ்வைக்கொண்டுள்ள மனிதனை இந்தவுலகம் உழைப்பாளியாக்கி உருக் குலைப்பதில் விடாமுயற்சியாவுள்ளதை அவர் தனது படைப்புகளில் சுட்டிக்காட்டி, இந்தச் சமுதாயத்தின் கோரத்தனத்தை அம்பலப்படுத்தி,அதற்கெதிரானவொரு வலுமிக்கப் போராட்டத்தைச் செய்தார், இந்தத் தரணத்தில்தான் ஜேர்மனியச் சர்வதிகாரி கிட்லருக்கெதிராகவும் அவரால் படைப்பைத் தரமுடிந்தது.அவரது சர்வதிகாரி(The Great Dictator-1940)எனும் படமானது மிகப்பெரிய பாசிச எதிர்ப்புப் படமாகும்.தான் வாழ்ந்த காலத்தில் தன் படைப்பை மிகப்பெரும் ஆயுதமாக முன் நிறுத்தி, இந்த முதலாளியத்தின் முதுகெலும்பை முறிப்பதற்காகப் போராடிய மேதையே சார்ளி என்பேன்.


எங்கோவொரு வழியில் போனபோது அவரையும் எண்ணிக்கொண்டேன்!



பரமுவேலன் கருணாநந்தன்


Sunday, January 21, 2007

இரும்புப் பிடிக்குள் யாழ்ப்பாணம்


இரும்புப் பிடிக்குள் யாழ்ப்பாணம் மட்டுமா?

இல்லை!

யுத்தம் நடக்கும் அனைத்துத் தமிழ்ப் பகுதிகளுக்கும் இதுவே தலைவிதி.

இதிலிருந்து மீளக்கூடிய எந்த அரசியல் முன்னெடுப்பும் தமிழ் பேசும் மக்களுக்குச் சாத்தியமில்லை.தமிழ்பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய இந்த யுத்தம் மக்களின் சமூக சீவியத்தைத் தகர்த்து அவர்களை நாதியற்றவர்களாக்கிய கையோடு,இந்த மக்களின் அனைத்து உரிமைகளையும் மட்டுப்படுத்தி, இலங்கை அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் அரசியலை முன்னெடுக்கிறது.

புலிகள் ஒவ்வொரு முறையும் யுத்தத்தின் வெற்றி தோல்விகளில் கவனத்தைக் குவித்துத் தமது இருப்புக்கான போராட்டத்தையே குறிவைத்திருக்கிறார்கள்.


என்ன செய்ய?


மக்களின் போராட்டமென்றால,; "மக்களை ஆயுதம் தூக்கிப் பயிற்சியெடுக்க வைத்துப் படம் காட்டுவதென்று புரிந்துள்ள" இந்த அரசியலை கேள்வி கேட்டு,விமர்சித்துக் கொள்ளும் அந்தப் பண்பும் மக்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.


ஒரு நிறுவனத்தை இயக்கும் இயக்குனர் தனது முடிவுகளால் அந்த நிறுவனம் பின் தங்கும் பட்சத்தில்"ஏன்-எதற்கு,எப்படி,எதற்காக"என்று காரணங்களைத் தேடி அதன் முடிவுகள் தனது தவறாக இருக்கும்போது,தனது பதவியையே துறந்து புதியவருக்கு-திறமையுள்ளவருக்கு வழி விடுகிறார்.


நம்மிடம் தவறிருக்கிறது.

நமது போராட்டத்தில் சரியான செல் நெறியில்லை.


எமது முடிவுகள்,உறவுகள் தப்பானவை.


எமது எதிர்காலத்துக்கு உதவாத அரசியலை உந்தித் தள்ளும் தலைமையாகப் பிரபாகரன் தலைமை கையாலாகாத தலைமையாக இருக்கிறது.இந்தத் தலைமை தன்னை விமர்சனம்,சுய விமர்சனம் செய்து,தகமுடையவர்களைத் தலைமைக்கு அமர்த்துகிற பண்பின்றிச் சீரழிகிறது.அந்நியர்களுக்கு நம்மை அடகு வைக்கிறது.


எந்தப் பொழுதிலும் தகுதியுடையவர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியலை முன்னெடுக்கவில்லை!

இராமநாதன்,அருணாச்சலம் முதல் இன்றைய பிரபாகரன்வரைத் தமிழ்பேசும் மக்களின் உண்மையான உரிமைகளுக்காகப் போராடவில்லை.இங்கே இவர்களிடத்தில் தமிழ்பேசும் மக்களின் உண்மையான உரிமைகளை அவர்கள் சார்ந்து முன்வைக்க முடியாதபடி அந்நிய நட்புகள் கட்டிப் போட்டுள்ளன.


பிரபாகரன் என்பவரால் எந்த முரண்பாட்டையும் சரிவர ஆய்ந்து எமது மக்களின் நலனுக்கேற்ற வகையில் போராடக்கூடிய ஆற்றலில்லை.அவரால் இழக்கப்போவது நமது சுயநிர்ணய உரிமை மட்டுமல்ல,உயிh வாழும் அனைத்து வளங்களுமே!இதற்கு யாழ்ப்பாணம் நல்ல உதாரணம் என்பதற்குக் கீழ்வரும் கட்டுரை சான்று சொல்லும்.


இன்றைய நமது வாழ் சூழல் ஏனிப்படி உருவாகியது?


இதற்கான காரணிகள் எப்படித் தோற்றம் பெற்றன?


நம்மால் இத்தகைய விளைவுகளைத் தடுத்துக்கொள்ள முடியாதுபோனதற்கான காரணம் யாது?


கிழக்கில் கருணா பிளவு ஏன்-எப்படி, நிகழ்ந்தது?


இத்தகைய பிளவுகளை நம்மால் தடுத்திருக்க முடியாதா?


இவற்றைச் செய்யத் தக்க தகமை ஏன் இல்லாதிருக்கிறது?


இவை கேள்விகள்.


எமது தலைமையிடம் எந்த வக்கும் இல்லை.

இவர்கள் செய்யும் போராட்டச் செல் நெறி இன்னும் பல இழப்புகளைத் தமிழருக்கு வழங்கப் போவது நிச்சியம்.நாம் அடிமையாவது அந்நிய சக்திகளால் மட்டுமல்ல-நம்மாலும்தான்.


இதைத் தவிர்த்து, எப்படி நமது உரிமைகளை மீட்பது?

பிராபாகரன்மீதான தான்தோன்றித்தனமான மிகை மதிப்பீடுகள் உதவாதவை.அவரால் தமிழரின் இந்த இழி நிலையைப் போக்க முடியாது.அவரால் மக்களின் போராட்டத்தைச் செய்ய முடியாது.அதற்கான ஆற்றலும்,அறிவும் பிரபாகரனுக்கு இல்லை என்பதைக் கடந்த கால் நூற்றாண்டாகப் புலிகள் நிரூபித்து வருகிறார்கள்.

அதற்கு இந்த யாழ்ப்பாணம் நல்ல சான்று!


இனியும் பிராபாகரனை நம்பி,நமது போராளிகள் அடங்கிப் போகலாமா?


இல்லை!


புதிய தலைமை,புரட்சிகரத் தலைமையாக,புரட்சிகரமான கட்சியாகப் புலிப்படை மலர்ந்தாக வேண்டும்.இந்தத் தேசபக்த இளைஞர்கள் தமது கட்சியைப் புரட்சிகரமான வேலைத் திட்டத்தோடு நகர்த்த வேண்டும்.இவர்கள் தமது இன்றைய தலைமையைக் கேள்விக்குட்படுத்தியாக வேண்டும்.


கருணாநந்தன் பரமுவேலன்.




இரும்புப் பிடிக்குள் யாழ்ப்பாணம்

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் திகதி யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்குள்ள சுமார் 6 இலட்சம் மக்களும் இரும்புப் பிடிக்குள் இறுக்கப்பட்டு அவர்களின் அடிப்படைச் சுதந்திரங்கள் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன.


அரசியல், இராணுவ, பொருளாதார நலன்களுக்காக யாழ்ப்பாண மக்கள் திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

உணவு , உடை , உறையுள், மருத்துவம் , விவசாயம் , மீன்பிடி, கல்வி , பாதுகாப்பு, சமய வழிபாடு , போக்குவரத்து உட்பட சாதாரண ஒரு மனிதனுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படைச் சுதந்திரங்கள் அனைத்து யாழ். மக்களுக்கு அறவே மறுக்கப்பட்டுள்ளன. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதோடு, அச்சு ஊடகங்களும் முழுமையாக செயலிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.


அனைத்துக்குமே பிறரிடம் கையேந்தும் அடிமைத்தனம் ,அவல வாழ்வு, வெளிப்படையாக எதையும் பேச முடியாத நிலை, இன்னும் சொல்லப்போனால் ஒரு வேளை உணவுக்கு கூட கையேந்த வேண்டிய பிச்சைக்கார வாழ்வு என இன்றைய குடாநாட்டு மக்களின் வாழ்வு ஏதோ நகருகின்றது.


குடாநாட்டு மக்கள் ஒவ்வொரு துறையிலும் அனுபவித்து வரும் துன்பங்கள் தான் என்ன?




உயிர் வாழும் உரிமை :





யாழ். மக்கள் உட்பட வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் உயிர்வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு காணாமல் போதல் , படுகொலை என்பன தொடர்கின்றன. அச்சம் சூழ்ந்த அவல நிலையே எங்கும் வியாபித்துள்ளது.

குடாநாட்டை விட வட, கிழக்கின் ஏனைய பகுதிகளில் விமானத்தாக்குதல்கள், எறிகணைத்தாக்குதல்களால் சதா மக்கள் கொல்லப்படுகின்றார்கள்.


உணவு போதியளவு அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெறமுடியாத சூழ்நிலையில் நாட்கணக்கில் ,மணிக்கணக்கில் வீதிகளில் உணவுக்காக காத்திருக்க வேண்டிய அவலநிலை. 2006 ஆகஸ்ட் 11 இன் பின்னர் எந்தவொரு பொருட்களையுமே போதியளவு பெறமுடியாதுள்ளது. அரிசி, பருப்பு , சீனி முதல் சவர்க்காரம், சம்போ வரை தேடி அலைய வேண்டிய நிலை.


இருப்பிடம் வலிகாமம் , தென்மராட்சி பகுதிகளிலிருந்து ஏற்கனவே இலட்சக் கணக்கானோர் துரத்தியடிக்கப்பட்ட நிலையில் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் ஆகஸ்டின் பின்னர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். உயர் பாதுகாப்பு வலயம் மேலும் விஸ்தரிக்கப்பட்டுவருகின்றது.



நடமாடும் சுதந்திரம்:



ஆகஸ்டில் ஆரம்பமான மோதலைத்தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 மாதங்கள் கடந்த நிலையிலும் தொடர்கின்றது. நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகிறது.



ஊடக சுதந்திரம் :



குடாநாட்டு பத்திரிகைகளுக்கான அச்சிடும் தாள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் எடுத்து வரமுடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் இன்றுவரை இப்பொருட்களை எடுத்துவர அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அனைத்துப் பத்திரிகைகளும் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.



இவற்றை விட...



இராணுவ முகாம்களின் முன்பாகவும் மக்களை திரளச் செய்து அடிமை உணர்வை வளர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பசிக் கொடுமையால் பல்லாயிரம் மக்கள் இங்கெல்லாம் நாளாந்தம் கையேந்தி நிற்கின்றனர்.



* எரிபொருள் தட்டுப்பாட்டால் நம்பிக்கையோடு பயிர்ச்செய்கையை ஆரம்பித்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். பயிர்கள் வாடிவதங்குகின்றன. மண்ணெண்ணெய் விலை 160 ரூபா, உரம் 6 ஆயிரம் ரூபா என விலை உயர்ந்துள்ளன.



* சுமார் 10 வீத மீன்பிடிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கும் திடீர் திடீரென வேட்டுவைக்கப்படுகிறது. மீனவக் குடும்பங்கள் யாவும் அக்கினிப் பெருமூச்சு விடுகின்றனர்.



* கைத்தொழில்கள் பலவற்றுக்கு வேண்டிய மூலப்பொருட்கள் தென்னிலங்கையிலிருந்து வர வேண்டும். அனைத்தும் தடைப்பட்டுள்ளதால் அத் தொழிலகங்கள் பல மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.



* வணிக நிலையங்களில் விற்பனைப்பண்டங்கள் இல்லாமையால் ஊழியர் குறைப்பு மிகுந்து வருகின்றது.




* சீமெந்து மருந்து போல் கிடைக்கிறது. ரூபா 1500-2000 வரை விற்பனையாகிறது. இதனால் கட்டுமான வேலைகள் அனைத்தும் ஸ்தம்பித்து விட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான கட்டிடத் தொழிலாளிகள் வேலையிழந்துள்ளனர்.



* கட்டுமான வேலைகள் நின்றதால் தச்சுத் தொழில் ,கல்லுடைக்கும் தொழில் போன்றனவும் ஸ்தம்பித்துவிட்டன.



* பாடப்புத்தகங்கள் , கற்றல் உபகரணங்கள் இன்மையால் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் படுகுழியில் தள்ளப்படுகின்றன.



மாணவர்கள் குளிக்கவோ, சீருடைகளைத் துவைக்கவோ, சவர்க்காரம் இன்மையால் மன விரக்தி கொண்டுள்ளனர்.சில அதிபர்கள் வர்ண உடைகளை அணிய அனுமதி வழங்க முற்பட்டுள்ளனர்.



* பல்கலைக்கழகம் திறக்கப்படாமையால் உயர்கல்வி பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக்கழகம் புக இருக்கும் மாணவர்களும் மனம் வெறுத்தும் பிந்திய நிலையில் அங்கலாய்க்கின்றனர்.


* சமய வழிபாடுகளுக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய்,கற்பூரம் முதலான பூசைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு.
அன்னதானத்துக்கான பொருள்கள் இன்மையால் பிள்ளையார் கதை, திருவெம்பாவையை ஒட்டி நடக்கும் உபயங்கள் மிகப் பெரும்பான்மையான கோயில்களில் நடைபெறுவதில்லை.


* மக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும் முக்கிய இடங்களாக மருத்துவ மனைகள் அமைந்துள்ளன. சுமார் 75 ஆயிரம் மக்கள் வரை சிக்குன் குனியாவால் பீடிக்கப்பட்டுள்ளனர். இதனால் சத்துணவு இல்லாத நிலையிலுள்ளோர் மரணிக்கின்றனர்.



* அரச மருந்தகங்களில் போதிய மருந்து வழங்கப்படுவதில்லை. வெளிக்கடைகளில் தட்டுப்பாடு. ஆதலால் உச்சவிலை. பனடோல் ஒன்று ரூபா 5 முதல் 8 வரை செல்கிறது.

-யாழின்மைந்தன்


நன்றி:

தினக்குரல்



Friday, November 10, 2006

கதிரவெளி முற்றுப் புள்ளியல்ல!

கதிரவெளி முற்றுப் புள்ளியல்ல!


இலங்கையை மாறி மாறியாளும் சிங்களக் கட்சிகள் இதுவரை இலங்கை மக்கள் அனைவருக்கும் மரணத்தைத் தவிர வேறெந்த நன்மையையும் செய்யவில்லை!இலங்கையின் இதுவரையான அரசியல் போக்குகளை மெல்ல ஆழ்ந்து நோக்குமிடத்து இந்தவுண்மை புலப்படும்.இலங்கை பல்லின மக்களைக்கொண்ட நாடாகினும் அந்த நாட்டில் பேரினக் காட்டாட்சிதான் தொடர்ந்து நிலவுவதை நாம் அந்த நாட்டின் பாசிச மயப்படுத்தபட்ட இராணுவத்தின் ஜனநாயகப் படுகொலையிலிருந்து புரிந்துகொள்வது மிக இலகுவானதாகும்.


மக்கள் தமது சொந்த மண்ணில் அகதியானபின்பும் அவர்களின் உயிர்வாழ்வை இந்தத் தேசம் மதிப்பதில்லை.இருந்தும் இன்றிருக்கும் இந்தப் படுபிற்போக்கான ஆட்சியமைப்பும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ஆளும் வர்க்கமும் என்றுமில்லாதவாறு தம்மை ஜனநாயகத்தின் காவலர்களாகவும்,இலங்கையின் பல்லினச் சமூகத்துக்கும் பாதகமற்றவர்களாகவும் படுவேகமாகப் பரப்புரை செய்கிறது.இதையும் தமிழ்பேசும் மக்களது தலைவிதியை மாற்றப் போவதாகக் கூறும் இயக்கங்கள்,கட்சிகள் தண்டமிட்டு"ஆம் உண்மைதான்"என்று நமக்குள் கருத்துக்கள் கூறி,இலங்கை அரசுக்கு ஜனநாயக முகமூடி தரிக்கின்றனர்.இதற்கு அவர்கள் "புலிகளின் பாசிசத்தை"துணைக்கழைத்துச் சிங்கள அரசானது புலிகளின் பாசறைகளால்-மக்களுக்குள் அவர்கள் ஒளிந்து இராணுவத்தைத் தாக்குவதால்,இராணுவமும் பதில் தாக்குதலைத் தற்காப்புக்குத் தொடுக்கும்போது மக்கள் அழிகிறார்கள் என்கின்றார்கள்.இதை இன்றைய நமது அரசியலில் மிகச் சகஜமாகச் சொல்வதில் ரீ.பீ.சி.போன்ற மகா நெட்டூரம் கொண்ட வானொலிகளாலும்,அதில் பங்குபெறும் கடைந்தெடுத்த கைக்கூலி "ஆய்வாளர்களாலும்" முடிகிறது!


நமக்கோ அப்பாவி மக்களின் சாவில் அரசியல் நடாத்தும் இந்தக் கேடுகெட்ட அரசியல் விபச்சாரகர்களை எங்ஙனம் மக்களிடமிருந்து அகற்றுவதென்ற யோசனை-மக்களின் சாவுக்கு நீதி கேட்கும் தர்ம வேதனை!


இன்றுவரை இலங்கையின் இனவழிப்பானது பல்லாயிரக்கணக்கான தமிழ்பேசும் மக்களையும்,அவர்களின் வாழ்விடங்களையும் அழித்தும்,கையகப்படுத்தியும் "தன்னாட்சி கொடிய இஸ்ரேலுக்கு நிகரானதென" நிரூபித்து வருகிறது.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களின் அரசியலைக் குத்தகைக்கு எடுத்த புலிகளும் மற்றைய குழுக்களும் தத்தமது இயக்க நலன்களுக்காக இந்த மக்களின் அடிப்படை வாழ்வுரிமையைக்கூட ஏலமிட்டு விற்பதற்குத் தயக்கமில்லை!, தயாராகிய கையோடு ஒவ்வொருவரும் தமது நலன்களை முதன்மைப்படுத்திய அரசியலில் இலங்கைப் பாசிச அரசை ஒருகட்டத்தில் சாடியும் மறுகட்டத்தில் ஆதரித்தும் தமது பிழைப்பைச் சரிவரச் செய்கிறார்கள்.


வாகரை கதிரவெளிக் கிராமத்தில் பாடசாலையில் தமது உயிரைக் காக்கும்பொருட்டுத் தஞ்சமடைந்த மக்களை அவர்கள் தமிழைப் பேசும் ஒரே காரணத்துக்காகச் சாகடிக்கும் உரிமையைச் சிங்களப் பாசிச ஆட்சியாளர்கள் கையிலெடுத்து, அந்த மக்களைக் கூட்டோடு அழித்துள்ளார்கள்.இது 08.11.2006 நடந்தேறிய இனவழிப்பாகும்.இலங்கையரசானது தன்வரையில் இலங்கையின் முழுமொத்த மக்களின் ஓடுக்குமுறையரசாக இருந்துகொண்டே அந்த மக்களைக் காக்கும் ஜனநாய அரசென்றும் சொல்லி வருகிறது.இதையும் சில விட்டேந்திகள்-ரீ.பீ.சீ "ஆய்வாளர்கள்,அரசியல்வாதிகள"; என்ற பகற் கொள்ளைக் காரர்கள் நியாயப்படுத்தி பட்டப்பகலில் நடுரோட்டில் தத்தம் தாயை மானபங்கப்படுத்தித் தமது உணர்வைப் ப+ர்த்தி செய்கிறார்கள்.



இத்தகைய சமூக விரோதிகள் நமது மக்களுக்கு முன்வைக்கும் அரசியலானது அந்த மக்களைப் ப+ரணமாக அழிப்பதற்கு இலங்கையரசுக்கு ஒப்புதல் கொடுக்கும் அரசியலே.இதற்கு இத்தகைய திருடர்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதம் "புலிப் பாசிசம்"என்ற புலிகளின் மக்கள் விரோதச் செயற்பாடுகளாகும்.இங்கும் இத்தகைய மாபியாக்களை உருவாக்கிய அரசியலை மக்களுக்குள் திணித்தவர்கள் இந்தப் புலிகள்தான்.இவர்களின் கொடுமுடி ஆதிக்கத்தால் பழிவாங்கப்பட்ட கட்சி-இயக்க அரசியல் பொறுக்கிகள் இப்போது கூட்டணியமைத்து நம் மக்களின் அனைத்து அடிப்படை வாழ்வாதாரங்களையும் அடியோடு மொட்டையடிக்கும் அரசியல் தந்திரத்துக்கு அடிகோலும் தரணத்தை இந்தப் புலியரசியலே தூபமிட்டது.என்றபோதும் இத்தகைய திருடர்களை மக்கள் இனம்காணும் இன்றைய தரணத்தில், மக்களைப் பொருளாதார மற்றும் யுத்த அனர்த்தங்களால் வருத்தித் தத்தமது அரசியல் இலக்கை(தமிழர்களின் சுய நிர்ணயவுரிமையை இல்லாதொழித்தல்) எட்டும் காரியத்தில் இன்றைய இலங்கை மற்றும் இந்திய உலக நலன்கள் முனைப்படைகின்றன.இதன் உச்சக்கட்டமாக அகதிகளாக இருக்கும் மக்கள்மீது தாக்குதல் தொடுத்து அவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்களைக் கொடுத்து, புலிகளுக்கான மக்களின் ஆதரவை அடியோடு அழிக்கும் இஸ்ரேலியவகை அடக்குமுறை அரசியலை இலங்கை-உலகம் முன்னெடுத்து வருகிறது.



இந்நிலையில் இந்தியா மக்களுக்காக உணவுக் கப்பல் அனுப்புவதும்,இராணுவம் "நியாய விலை"கடை வைப்பதும் இந்தவகை அரசியல் இலாபத்துக்காகத்தான்.இதையும் மக்களின்மீது இவர்களுக்கிருக்கும் கரிசனைதான் காரணமென்று "ரீ.பீ.சீ."பொறுக்கிகள் அலம்புகிறார்கள்.இந்தியாவோ தன் விவசாயிகளின் பட்டுணிச் சாவுக்குக் காரணமான ஒரு கொடிய அரசு.எலிக்கறியுண்ட தர்மபுரி மற்றும் இரமநாத புர மாவட்ட விவசாயிகளைக் கேட்டால் இந்தியாவின் "கருணை" புரியும்.இந்தியாவின் வட மாநிலத்தில் கணிசமான விவசாயிகள் கடும் பஞ்சத்தால் செத்து மடியும்போது,அவர்களைக் காக்க வக்கற்ற வலதுகுறைந்த இந்தியா இலங்கை அரசியலில் மாபெரும் வல்லரசாம்,கருணைகொண்ட பாண்டவர் ப+மியாம்!,மசிர்.



மக்கள் அன்றாடம் செத்து மடியும் இலங்கையில் மசிரைப் புடுங்கின அரசியல் பொறுக்கிகளும் அன்றாடம் செத்து மடியத்தான் செய்கிறார்கள்.இத்தகைய கொலைகளிலொன்று இன்று 10.11.2006 நடந்திருக்கிறது.இதுவும் இலங்கையின் அரசவன்முறையின் தொடர்ச்சிதான்.இங்கேயும் இந்த மாபியாத்தனமான அரசியல் முன்வைக்கும் மக்கள் நலன்-ஜனநாயகம் என்னவென்பது நமக்குப் புரிந்து கொள்ளத் தக்கதே!மக்களைச்சாராத தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதி இரவிராஜ் கொழும்பில் தமிழ் மக்கள் பெயாரால் பொறுக்கித் திரிந்து,உல்லாச வாழ்வு வாழ்ந்தபோது கொல்லப்பட்டுள்ளார்.இது அராஜகமான அரசியலில் அதை முன்னெடுக்கும் அனைவருமே ஒவ்வொரு கட்டத்தில் அழிவார்கள் என்பதை மீளவும் இலஷ்மன் கதிர்காமருக்குப்பின் உணர்த்தும் ஒரு கொலைதான்.



சொந்த மக்கள் இவர்களின் பிழைப்புவாத அரசியல் மற்றும் கோசங்களாலும்,அரசியல் சதிகளாலும் செத்துமடியும்போது, அதில் குளிர்காயும் எல்லாவகைப்பட்ட மாபியா அரசியற் குண்டர்களுக்கும் இதுதான்(கொலை) கதியாகும்!அது பிரபாகரனாக இருந்தாலென்ன இல்லை மகிந்த இராஜபக்ஷயாகவிருந்தலென்ன,எல்லோரும் மக்களின் அழிவில் அரசியல் நடாத்தும் பிழைப்புவாதிகளே.இவர்களுக்கும் இவர்களால் தூண்டப்படும் மற்றைய துணைக்கட்சி-படைகளுக்கும் இந்தச் சாவு வரத்தான் போகிறது.அது ஒவ்வொரு கட்டத்தில் நிகழும்.அதுவரையும் இத்தகைய திருடர்கள் மக்களை அழித்தே வருவார்கள்.இதில் கதிரவெளிமட்டுமல்ல முற்றுப் புள்ளி.



"நாம் மக்களின் அழிவுகளைக் கண்டு ஆழ்ந்த வேதனையடைவோம்!,அவர்களின் வாழ்வுக்காகச் சிறிதாவது பேசுவோம்,மௌனங்களைக் கலைத்து"


மிகுந்த வேதனையோடு,


பரமுவேலன் கருணாநந்தன்.
10.11.06

Wednesday, November 08, 2006

கண்ணீர் அஞ்சலி!

கண்ணீர் அஞ்சலி!








22.07.1954 – 30.10.2006



தமிழ்த் தேசிய விடுதலையின் ஆயுதப்போராட்ட ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும் புரட்சிகர சிந்தனையாளருமான ~மாஉ| என்றழைக்கப்படும் மகாலிங்கம் உத்தமன் அவர்கள் 30.10.2006 அன்று காலமானார் என்ற செய்தியை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.


யார் இந்த உத்தமன்!


தமிழ் மக்களாகிய நம்மில் பலரும் அறிந்திராத மனிதர் இவர். ஆனாலும் போராட்ட வரலாற்றிலிருந்து அகற்றப்படமுடியாதவர். மறக்கமுடியாதவர். உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்ட மகா உத்தமன் அந்த மண்ணின் மைந்தர்களான பொன்.சிவகுமாரன் சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து “தமிழ் மாணவர் பேரவை“ அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். இந்த அமைப்பே முதன் முதலில் மாணவர்களையும் இளைஞர்ளையும் எழுச்சியுடன் அணிதிரட்டிய அமைப்பாகும். தமிழர்களுக்கென தனியரசு தேவை என்பதை வலியுறுத்தியதோடு அதற்கான ஆயுதப் போராட்டத்துக்கும் தமிழ்மாணவர் பேரவை அறைகூவல் விடுத்ததோடு செயலிலும் இறங்கியது. இதன் அடுத்துவந்த செயல்பாடுகளில் சிவகுமாரன் -அரச படைகளிடம் சிக்காமல்- தற்கொலை செய்துகொள்ளவும் ஏனையவர்கள் தலைமறைவாகவும் அந்த அமைப்பு தேக்கத்திற்குள்ளானது.


சென்யோன்ü கல்லூரி மாணவனான உத்தமன் கல்விகற்பதற்காக லண்டன் பயணமானார். கல்விகற்பதற்காக லண்டன் சென்ற உத்தமனின் அரசியல் வாழ்வு இன்னும் தீவிரமடைந்தது. அவரது உலகப்பார்வையும் சிந்தனையும் விசாலமடைந்தது. சர்வதேச முற்போக்கு புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதுடன் அவற்றின் போராட்டங்களிலும் பங்கெடுத்துக்கொண்டார். இவற்றின் பலாபலன்களை ஈழவிடுதலைப் போரட்டத்தில் சுவறச்செய்தார். இவர் ஊட்டிவளர்த்த விடுதலை இயக்கம் (புளொட்) சீரழிவுக்குள்ளானபோது அதிலிருந்து வெளியேறிய புரட்சிகர சக்திகளுடன் (தீப்பொறிக் குழுவுடன்) கைகோர்த்துக் கொண்டதோடு, தமிழீழ மக்கள் கட்சியினை உருவாக்குவதிலும் அதனை வளர்த்தெடுப்பதிலும் உந்து சக்தியாக விளங்கினார்.


சமூக விஞ்ஞானத்துறையில் கற்றுத்தேர்ந்தவரான தோழர் உத்தமன் தத்துவ கோட்பாட்டுத் துறையிலும் பெரும்பங்களிப்பை வழங்கியவராவார். தமிழ்த் தேசியம் குறித்த கோட்பாட்டு விவாதங்களில் பின்புலமாக விளங்கியதோடு முரண்பட்டு நின்ற பலரையும் அதன்பால் வென்றெடுத்தார். உயிர்ப்பு கோட்பாட்டு சஞ்சிகையில் உத்தமனின் பங்களிப்பு மிக முக்கியமானதொன்றாகும். ஈழப்போரட்டம் ஈடாட்டம் கண்ட வேளையில் அதனை கருத்துரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் தூக்கிநிறுத்தவதில் சளைக்காமல் செயல்பட்டார். புரட்சிகர அமைப்பின்றேல் புரட்சியில்லை என்பதற்கேற்ப அமைப்பு உருவாக்கத்தில் காலத்தைச் செலவுசெய்தார். உத்தமன் கோட்பாட்டு ரீதியில் தனது எழுத்தியக்கத்தை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல் இருந்தும் அவர் அதை நூல்வடிவில் மேற்கொள்ளவில்லை. அமைப்புச் செயற்பாட்டினுள் அவர் கவனம் செலுத்தினார். இருப்பினும் அவர் எழுதிய “சார்புநிலைப் பொருளாதாரம்“ எனும் நூல் அவரது தத்துவ ஆளுமைக்குச் சான்று பகரும்.


““அதிகாரம் புகழ் குடும்பம் மற்றும் வசதி ஆகிய அனைத்தையும் கொன்ட ஒரு மனிதர் எந்தவித கோபமோ தயக்கமோ இன்றி ஒரு இலட்சியத்துக்காக அனைத்தையும் துறக்கத் தயாரக இருக்கும் மனோநிலை அசாதாரணமானது.““


ஆனாலும் இப்படிச் சொல்வது அவருக்குப் பிடிக்காது என்பது அவருடன் பழகியவர்களுக்குத் தெரியும். புரட்சிகர போராட்டவாழ்வில் அவருடன் பயணித்த சகபயணிகள் இடையில் இறங்கிச்சென்றபோதும் அவரது பயணம் மட்டும் நிற்கவில்லை . சலிக்காமல் - உடல் தளர்சியடைந்த போதும் - தொடர்சியாக பயணம் செய்ய வேண்டும் என்ற அவரது அவா தனது முன்னாள் சகபயணி சிவகுமாரனை நினைத்துக் கொண்டு மண்ணுக்கு சென்றபோது அங்கேயே முற்றுப்பெறுமென யார் கண்டது.



““ஒரு கலைஞனுக்குரிய கவனத்துடன் நான் உரமேற்றியருக்கும் என் மன வலிமை என்னுடைய பலவீனமான கால்களையும் களைத்துப்போன நுரையீரலையும் சுமந்து செல்லும்.““ - சே குவேரா



இந்தப் போராளிக்கு எமது அஞ்சலிகள் !


- சுவிü நண்பர்கள்

Friday, June 30, 2006

தர்மத்தின் வாழ்வுதனைச்...

தர்மத்தின் வாழ்வுதனைச்...


ஒரு பொழுது எந்தப் பித்தாலாட்டமும் நியாயத்துக்கான இருப்பை அசைத்துவிடுமானால் ...அந்தப் பொழுது வளர்க்கின்ற மனிதநாகரீகமானது இந்த அநாமதேயங்களின் உளப்பெருக்காகவே சமூகத்தில் வேர்எறிகிறது!இத்தகையவொரு உளவியல் போக்காக்கானது தான் வாழும் சமூகத்தில் அனைத்து விஷயங்களையும் எதன் பெயராலும் காவுகொடுத்துவிடும்.இன்று நம்மிடமுள்ள சமூக விழிப்புணர்வு எங்ஙனம் ஒரு அமைப்பினது அதியுயர் பொய்ப் பரப்புரைகளால் காவுகொள்ளப்பட்டதோ அதையே மனிதர்கள்-தமிழர்கள் தமது விடுதலைக்கான கோஷமாகப் பம்மிக்கொள்வதில் முடிந்துள்ளது.இங்கே தமிழ் மக்களின் அனைத்து வளமும் ஒரு சில குடும்பங்களின் தேவைகளுக்காகத் தியாகத்தின் மறு அவதாரமாக்கப்பட்டுவிட்டென.

யார்மீதும் சவாரிசெய்த அரசியலானது இன்று எந்தவொரு மனிதரையும் துப்பாக்கிக்குண்டுகளுக்கோ அல்லது எதன் பெயராலோ கொல்லுகிறது.இந்தப்படு பயங்கரமான அரசியல் வாழ்வில் அவதியுறும் மக்களை எந்தக் கவனமுமின்றிச் சில,பல மனிதர்கள் தங்கள் வக்கிரக் கண்ணோட்டத்தோட யாருக்காகவோ வாலாட்டுகிறார்கள்.இத்தகைய மனித்துவமற்ற மக்கள் கூட்டமானது உலகத்தின் எந்த மூலையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே அற்பத்தனங்களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதில் தன்னை முன்னிலைப் படுத்திவிடுகிறது. இதுதான் இன்றைய அவலமான சமூகஉளவியல்!

எங்களது உலகப் பார்வையானது மாற்றாந்தோட்டத்தில் மல்லிகைக்கு மணமிருப்பதாகக் கருதுவதில்லை.ஒற்றைத் தலைமையும்-அதைச் சுற்றித் துதித்திருப்பதும் ஆங்கிலேயனிடம் காட்டிக் காரியமாற்றிய மனங்களின் கால நீட்சிதான்.அந்தக்காலத்தில் தவமிருந்து பெற்ற அதிகாரத்துவத்தை மீளச் சுவைப்பதில் ஒரு வர்க்கமானது தன்னைத் தமிழரின் மீட்பராகக் காட்டிக் கொள்வதில் எந்தவியப்புமில்லை.இத்தகைய இழி மானிதர்கள் உலகெங்கும் எவர் பெயராலும் -எதன் பெயராலும் போரையும்,அவலத்தையும் ஏற்படுத்தித் தமது வாழ்வாதாரங்களையும்,செல்வத்தையும் காத்துக் கொண்டு,குவித்து வருகிறது.இத்தகைய ஒரு தேவையானது மீளவும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வைச் சிதைப்பதில் கண்ணும் கருத்துமாகவுள்ளது.இதையிந்த அநாமதேயத்துப் பெயர்வழிகள் எப்போதும் தமது இருண்ட விசுவாசத்தால் புரிவதில்லை.'முந்தநாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான்கள்'தமிழ் மக்களின் வாழ்வைத் திருக்கொண்டிருக்கும் அரசியலுக்குக் காவடி தூக்குவதில் தமது அடிப்படையுரிமையைக் காலில் போட்டுச் சிதைக்கிறது.இது ஐ.நா.கொடியைக் காலில்போட்டுச் சிதைத்ததுபோல.இந்தப் பேர்வழிகள்தான் எந்தவொரு எதிர்கருத்தாடலையும்,ஜனநாயகத்துக்கான முன்னெடுப்புகளையும் முளையிலேயே கிள்ளிவிடத்துடிக்கிறது.

தமிழர்கள் ஜனநாயத்தைச் சுவாசித்தவர்களில்லை.எந்தவொரு சூழலிலும் எவரிடமும் தங்கி,அடிமைகளாய்கிடக்குமொரு கூட்டமாகவே வாழ்ந்தவர்கள்.சாதியின் பெயரால் அடக்கிவைக்கப்பட்டுக் கொத்தடிமையாக வாழ்ந்தவொரு இனக் குழுவிடம் ஒருபெரும் புரட்சி திடீரெனப் பத்திவிட முடியாது.இந்த மக்கள் கூட்டத்தைத் தமது தேவைக்கான அரசியலுக்கு எவர்வேண்டுமானாலும் பலியாக்கலாம்.அதைத் தமிழின் பெயரால் இதுவரை பல பெருச்சாளிகள் செய்து வருகிறார்கள்.அவர்களின் வாரிசுகள் எமது வாழ்வின் அனைத்து விஷயங்களையும் இப்போது குத்தகைக்கு எடுத்துவிடுவதில் உலகெங்கும் மூச்சோடு போரிட்டு வருகிறார்கள். வெளிநாடுகளிலிருந்து உல்லாசமாக இலங்கை போய்த் திரும்பும் இவர்கள்தான் அங்குள்ள மக்களைப் போராட அறைகூவல் விடுகிறார்கள்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் எந்தக் கெடுபிடியுமின்றிப் போய்வரும் இவர்கள,; மேற்குலக மக்களுக்கு 'இலங்கையரசு பாசிச அரசு,தமிழரைக் கொல்கிறது'என்கிறார்கள்.அதையும் யூ.என்.ஓ கட்டிடத்துக்கு முன்பால் நின்று கூவிக்கொள்கிறார்கள்.வேடிக்கைதான்.போரிடுங்கோ தம்பி-தங்கைமாரே!உலகத்தின் வரலாறு வௌ;வேறு கோணங்களில் எழுதப்பட்டுக்கொண்டேயிருக்கும்.அதை உங்கள் எந்தக்காவியத்துக் கதாநாயகர்களும் தடுத்துவிட முடியாது!

மக்கள் படும் வேதனையும் துன்பத்தையும் கேவலமான முறையில் மறைத்தொதுக்கும் ஒரு அரசியலானது இன்று கோலாச்சுகிறது.இதை;தான் இந்த அநாமதேயத்து வக்கிர இளைஞர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தமக்குள் பிரதிபலிப்பதைக் காட்டிக்கொள்கிறார்கள். விடுதலையின் பெயரால்,ஈழத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வருஷமொன்றுக்குச் சமூகவிரோதிகளாகக் கொல்லப்படுகிறார்கள்.இவர்களை எந்தச் சமூக ஒழுங்கு விரோதிகளாக்குகிறது?சிங்கள அரசியலை இனவாத அரசியலாக மாற்றமுறவைத்த மேட்டுக்குடித் தமிழரின் பொருளியல் நலன்கள் இப்போது அந்த அரசியலைத் தமிழருக்குள் திணிக்கிறது.ஒருபுறம் சிங்களப்பாசிசமும்,மறுபுறம் தமிழ்ப் பாசிசமும் ஒரே பாதையில் இப்போது கூடுகின்றன,கைகுலுக்குகின்றன.அழிவு மக்களுக்குத்தான்!

சமூகம் என்றால் என்ன?

ஒருசில ஒழுங்களை ஒருசில மனிதர்களால் விதிக்கப்பட்டு அதைக்கடைப்பிடிகத் தூண்டும் ஒரு வித கருத்தியல்சார்ந்த அதிகாரத்தை ஒழுங்கு என்கிறோமா?அல்லது ஒருவிதமான மனிதக்கூட்டைச் சமூகமெனக் கருதுகிறோமா?

இந்தக் கேள்விக்குள் தொக்கி நிற்கும் பதிலுக்குப் பதிலுரைக்கும் ஒருவர் நிச்சியம் நமது சமூகம் விரோதிகளாக்கும் அப்பாவி மனிதர்களின் அழிவைக்குறித்துக் கேள்வியொழுப்பும்.அப்போது இந்த இரண்ட அரசியல் ஒடுக்கப்பட்ட தமிழர்களால் விளங்கிக் கொள்ளப்படும்.அந்தவொரு நிலைமை உருவாகும்போது எந்தக் கயவர்களும் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்படுவார்கள்.அவர்களின் தலைமைகளின் இருப்பு தெருக்கூட்டுவதில் போய்முடியும்.அதையிந்த மக்கள் சமூதாயம் நிரூபித்தே தீரும்.

பாசிசமென்பது ஒரு கொடிய நோய்!அது சில அதிகாரத்துவ ஆணவத் தலைமைகளை உருவாக்குவதுமட்டுமல்ல,முழு மக்களையும் அடிமை கொள்கிறது!

-பரமுவேலன் கருணாநந்தன்

தற்கொலைத் தாக்குதலும்,புலியரசியலும்!

தற்கொலைத் தாக்குதலும்,புலியரசியலும்!


எங்கும் மனிதச் சிதைவு,அகதி வாழ்வு.
போர் கைதிகளின் தொடர்ச் சிறைவாழ்வு.

அழிவு, சிறார்களின் போர்ப்பாதிப்பு மனவழுத்தம்,உடல் ஊனம்,விதவை வாழ்வு,குடிசார் வாழ்வு மறுப்பு.

யுத்தம்,

குண்டுவெடிப்பு,

குருதி!-நோய்,நொடி.

பட்டுணி,வறுமையின்வாயிலாகத் துன்பம்!வேலையின்மை-வாழ்வுக்கான சூழலின்மை!

போர்,"இருப்புக்கான" போர்!!-யாருடைய இருப்புக்கான போர்?

தமிழ் மக்களின் இருப்புக்கான போர்!


இன்றைய ஈழமெனும் தமிழ்ப் பகுதிகளில் இது தொடர்கதை!

இந்தக் கருத்துரைகளின்பின் தொடரும் பாரிய மனிதவிரோத அரசியல் மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைக் குறிவைத்து அழிக்கிறது.இது மனித அவலத்தைச் சமுதாயத்தின் இருப்புக்காகச் செய்வதாக அல்லது நடந்து விடுவதாகச் சொல்கிறது.எதிர்காலத்தை முதன்மைப்படுத்தித் தற்கால வாழ்வை நாசமறுத்தாலும் பரவாயில்லையெனும் கருத்தாக, இது வளர்தெடுக்கப்படுகிறது.இதையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் பெரும்பாலும் ஒத்துக்கொள்ளும்படி கருத்தாடுகிறார்கள்.

இது நம் காலத்தில் மிகக் கொடூரமான மனிதவிரோதப் போக்காகும்.


போரென்பது மக்களின் வாழ்வைப் பறித்து,அவர்களின் ஜீவாதார உரிமைகளை மெல்லப் புதை குழிக்குள் தள்ளும் பாரிய சமூக விரோதச் செயற்பாடாகும்.இதைத் தவிர்த்துவிடுவதற்கு எந்த அரசோ,அல்லது இயக்கமோ விரும்பவில்லையென்றால், அதன் உள்நோக்கம் மக்களின் நலனோடு எந்தவிதத்திலும் தொடர்புடையதில்லை.


இலங்கைபோன்ற குட்டித் தீவில் தனியரசுக்கான தமிழர் போராட்டமானது வெறும் மேம்போக்கான ஒரு "ஆண்ட பரம்பரை"க் கனவானதாகும்.ஆனால் இலங்கைப் பாசிச அரசின் இனவாதச் சிங்களச் சியோனிசமானது எப்பவும் பாராளுமன்ற அரசியல் நெருக்கடியை தற்காலிகமாகவேனும் திசை திருப்புவதற்காக இந்தத் தமிழர் விரோத, இனவொதுக்கல் அரசியல் நகர்வைச் செய்தே வருகிறது.இதை எதிர்கொள்வதற்கான போராட்டமானது எந்தத் திசை வழியைப் பின்பற்றியதென்பதில்தான் நமது எதிர்காலம் தங்கியிருந்தது.எமது போராட்டத் திசைவழி அதே பாராளுமன்றச் சகதியைத் தழிர்களின் பேரால் ஏற்படுத்தும் ஒரு சட்டவாக்க எல்லையைத் தமிழர்களின் பெயரால் ஏற்படுத்தித் தமிழர்களை ஆளமுனையும்"ஆண்ட பரம்பரைக் கனவு"வெறும் நிர்பந்தப் போருக்கு இதுவரைத் தமிழர்களைத் தள்ளி,அவர்களது சகல குடிசார் உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.


இங்கே மனிவுயிர்ப்புக்கூட போராட்டத்துக்கான தேவையோடே கருத்தாடப்படுகிறது.எந்தப் பக்கம் பார்த்தாலும்"போராடு,போராடு"என்பதாகவும்,தற்கொலைக் குண்டுதாரிகளால் மட்டுப்படுத்தப்படும் உயிர்வாழ்வு, விடியலுக்கான உயிர் ஆயதமாகவும் குறித்துரைக்கப்படுகிறது.


இத்தொடர் நடவடிக்கைகள் மனித வாழ்வின் மிகக் குறுகிய வழிகளைத் தகவமைத்துக்கொண்டு,ஒரு தேசத்தை விடுவிக்க முடியுமெனப் பொய்யுரைப்பது,நமது காலத்து ஊழ்வினை!இத்தகைய கொடுமையான மனிதவிரோத அரசியலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஜனநாயக மறுப்பாக- உலகத்தில் தனிமைப்படும் தமிழ்பேசும் மக்களின் "சுயநிர்ணய உரிமை"சிங்களச் சியோனிசத்தின் வெற்றியாகவும்,தமிழ் மக்களின் நியாய வாதத்தைக் கையிலெடுத்த "பயங்கரவாத அமைப்பான" புலிகளின் தோல்வியாகவும் நாம் கருத முடியாது.


புலிகள் தம்மளவில் கேடுகெட்ட அரசியல் போக்குகளை உள்வாங்கிய வலதுசாரி அமைப்பானாலும் அது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயற்படுவது எப்படியென்பதே முக்கியமாக இனம்காணவேண்டிய இன்றைய அவசியத் தேவையாகும்.புலிகளின் வர்க்க நிலை இவ்வளவுதூரம் மக்களை அழிவுப்பாதைக்கிட்டுச் செல்வது, அந்த அமைப்பின் இருப்பையும் அழித்துக்கொள்வதற்கான அரசியல் மதிய+கத்தைச் சிங்களச் சியோனிசத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்தபடி நகரும்போது, எந்தவொரு அரசியல் முன்னெடுப்புமற்றுக் கிடக்குமொரு சூழலில் புலிகள் மட்டுப்படுத்தப்பட்ட போருக்குத் தயாராவது எந்தத் தளத்திலும் அதன் இருப்பைத் தக்கவைப்பதில் சாத்தியமிருக்காது.


புலிகளின் இந்த வரம்புமீறிய மீள் போராட்டத் திசைவழிக்கு நிச்சியமான அவசியமொன்றிருப்தாக எந்தக் காரணமுமில்லை.இது உள்ளிருந்து புலித் தலைமையால் எடுக்கப்பட்ட நகர்வாக இருக்கமுடியாது.புலிகளைப் பலவீனப்படுத்தித் திசைவழியை எவரெவரோ தகவமைத்துக் கொடுக்கும் ஒரு நிர்ப்பந்தம் இன்றைக்குப் புதிதாக நடப்பதல்ல.ஆரம்பத்திலிருந்து இதுதான் கதை.எனினும் இன்றைய புலிகளின் இரண்டும்கெட்டான் ஆப்பிழுத்த போராட்டப்பாதையானது, புலிகளின் தலைமை வன்னிக்குள் இல்லையென்பதைத் தெளிவுறப் புரிவதில் நம்மையிட்டுச் செல்லும்.தொடரும் போருக்கான மட்டுப்படுத்தப்பட்ட நகர்வுகள் அந்த அமைப்பின் குறுகிய மதிநுட்பத்தைத் தெட்டத் தெளிவாக்கிவிடுகிறது.


கடந்த காலத்தை மேம்போக்காகப் பார்த்தோமானால்,இலங்கையில் ஓரளவேனும் தேசியத்தன்மைகளைச் சார்ந்து இயங்கமுனையும் எந்த ஆட்சியும் நிலைக்காதிருந்தே வந்திருக்கிறது.சுய சார்புடைய,மட்டுப்படுத்தப்பட்டவொரு பொருளாதாரப்போக்கு முகிழ்க்கும் காலங்களில் இத்தகைய பொருளாதாரத்தை முன் தள்ளும் அரச கட்டமைப்பை உலக நாடுகள் அழித்தே வந்திருக்கின்றன.இம்மாதிரியான உலக முன்னெடுப்புகளுக்கு மிகப் பிற்போக்கான அன்னிய அரசுகளின் எடுபிடிகளான இலங்கை ஐக்கிய தேசிக் கட்சியும்,தமிழ்ப் பாராளுமன்ற அரசியற் கட்சிகளும் மிகவும் உடந்தையாக இருந்திருக்கின்றன.இது வரலாறாக நாம் பார்த்ததுதான்.


இன்றைய மகிந்த அரசானது சாராம்சத்தில் ஒரு இனவாத அரசே!எனினும் அந்த அரசானது இலங்கையில் பெயரளவிலான தேசிய முன்னெடுப்புகளைச் செய்வதற்கு உடந்தையாகத் தமிழரின் பிரச்சனையை அணுக முற்படுவதென்பதும் உண்மையே.இந்த அரசின் திடமான முடிவு"தனித் தமிழீழம்"சாத்தியமற்றதென்பதாகும்.அந்த எல்லையை விட்டு,தமிழர் தரப்பை வேறொரு கோணத்துக்குள் உந்தித் தள்ளிச் சில முன்னெடுப்புகளை அரசியல் சாத்தியப்பாட்டோடு நிவர்த்தி செய்வதும் அந்தவரசின் மையப் பிரச்சனையாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது.உண்மையில் தமிழ்பேசும் மக்களின் வாழ்வாதாரவுரிமைகளுக்கும்,அவர்களின் சுபீட்சமான வாழ்வுக்கும் இந்தப் பாராளுமன்ற ஆட்சியலமைப்புக்குள் "தனியரசு"ஒருபோதும் மாற்றுக்கிடையாது.சாத்தியமான அரசியல் திசைவழி எப்போதும் நம் மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் நிலவுமொரு அரசியல் தீர்வே சாத்தியமாகும்.அந்தத் தீர்வானது இன்றைய தமிழ் மனத்துக்குப் புரியமுடியாத அனால் புலிகளால் ஆசைப்படும் சமஷ்டியமைப்பு முறையாகும்.அதுள் புலிகளினது ஆளும் வர்க்கக் கனவுகள் மட்டுமே நிலைபெற்றுத் தமது வர்த்தக ஆளுமை இருப்புறுவதும்,தாம் மட்டுமே தனிப்பெரும் உடமையாளருமாக அனைத்துத் தமிழ்பேசும் மக்களையும் தமது நலனுக்கேற்ற வகைகளில் மேய்ப்பதற்கும் தனிப் புலி அரசியல் ஆளுமை தேவையாக இருக்கிறது.இந்தவிடத்தில் இணங்காத மகிந்த அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கியவொரு ஜனநாயகத்தன்மையை ஓரளவேனும் சார்ந்த பல் கட்சி முறைமைகளை உள்வாங்க முனைவது புலிகளுக்கு மிகவும் ஒரு ஆளுமைச் சிக்கலை வழங்குவதால், புலிகள் தமது எஜமானர்களின் விருப்பான விதேசியச் சார்புக்குத் தம்மையும் இணைவாக்கி அவர்களோடிணைகிறார்கள்.இந்த இணைவின் அடிப்படையில் மகிந்தாவின் அரசையும்,மகிந்தாவையும் ஓழித்துக்கட்டுவதில் இந்த அன்னியச் சக்திகளுக்குப் புலிகள் அடியாளக மாறுவது தற்செயல் நிகழ்வல்ல.


எனவே மக்களினது நலனானது,அந்த மக்களின் நலன்சார்ந்த நோக்குக்கு இசைவாகிக்கிடக்கும் இன்றைய நிலையில்,புலி நலனானது அந்த மக்கள் நலனை முளையிலேயே கிள்ளியெறிவதும்,தமது பொருளாதார நலன்களை,ஆர்வங்களை உள்ளடக்கியவொரு தனியான ஒற்றைக் கட்சி அரசியலைத் தமக்கு இசைவாக்க முனைவதும் மெய்யான சூழ்நிலையாகும்.இந்த அபிலாசைகளை இலங்கையில் மாறிவரும் ஒரு அரசியற் சூழ்நிலை சாத்தியப்படுத்தும்போது புலிகள் சமாதானம் என்ற கயிற்றைப் பிடிப்பார்கள்.அல்லது போரென்ற முழக்கத்தில் குண்டுதாரிகளாக நமது சிறார்களைப் பயன்படுத்தித் தமிழ் மக்களை அழித்தபடி வாழ்வார்கள்.


இங்கே இந்தமாதிரியானவொரு அரசியற் சூழ்நிலையானது திட்டமிட்ட முறைகளில் இலங்கையரசின் தேசிய சுய சார்புப் பொருளாதார நகர்வுகளுக்கு எதிராகச் செயற்படும் அன்னிய மூலதனங்களின் அரசியல் தந்திரோபாயமாகும்.இதற்கு அவசியமான முறைகளில் தமிழ்பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்தும் இந்த அன்னிய ஆர்வமானது எதிர்காலத்தில் தமிழர்களின் அனைத்து வாழ்வாதார உரிமைகளையும் தமது பொருளாதார இலக்காக மாற்றி நம்மைத் தமது அடிமைகளாக்குவது நிகழும்.இதுவேதான் இன்றைய பலஸ்தீனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் வருடாந்த உதவியாக -தம்மில் அவர்களைத் தங்க வைத்துக் கருவறுக்கும் அரசியலாக நம் கண்முன் விரிவது.இதை மறுத்தொதுக்கும் வலு புலிகளுக்கு இருக்கமுடியாது.அவர்களின் இன்றைய மூலதன முன்னெடுப்புகள் அந்தப் பெரும் மக்கள் நலன் சார்ந்த அன்னிய எதிர்ப்பியக்கத்தை முழு இலங்கையினூடாக இணைத்துச் செயற்படுத்துவதற்குத் தடையாகக் குறுக்கே நிற்கிறது.


புலிகளின் நிலையானது புலியின் கடந்தகாலத் தலைமையான பிரபாகரனின் உயிரைக்காப்பதும்,தமது புதிய தலைமையைச் சாத்தியமானவரை இழக்காமல் நிலைப்படுத்துவதிலும் கவனமாக இருக்கிறது.பிபாகரன் என்பவர் உலக நாடுகளால் அதுவும் இந்தியாவால் மிகவும் தேடப்படும் பயங்கரவாதி.அவரைக் கைதாக்குவது இந்த அரசுகளின் எதிர்பார்ப்பாகும்.ஆனால் பிரபாகரன் புலித் தலைமையை இழந்திருப்பினும் அவரது பாதுகாப்பைப் புதிய தலைமை மட்டுப்படுத்தப்பட்டவொரு எல்லைக்குள் செய்தே கொடுத்துள்ளது.இந்தச் சங்கதியை இவர்கள் எதுவரை செய்வார்கள்,எவ்வளவு காலத்துக்குத்தான் பிரபாவின் உயிர் வாழ்சாத்தியமென்பதெல்லாம் புலிகளினால் உந்தப்படும் அரசியலிலேதான் தங்கியுள்ளது.


எனவே தமிழ் மக்கள்மீதான அடக்குமுறைகளும்,மனிதவுரிமை மீறல்களும் தொடர்ந்தும் புதிய வடிவங்களில் நிலவுமேயொழிய,முடிவுக்கு வருவதற்கில்லை.இந்த இருள்சூழ்ந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் எதிhகாலம் மிகவும் கீழானவொரு நிலைக்கே உந்தித் தள்ளப்படும்.இதை;தடுத்து நிறுத்துவதற்கான மாற்றுவழியென்பது பல்கட்சி அரசியலையும்,தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகத்துக்கான திறந்த அரசியல் விவாதத்தையும் முன்னெடுக்காதவரை எதுவும் சாத்தியமில்லை.இந்தவொரு தேவைக்காக மக்களின் அத்தியாவசிய உயிர்வாழ் தேவைகளுக்கான- இயல்பு வாழ்வுக்கான முன்நிபந்தனையாக நாம் ஆற்றவேண்டிய மிகப்பெரிய அக்கறையுடைய ஒரே வழி, திறந்த விவாதங்களும் பல்கட்சி முறைமையுடைய அரசியல் பேச்சுவார்த்தைகளும்தான். அதன் வாயிலாகவொரு சமஷ்டிமுறையிலான பொது அரசியல் முன்னெடுப்புமே இன்றைய அரசியல் யதார்த்தித்தில் நிலவக்கூடிய வழியாகும்.

பரமுவேலன் கருணாநந்தன்.
30.04.2006

ஜெனிவாவில் எதிர்ப்பு!

ஜெனிவாவில் எதிர்ப்பு!

இப்போதெல்லாம் தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் "தீர்வு-சமாதானம்" குறித்து பற்பல அமைப்புகள் போராட வெளிக்கிடுகின்றார்கள்!இவர்களில் எவரெவர் உண்மையாக மக்களின் நலனில் அக்கறையோடு "பதாதகைகள்"தாங்குகிறார்கள்,குரலிடுகிறார்களென்பதை நாமறியோம்!பராபரமே!!!

எந்தக் குழுவுக்கு எவவெரவர் பின்னாலிருக்கிறார்-எந்தெந்த அரசுகள் இருக்கின்றெனவென்பதும் புரிந்துகொள்ள முடியாதிருக்கு.இன்றைய காலம் மிகவும் இருண்ட அரசியலையே எமக்கு வழங்கிக்கொண்டிருக்கு!இலங்கையிலிருந்து பெரும் அரச சார்பு ஊடகங்களான"ரூபவாகினி,வீரகேசரி,சூரியன் பண்பலை வானொலி"என்று கோதாவிலிறங்கி,நமது மக்களின் ஜனநாயகத்தில் கவனமாக இருக்கினமாம்!இவர்கள் ஜெனிவாவில் வந்திறங்கி இங்கிருக்கும் சில உதிரிக் குழுக்களினதும்,மற்றும் இலங்கை-இந்திய வால்பிடி,எடுப்பார் கைப்பிள்ளைக் குழுக்களினதும்"புலியெதிர்ப்பு"க் கோசங்களைக் காவிச் சென்று நமது மக்களுக்கு விடிவு தருவினமெண்டு பல ஊடகங்கள் புலம்பலாம்.

எங்கள் மக்களினது உண்மையான பிரச்சனை அன்னிய நாடுகளின் முற்றித்தில் இல்லைப் பாருங்கோ,அது இலங்கைப் பாராளுமன்றத்துக்கு வெளியிலேதான் கிடக்கிறது.நாங்கள் காலாகாலமாக ஏமாற்றப்பட்டு,போராடிச் செத்துக்கொண்டிருக்கும்போது எந்த நாயும் நம்மை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.மாறாகத் தமிழருக்குள் முரண்பாடை வளர்த்து,அங்கு தோற்றப்பட்ட,தோன்றிய இயக்கங்களை தத்தம் நாடுகளின் நலனுக்குப் பயன்படுத்தித் தமிழர்களின் உயிரோடு விளையாடிய இந்திய,இலங்கை மற்றும் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் இப்போது தமிழருக்கு ஜனநாயகம் தேவையென்றும்,இஸ்லாமியத் தமிழருக்கு-இஸ்லாமியச் சிங்களவருக்குத் தனிப்பிரதேசம்-மாநிலமுண்டு என்றும,; கூடவே கிழக்காலே பிரித்து கிழக்குத் தமிழருக்கு நிம்மதி கொடுக்கவேண்டுமென்றும்,அதைப்போலவே மலையக மக்களுக்குமான பிரதிநித்துவம் என்றெல்லாம் கோசம் போடும் இந்த நாடுகள் அதை எதற்கு ஜெனிவாவில வந்து கத்தவேணும்? பேசாமல் இலங்கையரசிடமே சொல்லி,அதையதைச் செய்யவேண்டியதுதானே?
"ஆடான ஆடுகள் எல்லாம் குழைக்கு அழ,நொண்டி ஆடு எதற்கோ அழுததாம்!" இதைப்போலத்தான் இந்த ரீ.பீ.சீ வானொலிக் கும்பலின்ர செயலும்.

இந்தப் படங்கள் கூறுவதென்ன?

இவர்களுக்குப் பின்னாலிருந்து எந்த நலன் இவர்களைப் போராடத் தூண்டுகிறது?

அப்பாவி மக்களின் "புலிகள்மீதான தார்மீகக் கோபத்தை" தமகுச் சாதகமாகப் பயன்படுத்தமுனையும் இந்திய-இலங்கை மற்றும் அமெரிக்க,ஐரோப்பிய "கைக்கூலிகளான"அனைத்து "மக்கள் விரோதிகளும்"(புலித் தலைமை,கூட்டணி ஆனந்தசங்கரி,புளட்,ரெலோ,ஈ.பீ.ஆர்.எல்.எப்:,ஈ.பீடி.பி.,;மசிர் மட்டை மற்றும் ஜெயதேவன்,ராமராஜ்,போன்ற சுயநலன்கொண்ட கயவாளிகளும்) இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகிறார்கள்.மக்களுக்கு விரோதமாகப் "புலித்தலைமை" மட்டுமல்ல புலிகளிடம் பங்கு கோரும் இத்தகையப் பாசிச அரசுகளின் பாதந்தாங்கிளுமேதான் "தமிழ் மக்கள் எதிரிகள்" என்பதை நாம் இனம் காணலாம்.

புலிகளுக்கு மாற்று,மண்ணாங்கட்டியென்று கதைவிடும் இந்தப் பாசிசக் கைக்கூலிகள் எமது மக்களின் நலனில் இவ்வளவு அக்கறைகொண்டு போராடுகினமாம்?அப்பாவி மக்களைப் ப+ண்டோடு இலங்கை-இந்திய இராணுவங்கள் வேட்டையாடியபோதும்-இன்று இராணுவ உயர்பாதுகாப்பு வலயமென்ற போர்வையில் தமிழரின் வாழ்வாதாரவுரிமையைப் பறிக்கும்போது, இந்தத் தெருக்கோசப் பேர்வழிகள் எங்கே போனார்கள்?ஏன் இலங்கையரசிடம் இராணுவத்தை வெளியேறும்படிக் கோருவதில்லை?எதற்காக மக்களின் உயிரோடு விளையாடிய சிங்களப்பாசிச அரசிடம் அடக்கி வாசிக்கின்றார்கள்?

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம்.இந்த ஜெனிவாவில் கோசம் போட்டவர்களின் பின்னால் இலங்கை-இந்தியத் தூண்டல் இருப்பதை.அப்பாவி மக்கள் இதுள்த் திரண்டு கோசமிட்டும் உள்ளார்கள்.அவர்கள்(மக்கள்) "இவர்களின்" சதிக்குப் பலியாகியுமுள்ளார்கள்.

நாம் இன்னுமொன்றையும் தெரிந்துகொள்ளலாம்.அதாவது பக்கத்து நகருக்குப் புறப்படுவதற்கே பணத்துக்கு அந்தா,இந்தா என்ற நிலையில்,மாதக் கடைசியில் வயித்துக்கே புவாப் போடுவது கஷ்டமாகவுள்ள இந்தப் "புலப்பெயர்வு வாழ்வில"; நினைத்தவுடன் சுவிஸ்,பிரான்ஸ்,ஜெர்மனி...அங்கே,இங்கே என்று இந்தக் கோஷ்டிக்கு எப்படிப் பணம் புரளுகிறது?இப்பெடியெல்லாம் புலிகளால் மட்டுமேதான் செய்யமுடியும்.புலிகளுக்கு நிகராக எந்த மக்கள் நலன் அமைப்புகளும் செயற்பட முடியாது.அப்படியொரு மக்கள் நலன் அமைப்புகளும் நம்மிடம் இல்லை!ஆக மொத்தத்தில் பெரும் கைகள் போடும் எலும்பைக் கவ்விப் "போடும் கோசம்" தமிழ் பேசும் மக்கள் நலனில் அக்கறைப்பட்ட கோசமல்லை.


இதை ஓங்கி அடிச்சுக் குத்திச் சொல்லுகிறேன்!

நாம் படும் பாட்டுக்குள்,எங்கள் வாழ்வை இன்னும் சிதைப்பதற்குத் துணைபோகும் இந்தக் கும்பல்களையும்(கூட்டணி ஆனந்தசங்கரி,புளட்,ரெலோ,ஈ.பீ.ஆர்.எல்.எப்:,ஈ.பீடி.பி.,;மசிர் மட்டை மற்றும் ஜெயதேவன்,ராமராஜ்,போன்ற சுயநலன்கொண்ட கயவாளிகளும்), புலிகளையும்(புலித்தலைமை) தமிழ்பேசும் மக்கள் இனம்கண்டு, இவர்களை நிராகரிக்கவேண்டும்.புலிகளிடம் பகிரங்கமாக அறைகூவி எதிர்ப்பைக்காட்டி, அவர்களை மக்கள் நலனுக்கேற்ற தீர்வுகளுக்குச் செல்லத் தூண்டிப் போராட்டத்தை அவர்களிடமிருந்து பறித்து, மக்களாகிய நாமே முன்னெடுக்கப்படவேண்டும்.புலிகளின் படையிலுள்ள எமது பாலகர்களின் படைப்பலத்தோடு நாமே போரை முன்னெடுக்கப்பட வேண்டும்.இலங்கையில் புதியஜனநாயகப் புரட்சி நிறைவடையும்வரை எமது போராட்டம் முடிவடைய முடியாது.நமக்கு நீதியான,நியாயமான,சமாதானமானதும்,இனங்களுக்குள் ஒற்றுமை நிலவக்கூடிய இலங்கையை உருவாக்குவதே எமது அவசியப்பணி.இது மக்களாகிய நம்மால்தான் முடியும்,இதைவிட்ட மற்றவெல்லாம் பொய்!அவை மக்களை அடிமை கொள்ளும் தந்திரமுடையவை.

எனவே புலிகளிடம்தான் நமது சக்திகள்,வளங்கள் இருப்பதால் நமுக்கும் புலிகளுக்குமே பேச்சு வார்த்தை ஆரம்பமாகவேண்டும்.அதாவது புலிகளிடமிருந்து நாம் போராட்டத்தை மாற்றியாக வேண்டும்.அது மக்கள் போராட்டமாக நகரவேண்டும்.அதை முன்னெடுப்பதும் புலிப்படையாகவே இருக்கும்.ஆனால் இந்த முறை ஒவ்வொரு தமிழ் மக்களுமே மக்கள் போராளிகளாகவும்,பெரும் படையணியை இயக்கும் தலைவர்களாகவும் "நாமே" இருப்போம்.அங்கே தனிநபர் வழிபாடுகளுக்கமைந்த தலைமை இராது.இதுவே இனிவரும் காலத்தின் இலக்காகவும் இருக்கும்.


கருணாநந்தன் பரமுவேலன்

இஸ்ரேலாகும் இலங்கை:

இஸ்ரேலாகும் இலங்கை:

திரிகோணமலைப் படுகொலைகள்,அரச வன்முறைகளின் தொடர்ச்சி!

இலங்கையரசின் அரசியல் காய் நகர்த்தலானது இன்றிடம்பெறும் "பழைய பாணி" இனவழிப்புக் கலவரமாக உருவெடுத்துவிடுகிறதென்பது மிகவும் உண்மையான செய்தி.இது பாரதூரமானவொரு பின்னடைவைத் தமிழ்பேசும் இலங்கையருக்குத் தந்துவிடுவதும் உண்மையே! கடந்த காலங்களைப்போன்று தமிழர்கள் ஒரே குடையின் கீழ் அரசியல் செய்யவில்லை. 58 இல்,77 இல்,83 இல் இழப்புக்குள்ளான தமிழ்பேசும் மக்களை சிங்கள இனவாத அரசே கொன்று குவிப்பதை உலகம் பார்த்து வந்தது.
இன்றோ இது வேறுவிதமாகப் பேசப்படுகிறது.
இலங்கையினது நீண்டகாலக் கனவானது தற்போது பொதுவரங்கத்தில் நிசமாகிறது!பொய்யில்லை!!-இது உண்மையே.அரசியல் ஆதாயங்கள் மக்களின் அழிவுகளில் எட்டப்படுவதாக மாறிப்போனது இன்று நேற்றல்ல இலங்கையில்.எனினும் இத்தகைய சூழலில் இழப்புக்குள்ளாகும் அப்பாவி மக்கள்தம் வாழ்வும் சாவும்,நேர்மையற்ற அரசியல் வாதிகளால் மீளரசியலாக மாற்றப்படும்போது நாம் பொறுமையிழக்கிறோம்.
புலி,
புலி எதிர்ப்பணி!-இந்த இருவகைத் தமிழ் மக்களின் அரசியலானது சியோனிசச் சிங்கள அரசை காப்பதற்கும்,உலக அரங்கில் நியாயமுள்ள அரசாகக் காட்டுவதற்கும் உடைந்தையாகும் அதேவேளை, தமிழ் மக்களின் உரிமைகளைக் காட்டிக் கொடுப்தாகவும் விரிந்து செல்கிறது.

புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது,இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை கணிப்பிடுவதில் தவறிழைத்தது!அல்லது திட்டமிட்ட சதிவலையை பின்னிய வெளியுலகச் சக்திகள் புலிகளின் அரசியல் தலைமையைப் பயன் படுத்தியுள்ளது-பயன்படுத்தி வருகிறது!

துரத்தியடிக்கப்பட்ட ஈழப்போராட்டக் குழுக்களைத் துரோகியாக்கிய அரசியற் பரப்புரைகளைப் புலிகள் உருவாக்கிக்கொண்ட சூழலை மிகவும் கவனமாக அவர்கள் மறுத்தொதுக்குவதும், அதன் நீட்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாசிசக் கொலைகளும் இதனூடாக வலுப்பெற்ற புலியெதிர்ப்பு முகாமும் தமிழரின் சுயநிர்ணயவுரிமையைக் களைந்தெறிவதற்கானவொரு சதிவலையை கருத்தியல் தளத்தில் மெல்லவுருவாக்கிக்கொண்டுள்ளது.இதன் உச்சபட்ச நீட்சியே மாற்றுக்குழுக்களை ஒட்டுக் குழுக்களெனும் சதியுடைய மொழிவாகும்.

இன்றிந்தச் சதியானது இலங்கை அரசின் அனைத்துவகைக் கறைபடிந்த காட்டுமிராண்டித் தனங்களையும் புலிகளின் பெயரால் கழுவிப் புனிதச் செயலாக்கி விடுகிறது.

இதைத்தானே உலகமும்,இலங்கையும் எதிர்பார்த்தது

மக்கள் வலுவுற்றிருந்தபோது அனைத்து இயக்கங்களும் வலுப்பெற்றுத் தமது படைவலுவைத் தேடிக்கொள்ளும் மனித ஒத்துழைப்பு நிலவியது.அவ்வண்ணமே அவைகள் ஓரளவு உறுதியுடைய அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தன!இன்று மக்கள் பற்பல அரச ஜந்திரங்களுக்குள்,அதன் ஆதிக்கத்துக்குள் பிளவுண்டு கிடக்கின்றார்கள்.இத்தகைய பிளவுகளும் சர்ச்சைகளும் இயக்க அமைப்பாண்மைக்குள்ளும் அதன் அகப் புறச்சூழலிலும் வலுவுற்றிருக்கிறது.இது ஒருவகைக் கண்ணியம் பேசி,மக்களை முட்டாளாக்கியபின் தமிழ் மக்களின் இது வரையான இழப்புகளைத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி வருகிறதும்,கூடவே தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அழித்தொழிப்பதற்கான இலங்கையரசின் நகர்வுகளைச் சட்டவாதத்துக்குள் காப்பதற்கும் முனைகிறது.

நேற்றைய அசம்பாவிதங்கள் வெறும் எதிர்வினையே தவிர அது திட்டமிட்ட அரச பயங்கரவாதிமில்லை என்பதாக இன்றைய தமிழ் மக்களின் அரசியலின் ஒரு பிரிவு கூறிக்கொள்ளும் அளவுக்கு சிங்களச் சியோனிசம் வெற்றி பெற்றிருக்கு.

இந்த நிலையில் தமிழ்பேசும் மக்கள் இன்னும் அதிகமாகத் தமது உயிர்களை இழந்துவிடுவார்களோ?

அப்பாவி மக்களை அழிக்கும் அரசியாலானது இன்று மிகச் சாதாரணமாக உலக வல்லரசுகளால் மேற்கொள்ளப்படுகிறது.இந்த அரசியலின் மிகப் பெரும் பகுதியைக் கடந்த காலத்தில் பாலஸ்தீனியர்கள்மீது பரிசோதித்த அமெரிக்கா உருவாக்கிய இராஜதந்திரம் இஸ்ரேலாக இன்றுருவாக்கும் அரசியலை, இலங்கை இன்னொரு வகையில் கடைப்பிடிக்க- நமது வாழ்வு அராஜக உலக அரசுகளால் பறிக்கப்படுவது பாரிய மனிவுரிமை மீறலாகும்.

பரமுவேலன் கருணாநந்தன்
13.04.06

ஞானி.

ஞானி.

அன்பு வாசகர்களே!உங்களுக்கு நானொரு கதை சொல்லப் போகிறேன்.ஒரு ஊரில ஒரு ராசா இருந்தாரம்...




என்ன புண்ணாக்குக் கதை? என்ர ஆச்சியில இருந்து அம்மாவரை இந்தக் கோதாரிக்கதையைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்... இப்ப நானும் இதையே தொடர்ந்தால்...


வேண்டாம்!கதை சொல்லுதல் வேண்டாம்,இப்படிக் கதை சொல்ல வெளிக்கிட்டால் இந்தத் தமிழர்கள் இதைக் கதையெண்டுவிட்டு தங்கட சோலியைப் பார்த்துப்போடுவினம்.பிறகு அந்த மேட்டர் அப்பிடியே வளர்ந்து தங்கட மூஞ்சியில உதைக்கிற வரையும் அவை நம்பப் போறதில்லை.


ஆகையினால் இது கதையில்லை.என்ர ஊரிலுள்ள ஒரு ராசாவின் உண்மைக் கதை.அவர் முன்னொரு காலத்தில் ஏறாவ+ர் செங்கலடியெல்லாம் பேர் போன ராசா.மட்டக்களப்பு மான்மியத்தின் மகத்தான கதா நாயகனே அவருதான்.இந்தக் கதையைத் தொடக்கிற போக்கில நானும் அவரைப் பற்றி அறியிறமாதிரித்தான் ஏதோ சொல்லுவமெண்டு யோசிக்கிறன்.




அது வந்து பாருங்க நம்மட சனங்களுக்கு ஒண்டிருக்க இன்னொன்றுக்க கால் வைக்காட்டிச் சரிப்பட்டுவராது.இது எனக்கும் சரியாகப் பொருந்துமெண்டு பலபேர் யோசிக்கினம்.ஆக மொத்தமாக இந்தக் கதைக்கூடாகவாவது நம்மட சனங்களைக் கண்ணைப்பொத்தியடிக்கும் ராசாவைக் காட்டுவதாக ஆச்சி அடிக்கடி சொல்லுவா.இந்த ஆச்சியின்ர புருஷன் அதுதான் என்ர அப்பு ரொம்பக் கெட்டிக்காரன்!ஆருக்கும் பொடி வைச்சுப் பேசுறதே அந்தக் கிழத்துக்கு வேலை.அப்படிப்பட்ட சீமானுக்குப் பேரானாகப் பிறந்த இந்தச் சீவனுக்கு எதுவும் கைவராதிருக்கு!அந்த வடுவைப் போக்கிற மாதிரியொரு கதை சொல்ல வெளிகிடுவமெண்டால் ஆச்சி சொன்ன ராசாக் கதைதான் மனதுக்குள்ள கிடந்து பிராண்டுது.




மட்டக்களப்புக்கு யாழ்பாணத்தில இருந்து எங்கட "அம்மா மாமா" (அன்னையின் தாய்மாமன்) வருவார்.அடிக்கடி அந்த மனுஷன் வாறபோதெல்லாம் அம்மாவின்ர மூஞ்சியல மகாவலி ஆறுபோல தெளிந்த மாதிரியும் தெளியாத மாதிரியும் சரியான "றீ ஆக்சன்" வந்து துலையும்.ஆனால் அப்பருக்குச் சந்தோசம்.அம்மா விதம் விதமாகச் சமைச்சுப் பரிமாறுவாள் தன்ர மாமனுக்கு.அடிகடி தொட்டுப் பேசுவாள்.தன்ர தாய்மாமன் எண்டு அவள் மனாதாரச் சொல்லுவாள்.அம்மாவுக்கு மட்டுமல்ல அப்பருக்கு,எங்களுக்கு எல்லாருக்கும் புது உடுப்புகள் கொண்டுவருவார் அம்மா மாமா.அவரு பெரிய முதலாளி.புடவைக்கடையள் வைச்சிருகிற மனுஷன்.




தமிழ்நாட்டுக்குப் போய் பிடவைகள் அள்ளிக் கொண்டு வருகிறவராம்.அதை ஊர்ச்சனங்கள் கள்ளக் கடத்தல் எண்டு சொல்லுகிறவை.தோணியில போய் எல்லாத்தையும் அள்ளி வருகிற எங்கட மாமாவுக்கும் இந்த ராசாக் கதை சரியான விருப்பம்.என்ர அம்மம்மா அவரையும் இருத்தி வைச்சு அவிட்டுவிடுவா.அம்மா மாமா சாரயத்தைக் குடிச்சுக் கொண்டு அம்மாவின்ர தோளில கைப்போட்டுக் கொண்டு அம்மம்மாவின் கதைகளைக் கேட்டு ரிசிப்பார்.அப்பரும் குசுனிக்குள்ள எதையோ பண்ணிக் கொண்டு இறைச்சி சமைப்பார்.அம்மா மாமனுக்கான ஸ்பெஷல் அயிட்டம் எப்பவும் காட்டுப்பண்டிதான். அதைச் சமைப்பதில் அப்பன் கெட்டிக்காரன். அம்மா சுத்த சைவம்.எதையும் சமைப்பா,ஆனால் வாயிக்குப் போகாது இந்த மச்சச்(மச்சம் என்றால் புலால் கறி) சாப்பாடுகள்.



அம்மாவின்ர குடும்பம் கோயில் அர்சகர்களாக இருக்கிற குடும்பமாம்.அதால இந்த மச்சமெல்லாம் சமைக்கிறதில்லை.ஆனால் அம்மாமன் எல்லாத்தையும் பழகிப் போட்டான்!எல்லாமெண்டால்...எல்லாம்தான். அப்பன் அடிக்கடி கோயிலுக்குப் போறபோது அம்மாவைத் தூக்கினவராம்.மட்டக்களப்பிலிருந்து கஜுக் கொட்டை கொண்டுபோய் கொடுத்துக்கொடுத்து அம்மாவை வழிபண்ணினதாகச் சொல்லுவா அம்மா.




இப்பிடியான நல்ல பொழுதுகளிலதான் நானும் இந்த ராசாக் கதையைக் கேட்டனான்.இப்பயிருக்கிற இந்தப் பொழுதில் நம்மட ராசா நிசமான ஆள்தானோ எண்ட கேள்விகள் உங்களுக்கு வரும்.அது எனக்குத் தெரியாது.நீங்களே முடிவைப் பண்ணுங்கோ.



இனிக் கதைக்குள்ள போவம்:

ஒரு ஊரில ஒரு ராசா இருந்தாரம்.அவருக்குப் பெரும் செல்வம் குவிந்து கொண்டே இருந்தது.ஊர்ச்சனங்களிடம் அவர் வரி அறவிடுவாரம்.ஏனென்று கேட்டால் ராசா கோபித்துவிடுவாராம்.பின்பு கேட்டவரின் தலை கழுமரத்தில் தொங்க விடப்பட்டு"தேசத் துரோகி-எட்டப்பன் கூட்டம்" என்ற அட்டை தொங்குமாம் பிணத்தில்!அப்படியொரு பொழுதுகளை ஊர்ச்சனம் விரும்புவதில்லை.அந்த ராசாவுக்கு அயல் நாட்டு ராசாவின் மகளோடு ஒரு இதுவாம்!அதனால அந்த ராணியின்ர கடைக்கண் பார்வைக்காக தன்ர நாட்டில ஏதாவது புதிய வித்தியாசமான அறிவுப்புகளைச் செய்வார்.அந்த அறிவுப்பு அதி புத்திசாலித்தனமாக இருக்குமாம்.உடனே அயல் நாட்டு இளவரசி தன்ர மகிழ்ச்சியை ஓலை கொடுத்துப் பகிர்வாளாம்.



இப்படியான ஒரு சூழலில் ராசாவின் இந்த அறிவுப்பு வந்தது:


"மகா சனங்களே!இந்த அடங்காத் தமிழின் ராச பரம்பரைக்கு எவராவது வந்து பொய்யுரைக்கும் பட்சத்தில்,அதையும் பொய்யென எமது மாமன்னன் நம்பும் பட்சத்தில்-உங்களுக்கு பதினாயிரம் பொற்காசுகள் அன்பளிப்பாக வழங்கப் படும்"- அழைப்பு ஊரெல்லாம் பறையடிச்சுச் சொல்லப்பட்டது.




ஊரிலிருந்த மகா பொய்யர்கள் எல்லாம் உசாராகினார்கள்.நாளும் பொழுதும் பொய்யுரைக்கும் கவிஞர்களுக்கு இது கொண்டாட்டமாக இருந்தது.அவர்கள் ராசாவை அப்பப்ப பொய்யினால் குளிப்பாட்டினும்,இவ்வளவு பெரிய தொகையை ராசா கொடுப்பதில்லை.ராசாவுக்கு இந்தப் பொய்க் கவிஞர்களை,கதாசிரியர்களை,மந்திரிகளை மடக்கிற திட்டம்.தன்னைவிடப் பொய்யுரைக்கும் இந்தக் கூட்டத்தைத் தானும் மடக்கவேண்டுமென்ற ஆதங்கமும்,தன்ர மூளையைப் பாராட்டி அயல் நாட்டு இளவரசி ஓலை அனுப்ப வேண்டுமென்ற எதிர் பார்ப்பும் ராசாவைப் படாது பாடு படுத்தியது.




அரண்மனையில் காவலர்கள் உசாரானார்கள்.அரண்மனையை முற்றுகையிட்ட பொய்யுரைப்பாளர்களை ஒவ்வொருவராக மன்னனிடம் அனுப்பி வைத்தனர் மெய்ப்பாதுகாவலர்கள்.


என்ன கவிஞரே பொய்யுடன் வந்தீரோ?மன்னன் நட்புடன் வரவேற்றான்.



அதிலென்ன மன்னா சந்தேகம்?இதுதானே நமது தொழில் புதிதாகக் கேட்பதின் அர்த்தம்...-கவிஞர் சண்டித்துரை மிதமான துணிவோடு கேள்வி தொடுத்தார்.

அர்த்தமும் பொத்தமும்!பொய்யைச் சொல்லும் புண்ணாக்கரே!!-மன்னன் கோபமானான்.



மன்னா!நீங்கள் மக்களிடம் வரி அறவிடப்போவதில்லை.-கவிஞர்.
அது சாத்தியம்,நீர் போகலாம்;-மன்னர்


மன்னா! அடுத்த பொய்யர்.
என்ன பொய்யைக் கூறும்!-மன்னர்

நீங்கள் இன்றிலிருந்து யுத்தம் செய்ய மாட்டீர்கள்.அயல் நாட்டோடு சமாதானமாப் போவீர்கள்.


அதுவும் சாத்தியமே!நீரும் போகலாம்.-மன்னருக்குத் தன்ர பொய்மீது அளவு கடந்த நம்பிக்கை வந்தது.

இன்னொரு பத்திரிக்கை ஆசிரியரும் தன்பங்குக்கு இப்படிப் பொய்யுரைத்தார்: மன்னா நீங்கள் உங்கள் பதவியைத் துறந்து,முடியிழந்து,துறவியாகி விடுவீர்கள்.இது நாளைய உங்கள் திட்டம்.
ஓ அப்படியா?இது நடக்கும்,நடக்கும்.நீங்களும் போகலாம்.மன்னன் பொற் காசுகளைத் தொட்டுப்பார்த்தான்.அதை எவருமே பெறமுடியாது என்று கற்பனையில் அங்குமிங்குமாக நடந்தான்.

இப்படியாக ஆனானப்பட்ட பொய்யர்கள் எல்லோரும் முயற்சித்துத் தோல்வியைத் தழுவினர்.




காவலாளிகளுக்குச் சீ எண்ட கதை.எல்லாப் பொய்யர்களும் மௌனமாக வீடு திரும்பிய போது,ஊரிலுள்ள ஒரு வயோதிபர்-வாழ்ந்து கெட்ட கிழம்,ஊரெல்லாம் தன்ர அனுபவத்தால் ஞானி என்றழைக்கப்படுபவர்,ஊத்தை உடுப்போடு தோளில் இரு அட்டாக்களைக் காவியபடி மன்னனின் அரண்மனையை அண்மித்தான்.




கிழத்தைக் கண்ணுற்று காவலாளிகள் தமது ஆயுதத்தை எடுத்து உசாராகினார்கள்."என்ன பெரியவரே,ஏது இவ்வளவு தூரம்?இதென்ன அண்டாக்களோடு வேறு...?காவலாளிகளிலொருவன் கேட்டுக்கொண்டே கிழவரைத் தடுத்தான்.




ஐயா ராசாமாரே ஊரெல்லாம் பஞ்சம்.மன்னரின் வரியால பிழைப்புமில்லை,சாப்பிட வழியுமில்லை... என்றிழுத்தார் கிழவர்.



அதெல்லாம் எங்களுக்குத் தெரியம்.இது என்ன புதிசா பெரியவரே?ஆனானப்பட்ட கவிஞர்களே பொற்காசுகளைப் பெறமுடியவில்லை!நீரோ மன்னனிடம் பொய் சொல்லி...அதையும் அவர் நம்பி....போ,போ! என்ற காவலாளியின் கால்களில் கிழவர் வீழ்ந்தபோது மன்னரிடம் கிழவர் அனுப்பப்பட்டார்.




யாரது பெரியவரே?என்ன இரண்டு அண்டாக்களோடு வந்துள்ளீர்?ஆச்சரியத்துடன் மன்னன் தனது மந்திரிகளைப் பார்த்துச் சிரித்தான்.


கிழவன் மிகவும் அடக்கமாக"மன்னா என் நிலைமையைப் பார்த்தீர்களா?நான் இப்படியானதற்கு யாரு காரணம் தெரியுமா?உங்களது கொள்ளுப்பாட்டன்தான் காரணம்.அவர் என்னிடம் பத்து இலட்சம் பொற்காசுகளை வேண்டினார்.வேண்டியபின் இறந்துவிட்டார்.அவரது கடனை உங்கள் பாட்டன் தருவதாகக்கூறினார்.எனினும் அவரும் தராது இறந்து போனார்.அவருக்குப்பின் உங்கள் தந்தை தருவதாக் உறுதிகூறினார்.அவரும் தராமல் யுத்தத்தில் இறந்துபோனார்.இப்போது எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் இருபது இலட்சம் பொற்காசுகளை நீங்கள் தரவேண்டும்.ஒரு அண்டாவின் கழுத்துவரை பத்து இலட்சம் போடமுடியும்,மற்றைய பத்து இலட்சம் பொற்காசுகள் வட்டியாக உங்களிடம் எதிர்பார்க்கிறேன்...எனவே இரு அண்டாக்களும் நிறைவதற்கான எனது பொற்காசுகளைத் தந்துவிடுங்கள்.உங்களிடம் போட்டிகள் வைக்குமளவுக்கு இப்போது பணம் உண்டு எனவே எனது பணத்தைத் தந்து உங்கள் நீதியை நிலைப்படுத்தவும் மன்னா".




பொய்!பொய்!!மன்னன் குரலெடுத்துப் பேசினான்.




கிழவரும்"ஆமா மன்னா,இது பொய்தான்!உங்கள் அறிவுப்புப்படி நான் வென்றுள்ளேன்.தங்கள் கைகளால் பொற்காசுகளைத் தந்துவிடவும்.உங்கள் வரிச் சுமையால் ஊருக்குள் எதுவும் விளையவில்லை.இந்தக் காசுகள் ஊருக்கு இனியுதவுமென்றார்.
ஊருக்கோ?உலக்கை...உதவாக்கரை!!யார் அங்கே?மன்னன் உறுமினான்.உடனே கிழவரின் நெத்தியில் "பொட்டு" வைக்கப்பட்டு,கழுமரத்தில் "தேசத் துரோகி"என்ற அட்டையுடன் பிணமானார் அந்த ஞானி.



அம்மம்மாவுக்கு நன்றி.


முற்றும்.